Sunday, May 15, 2016

அர்த்த சாஸ்த்திரம்

அர்த்த சாஸ்த்திரம்

முதல் அத்தியாயம்:

1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.



பனிரெண்டாம் அத்தியாயம்

1. மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

2. பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

3. கெட்ட மனிதன் நல்ல மனிதனுடன் சேர்ந்து நல்லவனாகிறான். ஆனால் நல்ல மனிதன் கெடுவதில்லை. மரங்களின் பூக்கள் விழுந்து பூமி வாசம் வீசும். பூமியின் வாசம் மலர்களில் வீசாது.

4. நம் உடம்பு அழிந்து விடக்கூடியது. நாம் சேர்க்கும் பணம் நிலை இல்லாதது. ஆதலால் காலம் உள்ள போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

5. யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

6. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

7. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

8. முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

பதிமூன்றாம் அத்தியாயம்

1. நாம் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை பற்றி கவலைப் படக்கூடாது, எதிர் காலத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி யோசிக்க கூடாது, நிகழ் காலமே நம் கைகளில் இருக்கிறது, லட்சியத்தை அடைய விரும்புபவன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வான்.

2. பந்த பாசமே அனைத்து துன்பத்திற்கு காரணம், ஒருவன் இன்பமாக வாழவேண்டுமானால் பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்.

3. அவன் ஒருவன் எதிர்காலத்தை சந்திக்க தயாராக இருக்கிறானோ, கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தி கொள்கிறானோ அவன் எப்பொழும் மகிழ்ச்சியாக இருப்பான். வெறும் அதிஷ்டத்தை நம்புபவன் அழிந்து போவான்.

4. ஒரு மன்னன் தவறு செய்தால், அவன் கீழ் உள்ளவர்கள் தவறு செய்வார்கள். ” யதா ராஜா ததா பிரஜா”. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஆதலால் மன்னன் ஒவ்வொரு செயலையும் நன்கு ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.

5. ஆன்மிக வழியில் வாழாதவன் வாழ்தாலும் இறந்தவன் ஆவான். ஆன்மிக வழியில் வாழ்தவன் இறந்தாலும் உயிருள்ளவன் ஆவான்.

6. எவன் ஒருவன் தான் விரும்பும் அனைத்தையும் அடைந்தவன் ஆவான். அனைத்தும் இறைவன் கையில் உள்ளது. ஆதலால் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

7. பசுக்கன்று ஆயிரம் பசுக்கூட்டத்திலும் தன் தாயை அடையாளம் கண்டு அதன் பின் தொடரும் . அது போல் கெட்டவன் கெட்ட நண்பர்களுடனும், நல்லவன் நல்ல நண்பர்களுடன் செல்கிறான்.

8. இந்த உலகில் மூன்று ரத்தினங்கள் உள்ளது , உணவு, நீர், இன்சொல். வெறும் கற்களான முத்து, பவளம் போன்றவற்றை முட்டாள்களே ரத்தினம் என்று கூறுவர்.

9. மனிதன் அவன் செய்யும் காரியங்களின் பலனையே அடைகிறான். நல்லதும் கெட்டதும் நம் செயல்கள் மூலமே விளைகிறது. முன் செய்த பாவ புண்ணிய பலன்களை நாம் இன்று அனுபவிக்கிறோம்.

பதினான்காம் அத்தியாயம்

1. வறுமை, வியாதி, துக்கம், சிறைவாசம், மேலும் நமக்கு வரும் துன்பங்கள் இவை யாவும் நாம் செய்த பாவம் என்னும் மரத்தில் விளைந்த பலன்கள் ஆகும்.

2. செல்வம், நண்பன், மனைவி, அரசாட்சி ஆகியவைகளை இழந்தால் திரும்ப பெறலாம், ஆனால் ஆரோக்கியத்தை இழந்தால் திரும்ப பெறுவது இல்லை.

3. பல புற்க்கல் ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம்.

4. நீரில் சிந்தும் எண்ணை, சிறிய குணமுள்ள மனிதனுக்கு தெரிய வரும் ரகசியம், தயாள குணமுடையவனுக்கு கிடைக்கும் செல்வம், புத்திசாலியிடம் சேரும் கல்வி இவை அனைத்தும் அதன் குணத்திருக்கேர்ப்ப பரவி விடும்.

5. வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் இனிமையாக பேச வேண்டாம்.

6. நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

7. பண்டிதன் என்பவன் சூழ்நிலை அறிந்து பேசுவான், தன் சக்திக்கு தகுந்து நல்ல காரியங்கள் செய்வான், மேலும் தன் கோவத்தை அளவையும் அறிவான்.

8. குயில் தன் குரல் இனிமையாக மாறும் வரை பொறுமையாக இருந்து பின்பு பாடும். அது போல் ஒரு மனிதன் தன் காலம் கனியும் வரை பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும்.

9. நாம் செய்யும் தர்மம், புண்ணிய காரியம், கிடைக்கும் மரியாதை இவற்றை நினைத்து கர்வம் அடையக்கூடாது.

