Friday, May 15, 2015

அம்மா அஞ்சலி / மாத்ருகா பஞ்சகம்


ஸ்ரீ ஆதி ஷங்கர பகவத் பாதாள் அருளிய மாத்ருகா பஞ்சகம்
1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ Iஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தந:தஸ்யை ஜநன்யை நம
:
தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்கவாய்க்கு ருசி இல்லாதிருத்தல்உடம்பு இளைத்தல்ஒரு வருஷகாலம்மல மூத்ரம் நிறைந் படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவதுதீர்க் வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானேஅக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்றுெல்லஅந்த தாய்க்கு நமஸ்காரம்!
2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :Iகுருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே மக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம
 :II
ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில்நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயேஅப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததேஉனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!
3. தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம்
 II
தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்றஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்ததுதாயேஉன மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லைகாலம்கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!
4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் Iஇத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம்
 II
என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜாஎன் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம்கொஞ்சினாயே தாயேஅத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !
5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :Iக்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி
 :II
அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பாசிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயேஇன்று நான் கிருஷ்ணாகோவிந்தா,ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/QDkKOzQzYtA" frameborder="0" allowfullscreen></iframe>
https://www.youtube.com/watch?v=QDkKOzQzYtA&list=RDQDkKOzQzYtA#t=3
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/QDkKOzQzYtA?list=RDQDkKOzQzYtA" frameborder="0" allowfullscreen></iframe>

MOTHERS' DAY    SPECIAL   ARTICLE    

                  அம்மா  என்   அம்மா!!!

''அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே''

 என்  கண்ணே இருப்பது  நீ  ஒருவனே.  உன்  தகப்பனாரும்  என்னை விட்டுச் சென்று விட்டார். பல  வருஷம் தவமிருந்து  வடக்கு நாதன்  அருளால்  நீ  பிறந்தாய்.  கண்ணை  இமை காப்பது போல் உன்னை  வளர்த்தது நீயும்  என்னை விட்டுபிரிந்து  போவதற்காகவா இதற்கா  பெற்றேன்.  நீ  சந்நியாசியாவது  நான்  உன்னை  உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?   

நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  பிரிபடும்  உறவோஉடலால் பிரிந்தாலும்  உள்ளத்தால் நாம்  இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும்  அந்த  இறைவன்  தான்  என் மனத்திலும்  இருப்பவன்  அல்லவா. எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு  நிபந்தனையுடன்  சன்னியாசியானான்.  

நீ  என்  மரணத் தருவாயில்  என் அருகில்  இருக்க வேண்டும். உன் கையால் தான்  எனக்கு தகனம்.  செய்வாயா?  சரி என்றால்  நீ  செல். 
அப்படியே  ஆகட்டும்.

வருஷங்கள் உருண்டது.  அந்த சந்நியாசி  ஸ்ரிங்கேரியில்  இருக்கும்போது  அன்னையின்  அந்திம காலம்  வந்ததை உணர்ந்தார்.  திரிகாலமும் உணரும்  ஞானி  அல்லவா அவர். கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. 

இறைவன் அருள் மிக்க  அந்த  ஞானி அடுத்த கணமே  அன்னையிருந்த ஊரில் இருந்தார். அருகே அமர்ந்தார். அவளை மடியில் இருத்திக்கொண்டார்.  அன்னையின் கண்கள் மட்டுமே  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக  உடல் ஒவ்வொன்றாக  சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. மரணம்  அவளை  முழுதுமாக  ஆட்கொண்டது. தாய்  வெறும்  உடலானதை உணர்ந்த  அந்த துறவி அவளுக்கு  அந்திம கடன்களை  ஆசாரத்தோடு  சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி?ஏச்சுக்கும் பேச்சுக்கும்  இடையே துறவிக்கு எது உறவு எள்ளிநகையாடினர் அறியாதோர். 

துறவியின் மனத்திலிருந்துஎண்ணக் குவியல்களிலிருந்து
 வெடித்து  வாய்  வழியே  கடல்  மடையென  ஐந்து  ஸ்லோகங்கள் வெளியேறியது  அப்போது.  இது அந்த ஞானியின்  மற்ற  காவியங்களிலிருந்து  சற்று  அப்பாற்பட்ட  ஒன்றே  ஒன்று.  இதில் உணர்ச்சி பொங்கும். உறவும் பாசமும்  தொக்கி நிற்கும்.  அதுவே  இன்றும் என்றும்  அழியாத காவியமாக இருப்பதைப்  பார்ப்போமா? .

