Sunday, September 27, 2015

பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்

பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்

பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்
 பல ஆயிரம் ஆண்டுகளுக்குஇன்ப அமிழ்தமாகிய விந்துவை உச்சித்தலைக் குகைக்குள் நிரப்பிவைத்தல் வேண்டும். அவ்வாறு நிரப்ப ஒரே வழி அது கீழ்நோக்கி ஒழுகிவிடாமல் மேல் வாயாகிய அண்ணத்தின்கண் தடுத்து, அடுப்பாகிய (இடகலை பிங்கலை சுழுமுனை) மூன்று நாடிகள் கூடுமிடத்து உண்ணாக்கால் தடுத்து அட்டமாகிய புருவ நடுவில் நிறுத்தி தியானிப்பதால் (கருமூலப்பையாகிய கருவில் புகாமல் இருக்க) நடு நாடியில் உறைத்து நிற்பதனால் நமன் ஆகிய எமன் அணுகான். முன்பே நம் முன்னோர்கள் மனதை அமைதிபடுத்த தியானத்தை மேற்கொண்டனர்.
யோகாசனத்தைப் பற்றி பல முனிவர்கள் கூறியிருந்தாலும், பதஞ்சலி மகரிஷி தன் "யோக சூத்திரங்கள்" என்ற நூலில் படிப்பவர் பிரமிக்கும் படி எழுதியுள்ளார்.

அதில், முதல் சூத்திரமே ‘இப்போது யோகம் விளக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் “மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்” என கூறியுள்ளார்.

பதஞ்சலி மகரிஷி, யோகாசனத்தை மிக எளிமையாக விளக்கியுள்ளார் ;
நம் மனம் எந்த ஒரு எண்ண அலைகளாலும் சலசலப்பு அடையாமல், அமைதியாக இருக்கும்போதுதான் நம் ஆழ்மனதை நம்மால் முழுமையாக அறிய முடிகிறது. இதுவே யோகமாகும்.

பதஞ்சலி யோகாவின் எட்டு நிலைகளையும் மிக எளிமையாக கூறியுள்ளார் ;

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.
3. ஆசனா - யோகாசனங்கள்
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
5.. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா- தியானம்
8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது.
ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது. குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.
இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து
 தியான முறைகளும் அமைந்துள்ளன.

+++++++++++++++++++

இன்ப அமிழ்தமாகிய விந்துவை உச்சித்தலைக் குகைக்குள் நிரப்பிவைத்தல் வேண்டும். அவ்வாறு நிரப்ப ஒரே வழி அது கீழ்நோக்கி ஒழுகிவிடாமல் மேல் வாயாகிய அண்ணத்தின்கண் தடுத்து, அடுப்பாகிய (இடகலை பிங்கலை சுழுமுனை) மூன்று நாடிகள் கூடுமிடத்து உண்ணாக்கால் தடுத்து அட்டமாகிய புருவ நடுவில் நிறுத்தி தியானிப்பதால் (கருமூலப்பையாகிய கருவில் புகாமல் இருக்க) நடு நாடியில் உறைத்து நிற்பதனால் நமன் ஆகிய எமன் அணுகான்.
+±+±+++++++++++++++++++++++++


உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்
---------------------------------------------
முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும். அ...தாவது
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட
சக்தியே குண்டலினி. குண்டலம் போல
வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு. குண்டலினிக்கு
சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச்
சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி
சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும்
குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை,
அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள்,
ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ
சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி,
தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று
இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு
உண்டு. குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை
எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம்
என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத்
தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம்
என்று ஒரு பொருள் உண்டு. அதாவது
வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே
தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட
குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும்
கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது
உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள்
சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே
சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே
மோட்சம், இதுவே முக்தி. இதையே
ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும்,
நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல்
திறந்தது என்று சொல்வது இதைத்தான்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
இதையே திருமூலர், மூலாதாரத்
துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத்
துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு,
காலனைக் குறித்த கவலையில்லை, பயமும்
இல்லை என்கிறார். மூலாதாரத்தில் இருந்து
குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து
அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை
உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை,
பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி,
காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி,
வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும்
கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக்
கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி
உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான்
சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து
அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை
அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம்
தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது
சூரிய குண்டலினி என்பார்கள். அதையும்
தாண்டி சுழுமுனையின் இறுதிவரை
செல்லும் போது சந்திர குண்டலினி
என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை
பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்
மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள
விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ
முடிச்சு என்பனவாம். யோகத்தின் குறிக்கோள்
இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து
குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச்
செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று,
ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான்
சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு,
கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,
செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால்
போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப்
பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.
பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே
உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த
அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த
பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும்
சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு
அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால்
உடம்பு கொழுந்து போன்று என்றும்
பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர்
சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும்
யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து
செய்துவர தாண்டிவிடலாம், ஆனால்
ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது
அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட
பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த
குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில்
திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம்,
இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும


    • மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தியானம் மிக முக்கியமான ஒரு செயலாகும். தற்போது ஒரு சில இடங்களில் தியானம் சொல்லிதருவதாக பணம் சம்பாதிக்கிறார்கள். தியானம் என்பது அடுத்தவர் சொல்லித்தரும் விசயம் அல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் தனிமையில், அமைதியில் இருந்து முதலில் தன்னை தானேயும், பின் இந்த பிரபஞ்சம் உருவானதையும், உருவானதன் நோக்கமும், சகல ஜீவராசிகள் பிறப்பு இறப்புகளின் உண்மையையும் உணரும் நிலையாகும்.

      இந்த நிலையில் இருந்து தான் நம் சித்தர்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கலைகளையும் நமக்கு எழுதிவைத்தார்கள். ஆய கலைகள் 64(மருத்துவம், ஜோதிடம், மந்திரம்.........,) நம் உடலுக்கும், 65 வது கலையான தியானம் உயிருக்கும், அதாவது இறைவனை உணர்வதர்க்கும் என்று சொன்னார்கள்.
      தியானம் தான் தனிமனிதனின் அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரே செயல். தியானத்திலும் சிறந்த செயல் இந்த உலகில் வேற எதுவும் கிடையாது.

      தியானம் செய்வதன் மூலம் உடல், மனம் தெளிவு மட்டுமல்லாமல், ,நூலகத்திலிருந்தும் அறிய முடியாத, கூகுளில் தேடியும் கிடைக்காத, விஞ்ஞானியால் கூட கண்டுபிடிக்க முடியாத, பல விசயங்களை நம்மால் அறிய முடியும்.
      எப்படி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடங்களும் உள்ளனவோ, அதேபோல் தியானத்தில் அனைத்து விசயங்களும் உள்ளன.
      சுருக்கமாக சொன்னால், "தியானம் என்பது பல்கலைக்கழகம் போன்றது".

      எனவே அனைவரும் தியானத்தை கையாண்டு அதிலுள்ள அனைத்து பாடங்களையும் அறிந்து வாழ்வில் மேன்மையடைந்து இறைவன் அருளையும் பெற வாழ்த்துக்கள்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் எளியமுறை
குண்டலினி யோகம்  ( Simplified Kundalini Yoga) என்ற   மனவளக்கலையின் 4 அங்கங்கள்

1 . தவம்
2 . தற்சோதனை
3 . குணநலப் பேறு
4 . முழுமைப் பேறு.

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின்
படி யோகத்தின் 8 அங்கங்கள்

1 . இமயம்
2 . நியமம்
3 . ஆசனம்
4 . ப்ர்ணயமம்
5 . பிரதியாகரா
6 . தாரண
7 . தியானம்
8 . சமாதி

தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்.

ஸ்பரிச தீட்சை என்ற தொடு தீட்சை.

வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத்து அணைத்துக் கொண்டு
பூரணக் கூடுண்டாக்கிப் பொரிந்திடும் குஞ்சு போலக்
காரணக் குருவைமூலக் கனல்விளக் கத்தாதாற கண்டு
நாரணன் அறியாநாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே.

சட்சு தீட்சை என்ற நேத்திர தீட்சை

தண்ணீரி ல் இருக்கும்மீன்கள் தண்ணிரிற் கருவைப்பித்திக்
கண்ணினால் பார்க்கும்போது கயல் உருவானாற்போல
நண்ணிய குருவைக்கண்டு நாதன்நல் லுருவைச் சேர்த்து
விண்ணின்மேல் நாகைநாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே.

ஞானதீட்சை எனும் மானச தீட்சை

குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்
குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது
குளத்திலே புதைத்தமுட்டை கருவுருஆனாற்போல்
உளத்திலே நாகைநாதர் உருவழிநது உணர்வாய் ந

:- கணபதிதாசர் நெஞ்சறி விளக்கம்

கருக்கொண்ட முட்டைதனைக் கடல்ஆமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உன்னை அடைவது எக்காலம்.

:- பத்ரகிரியார்

எளிய முறை குண்டலிணி யோகத்தின் மூன்று படிகள்:

1. ஆக்கினை தவம்
௨. துரியம்
3 . துரியாதீதம்

ஆதாரங்கள்:

1 . மூலாதாரம்
2 . சுவாதிஸ்டானம்
3 . மணிபூரகம்
4 . அனாகதம்
5 . விசுக்தி
6 . ஆக்கினை
7 . துரியம்

ஒன்பது மைய தவத்திற்கான 9 மையங்கள்

1 . மூலாதாரம்.
2 . சுவாதிஸ்டானம்
3 . மணி பூரகம்
4 . அனாகதம்
5 . விசுக்தி
6 . ஆக்கினை
7 . துரியம்
8 . சக்தி களம்
9 . சிவா களம்

கிரகங்கள் (கோள்கள்)

1 . சூரியன்
2 . புதன்
3 . சுக்கிரன்
4 . சந்திரன்
5 . செவ்வாய்
6 . குரு
7 . சனி
8 . ராகு
9 . கேது

தற்சோதனையில் 5 அங்கங்கள்

1 . எண்ணம் ஆராய்தல்
2 . ஆசை சீரமைத்தல்
3 . சினம் தவிர்த்தல்
4 . கவலை ஒழித்தல்
5 . நான் யார்?

விபாகப் பிராணாயாமம் 

பிராணாயாமா எனப்படும் மூச்சுப்பயிற்சிகளின் அடிப்படையான
விபாகப் பிராணாயாமா நான்கு பகுதிகளைக் கொண்டது.

1, அதம வகை
2, மத்யமா வகை
3, ஆதயம வகை
4, உத்தம வகை
5, அனுநாசிக சுவாச முறைகள் 1, 2, 3.
6, முகபஸ்த்ரிக்கா (முக வசீகரத்திற்கு)
7, முக தெளதி
8, நாய் போல் சுவாசம் 1, 2.
9, அணில் முறை சுவாசம்
10, முயல் முறை சுவாசம். 1, 2, 3.
11, புலி போல் சுவாசம்.

மேற்சொன்ன பதினொரு வகைப் பயிற்சிகளும் பிராணாயாமப் பயிற்சிக்கு தயார் படுத்தும் மூச்சுப் பயிற்சிகள் ஆகும்.

மனதின் 10 இதழ்கள் (படிகள்) 

1 . உணர்ச்சி
2 . தேவை
3 . முயற்சி
4 . செயல்
5 . விளைவு
6 . அனுபோகம்
7 . அனுபவம்
8 . ஆராய்ச்சி
9 . தெளிவு
10. முடிவு

மனதின் 4 இயக்கப் படிகள்

1 . புற மனம் (புத்தி, போத அறிவு) (conscious mind )
2 . நடு மனம் (சித்தம், சிற்றறிவு) (sub -conscious mind)
3 . அடி மனம் (அகங்காரம், பேரறிவு) (super -conscious mind)
4 . தெய்வ நிலை ஒழிவில் ஒடுக்கம் ( un conscious mind)

மனம் செயல்படும் 3 துறைகள் (வழிகள்) 

1 . எண்ணம்
2 . சொல்
3 . செயல்

மனதின் 3 நிலை

1 . உணர்ச்சி நிலை
2 . விழிப்பு நிலை
3 . யோக நிலை

மனதின் 4 வித அலை இயக்கங்கள்:
***********************************

1 . பீட்டா wave (14 to 40 cycle / second )
2 . ஆல்பா wave (8 to 13 cycle / second )
3 . தீட்டா wave (4 to 7 cycle / second )
4 . டெல்டா wave (1 to 3 cycle / second )

மனம் உணர்ச்சி நிலையில் நின்று செயல்படும் போது தோன்றும் 4 விளைவுகள்
****************************************

1 . மையை அல்லது அறு குணம்
2 . கனவு
3 . தூக்கம்
4 . மயக்கம் (அனதேசியா)

மனம் விழிப்பு நிலையில் நின்று செயல் படும் போது தோன்றும் 4 விளைவுகள்:
**************************************************

1 . சாக்கிரதை (திரி கால ஞானம்)
2 . சிந்தனை
3 . சகஜ நிட்டை
4 . தெய்வம்

மனம் யோக நிலையில் நின்று செயல் படும் போது தோன்றும் 3 விளைவுகள்:
****************************************************

1 . ஆக்கினை
2 . துரியம்
3 . துரியாதிதம் (சமாதி)

திரிகால ஞானத்தின் 3 அம்சங்கள்
***********************************

1 . முற்கால அனுபவம்
2 . தற்கால தேவையும் சூழ்நிலையும்
3 . எதிர்கால விளைவு.

