கடம்பூர் கருவறை கோட்டத்தில் ருத்ர வீணை வாசிக்கும் பிரகஸ்பதி
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், ஒன்பது கோளில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.
இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி ஒன்பதுகோள்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது.
இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.
இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.
இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம். ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.
இவர் கடம்பூர் கரக்கோயில் தென்முகநாதர் வீற்றிருக்கும் கோட்டத்து மண்டபத்தின் வலது தூணின் மேல் தாங்கு சிற்பமாக தட்சணாமூர்த்தி எனும் தென்முக நாதரை மகிழ்விக்கும் பொருட்டு ருத்ரவீணை போன்றதொரு நரம்பு இசை கருவியை வைத்து வாசித்து கொண்டிருப்பதை காணலாம்....தட்சணாமூர்த்தியை வணங்குவோர் கோட்டத்தின் மேல் உள்ள பிரகஸ்பதி எனும் வியாழனையும் வணங்கி அருள் பெறுவீர்.
No comments:
Post a Comment