Monday, June 29, 2015

கிரிவலம்

கிரிவல நோக்கம்
************************
* நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.
* நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு
பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.
* பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்,
* திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.
* சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம்,
கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்
*******************************************************************
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
* இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை
அகற்றும் சக்தியுள்ளது.
* மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.
* நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
* ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.
* ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* கடைசி லிங்கம் எசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
திருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்
***************************************************************************
* எமலிங்கத்தின் வாசலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெறவைக்கும்.
* அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும். கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.
* குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும். தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும், திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.
கிரிவல பலன்கள்
************************
ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.
* ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்
* திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.
* செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.
* புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.
* வியாழன் - ஞானம் கூடும்.
* வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.
* சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.
கிரிவலம் வரும் முறை
*********************************
* நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.
* பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக்கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
* பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.
* காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. போதைப் பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்கக் கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்து, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது.
* எப்படி நடக்கப் போகிறோம் என்று மலைப்புடன் வலம் கூரக்கூடாது. யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும். கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமான பலன் கிடைக்கும்.
* இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப்பந்தயமோ அல்ல எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.
* மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.
* பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது. அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள், அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் இருப்பதால் மலையை நோக்கி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது.
* வாகனத்தால் வலம் வரக்கூடாது. திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது. கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம். மலையை ஒட்டிய பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலம் : 
சித்தர்களின் அருளை நாடியோர் தொண்டர்கள்'s photo.


====================================
சித்ரா பெளர்ணமி - மே 03 
*************************************
மாதம்தோறும் முழு நிலவான பவுர்ணமி சத்திய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன்று மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை.
சத்ய நாராயண பூஜை
*******************************
ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.
பூஜையை விடியற்காலை செய்வதே நல்லது. ஆனால் சத்திய நாராயண பூஜையை மாலையில் பவுர்ணமி நிலவு எழுந்தபின் தான் செய்வார்கள். சத்ய நாராயணன் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். பால் பாயசம், கோதுமை அப்பம், ராவா கேசரி ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.
சித்ரா பவுர்ணமி விரதமிருக்கும் முறை
*******************************************************
சித்ரா பவுர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எமதர்மனின் உதவியாளர் சித்திரகுப்தன் நம் பாவக்கணக்குகளை வைத்து நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாவுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சித்ரா பவுர்ணமியன்று கீழ்க்காணும் சக்தி வாய்ந்த விரத முறையை சித்ர குப்தனை நினைத்து மேற்கொண்டால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. நாளை 3.5.2015 அன்று சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் இந்த விரதத்தை மேற்கொண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (நோட்புக், பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும்.
சர்க்கரை பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும். இந்த வழிபாட்டின்போது,
சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்”
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். சித்தரகுப்த வழிபாடு- சித்திரா பௌர்ணமி வழிபாடு "சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்'' சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது"சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.
சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன். சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்

No comments:

Post a Comment