Thursday, June 23, 2016

மந்திரம்-எந்திரம்-தந்திரம்:


மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள் ...

மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். 

இத்தகைய மந்திரமானது பலவகை-

1 மூல மந்திரம், 
2. பீச மந்திரம் 
3. பஞ்ச மந்திரம் 
4. சடங்க மந்திரம், 
5. சங்கிதா மந்திரம், 
6. பத மந்திரம்
7. மாலா மந்திரம், 
8. சம்மேளன மந்திரம், 
9. காயத்திரி மந்திரம்
10. அசபா மந்திரம், 
11. பிரணாப்பிரதிட்டா மந்திரம் 
12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம், 
14. சாத்திய மந்திரம், 
15. நாம மந்திரம்
16. பிரயோக மந்திரம், 
17. அத்திர மந்திரம், 
18. விஞ்சை மந்திரம்
19. பசிநீக்கு மந்திரம், 
20. விண்ணியக்க மந்திரம், 
21. வேற்றுரு மந்திரம்
22. துயில் மந்திரம், 
23. திரஸ்கரிணீ மந்திரம், 
24. சட்கர்ம மந்திரம், 
25. அஷ்ட கர்ம மந்திரம், 
26. பஞ்சகிருத்திய மந்திரம், 
27. அகமருடண மந்திரம்,
28.எகாஷர மந்திரம், 
29. திரயஷரி மந்திரம், 
30. பட்சாஷார மந்திரம், 
31. சடஷர மந்திரம், 
32. அஷ்டாஷர மந்திரம், 
33. நவாக்கரி மந்திரம், 
34. தசாஷர மந்திரம், 
35. துவாதசநாம மந்திரம், 
36. பஞ்சதசாக்கரி மந்திரம்
37. சோடஷாஷரி மந்திரம், 
38. தடை மந்திரம், 
39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம், 
41. உருத்திர மந்திரம், 
42. சூக்த மந்திரம்
43. ஆயுள் மந்திரம், 
44. இருதய மந்திரம், 
45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம், 
47. துதி மந்திரம், 
48. உபதேச மந்திரம், 
49. தாரக மந்திரம், 
50. ஜெபசமர்பண மந்திரம், 
51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 
52. நீலகண்ட மந்திரம் , 
53. மிருத்யுஞ்சய மந்திரம் , 
54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 
55. சரப மந்திரம் , 
56. வீரபத்ர மந்திரம் , 
57. பைரவ மந்திரம் , 
58. விநாயக மந்திரம் , 
59. சண்முக மந்திரம் , 
60. நரசிங்க மந்திரம் , 
61. நவகிரக மந்திரம் , 
62. வாலை மந்திரம் , 
63. புவனை மந்திரம் , 
64. திரிபுரை மந்திரம் , 
65. துர்க்கை மந்திரம், 
66. அசுவாரூடி மந்திரம், 
67. சப்தமாதர் மந்திரம், 
68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 
69. பதினெண் கண மந்திரம், 
70. யோகினியர் மந்திரம், 
 காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.

இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.

அவையாவன 

1. நம, 
2. சுவதா, 
3. சுவாகா, 
4. வௌஷடு, 
5. வஷடு, 
6. உம், 
7. படு என்பனவாம். 


இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++
மனோவசிய மந்திரம்

மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால் 
எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம். 



எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற 
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான். 

ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா. 

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும். 
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க 
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.
மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல் 

போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
+++++++++++++++++++++++++++++++++++++++
யந்திர மன சுத்திமுறை

