கேள்வி : ஓஷோ , எங்களுடைய அறிதலுக்கும் , உங்களுடைய
அறிதலுக்கும் ( Knowledge ) என்ன வித்தியாசம் ?
பதில் : " நான் நீங்கள் அறிந்ததைவிட மிக அதிகமாகத்
தெரிந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் .
உண்மை அதற்கு மாறாகவே இருக்கிறது ! உங்களைவிட நான் அதிகமாக
அறிந்திருக்கவில்லை என்னிடம் எந்த விஷய ஞானமும் இல்லை .
ஆனால் என்னிடம் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் உள்ளது . ஆகவே
என்னிடம் இருப்பது தெளிவான புரிதல்தான் . விஷயஞானம் இல்லை .
நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்பொழுது அந்தக் கணத்தில்
என்னிடம் எந்த பதிலும் கிடையாது .
ஆனால் உங்கள் கேள்வியின் மேலே நான் என்னுடைய தெளிந்த
தன்மையை ( Clarity ) அதன்மேல் பாய்ச்சுகிறேன் .
அப்பொழுது அதிலிருந்து எந்த விதமான பதில் வருகிறதோ அதை
அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறேன் . அது விஷய ஞானமல்ல .
மாறாக தெளிவாகப் பார்க்கும் தன்மை.
இது என் மனமற்ற நிலையிலிருந்து வருகிறது .
விஷய ஞானம் ஒருவனைக் குருடனாக ஆக்குகிறது .
அவர்கள் கண்கள் விஷய ஞானத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது .
அவர்களால் அந்தத் தெளிவான தன்மையோடு பார்க்க முடியாது . நீங்கள்
அவர்களிடம் அதற்கு ஏற்ற பதில் தயாராக இருக்கிறது . அவர்கள் உங்கள்
கேள்வியை முழுமையாக கேட்க மாட்டார்கள் .
அவர்கள் தங்கள் உயிர்த்தன்மையைக் கேட்க மாட்டார்கள் .
நீங்கள் உங்கள் மனதைக் கொண்டு மனதினாலேயே பேசுகிறீர்கள் . நான்
மனதிற்கு அப்பால் நின்றுகொண்டு ஒரு தெளிவான
புரிந்துகொள்ளுதலிலிருந்து மனதைக் கருவியாகக் கொண்டு
பேசுகிறேன் . அவ்வளவுதான் வித்தியாசம் !
No comments:
Post a Comment