பூணூலை மூன்று விதமாக அணிந்து கொள்ளுதல்
ஷர்ட் போடும்போது பூணூல் நிவீதமாக (மாலையாக) இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பூணூலை மூன்று விதமாக அணிந்து கொள்ளுதல்
(’யக்ஞோபவீதம்’ புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்)
பூணூலை மூன்று விதமாக அணிந்துக் கொள்ளும் சந்தர்பங்கள்:
1. உபவீதம்.
2. ப்ராசீனாவீதம்.
3. நிவிதம்.
இவற்றைச் சற்று விவரமாக பார்ப்போம்
1. உபவீதம் : இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடதுதோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலதுபுறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.
2. ப்ராசீனாவீதம் : பித்ரு கார்யங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனாவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும். தர்ப்பணம் அல்லது ச்ராத்தம் செய்யும் போது கர்த்தா இவ்வாறு அணிந்து கொண்டிருப்பதைரீ பார்க்கலாம்.
3. நிவிதம் : பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவிதம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவிதம் எனப்படுகிறது.
கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் பூணூலை நிவிதமாக அணிவது சம்ப்ரதாயத்தில் உள்ளது:
இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும், உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் நிவிதமாக பூணூலைப் போட்டுக் கொள்ள வேண்டும். பஞ்சகச்சம் அணியும்போது நமது பூணூல் நிவீதமாக அதாவது மாலையாக இருக்கவேண்டும் இறந்தவர்கள் வீடுகளுக்கு 10 நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிக்கும் போதும் பூணூலை நிவிதமாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்திரீ சம்போக காலத்தில் யக்ஞோபவீதம் நிவிதமாகத்தான் இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல. தற்காலத்தில் நாம் சட்டை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பூணூலை இவ்வாறு, நிவிதமாக. அணிந்து கொள்ள வேண்டும்.
Courtesy Sarma Sastrigal
No comments:
Post a Comment