 யந்திரம் சுத்தி செய்யும் முறை & யந்திரக்கலை :-
நீங்கள் எந்த யந்திரம் வரைவதானாலும் அதை முதலில் மனதில் பதியவைத்து தியானித்து பின்புதான் யந்திர தகட்டில் பதிக்க வேண்டும் என்று  கண்டிருப்பீர்கள். அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் யந்திர தகட்டையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிய வேண்டும். யந்திர தகட்டின் சுத்தத்தின் அவசியம் எதற்கு எனில் நம் மனஜெபத்தால் யந்திர தகட்டில்தான் கோடுகள் எண்ணத்தால் பதியவைத்து வரையபோகிறோம் அல்லவா. அவ்வாறு பதித்த யந்திர தகட்டை வைத்துதான் நாமும் பிறரும் பலன் பெறப்போகிறோம். அவ்வாறு ஒருமுறை மன சுத்தத்துடன் எழுதப்பட்ட யந்திரம் பல ஆண்டுகளுக்கு பலன் அளிக்க வேண்டுமானால் நாம் பயன்படுத்தும் யந்திரமும் மிக சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே யந்திர தகட்டை சுத்தம் செய்து வழிபடுவது மிக அவசியமாகும்.
முதலில் திசை பார்த்து அமர்ந்துகொள்ளுங்கள். உங்கள் முன் ஐந்து பாத்திரம் வைத்து அதில் ஐவகையான சுத்திகரிப்பு நீரை வைத்துக்கொள்ளவும். எவ்வாறெனில் ஒரு பாத்திரத்தில் கடல்நீரை வைத்துக்கொள்ளுங்கள். கடல்நீர் கிடைக்கவில்லை எனில் சுத்த தண்ணீரில் சிறிது சாப்பாட்டு உப்பு கரைத்து கடல் நீராக மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்த பாத்திரத்தில் மஞ்சள் நீர் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் பசும்பால் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கடுத்த பாத்திரத்தில் இளநீர் வைத்துக்கொள்ளுங்கள், ஐந்தாவது பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
[இப்போது எழுத வேண்டிய யந்திரத்தை முதலில் ஸ்ரீ கணபதியை வேண்டி உப்பு தண்ணீரில் கழுவவும் எல்லா இடத்திலும் உப்புநீர் பட வேண்டும். யந்திரத்தை உப்பு நீரிலேயே வைத்து உங்கள் விருப்பமான தேவதையைக் கொண்டு மந்திரம் ஒன்றை சித்திசெய்து வைத்திருப்பீர்கள் அல்லவா. அதைக்கொண்டு தான் யந்திரத்தை பலப்படுத்த முடியும் அல்லவா. அந்த மந்திரத்தையும் தேவதையும் மனதில் பிராத்தனை செய்து சித்தியான மந்திரத்தை கூறியவண்ணமே உப்பு நீரில் உள்ள யந்திர தகட்டிற்கு கற்பூர ஆரத்தியோ அல்லது ஊதுபத்தியாலோ ஆராதனை செய்யவும்.
அடுத்து மஞ்சள்நீரில் யந்திரத் தகட்டை கழுவி ஆராதனை செய்யவும். அடுத்து பசும்பாலில் தகட்டை கழுவி ஆராதனை செய்யவும் அடுத்து இளநீரில் தகட்டை கழுவி மந்திரம் கூறி ஆராதனை செய்யவும். பிறகு சுத்த தண்ணீரில் யந்திர தகட்டை வைத்துவிட்டு உங்கள் வலது உள்ளங்கை யாவும் யந்திரத்தின் மையப்பகுதியில் வைக்கவும் நிமிர்ந்து அமர்ந்து இதை செய்யவும் இடது கை உள்ளங்கை உங்கள் மார்பின்மீது வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு விஷயத்தை கையாள வேண்டும். என்னவெனில் முதல் மரியாதை எப்போதும் நம் கணநாதருக்கு செய்தே செயலை துவக்குகிறோம் அல்லவா. அதுபோல்  ஒவ்வொரு காரியத்திற்கும் (செயலுக்கும்) ஒரு சக்தி தேவர்கள் இருப்பார்கள். நாம் அவர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும். முதலில் வைத்த கையை எடுக்காமலேயே
(சுவாசம் கவனித்துக்கொள்ளவும். உங்களுக்கான யந்திரமாக இருந்தால் இடது நாசியிலும் பிறருக்கான யந்திரமாக இருந்தால் வலது நாசியிலும் காற்று செல்வது சிறப்பு. செயல் ஒன்று சுவாசம் வேறாக இருக்கக்கூடாது . அதாவது உங்களுக்கான யந்திரம் எழுதும்போது வலது நாசியில் காற்று ஓடக்கூடாது . இந்த யந்திரம் எழுதும் நேரத்தில் சுழிமுனை ஓடினால் பாதகமில்லை. எனினும்
வாசிக்கலையில் செயல்களை பொருத்து குறிப்பிட்ட திசையில் சக்திகளை மனதால் கூட்டி வாசியை செலுத்தினால் அச்செயல் நிச்சயம் சக்தி பெறும். கூடவே வெற்றியும் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். என் போன்ற பலரின் அனுபவமும் ஆய்வும் கண்டபோது உண்மையானது வாசிக்கலை.)

யந்திர காயத்ரியை மூன்று முறை மனதால் கூற வேண்டும். பிறகு மந்திர காயத்ரியை மனதால் கூற வேண்டும். பிறகு தந்திர காயத்ரியை மூன்று முறை  கூற வேண்டும்.

