திருநீறு..!
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து
உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும்.
பின் இதனை உமியினால் மூடி
பின் இதனை உமியினால் மூடி
புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன்
கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும்
அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை
ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய
பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம்
இந்துமதத்தவர்களிடம்
காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக்
கருதப்படுகின்றது.
அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது,
உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான
முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும்.
அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான
நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக்
கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை
நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி
தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை
அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு
அறுகம்புல்
போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச்
சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன
மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக
நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப்
பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை
இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை
நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள்
முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற
நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும்
சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை
நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின்
பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus
என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு
இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக்
குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும்
இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப்
பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு
பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே
பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை
உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம்
செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும்,
எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த
நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம்
சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி
விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின்
நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய
வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை
மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம்
மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை
ஈர்த்துக்
ஈர்த்துக்
கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக்
கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும்,
மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான
பாகம்
பாகம்
என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும்
சூட்சுமம்
சூட்சுமம்
அங்கு உள்ளது.
குழைத்து பூசாமல் அப்படி பூசவேண்டும்.
ஆனால் தீக்கை பெற்ற அன்பர்கள் அதாவது சைவத்தின் நுழைவு
சீட்டு (ENTRY PAAS) என்பார்கள். அவர்கள் தான் திருநீற்றினை
குழைத்து பூசக் கூடிய தகுதியாவர்.
இவர்கள் எந்த எந்த இடத்தில் திருநீறு பூச வேண்டும்?
1. தலைஉச்சி
2. நெற்றி
3. மார்பு
4. வயிறு ( தொப்புளுக்க 1/4 இஞ்ச் மேலே)
5.:இடது கை மணிக்கட்டு
6. முட்டி
7. தோள் (சப்பை)
8. அதே போல் வலது கை 9. மணிக்கட்டு
10. முட்டி
11. தோள்
12. வலது கால் முட்டி
13. இடது கால் முட்டி
14. கழுத்து
15. இடது இடுப்பு
16. வலது இடுப்பு.
ஆகிய பதினாறு இடங்களில் குழைத்த வைக்க வேண்டும்.
சில பேர் பொங்கல் பானைக்கு திருநீறு வைப்பது போல்
வளைத்து பெரிதாக வைப்பர்.
ஒவ்வொரு இடத்தில் திருநீறு வைக்கும் போது மூல மந்திரத்தை
வெளியே சொல்லாமல் மனதில் நினைத்து சொல்லி வைக்க
வேண்டும்.
இச்சமயத்தில் தான் சைவ அன்பர்கள் திருநீறு வைப்பதற்கும்
எடுப்பதற்கும் முத்திரைகள் காண்பிக்க பட வேண்டும்.
மடத்திற்கு தகுந்தால் போல் இவை மாறும்.
---------------------------------------------------------------------------
விபூதி, திருமண்ணின் மகிமை
"விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது" என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.
'விபூதி பூதிரைச்வர்யம்' எனறு "அமர கோச"த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்! சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.
பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் 'சாயம் வெளுத்துப் போய்விட்டது' என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதியான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.
ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், 'பஸ்மமாகிவிடும்' என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே 'மகா பஸ்ம'மான பரமாத்மா.
திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் "முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்" என்று பாடினார்.
விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு, துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், "துன்னூறு கொடுங்கள் என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.
வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.
மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருஷ மண்ணை எடுக்கிறார்கள்.
வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சானம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்பமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.
நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, 'நாமம் போடுவது' என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே 'நாமம் போடுவது' என்று பெயர் வந்துவிட்டது.
திருநீறு, திருமண் இவற்றைத் தரி்ப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++
வசிய வீபூதிகிருபையுள்ள புலத்தியனேவ சியமென்று
கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே
புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே
இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும்
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம்
அப்பனே ஓம் கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே ...
-அகத்தியர் பரிபூரணம்
அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும்.
முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ"என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...
No comments:
Post a Comment