Thursday, June 23, 2016

மந்திரம்-எந்திரம்-தந்திரம்:


மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள் ...

மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். 

இத்தகைய மந்திரமானது பலவகை-

1 மூல மந்திரம், 
2. பீச மந்திரம் 
3. பஞ்ச மந்திரம் 
4. சடங்க மந்திரம், 
5. சங்கிதா மந்திரம், 
6. பத மந்திரம்
7. மாலா மந்திரம், 
8. சம்மேளன மந்திரம், 
9. காயத்திரி மந்திரம்
10. அசபா மந்திரம், 
11. பிரணாப்பிரதிட்டா மந்திரம் 
12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம், 
14. சாத்திய மந்திரம், 
15. நாம மந்திரம்
16. பிரயோக மந்திரம், 
17. அத்திர மந்திரம், 
18. விஞ்சை மந்திரம்
19. பசிநீக்கு மந்திரம், 
20. விண்ணியக்க மந்திரம், 
21. வேற்றுரு மந்திரம்
22. துயில் மந்திரம், 
23. திரஸ்கரிணீ மந்திரம், 
24. சட்கர்ம மந்திரம், 
25. அஷ்ட கர்ம மந்திரம், 
26. பஞ்சகிருத்திய மந்திரம், 
27. அகமருடண மந்திரம்,
28.எகாஷர மந்திரம், 
29. திரயஷரி மந்திரம், 
30. பட்சாஷார மந்திரம், 
31. சடஷர மந்திரம், 
32. அஷ்டாஷர மந்திரம், 
33. நவாக்கரி மந்திரம், 
34. தசாஷர மந்திரம், 
35. துவாதசநாம மந்திரம், 
36. பஞ்சதசாக்கரி மந்திரம்
37. சோடஷாஷரி மந்திரம், 
38. தடை மந்திரம், 
39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம், 
41. உருத்திர மந்திரம், 
42. சூக்த மந்திரம்
43. ஆயுள் மந்திரம், 
44. இருதய மந்திரம், 
45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம், 
47. துதி மந்திரம், 
48. உபதேச மந்திரம், 
49. தாரக மந்திரம், 
50. ஜெபசமர்பண மந்திரம், 
51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 
52. நீலகண்ட மந்திரம் , 
53. மிருத்யுஞ்சய மந்திரம் , 
54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 
55. சரப மந்திரம் , 
56. வீரபத்ர மந்திரம் , 
57. பைரவ மந்திரம் , 
58. விநாயக மந்திரம் , 
59. சண்முக மந்திரம் , 
60. நரசிங்க மந்திரம் , 
61. நவகிரக மந்திரம் , 
62. வாலை மந்திரம் , 
63. புவனை மந்திரம் , 
64. திரிபுரை மந்திரம் , 
65. துர்க்கை மந்திரம், 
66. அசுவாரூடி மந்திரம், 
67. சப்தமாதர் மந்திரம், 
68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 
69. பதினெண் கண மந்திரம், 
70. யோகினியர் மந்திரம், 
 காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.

இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.

அவையாவன 

1. நம, 
2. சுவதா, 
3. சுவாகா, 
4. வௌஷடு, 
5. வஷடு, 
6. உம், 
7. படு என்பனவாம். 


இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++
மனோவசிய மந்திரம்

மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால் 
எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம். 



எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற 
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான். 

ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா. 

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும். 
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க 
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.
மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல் 

போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
+++++++++++++++++++++++++++++++++++++++
யந்திர மன சுத்திமுறை