 (நாம் யந்திரத்தை பயன்படுத்தப்போவதால் யந்திர ராஜாவிற்கு மரியாதை வணக்கம் செய்ய காயத்ரி மந்திரம் கூற வேண்டும். மந்திர எழுத்துக்களை எந்திரத்தில் பதிக்கப்போவதால் நாம் மந்திர ராஜாவிற்கு மரியாதை செய்யும் பொருட்டு, மந்திர ராஜா காயத்ரி மந்திரம் கூற வேண்டும்.விதியிருக்க அதையும் மீறி சக்தி பெறும் பொருட்டு யந்திரம் எனும் தந்திரத்தை கையாளப்போகிறோம் அல்லவா. அதற்காக தந்திர ராஜாவிற்கு மரியாதை செய்யும் பொருட்டு தந்திர காயத்ரி மந்திரம் கூற வேண்டும்.)
இவ்வாறாக மனதால் முழுமனதையும் யந்திர தகட்டின் மீது வைத்து கூறி ஆரத்தி காண்பித்து பிறகு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கவும். தண்ணீரில் வைத்தே மந்திரம் கூற காரணம், வெளியில் வைத்து மந்திரம் கூறுவதை விட பல மடங்கு தண்ணீரில் வைத்து மந்திரம் கூறும்போது அதிரும். எனவே தான் தண்ணீரில் வைத்தே மந்திரம் கூற வேண்டும்.
 அடுத்து யந்திரம் எந்த செயலுக்காக செய்யப் போகிறீர்களோ அந்த செயலுக்குரிய வஸ்திரத்தின் மேல் யந்திர தகட்டை வைத்து வரைய துவங்கவும். உதாரணமாக வசியத்திற்காக யந்திரம் எழுதுகிறீர்கள் என்றால் ஞாயிற்றுக்கிழமை சூரியஓரையில் கிழக்கு பார்த்து அமர்ந்து சிவப்பு பட்டுதுணிமேல் யந்திர தகட்டை வைத்து எழுத ஆரம்பிக்க வேண்டும். (மற்ற செயலுக்கும் அறிய அஷ்டகர்ம வகையினை பற்றிய பயிற்சியில் விரிவாகக் காண்க.) அஷ்ட கர்மத்திற்கும் ஒவ்வொரு வகையான ஆசனம் உள்ளது . அது இருந்தால் அதில் அமர்ந்தும் செய்யலாம். இல்லாதவர்கள் தர்பை ஆசனத்தில் அமர்ந்தே செய்யலாம். பிறகு எழுதவேண்டிய ஆத்ம கோடுகளான சக்திமிக்க பதிவுகளை யந்திரத்தில் மந்திரம் ஓதியவண்ணம் வரையவும். இப்போது ஓதக்கூடிய மந்திரம் உங்கள் சித்தியான மூல மந்திரத்தை பயன்படுத்தவும். அல்லது எழுதும் யந்திரத்தின் தெய்வம் யாரோ அந்த மந்திரத்தையும் கூறலாம்.
எழுதிய பிறகு எலுமிச்சை கனியை வெட்டி யந்திரம் முழுவதும் தேய்த்து தோஷம் கழிக்கவும். பிறகு இளநீரில் கழுவி அடுத்து சுத்த தண்ணீரில் அல்லது பன்னீரில் சுத்தம் செய்து பொட்டிட்டு எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுத்தி போடவும். பிறகு பூஜையில் யந்திரத்தை வைத்து யந்திரத்தில் பதித்த தேவதையின் மந்திரத்தை கூறி இன்னாருக்கு இந்த செயலுக்காக பலன் தரவேண்டும் என உரு ஏற்றி அளிக்க வேண்டும். உரு ஏற்றுவதை செயலின் தரத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். ஆலய விக்ரகத்தின் அடியில் அடியில் பதிக்க என்றால் கண்டிப்பாக 48 தினம் இருவேளையும் உருகொடுக்க வேண்டும். யந்திரம் எழுதுபவரின் மந்திர சித்தி பலத்தை பொருத்தே உரு ஏற்றும் நாளையும் நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு முழுமன ஈடுபாட்டோடு உரு ஏற்றுகிறீர்களோ அவ்வளவும் யந்திரம் சக்தி பெரும்
மற்றவருக்காக யந்திரம் எழுதி தருகிறீர்கள் என்றால் உரிய தட்சனையை இறுதியில் நிச்சயம் கேட்டு பெற்றுவிடவும். ஏனெனில் உங்கள் உடல் கஷ்டத்தை இலவசமாக செய்யலாம். ஆனால் யந்திரம் ஜென்ம கஷ்டத்தால் உருவாக்கக்கூடியது. எனவே உங்கள் ஆத்மா சாந்தப்பட்டு சந்தோஷப்படும்படியான தட்சனையாக இருந்தால் மிக மிக அற்புதமாக யந்திரம் வேலை செய்யும். அல்லாதபோது எல்லாம் சரியாக செய்து உரிய தட்சனை பெறுபவர் செலுத்தாதபோது உங்கள் மனம் வருத்தம் அடைந்தால் யந்திரம் வலுவிழந்து விடும். இது மிக மிக கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயமாகும். நீங்களும் ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொண்டு தர்மப்படி தட்சனையை பெற்று சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் விரும்பினால் இலவசமாகவும் செய்யலாம். அது உங்கள் மனதை பொருத்தது . எனினும் மரியாதை தாம்பூலத்தையாவது பெற்று சந்தோஷத்துடன் நீங்கள் மனநிறைவும் பூரிப்புடனும் யந்திரத்தை ஒப்படைக்க வேண்டும். இன்றைக்குள்ளவருக்கு இந்த மரியாதை தெரியவில்லை என்றாலும் அதைபற்றி நீங்கள் மன சஞ்சலம் அடைய வேண்டியதில்லை. நீங்களும் மதிப்பிற்குரிய உண்மையானவராக இருக்கவும். யந்திரம் வெரும் கோடுகளல்ல. அது நம் மனம் செயல் யாவையும் கொண்டு நிர்ணயிக்கும் ஒரு ஆலயமாகும். நம் அங்க தேவதையால் யந்திர தேவதையை உயிர்பிக்கும் கலைதான் யந்திரக் கலையாகும். யந்திரம் நிறைவு செய்த பின்பு மந்திரயந்திர தேவதைக்கு சிறு யாகதர்பனம் செய்தால் யந்திரம் நினைத்தபடியே வேளை செய்யும் .
இருதியாக உங்கள் கவனத்திற்கு :

யந்திரங்களை நீங்களே உருவாக்கலாம் என்பதை மறவாதீர் , தகட்டில் எழுதும் எந்த கிருக்கலும் மனக்கோடுகள்தான் . அழகாக வரைந்தால்தான் பலன் கிடைக்கும் என்று நம்பிவிடாதீர்கள் .யந்திரத்தின் அளவு எப்போழுதும் சதுரமாக இருப்பது நலம் .மன பிராத்தனையும் மன அழுத்தமும் கொண்டு சிந்தனை கலையாமல் கோடுகளை பதியுங்கள் போதும் . அழகு வேலை செய்யாது மன ஆழம் தான் வேலை செய்யும் . மறவாதீர் .நீங்களும் படைப்பாளிதான் 




+++++++++++++++++++++++++++++++++++++

மந்திரம்-எந்திரம்-தந்திரம்:
‘மனனம் செய்பவனை திராயதே’ – அதாவது உயர் நிலைக்கு அழைத்து 
செல்வது மந்திரமாகும். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு மந்திரம் உள்ளது. 
அது ஜபம் செய்யச்செய்ய சப்த அலைகளின் வலிமையால் ஆன்மிக 
முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த தெய்வத்தின் தரிசனமும் 
கிடைக்கிறது.
இதேபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சக்கரம் உண்டு. அந்த 
தெய்வத்தின் அடிப்படையில் சதுரம், முக்கோணம், வட்டம், பத்மம் முதலிய 
வடிவங்களால் ஆன வரைபடங்கள் யந்திரம் எனப்படும். யோக முறைப்படி 
மனித உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களை குறிப்பன இந்த 
எந்திரங்கள்.
ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் சில குறிப்பிட்ட முத்திரைகள் 
அடையாளச் செய்கைகள் பூஜை முறைகளால் வகுக்கப்பட்டுள்ளன. இவை 
முழு மன ஒருமைப்பாட்டிற்கு உதவும். இவையே தந்திரங்கள் எனப்படும்.
மந்திரம் – எந்திரம் – தந்திரம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

