Saturday, February 28, 2015

உதவாக் கல்வி முறை

~உதவாக் கல்வி முறை~
(a+b)2=a2+2ab+b2 இதை படித்து என்ன பயன்....?
சில நாட்கள் ஏன்தான்
உதிக்கிறதோ என்று தோன்றும்.
அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
எல்லாரையும் பதை பதைக்க
வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த
15 நிமிட வீடியோ காட்சி நம்
கண் முன்னேயே நிழலாடுகிறது.
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக்
கும்பிட்டுக்கொண்டிருந்த
காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
கற்றலினால் ஆன பயன் என்ன?
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..
பட்டங்கள் வாங்குகிறோம்..
கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..
அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..
விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..
டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
ஆனால்..
கற்றலினால் ஆன பயன்
தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக்
கொடுக்கவில்லையே..
ஒரு உயிர் ஒரு புலியிடம்
மாட்டிக் கொண்டு 10
நிமிடங்களாக கையெடுத்துக்
கும்பிட்டுக் கொண்டேயிருக்கும்
பொழுது அந்த உயிரை எப்படிக்
காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம்
கல்வி கற்றுக்கொடுக்க
வேயில்லையே..
ஆனால் ஆபத்து நேரத்தில்
எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய்
எழும்பி நின்றிருந்தால் அந்தப்
புலி ஒருவேளை தன்
உயரத்தை விட வளர்த்தியாய்
இருக்கிறானே..
இவனை எப்படி எதிர்
கொள்வது என்று அமைதியாகத்
திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால்
அவனைத் தாக்கவில்லை.
அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப்
போயிருக்காது.
அதுமாத்திரமல்ல.
10 நிமிடங்கள்
அவனை அப்படியே பார்த்துக்கொண்
டேயிருக்கிறது. தாக்க
முனையவேயில்லை.
ஆனால் பார்வையாளர்கள்
மேலிருந்து கல்லெறிந்த
உடன்..
அது சினம் கொள்கிறது.
மேலே பார்த்து உறுமுகிறது.
பார்வையாளர்கள் விடவில்லை.
தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
கூச்சலிடுகிறார்கள்.
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக்
கொண்டு சென்று விட
வேண்டும் என
முடிவு செய்து அவனுடைய
கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும்.
ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில்
யாராவது ஒருவர்,
தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
இந்த அறிவைக் கூட கற்றுக்
கொடுக்காமல் (a+b)2 =a2 +
2ab + b2 என்று கற்றுக்
கொண்ட வெற்றுத்
தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை..
தப்பித்து ஓடவும்
முடியவில்லை..
மிருகமோ தன்னிலும் பலத்த
உருவம்..
அது முதலையாக
இருக்கலாம்..சிங்கமாக
இருக்கலாம்.. அல்லது..
யானையாக இருக்கலாம்.
அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
அந்த விலங்குகளின்
கண்களை நம்
கை முஷ்டியினால்
பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால்
அவை நிலை குலைந்து ஓடி விடும்.
நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அல்லது சிறு மண்
துகள்களை அள்ளி அதன்
கண்களில் தூவினால் போதும் அவை அந்த
இடத்திலிருந்து தப்பித்துச்
செல்லத்தான் முயற்சிக்கும்.
இந்த அறிவைக்கூடக்
கற்றுக்கொடுக்காமல்..
பட்டங்கள் என்ன..
சட்டங்கள் என்ன..
பல்கலைக் கழகங்கள்
என்ன?
தென்னாப்பிரிக்காவிலும்,
ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள்
என்பதை கற்றுக்கொடுப்ப
தை விட..
வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
கொடுங்கள்.
மற்றவர்களை மதிப்பது எப்படி..
மற்றவர்களின் உணர்வுகளைப்
புரிந்து கொள்வது எப்படி?
சாலை விதிகள் என்ன?
ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?
அடிப்படைச்
சட்டங்கள் என்ன?
நமக்கான உரிமைகள் என்ன?
காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
விபத்து ஏற்பட்டால்
அதை எப்படி எதிர் கொள்வது?
விஷக்கடிகளில் எப்படித்
தப்பிப்பது?
மாரடைப்பு வந்தால்
என்ன செய்வது?
நோய்களை எவ்வாறு கண்டறிவது?
எந்த மருந்துக்கள் எல்லாம்
தடை செய்யப்பட்டவை..பின்
விளைவுகள் உள்ளவை?
மனைவியிடம்
எப்படி நடந்து கொள்வது?
கணவனிடம்
எப்படி நடந்து கொள்வது?
மற்றவர்களை நேசிப்பது எப்படி?
நேர்மையாய் இருப்பது எப்படி?
இவை எதையுமே கற்றுக்
கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..
இனித் தெரிந்து கொள்வதற்கும்
வாய்ப்பில்லாமல்
துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..
ஒரு ஆசிரியனாய் நான்
வெட்கப்படுகிறேன்
ஒரு வெண் புலி, உன்
வாழ்க்கையை இருளாக்கிவிட்டதே.
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
என்னை..
எங்களை மன்னித்து விடு..!

1 comment: