Thursday, February 26, 2015

கலியுக தர்மம்

கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை,
தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய
இவைகள் நாளுக்கு நாள் குறையும்.
கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.
பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம்,
ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.
மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த
விருப்பத்தின் படியே இயங்குவார்கள். 

குலம் மறைந்து போகும்.
மனிதர்கள் அவர்களின் குணங்களைக்
கொண்டு சிறந்தவர்களாக போற்றப்படமாட்டார்கள்.
பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற
புகழை அடைவான்.
ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு 
ஆளாவார்கள். 
பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும்,
காமவெறி கொண்டவர்களாகவும்,
தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும்
சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம்
செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும்.
விவாஹம் தேவையற்றதாகும்.
ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள்.
வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக
இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம்
இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல்
பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை,
பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.மனிதர்கள்
பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வாரகள்.

பூமியை சொந்தம் கொண்டாட
தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள்
அடித்துக் கொள்வார்கள்.
அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில்
இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய
க்ஷேத்திரமாக கருதப்படும்.
புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக்
அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும்
வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள்.
வேதமார்கம் கெடுக்கப்படும்.
ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்!
அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள்
மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர்,
காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி,
கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.
பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள்
போல் ஆகிவிடும். கறக்காத
பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள்
போலவே நடந்துகொள்வார்கள்.
பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்கள
் ஆகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம்
பிரியமாகப் பழகுவார்கள். சொந்த தந்தை,
சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
மேகங்களில் மின்னல்கள் அதிகமாக காணப்படும். 

வீடுகள் தெய்வீகத் தன்மையிழந்து சூனியமாகவே காணப்படும்.
கலியுகம் முடிய இன்னும் ஆண்டுகள்
அதிகமாக உள்ளது, காலம் நெருங்க நெருங்க
அதன் தாக்கம் இன்னும் அதிகமே ஆகும்!

No comments:

Post a Comment