கோபுரம் ‘ஸ்தூல லிங்கம்’ என்று சொல்லப்படும். அதாவது அனைவரும் 
தரிசிக்குமாறு வெளிப்படையாக அமைந்த இறைவனின் அடையாளம். 
அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறப்படுகிறது.
புத்திக்கோளாறு, மனக்கலக்கம் உடையவர்கள், சோளிங்கபுரம் – 
யோகநரசிம்மர், குணசீலம் – பெருமாள், சோட்டாணிக்கரை – பகவதி 
அம்மனை தரிசித்தால் குணமடையலாம்

Wednesday, June 22, 2016

நல்லவை / பிரச்னோத்தர ரத்தினமாலை


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை
1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
குரு சொல்லும் வசனம்
2.தள்ள வேண்டியது எது ?
வீண் செயல்
3.குரு யார் ?
உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .
4.மிகவும் இனியது எது ?
தருமம்
5.எவன் சுத்தம் உள்ளவன் ?
மனச்சுத்தம் உள்ளவன் .
6.எவன் பண்டிதன் ?
விவேகி .
7.எது நஞ்சு ?
குரு மொழியை அலட்சியம் செய்தல்
8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .
9.எதிரி யார் ?
முயற்சி இல்லாச் சோம்பல் .
10.முழுக் குருடன் யார் ?
ஆசை வலைப்பட்டவன் .
11.சூரன் யார் ?
பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .
12.செவிக்கு அமுதம் எது ?
சாதுவின் உபதேசம் .
13.பெருமை எதனால் ?
எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .
14.தாழ்வு எது ?
தாழ்ந்தவனிடம் யாசிப்பது .
15.எது வாழ்வு ?
குற்றமின்மை .
16.எது மடமை ?
கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .
17.நரகம் எது ?
பிறர் வசம் இருப்பது .
18.செய்யத்தக்கது எது ?
உயிருக்கு இனிமை .
19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
அகம்பாவம் .
20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
மறைவில் செய்த பாவம் .
21.முயற்சி எதன் பால் ?
கல்வி ,ஈகை ,நல்ல மருந்து ....இவற்றின் பால் .
22.எதிலிருந்து விலகுவது ?
தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .
23.விருப்புடன் எதைச் செய்வது ?
தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .
24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .
25.சாது யார் ?
ஒழுக்கமுள்ளவன் .
நல் நடத்தையுள்ளவன் .
26.உலகை வெல்பவன் யார் ?
உண்மையும் பொறுமையும் கொண்டவன் .
27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .
28.குருடன் யார் ?
காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .
29.செவிடன் யார் ?
நல்லுரை கேளாதவன் .
30.ஊமை யார் ?
தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .
31.ஈகை எது ?
கேளாது கொடுத்தல் .
32.நண்பன் யார் ?
தீமை புகாது தடுப்பவன் .
33.கவனமாக வாழ்வது எப்படி ?
இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடிய செல்வன் ஆதலே .
34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
இயல்பாகவே அடக்கமுடையவரை .
35.உலகம் யாருக்கு வசப்படும் ?
தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
36.விபத்து யாரைத் தீண்டாது ?
அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி ..இரண்டும் உடையவரை .
38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
அந்தணர் ,குரு ,தேவர் .....இவர்களை தூற்றித் திரிபவரை .
39.கவலை இல்லாதவன் யார் ?
பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .
40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை எவை ?
கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .
41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
கருமித்தனம் .
42.பெரிய தீட்டு எது ?
கடன் தொல்லை .
43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
தானும் மனத்துயர் இன்றிப் பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .
44.நம்பத்தகாதவன் யார் ?
சதா பொய் சொல்லுபவன் .
45.பொய் எப்போது தீதில்லை ?
தருமப் பாதுகாப்பின் போது .
46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
ஆரோக்கியம் .
47.யார் தூய்மையானவன் ?
எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .
48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
இளமை ,செல்வம் ,ஆயுள் .
49.சாதிக்க வேண்டியது எது ?
என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .
50.துக்கம் இல்லாதவன் யார் ..??
கோபம் இல்லாதவன் .
51.அந்தணன் உபாசிப்பது எவரை ..??
காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .
52.இவற்றில் உள்ளது என்ன ?
சுத்த சிவ தத்துவம் .
53.யார் பிரத்தியட்ச தேவதை ?
மாதா .
54.பூஜ்ய குரு யார் ?
தந்தை .
55.சர்வதேவதாத்மா யார் ?
வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்ட விப்ரன் .
56.எதனால் குலம் அழியும் ?
சாது ஜனங்களை புண்படுத்துவதால் .
57.யார் வாக்கு பலிக்கும் ?
சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு

Sunday, June 12, 2016

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் - வெற்றி
ச - வீரம்
வி - பராமரிப்பு
து - நன்மை
வ - ஒற்றுமை
ரி - அன்பு
நி - பணம்
யம் - அறிவு
ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம்
த்தி - அழுத்தம்
வா - பக்தி
ஸ்யா - நினைவாற்றல்
ஃத்தி - மூச்சு
மா - சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் - சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ - உடல் விமானம்
புவஹா - நிழலிடா விமானம்
ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல
தேவஸ்ய - பிரகாசமிக்க
தீமஹி - நம் த்யானம்
தியோ - அறிவினை
யா - யார்
நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்
ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

