Wednesday, May 18, 2016

சாம்பிராணி

*தீய சக்தி மற்றும் தீய எண்ணங்களை வீட்டிலிருந்து விரட்ட சாம்பிராணி – போடும் முறை*

எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது, அப்படிப்பட்ட எண்ணங்களை நாம் நல்ல விதமாக எண்ணுவதே நமக்கும் மற்றவர்க்கும் நன்மை அளிக்கும், நாம் நன்றாக எண்ணம் போட்டாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படி எண்ணம் போடுவார்கள் என தெரியாது, இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் மற்றும் கண் திஷ்டி (அதாவது ஆழ்மனதில் பதியும் ஆழமான தீய எண்ணங்கள்). இவற்றை சரி செய்ய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பல முறைகளை கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான், மிகவும் சக்தி வாய்ந்த சாம்பிராணி புகை போடும் முறை, இந்த சாம்பிராணியை அமாவாசை அன்று மாலை 5லிருந்து 6 மணிக்குள் மாதம் ஒரு முறை மட்டுமே போட வேண்டும்.

சாம்பிராணி போடா தேவையான பொருள்கள் :

1.வேப்பிலை பொடி.
2.காயவைத்து அரைத்த எட்டி பொடி.
3.பெரிய நெல்லிக்காய் பொடி
4.கோமியம்.
5.தயிரh 6.மாவிலை

சாம்பிராணி போடும் கிண்ணத்தில் நன்கு கொட்டாங்குச்சியை நெருப்பு வைத்து எரித்து செந்நிறமாகும் வரை எரிய விட வேண்டும் , பின் வேப்பிலை பொடி , அரைத்த எட்டி பொடி இரடையும் கலந்து எரிந்து கதகதவென இருக்கும் கொட்டாங்குச்சியில் போட்டு விட வேண்டும். புகை போடுவதற்கு முன் கதவு சன்னலை மூடி வீடு அனைவரும் வெளியே சென்று விட வேண்டும். ஒருவர் மட்டும் உள்ளே இருந்து  புகை எழுப்பிவிட்டு(சாம்பிராணி போட்டுவிட்டு ) வெளியே  வந்து விட்டு கதவை மூடிவிட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து அனைத்து கதவு ஜன்னலையும் திறந்து விட்டு புகையை வெளியேற்ற வேண்டும், பின் அடுத்த நாள் காலையில் எழுந்து கோமியத்தில் தயிர், நெல்லி பொடி கலந்து மாவிலை மூலம் அந்த கோமியத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இதை ஒரு முறை செய்தாலே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

இதனை செய்வதன் மூலம் கெட்டசக்தி, கெட்ட எண்ணங்கள், கண் திஷ்டியில்இருந்து தப்பிக்கலாம்

No comments:

Post a Comment