Sunday, May 8, 2016

விளக்கு / தீபம்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன்.

மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது,

என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும், போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன்.

நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும்.

இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.

இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள்.

அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள்.

நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள்.

நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள்.

நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும் விளக்கேற்றவேண்டிய நேரம் விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்

1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம் எந்தெந்த எண்ணைகளில்

விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‌‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே
+++++++++++++++++++++++++++++++
விளக்கேற்றும் பலன்கள்
-----------------------------------
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்
நடைபெறும்.
சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.
வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .
மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .
பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.)
---------------------------------------------------------------
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

எண்ணையும் அதன் பயன்களும்
---------------------------------------------
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
---------------------------------
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தட ை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
---------------------------------------------------------------
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ்
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது

திரிகளும், பயன்களும்
-------------------------------
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

வளம் பெருக்கும் அகல்:
---------------------------------
கார்த்திகைமாதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு.
பஞ்ச பூத வாஸ்து
பூமி தோஷம்
நீரோட்டம்
தெய்வசக்தீ
குலதெய்வம்
ஆன்மா தொல்லைகள்
அகல
கண்திருஷ்டி
பாதிப்பு அறிய
நோய்கள் நீங்க
வாருங்கள்
சங்கர் சித்தர்
9788431343

திருமணம்

திருமணநிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளும் அர்த்தங்களும்.                                                                    

1.நாட்கால் நடல்:

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்)வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம்,பூ,நவதாணியம் இவற்றை போட்டு போட்டு பந்தகால் நடவேண்டும்.(ஆனால் தற்பொழுது பெயிண்ட் அடித்த மூங்கில் மரம் நடப்படுகிறது) சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். பந்தகால் நட்டவுடன் மரத் தின் அடியில் பால் ஊற்றி மஞ்சள்குங்குமத்தை மேல் நோக்கி தடவவேண்டும்.மாவிலை,நவதானியம் வெள்ளி நாணயம்,பூ,தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிப்பு செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.


2.பொன்னுருக்குதல்:

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாது காக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து பொற்கொல்லரிடம் புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.


3.களப்பரப்பு:

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழக்கள் பூ)நிரப்புதல் களப்பரப்பு ஆகும்.


4.காப்பு கட்டுதல்:

காப்பு என்பது அரண் போன்றது. மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள உருவாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஸ்டி. மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு. காப்புக் க்ட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமா அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.


5.முளைப்பாலிகை:

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது .முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின் றது.


6.தாரை வார்த்தல்:

   தாரை என்றால் நீர் என பொருள். நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல். தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மண மகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்.


 என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன்.என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு–மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை, மணப்பெண்ணின் கை ,மணப்பெண் ணின் தந்தையின் கை ,எல்லாவற்றி ற்கும் மேலாக மணப்பெண்ணின் தா யாரின் கை . இந்தவெரிசையில் கைக ளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும்சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும்.


7.தாலி கட்டுவது:

  தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனிதநிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.


 தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது பட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். (இயல் மஞ்சளை எடுத்து,வெய்யிலில் காயவைத்து,நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்) தாலியின் மகிமை “மஞ்சள், கயிறு,கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம்,சங்கிலி என்பதில் இல்லை.


   இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார்களின் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.


 தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும். பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என்று கூறப்பட்டுள்ளது.மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.


  தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம்,தன்னடக்கம், ஆற்றல், விவேகம்,உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போ ன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண் ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.


8. ஹோமம் வளர்த்தல்:

 வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால்தான் சாஸ்திரப்படி சரியாகும்.என்பது மரபாகும்.


9.கும்பம் வைத்தல்:

 கும்பம் இறைவனது திருஉருவின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி கும்பத்தில் பாவிக்கப்படும் .

கும்பவஸ்திரம்  —-  உடம்பின் தோல்

நூல்           —-  நாடி நரம்புகள்

குடம்          --  தசை

தண்ணீர்       —–  இரத்தம்

நவரத்தனங்கள் ——  எலும்பு

தேங்காய்      -— தலை

மாவிலை      —– தலைமயிர்

தருப்பை       —- குடுமி

மந்திரம்        —– உயிர்

ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.