* கம்பீரத் தோற்றம்
* தரமான பேச்சு
* வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம்
* கண்ணில் அறிவு தெரிதல்
* அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்
மேலும்
* அமைதியாய் இருப்பர்
* நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்
* வாழ்க்கையில் தடைகளை நீக்கும்
* மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும்
* உயர் உண்மைகள் தெரிய வரும்
- என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.
த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.
120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

* ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

* 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

* 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

* 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

* இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

- மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
* கிழக்கு முகமாக அமருங்கள்.
* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது ‘இயற்கை வைத்தியம்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் ‘ராம’ நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘ரா’ என்பது ‘ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், ‘ம’ என்பது ‘ஓம் நம சிவாய’ என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

கந்தர் சஷ்டி கவசத்தில் கூட ‘ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி’ என சொல்லப்படுகின்றது. ‘ரா’ என்ற எழுத்தும் ‘ம’ என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

Saturday, June 11, 2016

தலை முடி / மயிர்

தாந்திரீக முறை தலை முடி பற்றியது:

⭐பொதுவாக ஆண்களும் சரி பெண்களும் சரி தலை முடிக்கு முக்கியத்துவம் அதிகம் தருகின்றனர் எல்லாம் தலையில் இருக்கும் வரை மட்டுமே.

👉முடிக்கு ஈர்ப்பு ஆற்றல் அதிகம்.

🌹பொதுவாக தலை முடிக்கு பிரபஞ்ச ஆற்றலை இழுக்கும் சக்தி அதிகம் அதனால் தான் முனிவர்கள் முடியை திருத்தம் செய்வதில்லை. அவர்கள் கொண்டை வலைசுற்றி அதன் நடுவே தாமிர கம்பி சொருகிவைத்து ஆற்றலை பெறுகிறார்கள்.

👉ஆண்கள் முடி திருத்தம் செய்வதால் அச்சக்தி குறைவாக பெறுகிறார்கள் ஆனால் பெண்கள் கூந்தலை பராமரிப்பு செய்வதால் ஆற்றல் அதிகம் பெறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம் வேலை செய்யும்.

🌻கூந்தலை பராமரிப்பு சிறந்தவள் தான் திரெளபதி அதனால் கூந்தலுக்கு எதை சேர்த்தால் இந்த ஆற்றல் அதிகமாகும் என அவள் அறிவாள்.

🌻சூதாட்டமண்டபத்தில் அதர்மம் நிகழும் என்பதை தனது உள்ளுணர்வால் அறிந்து தடுக்கமுயல்வாள் ஆனால் முடியாது போகும் அது பாரத கதை.

🌻அவள் பிரபஞ்ச சக்தியை அதிகம்பெற உதவியது அவளது கூந்தல் தான். பொதுவாக பெண்களுக்கு இந்த சக்தி கிடைப்பது கூந்தல் என்கிற தலைமுடியால் தான்.

🌻ஆணோ பெண்ணோ தலை முடி வைத்து அவர்களை வசியம் செய்யமுடியும். இதில் அதிகம் சக்தி வாய்ந்தது பெண்ணின் முடிதான்.

🔥சிவபெருமான் அடியாராக வந்து பெண்ணின் கூந்தலை கேட்ட கதை உள்ளது அதை சூட்சமமாக ஆராயவும்.

🔥கூந்தலில் இயற்க்கையாக வாசனையுள்ளதா என கதை ஒன்று உள்ளது அதன் சூட்சம விசயம் அறியவும்.

🔥நாம் வணங்கும்,கிருஷ்ணர், சிவன்,இயேசு,நபிகள் ஏன் முடி அதிகம் வைத்துள்ளனர் என ஆராயவும்.

🔥கூந்தல் நீளமுள்ள பெண்கள் குடும்பத்தை வளர்ப்பார்கள் என்பதின் சூட்சமம் அறியவும்.

👉குறிப்பிட்ட பெண் முடியை வைத்து மாந்திரீக முறைபடி இறந்த ஒரு  எலும்பு கூட்டை எடுத்து அந்த ஆன்மாவை அடிமை ஆக்கலாம் .
மேலும் பெண்கள் முடியை எடுத்து சில குறி சொல்பவர்கள் அந்த பெண்ணை  சில ஆத்மாக்களுக்கு ஆகுதியாக தருகிறார்கள்.
இதனால் தான் பெரியவர்கள் தலை சீவிய முடியை மண்ணுக்குள் போட சொன்னார்கள், அது யாரு கைக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக தான்.

🌹(பெண்ணின்) தலை மயிருக்கு உயிர்சக்தி அதிகம், அதனால் தான் மயிர் இழையில் உயிர் வந்தது (சக்தி கிடைத்தது) என்பார்கள்.

👉இதை இப்பொழுது மயிர் இழையில் உயிர் தப்பியது என்பார்கள்.

🌻பொதுவாக ஒரு அரசன் போர் தொடுத்து போய் வெற்றி கொள்ளும்போது அந்த நாட்டு ராணியை அபகரிப்பான் அல்லது கொன்று விடுவான் ஏனெனில் அவள் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் அணிந்து பிரபஞ்ச ஆண்டனாவை சரியாக வைத்திருப்பாள் அதாவது கூந்தல் .

🌻போரில் தோற்ற ராணி தனது சிகைகூந்தலை அறுத்து தந்துவிடவேண்டும் இல்லை என்றால் அறுத்து எடுத்து கொள்ளபடும்.

