| 
 எதையம் வெல்லும் நட்பு ஒன்றே
 
 
 | 
 
கேட்டைக்குரிய திருமுறை:பாடியவர்:திருநாவுக்கரசர்
 
 முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
 தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
 தொல்லை ஏற்றினார் கொடிகாவா என்று அங்கு
 ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
 
 
 
 மூலத்துக்குரிய திருமுறை:பாடியவர்:சுந்தரர்
 
 
 கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசி உன்றன்
 தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்று கொள்நீ
 வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
 ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
 
 
 பூராடத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
 
 
 நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
 நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானாய்
 மன் ஆனாய் மன்னவர்க்கோர் அமுத மானாய்
 மறை நான்கு மானாய் ஆறங்க மானாய்
 பொன்னானாய் மணியானாய் போக மானாய்
 பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
 என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
 ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
 
 
 
 உத்திராடத்துக்குரிய திருமுறை:பாடியவர் சுந்தரர்
 
 
 குறைவிலா நிறைவே குணக்குன்றே
 கூத்தனே குழைக்காது உடையானே
 உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன்
 ஒருபிழை பொறுத்தல் இழிவு உண்டே
 சிறைவண்டு ஆர்பொழில் சூழ்திருவாரூர்ச்
 செம்பொனே திருவாடுதுறையுள்
 அறவனேஎனை அஞ்சல் என்று அருளாய்
 ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.
 
 திருவோணத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
 
 
 வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
 பூதம்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
 நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
 பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.
 
 
 அவிட்டத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
 
 எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
 பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
 திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
 நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
 
 
 சதயத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
 
 கூடிய இலயம் சதிபிழை யாமைக்
 கொடியிடை உமையவள் காண
 ஆடிய அழகா அருமறைப் பொருளே
 அங்கணா எங்குற்றாய் என்று
 தேடிய வானோர் சேர்திரு முல்லை
 வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
 பாடிய அடியேன் படுதுயர் களையாய்
 பாசுப தாபரஞ் சுடரே.
 
 பூரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
 
 
 முடிகொண்ட மத்தமும் முக்கண்ணனின்
 நோக்கும் முறுவலிப்பும்
 துடிகொண்ட கையும் துதைந்த
 வெண்ணீறும் கரிகுழலாள்
 படிகொண்ட பாகமும் பாய்புலித்
 தோலும் என் பாவி நெஞ்சிற்
 குடிகொண்ட வாதில்லை அம்பலக்
 கூத்தன் குரை கழலே.
 
 உத்திரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
 
 
 நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
 ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே! அரண் நாமம்
 கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
 கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.
 
 ரேவதிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
 
 
 நாயுனும் கடைபட் டேனை
 நன்னெறி காட்டி யாண்டாய்
 ஆயிரம் அரவம் ஆர்த்த
 அமுதனே அமுதம் ஒத்து
 நீயும் என் நெஞ்சின் உள்ளே
 நிலவினாய் நிலாவி நிற்க
 நோயவை சாரு மாகில்
 நோக்கிநீ அருள்செய் வாயே.
 | 
Nice share .
ReplyDelete