Saturday, January 23, 2016

பக்தியால் செய்யும் பாபங்கள்

பக்தியால் செய்யப்படும் பாபம்கள்:

பக்தியினால் நாம் செய்யும் செயல்கள் பற்றி இதுவரை பார்த்து வந்தோம் முடிவாக பதிவின் கடைசி பதிப்பிற்கு நுழைந்து விட்டோம் ..

முதல் பதிவில் இருந்தே  இருந்தே நான் பதிவது பக்தி என்ற நிலைபாடோடு தேவதையும் ,தெய்வத்தையும்,இறை நிலை சக்திகளையும்
நாம் பாழ்படுத்தி அவைகளின் கோபத்தை பெறுகிறோம் என்பதே ...

இப்படி நாம் செய்யும்  செயல்கள் நம்மை பாதிப்பது மட்டுமில்லாமல் பஞ்ச பூத நிலைகளையும் மற்றும் இறைநிலைகளையும் கெடுக்கிறது என்று புரிந்து கொள்ளல் வேண்டும் ...

அவசியமான சில விவரம்களை இங்கே காண்போம் ..

1.திருமணம் ஆகாத ஆண்கள் வெள்ளை  வேஷ்டியை தவிர மற்றதை உடுத்த கூடாது --திருமண தடங்கல் சுபமான இல்லறம் அமையாமல் போக இது ஒரு காரணம் ..

2.திருமணம் ஆகாத ஆண்கள் அவசியமான காரணத்தினால் (சூடா கர்ம யோகம் --பெரிய காரியும் ) மட்டுமே தலை முடி இறக்க வேண்டும் .
காது குத்த குல தெய்வ கோவிலுக்கு மட்டும் முடி இறக்கலாம் .எக்காரணம் கொண்டும், ஆணோ, பெண்ணோ, அதுவும் குறிப்பாக சுமங்கலிகள்  வேண்டிக்கொண்டு செய்தல் ஆகாது
இதை பற்றி அகத்தியர் சுவடிகளில் காணலாம் ..

3.மண்,அல்லது மற்ற உலோகத்தினால் ஆன விளக்கில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் ..தேவைதைகள் கோபம் கொள்ளது ..

4.தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது ,குறிப்பாக கோவில்களில் செய்ய கூடாது .

5.சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய கறவை பால் தரவும் ,இயலவில்லை என்றால் பதப்பட்ட பால் வேண்டாம் .

6.அசைவம் உண்டு விட்டு ,வெற்றிலை உண்டு  விட்டு கோவிலுக்கு போக கூடாது --காரணம் வாயில் எச்சிலுடன் குதப்பி கொண்டோ ,காரி உமிழ்ந்து கொண்டு இருக்க கூடாது ..

7. இறைவனுக்கு சாற்ற பட்ட மாலையை நம் கழுத்தில்  அணிய கூடாது,வாகனத்தில் மாற்ற கூடாது ..

8.மந்திரம்களை சப்தத்தோடு உரக்க சொல்லகூடாது ,நாமம்களை  சொல்லலாம் .

9.சிவ பிரசாதத்தை வடக்கு பார்த்து தலை விண்ணோக்கி பூச வேண்டும் ,விழும் துளிகள் தோள்களில் விழவேண்டும் ..

10. ஒரு கோவிலுக்கு எடுத்து சென்ற நெய் /எண்ணை/பூக்கள் மற்ற கோவிலுக்கு கொண்டு செல்ல கூடாது ...

11.ஒரு முறை சாற்றப்பட்ட மாலை அல்லது மலர் வேற கோவில் தெய்வம்களுக்கு தரகூடாது ..

12.உங்களுடைய பக்தியினால் வேறு ஒரு வழிபாடு உடைய மற்றவரை பழித்தல் கூடாது ..

13.வீட்டில் செய்த உணவை கோவிலுக்கு எடுத்து சென்றால் அங்கே உள்ள எதாவது ஒரு தெய்வத்திற்கு படைத்தது விட்டு தான் நாம் உண்ண வேண்டும் /படைக்காமல் உண்ணகூடாது.

14.கோவிலில் படுத்து உறங்க கூடாது /தீபம் தரிசனத்தின் பொழுது கண்களை மூட கூடாது .

15.மந்திரம்களை தவறாக உச்சரிப்பது ,தவறான நேரத்தில் சொல்வது ,நம் குல சாமிகளுக்கு ஆகாத படையல் ,பூசைகள் ,சில பரிகார முறைகளை
பிறர் சொல்லி செய்வது நமக்கும் நம் குடும்பத்திற்கும் ஆபத்து  தரும் ...

No comments:

Post a Comment