👌🏻மயிர்முடி என்பது விசேசமான ஒரு வஸ்து கவரிமான் முடி  , மயில் முடி, யானை முடி இவற்றையும் ஆய்வில் எடுத்து பாருங்கள் .

👉நாம் திருப்பதி சென்று முடிகாணிக்கை கொடுக்கிறோமே, அதை ஒரு குரூப் டெண்டர் எடுக்கிறது. அதை எடுத்து என்ன செய்கிறார்கள் என விசாரியுங்கள்.

🤔கடைசியாக டெண்டர் மூன்று கோடி என கேள்வி பட்டேன்.

👉அப்புறம் மயிர் என்பது கெட்டவார்த்தை அல்ல அது தமிழ் சொல் தான். உயிருக்கு மயிர் தொடர்பு உள்ளதால் அது கொடுக்கபட்டது.

🙏முடியை பற்றி நிறைய உள்ளது, சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்வது ஒன்று தான் முடியை சாதாரண மாக நினைத்து கீழே போட வேண்டாம்.

👉மேற்கண்டவை சித்தர் நூல்கள், புராணங்கள், புறநானூறு போன்றவைகளில் இருந்து சூட்சமமாக விசயம்.

வெள்ளருக்கு வேர் விநாயகர்

ॐ வணக்கம் 
Inline images 1
வெள்ளருக்கு வேர் விநாயகர்:
வேறு பெயர்கள் -: அருக்கன்.ஆள்மிரட்டி என்பன.

எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.
இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 - 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும்.
வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன. வெள்ளெருக்கன் வேர் அதிசயமாக சில வினாயகர் உருவில் இருப்பதுண்டு.வினாயகர்சிலை இந்த வேரில் செய்து வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு.

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது.
அதிசயங்கள் புரியும் வெள்ளெருக்கு விநாயகர்

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன

எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.

இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள்.அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது.தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும்,சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்

அங்கு போக முடியாதவர்கள்,உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம்.

இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.(ஆமாம்,பண வரவு பல மடங்காக அதிகரிக்கும்)
வெள்ளெருக்கு (வெ‌ள்ளை எரு‌க்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.

எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.

வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெள்எருக்கு வீட்டின் முன் வைப்பது விஷேசம், அதன் வளர்ச்சி, வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுத்தும்,,,
சிவனார் உகந்த்து என்பர்,
வீட்டை சுற்றி பாம்புகள் வந்தாலும் , அந்த செடி தாண்டி வராது என்பது நம்பிக்கை,, வீடு என்றால் வாசலில் வெள்எருக்கு கட்டாயம் என்று முதியவர்கள் நம்பிக்கை, வெள் எருக்கு பொடி சாப்பிட்டால் உடலில் இருக்கும் கிருமிகள்,சாகும்,,,
வெள்ளருக்கு அதிஷ்டம் , புதையல் இருக்கும் இடங்களில் அதிகம் வளரும், அந்த செடி வீட்டில் வளர்த்தால் அதுபோன்ற அதிஷ்டம் வீட்டுக்கு அளைத்துவரும், செடி வளராது வாடினால் எதிர்மறை சக்திகள் இருக்க வாய்ப்புகள் உண்டு,

Thursday, June 9, 2016

குரு


யார் குரு ? ஏன் குரு பாரம்பர்யம் தேவை ?

இந்த இரண்டுக் கேள்விகளுக்கும் சரியான விடை தெரிந்தாலே ஓழிய, நாம் குருமார்க்கத்தை உணர்ந்துக்கொள்ள முடியாது.

நமக்கு தெரியாத ஒரு விசயத்தை யார் காட்டிக்கொடுக்கின்றாரோ தெளிவுப்படுத்துகின்றாரோ அவரை நாம் குரு என்றோ வழிக்காட்டி என்றோ அழைகின்றோம். இது ஒரு பாரம்பர்ய வழக்கமாகும்.பாமரர்களின் பார்வையிலும் , சித்தர்களின் , ஞானியர்களின் பார்வையிலும் இது வெகு வித்தியாசமாக வியாக்கியானபடுத்தப்படுகின்றது. முதலில் இதனை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதலிலே, “குரு” என்கின்ற வார்த்தைக்கு நமது சமயம் மற்றும் வேதம் இப்படி விளக்கம் கொடுக்கின்றது.

“குரு” என்றால் கனமுடையது,பெரியது,அளப்பரியது என்று பொருள்படுகின்றது….

மனித உடலிலே கனமானது எது ?

உடலா?மனமா?சுவாசமா?ஆத்மாவாகிய ஜீவனா?

உடலிலிருந்து , உயிர் பிரிந்தப் பிறகு , தேகம் கீழே விழுந்துக்கிடக்கிறது, காரணம் உடலை தாங்கி நின்ற, உயிராகிய ஜீவன் கழன்று விட்டது..கனமான ஒன்று கடந்து விட்டக்காரணத்தால் தோகம் வீழ்ந்து விட்டது. ஆக நமக்குள் கனமானது ஜீவனாகிய ஆத்மா ! இந்த ஆத்ம சொரூபத்தை கண்டவர் , ஆத்மசொரூபமாகி நிற்பவர் ,ஜீவ-பிரம்ம ஆத்மரகசியத்தை காட்டிகொடுக்க கூடியவர் குரு என்பவராகும்..இதனை சற்று விசேஷமாக “சத்” என்ற அடைமொழியை கொடுத்து “சத்குரு” என்பார்கள் , இன்னும் கூட இவரை ஞானகுரு என்றும் அழைப்பார்கள்.