மனம் செயல்படும் மார்கங்கள்:
*********************************

1 . பிரவிருத்தி மார்க்கம்
2 . நிவர்த்தி மார்க்கம்

மனம் உணர்ச்சி நிலையில் செயல்படும் போது ஏற்படும் 6 குணங்கள்
*****************************************************

1 . பேராசை
2 . சினம்
3 . கடும் பற்று
4 . கற்பு அழிவு
5 . உயர்வு தாழ்வு மனப்பான்மை
6 . வஞ்சம்

மனம் விழிப்பு நிலையில் செயல் படும் போது ஏற்படும் 6 நலன்கள்:
******************************************************

1 . நிறை மனம்
2 . பொறுமை
3 . ஈகை
4 . கற்பு நெறி
5 . சம நோக்கு நேர் நிறை உணர்வு
6 . மன்னிப்பு

மன நிலைக்கு முன்னோர் வைத்த 5 கோசங்கள்:
*****************************************

1 . அன்னமய கோசம்
2 . மனோமய கோசம்
3 . பிரணமய கோசம்
4 . விஞ்ஞானமய கோசம்
5 . ஆனந்தமய கோசம்

எண்ணம் எழுவதற்கான 6 காரணங்கள்
***********************************--**
1 . தேவை
2 . பழக்கம்
3 . சூழ்நிலை
4 . கருவமைப்பு
5 . பிறர் மனத்தூண்டுதல்
6 . தெய்வீகம்

உணர்ச்சியின் 2 விதப் பகுப்புகள்
***********************************
1 . இன்பம்
2 . துன்பம்

உணர்சிகளின் வளர்ச்சி மற்றும் சிறப்புகளுக்கேற்ப கொடுக்கப்படும் 3 பெயர்கள்:
**************************************************

1 . மனம்
2 . அறிவு
3 . ஞானம்

ஞானத்தின் 2 வகைகள்:
*************************

1 . விஞ்ஞானம்
2 . மெய்ஞானம்

அறிவு வளர்ச்சியின் 4 நிலைகள்:
**********************************

1 . இயற்கை தேவைகள் நிறைவு செய்து கொள்ளல் மட்டும்
2 . இயற்கை அழகுகளை ரசித்தல் மற்றும் போலி (கற்பனை)  செய்தல்
3 . இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சித்தல், அறிந்து கொள்ளல்
4 . இயற்கைக்கும் தனக்கும் மூலம் நாடி நிற்றல், அடைதல்.

உணர்சிகளின் நிலை
**********************

1)இன்பம்,
2)துன்பம்,
3)அமைதி,
4)பேரின்பம்

அறிவு வளர்ச்சியின் நிலைகள் வாழ்க்கையில் உருவாக்கிய 4 துறைகள்
****************************************************

1 . பொருளாதாரமும் அரசியலும்
2 . கலைகள்
3 . விஞ்ஞானம்
4 . மெய்ஞானம்.

சமுதாய வாழ்க்கையின் 5 அம்சங்கள்
********************************************

1 . சுகாதாரம்
2 . பொருளாதாரம்
3 . அரசியல்
4 . விஞ்ஞானம்
5 . தத்துவஞானம்.

ஆசை ஒழுங்கில் கவனிக்க வேண்டிய 3 அம்சங்கள்
*********************************************

1 . தேவை தானா?
2 . வாய்ப்பு வசதி உண்டா ?
3 . பின் விளைவு என்ன?

நலம் விளைக்கும் ஆசைகளை நிறை செய்யும் 3 கட்டங்கள்
*************************************************

1 . திட்டம்
2 . செயல்
3 . வெற்றி.

ஆசைக்கு முன்னோர் செய்த 3 பகுப்புகள்
******************************************

1 . மண்ணாசை
2 . பொண்ணாசை
3 . பெண்ணாசை

அறிவின் 2 தரங்கள்
*********************

1 . பொருளறிவு
2 . உயிரறிவு.

கவலை ஒழிப்பில் சிக்கல்களைப் பகுக்க வேண்டிய 4 பகுப்புகள்
*******************************************

1 . உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய சிக்கல்கள்
2 . ஏற்று அனுபவித்தாக வேண்டிய சிக்கல்கள்
3 . தக்க காலத்தில் தீர்ப்பதற்காக தள்ளி போட வேண்டிய சிக்கல்கள்
4 . அலட்சியம் செய்து ஒதுக்கி விட வேண்டிய சிக்கல்கள்.