10.அம்மி மிதித்தல்:

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும்,பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும்,ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர்,மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பதாகும்.


11.அருந்ததி பார்த்தல்:

 அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவி யாவார்.ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம்.ஏழு நட்சத்திரங்களில்,ஆறாவதாக (நட் சத்திரம்) இருப்பவர் வசிஷ்ட ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும்,இந்திரனின் மேல் சபலப்பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்குஒரே நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும்,எண் ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இரு க்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும்,கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.


12.ஏற்றி இறக்குதல்:

 மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு , நிறை நாழி ,சந்தனக்கும்பா, பன்னீர்ச் செம்பு,தேங்காய், பழம் , குங்குமச்சிமிழ் ,மஞ்சள் பிள்ளையார் போன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் ,முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு.


13. அடை பொரி:

 பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும், திருமண நிகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர்பாகம் ஆகும்.


14. நிறை நாழி:

 நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.


15.ஒலுசை:

 ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள்அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி . சிறப்பான இல்லற வாழ்வி ற்கு அத்தியாவசியமா ன பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது . ஒலுசைப் பொருட்க ளைப் பட்டிய லிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்


16.மணமகள் பொங்கலிடுதல்:

  முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும் ,முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்க ளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் . மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெ ளிப்படுத்துவது . புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது. இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறி யே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.


17. பிள்ளை மாற்றுவது:

 எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும் நீங்கள் பச்சைக் குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம். பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது. திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ”மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ –திருவள்ளுவரின் வாக்காகும். நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.


18. மறுவீடு:

  மணமகளின் பெற்றோரும்,உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று விருந்துண்டு மகிழ்ந்து உறவை வலுப்படுத்துவது. ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே ம்றுவீடு ஆகும்.


19. கோவிலுக்கு அழைத்துச் செல்லல்:

 நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும். வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துதுடன், இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுதுச் செல்ல வேண்டும்

Thursday, May 5, 2016

பலன் தரும் ஸ்லோகங்கள்

பலன் தரும் ஸ்லோகங்கள்
திதி நித்யா தேவியர் யார்? அவர்கள் பராக்ரமம் என்ன?
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப் 
பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை என்றும் சொல்லலாம். அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுதலையாவோம், இக பர சுகங்களை நிச்சயமாகப் பெறுவோம்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

ஆதிசங்கரரால் பிரசித்தமான ‘சுபாகம தந்த்ர பஞ்சகம்’ என்ற நூலில் இவர்களின் உபாசனை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ‘தந்த்ர ராஜ தந்த்ரம்’ என்ற நூலிலும் இவர்களின் தியான ஸ்லோகங்கள், யந்திரங்களின் விளக்கங்கள், உபாசனை புரியும் முறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

சர்வம் சக்தி மயம். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன?

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே 
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.


2. பகமாலினி
இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள். 

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.

வழிபடு பலன்கள்:
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.


3. நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:
குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா
அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். 

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே 
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி
அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். 

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே 
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:
நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி
இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்: அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.
7. சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே 
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா
இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும். 

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே 
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்:
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

9. குலஸுந்தரி
குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே 
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி. 

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே 
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்:
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.


11. நீலபதாகா
நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள். 

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.


13. ஸர்வமங்களா
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. 

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே 
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.


14. ஜ்வாலா மாலினி
இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே 
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள். 

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே 
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: 
பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.

ஸ்ரீ வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்.


ஓம் உக்ர ரூபாயை வித்மஹே 
தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி 
தந்நோ வாராஹீ ப்ரசோதயாத்.


SRI VAARAAHI AMMAN GAYATRI MANTHRA.


OM UGRA ROOPAAYAI VIDHMAHE
THAMSHTRAAKARAANYAI DHEEMAHI
THANNO VAARAAHEE PRACHODAYATH.