சத் என்றால் உண்மை என்றுப்பொருள்படும் , எந்த உண்மை ? முற்றிலும் உண்மையாக நமக்குள் சர்வசாட்ஷியாகி நிற்கும் ஜீவனாகிய ஆத்மாவே அனைத்திலும் உண்மை பொருளாக விளங்குவது. இதனை உணர்ந்துக்கொண்டவன் எவனோ அவனே ஞானகுரு அல்லது சத்குரு.

மேலும் “கு” என்றால் இருட்டு “ரு” என்றால் ஒளி. எந்த இருள் எந்த ஒளி ?பிறவிகள் தோறும் நாம் மீண்டும் மீண்டும் வந்து மாட்டிக்கொள்ளும் தாயின் கருவறை முதல் இருட்டு பின் நமக்குள் நாமே சிக்கித் தவிக்கும் அறியாமையாகிய இருட்டு இரண்டாவது இருட்டு இறுதியாக உடலாகிய இருட்டுக் குகைக்குள்ளே பல ஜன்மமாக மாட்டித் தவிக்கும் உயிராகிய ஜீவன்…இவைகள் மூன்றையும் பேரிருளாக பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த இருளிலிருந்து எவன் வெளியே வருவதற்கு வழிவகுக்கின்றானோ அவன் உண்மையான சத்குரு அல்லது ஞானகுரு.

ஆலயத்திலிருப்பவரை நாம் எப்படி அழைகின்றோம், குருக்கள் என்று ஏன்? காரணம் அவர் அந்த ஸ்தூல இறைவனுடன் இருப்பவர் அவருக்கு கைங்கர்யம் செய்பவர் அதனால் நாம் அவரை குருக்கள் என்று அழைக்கின்றோம்…ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம் எத்தனை குருக்கள்மார்கள் அத்தகைய இறைத் தன்மையில் இருகின்றார்களா ?

அதே நிலைத்தான் இன்று சமூகத்திலும் பரவி கிடக்கின்றது, பலர் காவி, ருத்திராட்ஷம், தாடி, பிரசங்கம் என்று ஜமாய்கின்றார்கள் ஆனால் இவர்களின் இறைத்தன்மை ஆராயதக்கதே…..இவர்கள ஞானம் தெளிந்த குருமார்களா அல்லது படித்து வைத்ததை வாந்தி எடுப்பவர்களா?

நமது நிம்மதி இன்மைக்கு காரணம் ஆசை அல்லது பற்று {ATTACHEDMENT} பொருள் மீது உள்ளப் பற்று , பந்தங்களின் மேல் உள்ளப் பற்று , புகழ் பற்று , உடல் பற்று இன்னும் ஏராளம் ஏராளம்….இந்த பற்றுகளெல்லாம் இருக்கும் வரை நாம் ஞானத்தை உணரமுடியாது,அது நெருங்கவும் நெருங்காது…இந்த பற்றெல்லாம் நீங்க வேண்டுமென்றால் ஆசைகளையும் பற்றுக்களையும் கடந்த ஒருவனிடத்தில் சரணடைந்தால் மட்டுமே நமது பற்றுக்கள் அழியும்..

இதனை திருக்குறளிலே….

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு".

வள்ளுவப்பெருமான் உறுதியாக கூறுகின்றார்.

குருவென்பவன் ஆசைகளை கடந்தவனாக இருப்பான்….

“விழிப்படைந்த குரு எதனையும் யாரிடமும் யாசிக்க மாட்டான்….யாசிப்பவன் விழிப்படைந்த குருவாக இருக்கமாட்டான்….”

 ஆக குரு என்பவன் கருவருக்கும் வித்தையை உணர்ந்தவன்.

அடுத்து குரு பாரம்பர்யம் ஏன் அவசியம் ?

பொதுவாக நாம் எல்லோருமே நம்முடைய வாழ்வில் பாரம்பர்யம் அல்லது பரம்பரை என்கின்ற ஒரு மரபுவழி சங்கிலி தொடர்பினை பல ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றோம்.இதில் அவரவர்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை, நாகரீகம் , சிந்தனா முறைகள் மற்றும் மொழி எல்லாம் அடங்கிக்கிடக்கின்றது.

அதுபோல குருபாரம்பர்யம், வேத விதிப்படி குரு தட்சிணாமூர்த்தி எனப்படும் தென்முக கடவுளாகிய ஆதிகுருவினிடத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.சித்த மார்க்கத்தின் படி கைலாய வர்க்கமாகவும் பால வர்க்கமாகவும் காணப்படுகின்றது. கைலாய வர்க்கம் சிவபெருமானையும் நந்திதேவரையும் மூல குருவாக வைத்து திருமூலர் மரபாக போற்றப்படுகின்றது மற்றது முருகக் கடவுளை மூலகுருவாக ஏற்று அகத்தியபெருமான் மரபாக போற்றுவதாகும்..

இதனை தவிர்த்து ஸ்ரீவித்யா தந்திரம் மற்றும் பிரம்ம வித்யா தந்திர பாரம்பர்யம் , ஆதிசங்கர பெருமானை மூல குருவாக வைத்து தொடங்கும் மார்க்கமும் உண்டு.

வடக்கே நவநாத சித்தர்கள் நாதயோகிகள் பாரம்பர்யம் என்ற ஒன்றும் உண்டு. இதனை அடிப்படையாக வைத்துதான் நம் குரு பாரம்பர்யத்தை நிர்ணயிக்கின்றோம்.

ஆனால் இதில் ஒரு விதிவிலக்கு உண்டு, சில ஞானிகள் , சித்தர்கள் தாமே சுயம்பாக, பிறவியிலேயே குருவில்லாமல் ஞானம் வாய்க்கப்பெற்றவர்களாக இருப்பார்கள் மற்றும் சிலருக்கு இறைவனே குருவாக அமையும் பிராப்தமும் உண்டு.