பிரபஞ்ச தோற்றங்களையும் இயக்கங்களையும் அறியும் 5 கருவிகள் (ஞானேந்திரியங்கள்)
*************************************************

1 . கண்கள்
2 . காதுகள்
3 . மூக்கு
4 . நாக்கு
5 . தோல்.

பிரபஞ்ச இயக்கங்களாகவும் தோற்றங்களையும் விளங்கும் 5 பூதங்கள்
*********************************************

1 . விண்
2 . காற்று
3 . நெருப்பு
4 . நீர்
5 . நிலம்

5 உணர்வுகள்
****************

1 . அழுத்தம்
2 . ஒலி
3 . ஒளி
4 . சுவை
5 . மணம்.

5 தொழில் கருவிகள்
*********************

1 . கைகள்
2 . கால்கள்
3 . வாய்
4 . குதம் (மலத் துவாரம்)
5 . குய்யம் (பால் உறுப்பு)

மனிதனின் 7 செல்வங்கள்
****************************

1 . உருவ அமைப்பு
2 . குண நலம்
3 . அறிவின் உயர்வு
4 . புகழ்
5 . உடல் வலிமை
6 . உடல் நலம்
7 . செல்வ வளம்

மனிதருள் வேருபாடுக்கான 16 காரணங்கள்
******************************************

1 . கருவமைப்பு
2 . ஆகாரம்
3 . காலம்
4 . தேசம்
5 . கல்வி
6 . தொழில்
7 . அரசாங்கம்
8 . கலை
9 . முயற்சி
10 . பருவம்
11 . நட்பு
12 சந்தர்ப்பம்
13 . ஆராய்ச்சி
14 . பழக்கம்
15 . வழக்கம்
16 . ஒழுக்கம்.

மனித வாழ்வின் 4 பேறுகள்
****************************

1 . அறம்
2 . பொருள்
3 . என்பம்
4 . வீடு

மனித வாழ்க்கையின் 3 குணங்கள்
***********************************
1 . இயற்கை நியதி
2 . இன்ப துன்பங்களின் தோற்றம், பெருக்கம், மாற்றம்
3 . சமுதாய அமைப்பு.

4 ஆஸ்ரமங்கள்
******************

1 . இளமை நோம்பு (பிரம்மச்சரியம்)
2 . இல்லறம் (கிரகஸ்தம்)
3 . தவம் (வானபிரஸ்தம்)
4 . தொண்டு (சன்யாசம்)

வாழ்க்கை தத்துவங்கள்:
*************************

1 . தேவைகள் மூன்று

3 தேவைகள்

1 . பசி, தாகத்தால் எழுபவை
2 . உடல் கழிவு பொருள்களின் உந்து வேகத்தால் எழுபவை
3 . வெப்ப, தட்ப ஏற்ற தாழ்வினால் எழுபவை

2 . காப்புகள் மூன்று

3 காப்புகள்

1 . வேற்றுயிர் பகையிலிருந்து
2 . இயற்கை சிற்றத்திலிருந்து
3 . தற்செயல் விபத்துகளிலிருந்து

3 . அறநெறிகள் மூன்று

3 அறநெறிகள்

1 . ஒழுக்கம்
2 . கடமை
3 . ஈகை

4 . அறிவு வளர்ச்சி படிகள் மூன்று

3 அறிவு வளர்ச்சி படிகள்

1 . நம்பிக்கை
2 . விளக்கம்
3 . முழுமைப்பேறு

கடமை ஆற்ற வேண்டிய 5 துறைகள்

1. உடல்
2. குடும்பம்
3. சுற்றம்
4. ஊர்
5. உலகம்

வாழ்கையில் பங்கு பெறும் 2 சக்திகள்

1. விதி
2. மதி

கல்வியின் 4 அம்சங்கள்
**************************

1 . எழுத்தறிவு
2 . தொழில் அறிவு
3 . இயற்கை தத்துவ அறிவு
4. ஒழுக்க பழக்கங்கள்

உடல் நலம் காக்கப் பெற வேண்டுமாயின் அடக்கப்படக் கூடாத 14 அம்சங்கள்
*********************************************

1 . தூக்கம்
2 . தாகம்
3 . சிறு நீர்
4 . தும்மல்
5 . இருமல்
6 . வாந்தி
7 . பசி
8 . கொட்டாவி
9 . மலம்
10 . ஏப்பம்
11 . தது
12 . கண்ணீர்
13 . அபான வாவு
14 . மூச்சு

7 தாதுக்கள்
************

1 . ரசம்
2 . ரத்தம்
3 . சதை
4 . கொழுப்பு
5 . எலும்பு
6 . மூளை
7 . விந்து நாதம்.