தாயைக் கடவுளாகவே  போற்றுவது  அறிந்த விஷயம்.  கடவுளையும்  தாயாகவே  நெருங்குவதும் தெரிந்ததே.  உலகியலில்  ஒரு  தாய்க்கு  மகனாகப்  பணி  புரியவில்லையே  என்ற  ஏக்கம் எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது.    முக்கியமாக அவள் இருக்கும்போது. மனச்சாட்சியின் உறுத்தல் படிக்கும்போது  நமக்கும்  உள்ளே உறுத்துகிறதே. நெருடுகிறதே.`

आस्ते तावदिय प्रसूति समये दुर्वार-शूल-व्यथा
नेरुच्य तनुशोषण मलमयी शय्या  संवत्सरी
एकस्यापि  गर्भभार भरण क्लेशस् यस्यक्षम:
दातु निष्कृति उन्नतोऽपि तनयस्यै जनन्यै नम

‘’ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:’’

 என்  அம்மா! என்  தலை  உன்னிலிருந்து வெளிப்படும் போது  என்னமாக  பல்லைக் கடித்துக்கொண்டு  தாங்க முடியாத  பிரசவ  வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே  தள்ளினாய் வருஷக் கணக்காய்  உன்  அருகே  படுத்து  உன்  ஆடையைபடுக்கையை தாராளமாக  நனைத்தேனே.  ஒரு  வார்த்தை கோவித்ததில்லையே . மாறாக  சிரித்து  என்னை அணைத்தாய்.  

என்னால்  உன்  உடல்  இளைத்ததுசக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது.  ஒரு  பத்து மாச  காலம்  என்னமாய்  நான்  உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு  செய்வேன்.உலகம் என்னை புகழ்வதால் அது ஈடாகுமா? 

குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

என்  அம்ம்மா!!   திடீரென்று   ஒருநாள்  நான்  காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய்.  அது எவ்வாறு  உன்னை உலுக்கியது. கண்ணீர்  கங்கையாய்  பெருக  என்  குருகுல வாச ஆசான் வீட்டுக்கு  ஓடிவந்தாய். என்னைத் தேடினாய் என்  ஆடையைக் கவனித்தாய். என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல்  பாதம் வரை தடவிக்கொடுத்தது  நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என்  ஆசானும் கூட  உன்னோடு   அழுதது இப்போது நடந்தது போல்  இருக்கிறதே.   நான்  என்ன செய்யமுடியும்.  பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக  வணங்குகிறேன். 

.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ !  என்  அம்ம்மா !   உனக்கு  வலியெடுத்த போது  நீ  என்ன  கத்தினாய் ஞாபகமிருக்கிறதா '' அப்பா ம்மா !  தேவா  சிவா தெய்வமே  கிருஷ்ணா தேவ தேவா கோவிந்தா ஸ்ரீ  ஹரி, கவானே முகுந்தா ''  நான்  என்ன  செய்யப்போகிறேன் தெரியுமா இப்போது இதற்கு  ஈடாக என் அன்புள்ள  ம்மா பணிவோடு உன் காலில்  விழப்போகிறேன். 

 दत्तं मातस्ते मरणसमये तोयमपि वा
स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धमपि वा
 जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु:
अकाले संप्राप्ते मयि कुरु दया मातुअतुलाम्

.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II 

என்  தாயே உனக்கு  நான்  என்னவெல்லாம்  செய்யவில்லை  தெரியுமா  தவித்த  வாய்க்குத் தண்ணீர் கூட  தரவில்லை. உன் கடைசி  யாத்திரைக்கு  உபகாரமாக ஒரு   விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை  என்று  ஒன்று இருந்ததா  எனக்கு போனதெல்லாம் போகட்டும்  உனக்கு நினைவு அழியுமுன்னே  அந்த  அந்திம நேரத்தில் உன்  காதில்'' ஒ ராமா ஸ்ரீ  ராமா --  ஏதாவது ஒரு  வார்த்தையாவது  சொல்ல  நான்  இருந்தேனா ஈடற்இணை கூறமுடியாத  தாயே,இரக்கமற்ற  என் மேல்  கொஞ்சூண்டு இர க்கம் வை. என் தவற்றையெல்லாம்  மறந்து மன்னித்து விடு.  ஏதோ  கடைசி   கடைசியாகவாவது உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததை செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..
  
मुक्तामणि त्वं नयनं ममेति
राजेति जीवेति चिरं सुत त्वं
इत्युक्तवत्यातव वाचि मात:
ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥

முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II


அம்மா நீ  நீடூழி  வாழ்க.  '' என்  முத்தே என்  நவ நிதியேஎன் கண்ணின் கருமணியேஎன் ராஜா குட்டி என் உயிரின் உயிரே,'' என்றெல்லாம்  இட்டுக்கட்டி  நீயாக  ராகம் போட்டு  என்னை தூக்கி கொஞ்சி  பாடுவாயே நான்  என்ன  செய்கிறேன் இப்போது அதற்கு நன்றிக்கடனாக தெரிகிறது.  அன்பின் ஈரத்தோடு பாசத்தின்  பனித்துளியோடு கருணையின் குளிர்ச்சியோடு நீ பாடிய அந்த  வாய்க்கு  ஈரமில்லாமல்  றண்ட  உலர்ந்த   அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக  போடுகிறேன்.

No comments:

Post a Comment