 யந்திரம் சுத்தி செய்யும் முறை & யந்திரக்கலை :-
நீங்கள் எந்த யந்திரம் வரைவதானாலும் அதை முதலில் மனதில் பதியவைத்து தியானித்து பின்புதான் யந்திர தகட்டில் பதிக்க வேண்டும் என்று  கண்டிருப்பீர்கள். அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் யந்திர தகட்டையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிய வேண்டும். யந்திர தகட்டின் சுத்தத்தின் அவசியம் எதற்கு எனில் நம் மனஜெபத்தால் யந்திர தகட்டில்தான் கோடுகள் எண்ணத்தால் பதியவைத்து வரையபோகிறோம் அல்லவா. அவ்வாறு பதித்த யந்திர தகட்டை வைத்துதான் நாமும் பிறரும் பலன் பெறப்போகிறோம். அவ்வாறு ஒருமுறை மன சுத்தத்துடன் எழுதப்பட்ட யந்திரம் பல ஆண்டுகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் நாம் பயன்படுத்தும் யந்திரமும் மிக சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே யந்திர தகட்டை சுத்தம் செய்து வழிபடுவது மிக அவசியமாகும்.
முதலில் திசை பார்த்து அமர்ந்துகொள்ளுங்கள். உங்கள் முன் ஐந்து பாத்திரம் வைத்து அதில் ஐவகையான சுத்திகரிப்பு நீரை வைத்துக்கொள்ளவும். எவ்வாறெனில் ஒரு பாத்திரத்தில் கடல்நீரை வைத்துக்கொள்ளுங்கள். கடல்நீர் கிடைக்கவில்லை எனில் சுத்த தண்ணீரில் சிறிது சாப்பாட்டு உப்பு கரைத்து கடல் நீராக மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்த பாத்திரத்தில் மஞ்சள் நீர் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் பசும்பால் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கடுத்த பாத்திரத்தில் இளநீர் வைத்துக்கொள்ளுங்கள், ஐந்தாவது பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
[இப்போது எழுத வேண்டிய யந்திரத்தை முதலில் ஸ்ரீ கணபதியை வேண்டி உப்பு தண்ணீரில் கழுவவும் எல்லா இடத்திலும் உப்புநீர் பட வேண்டும். யந்திரத்தை உப்பு நீரிலேயே வைத்து உங்கள் விருப்பமான தேவதையைக் கொண்டு மந்திரம் ஒன்றை சித்திசெய்து வைத்திருப்பீர்கள் அல்லவா. அதைக்கொண்டு தான் யந்திரத்தை பலப்படுத்த முடியும் அல்லவா. அந்த மந்திரத்தையும் தேவதையும் மனதில் பிராத்தனை செய்து சித்தியான மந்திரத்தை கூறியவண்ணமே உப்பு நீரில் உள்ள யந்திர தகட்டிற்கு கற்பூர ஆரத்தியோ அல்லது ஊதுபத்தியாலோ ஆராதனை செய்யவும்.
அடுத்து மஞ்சள்நீரில் யந்திரத் தகட்டை கழுவி ஆராதனை செய்யவும். அடுத்து பசும்பாலில் தகட்டை கழுவி ஆராதனை செய்யவும் அடுத்து இளநீரில் தகட்டை கழுவி மந்திரம் கூறி ஆராதனை செய்யவும். பிறகு சுத்த தண்ணீரில் யந்திர தகட்டை வைத்துவிட்டு உங்கள் வலது உள்ளங்கை யாவும் யந்திரத்தின் மையப்பகுதியில் வைக்கவும் நிமிர்ந்து அமர்ந்து இதை செய்யவும் இடது கை உள்ளங்கை உங்கள் மார்பின்மீது வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு விஷயத்தை கையாள வேண்டும். என்னவெனில் முதல் மரியாதை எப்போதும் நம் கணநாதருக்கு செய்தே செயலை துவக்குகிறோம் அல்லவா. அதுபோல்  ஒவ்வொரு காரியத்திற்கும் (செயலுக்கும்) ஒரு சக்தி தேவர்கள் இருப்பார்கள். நாம் அவர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும். முதலில் வைத்த கையை எடுக்காமலேயே
(சுவாசம் கவனித்துக்கொள்ளவும். உங்களுக்கான யந்திரமாக இருந்தால் இடது நாசியிலும் பிறருக்கான யந்திரமாக இருந்தால் வலது நாசியிலும் காற்று செல்வது சிறப்பு. செயல் ஒன்று சுவாசம் வேறாக இருக்கக்கூடாது . அதாவது உங்களுக்கான யந்திரம் எழுதும்போது வலது நாசியில் காற்று ஓடக்கூடாது . இந்த யந்திரம் எழுதும் நேரத்தில் சுழிமுனை ஓடினால் பாதகமில்லை. எனினும்
வாசிக்கலையில் செயல்களை பொருத்து குறிப்பிட்ட திசையில் சக்திகளை மனதால் கூட்டி வாசியை செலுத்தினால் அச்செயல் நிச்சயம் சக்தி பெறும். கூடவே வெற்றியும் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். என் போன்ற பலரின் அனுபவமும் ஆய்வும் கண்டபோது உண்மையானது வாசிக்கலை.)

யந்திர காயத்ரியை மூன்று முறை மனதால் கூற வேண்டும். பிறகு மந்திர காயத்ரியை மனதால் கூற வேண்டும். பிறகு தந்திர காயத்ரியை மூன்று முறை  கூற வேண்டும்.

