Tuesday, January 26, 2016

அட்டமா சித்தி / அஷ்டமா சித்தி

அட்டமா சித்தி

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

# அணிமா – அணுவைப்போல் சிறிதான தேகத்தை அடைதல்.

# மகிமா – மலையைப்போல் பெரிதாதல்.

# இலகிமா – காற்றைப்போல் இலேசாய் இருத்தல்.

# கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

# பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

# பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்), நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்.

# ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்.

# வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

No comments:

Post a Comment