10. நம் மனதில் அருகில் இருப்பவர்கள் தூரத்தில் இருந்தாலும் அருகில் உள்ளவர்கள் ஆவார்கள், ஆனால் மனதில் தூரமாக இருப்பவர்கள் அருகில் இருந்தாலும் துரமானவர்களே

பதினைந்தாம் அத்தியாயம்

1. முட்களிடமும் இருந்தும் முட்டாள்களிடமும் இருந்து தப்பிக்க வழி, முதல் பிரச்சனைக்கு செருப்பு அணிவது, இரண்டாம் பிரச்சனைக்கு அவர்களை அவமானப் படுத்துவது தான்.

2. சுத்தமில்லாத ஆடைகளை அணிபவனிடம் , சுத்தமில்லா பற்களை உடையவனிடம் , கடுஞ்சொல் பேசுபவனிடம் , சூரிய உதயத்தின் பின் தூங்குபவனிடம் லக்ஷ்மி தங்க மாட்டாள்.

3. பணம் உள்ள வரை நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இருப்பார்கள், பணம் போனால் இவர்கள் நம்மிடம் இருந்து விலகுவார்கள். ஆதலால் பணம் தான் நிரந்தர உறவினர்.

4. பாவப்பட்டு சம்பாதிக்கும் பணம் பத்து வருடம் தான் தங்கும், அதன் பிறகு உள்ளதையும் எடுத்துக் கொண்டு சென்று விடும்.

5. பெரிய மனிதன் செய்யும் தவறுகள் அவருக்கு அணிகலன் ஆகிவிடும், சிறிய மனிதன் செய்யும் பெரிய காரியங்கள் துன்பத்தை விளைவிக்கும். சிவபெருமான் விஷம் அருந்தினார், ஆனால் அது அவருக்கு ஆபரணம் ஆகிவிட்டது, இராகு அமிர்தம் அருந்தினார், ஆனால் அது அவரை வெட்டுப்பட வைத்தது.

6. சாஸ்திரங்கள் கரை இல்லாதது, கற்க வேண்டிய விஷயம் கோடி உள்ளது, மனிதனின் ஆயுள் காலம் மிகக் குறைவானது, வாழ்க்கையில் பல தடைகள் உள்ளது , ஆதலால் நேரத்தை வீணடிக்காமல் நீரில் பாலை பிரித்து உண்ணும் அன்னப் பறவை போல், நல்ல விஷயங்களை கற்க வேண்டும்.

7. விருந்தாளி இருக்கும் போது தனித்து உண்பவன் பாவி ஆவான்.

8. ஒருவன் நான்கு வேதங்கள் கற்று இருந்தாலும், தன்னை உணராவிட்டால் உணவின் சுவை உணராத பாத்திரத்தை போல் ஆவான்.

9. ஒரு மனிதனை வசியப் படுத்த பல விஷயங்கள் உள்ளது, அது மிகப் பெரிய மனிதனையும் கட்டுப்படுத்தும், மரங்களை துளைக்கும் ஆற்றல் இருந்தாலும் தேனி பூக்களின் தேனில் மயங்கி கிடைப்பது போல்.

10. சந்தனம் துண்டு துண்டு ஆனாலும் அதன் மணம் மாறாது, கரும்பை சக்கையாக பிழிந்தாலும் அதன் இனிப்பு போகாது, யானை வளர்ந்தாலும் அதன் குறும்பு மாறாது. அது போல் மேன்மக்களின் குணம் வறுமை வந்தாலும் மாறாது.

பதினாறாம் அத்தியாயம்

1. ஒரு மனிதன் தன்னுடைய செயல்களாலே பெரிய மனிதன் ஆகிறான், அவன் அமரும் பதவியில் இல்லை. காகம் பெரிய மலையில் மேல் அமர்ந்தாலும் கருடன் ஆகாது .

2. திறமையிலாத ஒருவனை பலர் புகழ்தால் அவன் பெரிய மனிதன் ஆவான், ஆனால் ஒருவன் இந்திரனே ஆனாலும் தன்னை தானே தற்புகழ்ச்சி செய்தால் அவன் புகழ் மங்கி விடும்.

3. ஒரு மனிதனின் நல்ல குணங்களே ரத்தினம் ஆகும், தங்கத்தில் மின்னும் ரத்தினம் போல, அவனிடம் பல இருந்தாலும் நல்ல குணங்களே அவனை மின்னச் செய்யும்.

4. ஒரு மனிதன் எத்தனை சிறந்த குணங்கள், திறமைகள் இருந்தாலும் அவனை தூக்கி விட பெரிய மனிதர்கள் தயவு தேவை. என்னதான் ஒளிவீசும் ரத்தினம் ஆனாலும் அதை பதிக்க ஒரு தங்கம் தேவைப் படுவதை போல்.