இதில் ஒரு சூட்டுமம் உண்டு , ஒரு சரியான குருவினிடத்தில் தீட்ஷைப் பெறும் பொழுது அந்த குருநாதரின் நான்கு தலைமுறை குருவாக இருக்கும் சத்குரு,பரமகுரு ,பரமேஷ்டி குரு மற்றும் பராபரகுரு இவர்கள் அங்கு தீட்ஷை கொடுக்கும் தருணத்தில் எழுந்தருளி இருந்து, நம்மை வாழ்த்தி நமக்கு ஆத்ம விடுதலையை எளிதாக சித்திக்க அருள்செய்கின்றார்கள்.மேலும் உயிர் பிரியும் தருணத்தில் ஆத்ம தீட்ஷை கொடுத்த குருநாதரின் சூட்சும உடம்பு நம்மை அழைத்துச்செல்ல வரும்,நமது குரு பரம்பரை உண்மையானதாக இருந்தால்.

இன்று பல குருமார்களுக்கு குரு பரம்பரையே தெரியாது !

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்..பலர் இன்று நிறைய குருமார்களிடம் சென்று தீட்ஷை மற்றும் உபதேசம் பெற்று உய்வதற்கு பதிலாக சாபங்களை பெற்றுக்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார்கள்.இது இன்று ஒரு விளையாட்டாக மாறிவருகின்றது. குரு சாபம் பல தலைமுறையாக தொடரும்.

உங்களின் சாதகத்தில் குருவே சுக்கிரனோ ,லக்கனத்திற்கு ஒன்பதாமிடமோ, இராசியிலோ அல்லது அம்சத்திலோ கெட்டுக்கிடந்தால் இது பெரியோர்களின் சாபத்தை பெற்ற சாதகமாகும்.

உண்மையான குரு உடனடியாக எதுவும் செய்யமாட்டார் நம் விருப்பப்படியும் கொடுக்க மாட்டார் இறை ஆனைப்படியே செய்வார்.அதுவும் திருமந்திர சாஸ்திரத்தில், விஷேஷமான இரு ஒளி நாட்களை கூறுகின்றார் ,ஒன்று தைபூசம் மற்றொன்று வைகாசி விசாகம், இந்த இரு நாட்களும் தீட்ஷைக்கு ஏற்ற சிறப்பான நாட்களாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

கண்ட கண்ட நாட்களில் தீட்ஷை கொடுப்பது, குண்டலினி ஆற்றலை எழுப்புவது , நெற்றிக்கண்ணை திறப்பது போன்ற வேலைகள் இன்று மலிந்துவிட்டன .இதன் காரணமாகவே உண்மையான அந்த ஆத்ம சாட்ஷாகாரத்தை உணரமுடியாமல் பலர் இன்று, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக்கொண்டிருக்கின்றாரகள்.

ஒரு சரியான குருவினிடத்தில் தீட்ஷைப்பெருவது ஒரு மனிதனுக்கு மறுப்பிறவியாகும்,இவனை துவிஜன் என்று அழைப்பார்கள், “துவி” என்றால் இரண்டு ‘ஜன்” என்றால் ஜன்மம் இரணடு ஜன்மம் உடையவன்.அவனின் கர்மங்களை எல்லாம் தான் வாங்கிக்கொண்டு அவனை சுத்தம் செய்பவனாக குரு இருப்பார், அப்படி இருக்கும் பட்ஷத்தில் சீடனுக்கு எப்படி கர்மவினைகள தொடரும் ?சரியான குரு நெருப்புக்கு ஈடானவர், அவர் பார்வை பட்டால் எல்லாம் அழிந்துப்போகும்,அப்படி இருக்கும்பொழுது பலர் பல குருமார்களிடம் எதை எதையோ தீட்ஷையாக வாங்கியும் அல்லல் படுகின்றார்களே ஏன்?

பலர் இன்று தன்னை , தான் இவரின் சீடர் அல்லது இவர் எனக்கு குரு என்று பகிரங்கமாக பிரக்கடனம் செய்கிறார்கள்..குரு சிஷ்ய பரம்பரையில் தன் குருவின் பெயரை பகிரங்கமாக வெளியில் சொல்லுவது தோஷம் என்ற விதியே உண்டு!

நாம் ஒரு சித்தரையோ ஞானியையோ குருவாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் தப்பில்லை ஆனால் அவர் நம்மை தேடி வருகின்றாரா என்பதுதான் கேள்வி…

பெண் ஒருத்தி உண்மையாகவும் மானசீகமாகவும் ஒரு ஆடவனைநினைத்து ஏங்குகின்றாள் என்றால் அது உண்மையான தாபமாகும்….ஆனால் பலரை நினைகின்றாள் என்றால்…….!!!!

மானசீகமாக ஒரு ஞானியையோ சித்தரையோ விசுவாசத்துடன் குருவாக ஏற்று பின் அவரிடம் தன்னை முழுமையாக சரணடையச்செய்யாமல் அலைந்துகொண்டிருந்தால், பலரை நினைக்கும் பரத்தையருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்….

20 ஆண்டுகளுக்கு முன் என் குருநாதர் அடியேனுக்கு கொடுத்த செருப்படியாகும் இது…
குரு என்ற வார்த்தையும் குருவழிப்பாடும் இன்று கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக மாறிவிட்டது....

ஆக உண்மை குருவை அடைந்து பிறவி பிணியை கடப்போம்.

+++++++++++++++++++++++++++++++++++++
"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள்.
இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.
மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர்.
ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.
இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.
மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது.
சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.
அந்தவகையில் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.
பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.
திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே
கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு
பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார்.
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார்.