 (நாம் யந்திரத்தை பயன்படுத்தப்போவதால் யந்திர ராஜாவிற்கு மரியாதை வணக்கம் செய்ய காயத்ரி மந்திரம் கூற வேண்டும். மந்திர எழுத்துக்களை எந்திரத்தில் பதிக்கப்போவதால் நாம் மந்திர ராஜாவிற்கு மரியாதை செய்யும் பொருட்டு, மந்திர ராஜா காயத்ரி மந்திரம் கூற வேண்டும்.விதியிருக்க அதையும் மீறி சக்தி பெறும் பொருட்டு யந்திரம் எனும் தந்திரத்தை கையாளப்போகிறோம் அல்லவா. அதற்காக தந்திர ராஜாவிற்கு மரியாதை செய்யும் பொருட்டு தந்திர காயத்ரி மந்திரம் கூற வேண்டும்.)
இவ்வாறாக மனதால் முழுமனதையும் யந்திர தகட்டின் மீது வைத்து கூறி ஆரத்தி காண்பித்து பிறகு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கவும். தண்ணீரில் வைத்தே மந்திரம் கூற காரணம், வெளியில் வைத்து மந்திரம் கூறுவதை விட பல மடங்கு தண்ணீரில் வைத்து மந்திரம் கூறும்போது அதிரும். எனவே தான் தண்ணீரில் வைத்தே மந்திரம் கூற வேண்டும்.
 அடுத்து யந்திரம் எந்த செயலுக்காக செய்யப் போகிறீர்களோ அந்த செயலுக்குரிய வஸ்திரத்தின் மேல் யந்திர தகட்டை வைத்து வரைய துவங்கவும். உதாரணமாக வசியத்திற்காக யந்திரம் எழுதுகிறீர்கள் என்றால் ஞாயிற்றுக்கிழமை சூரியஓரையில் கிழக்கு பார்த்து அமர்ந்து சிவப்பு பட்டுதுணிமேல் யந்திர தகட்டை வைத்து எழுத ஆரம்பிக்க வேண்டும். (மற்ற செயலுக்கும் அறிய அஷ்டகர்ம வகையினை பற்றிய பயிற்சியில் விரிவாகக் காண்க.) அஷ்ட கர்மத்திற்கும் ஒவ்வொரு வகையான ஆசனம் உள்ளது . அது இருந்தால் அதில் அமர்ந்தும் செய்யலாம். இல்லாதவர்கள் தர்பை ஆசனத்தில் அமர்ந்தே செய்யலாம். பிறகு எழுதவேண்டிய ஆத்ம கோடுகளான சக்திமிக்க பதிவுகளை யந்திரத்தில் மந்திரம் ஓதியவண்ணம் வரையவும். இப்போது ஓதக்கூடிய மந்திரம் உங்கள் சித்தியான மூல மந்திரத்தை பயன்படுத்தவும். அல்லது எழுதும் யந்திரத்தின் தெய்வம் யாரோ அந்த மந்திரத்தையும் கூறலாம்.
எழுதிய பிறகு எலுமிச்சை கனியை வெட்டி யந்திரம் முழுவதும் தேய்த்து தோஷம் கழிக்கவும். பிறகு இளநீரில் கழுவி அடுத்து சுத்த தண்ணீரில் அல்லது பன்னீரில் சுத்தம் செய்து பொட்டிட்டு எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுத்தி போடவும். பிறகு பூஜையில் யந்திரத்தை வைத்து யந்திரத்தில் பதித்த தேவதையின் மந்திரத்தை கூறி இன்னாருக்கு இந்த செயலுக்காக பலன் தரவேண்டும் என உரு ஏற்றி அளிக்க வேண்டும். உரு ஏற்றுவதை செயலின் தரத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். ஆலய விக்ரகத்தின் அடியில் அடியில் பதிக்க என்றால் கண்டிப்பாக 48 தினம் இருவேளையும் உருகொடுக்க வேண்டும். யந்திரம் எழுதுபவரின் மந்திர சித்தி பலத்தை பொருத்தே உரு ஏற்றும் நாளையும் நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு முழுமன ஈடுபாட்டோடு உரு ஏற்றுகிறீர்களோ அவ்வளவும் யந்திரம் சக்தி பெரும்
மற்றவருக்காக யந்திரம் எழுதி தருகிறீர்கள் என்றால் உரிய தட்சனையை இறுதியில் நிச்சயம் கேட்டு பெற்றுவிடவும். ஏனெனில் உங்கள் உடல் கஷ்டத்தை இலவசமாக செய்யலாம். ஆனால் யந்திரம் ஜென்ம கஷ்டத்தால் உருவாக்கக்கூடியது. எனவே உங்கள் ஆத்மா சாந்தப்பட்டு சந்தோஷப்படும்படியான தட்சனையாக இருந்தால் மிக மிக அற்புதமாக யந்திரம் வேலை செய்யும். அல்லாதபோது எல்லாம் சரியாக செய்து உரிய தட்சனை பெறுபவர் செலுத்தாதபோது உங்கள் மனம் வருத்தம் அடைந்தால் யந்திரம் வலுவிழந்து விடும். இது மிக மிக கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயமாகும். நீங்களும் ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொண்டு தர்மப்படி தட்சனையை பெற்று சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் விரும்பினால் இலவசமாகவும் செய்யலாம். அது உங்கள் மனதை பொருத்தது . எனினும் மரியாதை தாம்பூலத்தையாவது பெற்று சந்தோஷத்துடன் நீங்கள் மனநிறைவும் பூரிப்புடனும் யந்திரத்தை ஒப்படைக்க வேண்டும். இன்றைக்குள்ளவருக்கு இந்த மரியாதை தெரியவில்லை என்றாலும் அதைபற்றி நீங்கள் மன சஞ்சலம் அடைய வேண்டியதில்லை. நீங்களும் மதிப்பிற்குரிய உண்மையானவராக இருக்கவும். யந்திரம் வெரும் கோடுகளல்ல. அது நம் மனம் செயல் யாவையும் கொண்டு நிர்ணயிக்கும் ஒரு ஆலயமாகும். நம் அங்க தேவதையால் யந்திர தேவதையை உயிர்பிக்கும் கலைதான் யந்திரக் கலையாகும். யந்திரம் நிறைவு செய்த பின்பு மந்திரயந்திர தேவதைக்கு சிறு யாகதர்பனம் செய்தால் யந்திரம் நினைத்தபடியே வேளை செய்யும் .
இருதியாக உங்கள் கவனத்திற்கு :