Slokas and its benefits - பலன் தரும் ஸ்லோகங்கள்-varahi-villupuram-gayatri-b.jpg  

கிரகண பாதிப்புகள் விலக பலன் தரும் ஸ்லோகம்


இந்திராகணி யமாக்ஷஸி ஜலபதிர் வாயுர்தனே
சசிவஹைஹி
தைஸ்திரைராயுத பூஷணைஸ்சவிஹீதா த்ரை
லோக்ய ரஹாகராஹ
ஆதித்யாதி நவகிரகஸ் சாமுதித் ஜென்மக்ஷ
யோகோமம
சூர்ய க்ரஹ சோமக்ரஹ சமஸ்த தோஷ ரஹிதம்
குர்வம்து ரக்ஷந்துமாம்.

பொதுப் பொருள்: சந்திர கிரகணத்தால் எனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அஷ்டதிக் பாலகர்களும் சூரியன் முதலான நவகிரக நாயகர்களாலும் விலகட்டும்; அவர்கள் எல்லாம் எனக்கு யோகத்தை அளிக்கட்டும். அவர்கள் என்னை நோயிலிருந்தும் வறுமையிலிருந்தும் காக்கட்டும். 

Wednesday, May 4, 2016

தியானம்

🌹வாழ்வதற்கு பிறந்தவர்கள்🌹

இலவசமாக கிடைக்கும் அற்புதமான பிரபஞ்ச சக்தி

🌹பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?
+++++++++++++++++++++++++++++

🌹உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் 
உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள்
அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று
உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் "ஆம்"
அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.
இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள்
ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான்
என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.
ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.
எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்
நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்த
நல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும்
நல்லவையாக இருக்கும்.
கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள்
ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும்
கெட்டவையாக இருக்கும்.
மனது என்பது ஒளி நாடாவை போன்றது. 
எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து
திருப்பி சொல்லும்.
ஆழ்மனது என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது.
உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.
ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனால் தோல்வி 
கரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம்
கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள்
ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.
இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது 
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள் 
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும். 
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.
இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை 
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று 
நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம். 
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும் 
உங்களுடைய நினைப்பில்தான் உள்ளது. அந்த தடையை 
தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால் 
அந்த தடையை தகர்த்து எறிந்து விடுவீர்கள்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள்.
எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது. 
சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள் 
நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை 
உண்டாக்க முடியுமா?
எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து 
எறிந்து விடலாம்.
ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் 
அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக 
பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள் 
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.
தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி
நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு 
இருங்கள். வெற்றி நிச்சயம்.
மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு 
முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக 
மாற்றி நினைப்பதற்கு ஒரு கருவி தேவை. 
அந்த கருவிதான் தியானம்.
தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை 
மாற்றி நினைக்க வைத்து உங்கள் வெற்றியை 
அடையலாம். 

+++++++++++++++++++++++++++
பிராணாயாமம் பற்றி?★

பகவான்ஸ்ரீரமண மஹரிஷி : 

அது பற்றி என்ன? பூரகம் கும்பகம் ரேசகம் என்று அந்தக் கலைச்சொற்களை நான் பேசாமல் போனாலும், அவற்றை பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறேன்.

 மனமும் பிராணனும் ஒரே மூலத்திலிருந்தே உதிக்கின்றன. ஒன்று அடங்கினால் மற்றொன்று தானே அடங்கும்

். மூச்சை அடக்குவதை விட மனத்தை அடக்குவது எளிது.


 மூச்சை அடக்குவது என்பது பசுவைக் கட்டாயப்படுத்திப் பால் கறப்பது.

Monday, May 2, 2016

உறவுகள்

உறவுகள்… தொடர்கதை
‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிற தில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன். சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப் போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் – சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா. இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ – நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது. திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை… வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள். சரி.

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?
அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை. ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ – இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும், வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என… யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடரமுடியவில்லை என்பது எவ்வளவு முரண்?! வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை. உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால்… கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க, உற்சாகமாகிப் போனது. யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம்கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என… பொழுதுபோக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள். அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.
‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு… ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.
‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு. ‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா… ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!

உறவுகளைப் பரிசளியுங்கள்… அடுத்த சந்ததிக்கு!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுட னான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே… பொறாமை பிடிச்சவ…’ என்று நெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக் காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம். ‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங் களே…’ என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளை யும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங் கள்; உறவுகள் பேணுங்கள்!