Thursday, March 5, 2015

மாசி மகம்

மாசி மகம்!பிறந்தன இறப்பதும், இறந்தன பிறப்பதும்,  இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும் படைப்பு ரகசியம். அந்த படைப்பு ரகசியத்தை இறைவன், தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார். உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும் போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின் நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.
அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி, தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா. அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக் குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.
ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால், இறை கோபம் கொண்டு, உலகை அழித்த போது, பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார். அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும் அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.
கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, 
இறை ஒரு பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்த, கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது. அந்த லிங்கம், 'கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது. சிதறிய அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே, காமகக்குளம். 
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம், இன்னும் விசேஷம். 2016 ஆண்டு மகாமகம் கொண்டாடப்படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.
மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.  
இறை நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும் போது  இறையின்  கோபத்திற்கு ஆளாகிறோம். அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால், அவரது படைப்புகளை,   இயற்கையை அழிக்கக்கூடாது. அன்பு கொண்டு வாழ வேண்டும். மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால், , நம் சந்ததியினரின் சந்தோஷம் தழைத்தோங்கும்.
----------------------------------------------------
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள்விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனைசரசுவதிகோதாவரிநர்மதாசிந்துகாவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில்நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

கர்ண பரம்பரைக்கதை:

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.
இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்

No comments:

Post a Comment