யந்திரங்களை நீங்களே உருவாக்கலாம் என்பதை மறவாதீர் , தகட்டில் எழுதும் எந்த கிருக்கலும் மனக்கோடுகள்தான் . அழகாக வரைந்தால்தான் பலன் கிடைக்கும் என்று நம்பிவிடாதீர்கள் .யந்திரத்தின் அளவு எப்போழுதும் சதுரமாக இருப்பது நலம் .மன பிராத்தனையும் மன அழுத்தமும் கொண்டு சிந்தனை கலையாமல் கோடுகளை பதியுங்கள் போதும் . அழகு வேலை செய்யாது மன ஆழம் தான் வேலை செய்யும் . மறவாதீர் .நீங்களும் படைப்பாளிதான் 




+++++++++++++++++++++++++++++++++++++

மந்திரம்-எந்திரம்-தந்திரம்:
‘மனனம் செய்பவனை திராயதே’ – அதாவது உயர் நிலைக்கு அழைத்து 
செல்வது மந்திரமாகும். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு மந்திரம் உள்ளது. 
அது ஜபம் செய்யச்செய்ய சப்த அலைகளின் வலிமையால் ஆன்மிக 
முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த தெய்வத்தின் தரிசனமும் 
கிடைக்கிறது.
இதேபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சக்கரம் உண்டு. அந்த 
தெய்வத்தின் அடிப்படையில் சதுரம், முக்கோணம், வட்டம், பத்மம் முதலிய 
வடிவங்களால் ஆன வரைபடங்கள் யந்திரம் எனப்படும். யோக முறைப்படி 
மனித உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களை குறிப்பன இந்த 
எந்திரங்கள்.
ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் சில குறிப்பிட்ட முத்திரைகள் 
அடையாளச் செய்கைகள் பூஜை முறைகளால் வகுக்கப்பட்டுள்ளன. இவை 
முழு மன ஒருமைப்பாட்டிற்கு உதவும். இவையே தந்திரங்கள் எனப்படும்.
மந்திரம் – எந்திரம் – தந்திரம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

கோபுரம் ‘ஸ்தூல லிங்கம்’ என்று சொல்லப்படும். அதாவது அனைவரும் 
தரிசிக்குமாறு வெளிப்படையாக அமைந்த இறைவனின் அடையாளம். 
அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறப்படுகிறது.
புத்திக்கோளாறு, மனக்கலக்கம் உடையவர்கள், சோளிங்கபுரம் – 
யோகநரசிம்மர், குணசீலம் – பெருமாள், சோட்டாணிக்கரை – பகவதி 
அம்மனை தரிசித்தால் குணமடையலாம்

No comments:

Post a Comment