5. பெண், பணம், உணவு ஆகியவற்றில் திருப்தி அடையாதவர்கள் சென்று விட்டனர், ஆனாலும் வேறு எதிலோ திருப்தி அடையாதவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டும், மேல் உலகிற்கு சென்று கொண்டும் தான் இருக்கிறார்கள்.

6. பலனை எதிர்பார்த்து செய்யும் தானம் தர்மம் குறுகிய காலம் மட்டுமே பலன்களை தரும், ஆனால் தன்னலம் கருதாமல் இறை சிந்தனை உள்ள மனிதனுக்கு செய்யும் சிறிய உதவி இந்த உலகத்தை காக்கும், என்றும் அழியாது.

7. அவமானப்பட்டு வாழ்வதை விட இறப்பது மேல், இப்படி வரும் இறப்பு ஒருநாள் தான் துன்பத்தை தரும், ஆனால் அவமானத்துடன் வாழ்வது ஒவ்வொரு நாளும் துன்பத்தை தரும்.

8. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்சொல்லால் மகிழ்ச்சி அடைகிறது. ஆதலால் இன்சொல் பேசுங்கள்.

9. புத்தகத்தை படிப்பதனால் மட்டுமே வரும் அறிவு, அடுத்தவனிடத்தில் உள்ள உள்ள செல்வம், ஆகியவை தேவைப்படும் போது நமக்கு பயன் தராது.

10. மிகவும் துன்பப்பட்டு சம்பாதிக்கும் பணம், அடுத்தவனை ஏமாற்றி வரும் பணம், எதிரியிடம் இருந்து வரும் பணம் ஆகியவற்றை நான் ஒரு போதும் பணம் என்று கருதியதில்லை

பதினேழாம் அத்தியாயம்[/1u]

1.முறையற்ற வகையில் பிறக்கும் குழந்தை சமூகத்தால் நிராகரிக்கப் படுவதை போல், ஒருவன் எத்தனை புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்றாலும், குரு அருள் இல்லாமல் கற்கும் கல்வி, அறிவு முதிர்ந்தோர் சபையில் எடுபடாது.

2. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் அன்புடன் இருக்க வேண்டும். அது போல் கெட்டது செய்தவருக்கு கெடுதல் செய்வது பாவம் இல்லை. முள்ளை முள்ளால் தான் களைய வேண்டும்.

3. ஆசையை விட துன்பம் தருவது எது? அவமானப் படுத்துவதை விட பெரிய பாவம் எது? உண்மையாய் இருப்பதை விட வேறு உறுதி எது? நல்ல குணங்களை விட வேறு செல்வம் எது? தூய மனத்தை விட புண்ணியம் தரும் இடம் எது? புகழை விட சிறந்த ஆபரணம் எது? அறிவை தவிர வேறு சொத்து எது? அவமரியாதையை விட சிறந்த மரணம் எது?

4. கடலில் பல ரத்தினங்கள் உடன் இருந்தாலும், லக்ஷ்மி உடன் கடலில் பிறந்திருந்தாலும் சங்கு ஆண்டியின் கையில் அகப்பட்டு ஒவ்வொரு வீட்டு வாசலில் பிச்சை எடுக்க செல்கிறது, ஆதலால் நாம் எங்கு பிறந்தாலும், யார் உடன் இருந்தாலும் நமக்கு எது என்று எழுதி வைத்ததோ அது தான் கிடைக்கும்.

5. சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

6. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.

7. இந்திர லோக வாழ்க்கை இருந்தாலும், நல்ல பிள்ளைகள் பிறந்தாலும் தவறு செய்யும் மனைவி இருந்தால் ஒரு மகிழ்ச்சியும் இல்லை.

8. உண்ணுதல், இன விருத்தி செய்தல், உறங்குதல், அச்சம் அடைதல் ஆகிய அனைத்து குணங்களிலும் மிருகத்தை போல் தான் மனிதன் இருக்கிறான். அறிவு ஒன்று தான் அவனை மிருகத்திடம் இருந்து பிரித்து காட்டுகிறது.

9. அரசன், விலை மகள், யமதர்மன், நெருப்பு, திருடன், குழந்தைகள் , பிச்சைக்காரன் ஆகியவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தை உணர மாட்டார்கள். இவர்கள் வரிசையில் எட்டாவதாக இருப்பவர் வட்டிக்கு பணம் வசூலிப்பவர்.

10. ஓ தாழம்பூவே, உன்னிடம் முட்கள் இருக்கிறது, பாம்புகள் வசிக்கும் இடத்தில் வளர்கிறாய், வளைத்து நெளிந்து வளர்கிறாய், உன்னை எளிதில் அடையா இடத்தில் வளர்கிறாய். இருந்தாலும் உன் ஒரு வாசனைக்காக அனைவரும் உன்னை போற்றுகின்றனர். அதுபோல் மனிதனுக்கு உள்ள ஒரு சிறந்த குணம் அவனுடைய எல்லா தவறுகளையும் மறைத்து அவனை போற்றச் செய்து விடும்.

No comments:

Post a Comment