16 இயற்கை தத்துவங்கள்:
****************************

1 . இயக்க ஒழுங்கு 4

இயற்கையின் 4 இயக்க ஒழுங்குகள்

1 . மெய்ப்பொருள்
2. ஆற்றல்
3 . திணிவு
4 . உணர்வு.

2 . இயக்க கணிப்பு 4

இயற்கையின் 4 இயக்க கநிப்புகள்

1. விரைவு
2. பருமண்
3. காலம்
4. தூரம்

3 . இயற்கை நியதி 4

இயற்கையின் இயக்க நீயதிகள் 4

1. காரணாம்
2. விளைவு
3. பயன்
4. தொடர் பயன்.

4 . இயக்க வேறுபாடு 4

இயற்கையின் 4 இயக்க வேறுபாடுகள்

1 . தன்னியக்கம்
2 . தொடரியக்கம்
3 . பிரதிபலிப்பு இயக்கம்
4 . விளைவு

இயற்கையின் 3 நிலைகள்
****************************

1 . இருப்பு நிலை
2 . இயக்க நிலை
3 . உணர்ச்சி நிலை.

பிரபஞ்சத்தை இயக்கும் 2 ஆற்றல்கள்
**************************************

1 . ஈர்ப்பு ஆற்றல்
2 . தள்ளும் ஆற்றல்

ஆகாசத்தின் 3 நிலைகள்
**************************

1 . மகாகாசம்
2 . பூதாகாசம்
3 . சித்தாகாசம்

ஆகாசத்திற்கு விஞ்ஞானிகள் வகுக்கும் 3 பகுப்பு பெயர்கள்
*************************************************

1 . எலக்ட்ரான்
2 . புரோட்டான்
3 . நியுட்ரான்

பிறவித் தொடர் நீள்வதற்கு காரணமான ஆன்மாவினது 3 களங்கங்கள்
**************************************

1 . ஆணவம் (தன்னிலை விளங்காமை)
௨. கண்மம் (பாவப் பதிவுகள்)
3 . மாயை (நிறைவுரா ஆசைகள்)

பாவ பதிவுகளின் 3 விதப் பகுப்புகள்
**************************************

1 . சஞ்சித கர்மம்
2 . பிராரப்த கர்மம்
3. ஆகாமிய கர்மம்

மரணத்தின் 3 விதங்கள்
*************************

1 . இயற்கை மரணம்
2 . துர் மரணம்
3 . முக்தி.

இறப்பிற்கு பின் உயிர் அடையும் 3 நிலைகள்
**************************************

1 . பங்கீடு
2 . பைசாசம்
3 . வீடுபேறு.

வீடு பேறுக்கு முன்னோர்கள் செய்த 4 பகுப்புகள்
******************************************

1 . சாலோகம்
2 . சாரூபம்
3 . சாமீபம்
4 . சாயுச்சியம்.

இயற்கையான 3 துன்பங்கள்
******************************

1 . பசி, தாகம்
2 . வெப்ப, தட்ப ஏற்ற தாழ்வுகள்
3 . உடல் கழிவு பொருள்களின் உந்து வேகம்.

6 மதங்கள்
************

1 . சௌரம்
2 . சைவம்
3 . சாக்தம்
4 . கௌமாரம்
5 . காணபத்யம்
6 . வைணவம்.

பாவ பதிவுகளை போக்கும் 3 முறைகள்
**************************************

1 . பிராயசித்தம்
2 . மேல் பதிவு
3 . தேய்த்து அழித்தல்.

யோகத்தின் 4 பிரிவுகள்
*************************

1 . பக்தி யோகம்
2 . கர்ம யோகம்
3 . இராஜ யோகம்
4 . ஞான யோகம்.

ஐந்தினைப்புப் பண்பாட்டின் 5 அங்கங்கள்
**************************************

1 . விழிப்பு நிலை
2 . தற் சோதனை
3 . கடமை உணர்வு
4 . ஒழுக்க உணர்வு
5 . இறை உணர்வு.

தெய்வத்தின் பல்வேறு பெயர்கள்
**********************************

1 . பிரம்மம்
2 . ஆதி
3 . மூலம்
4 . ஆதி மூலம்
5 . அனாதி ......
6 . அந்தம்
7 . பொருள்
8 . மெய்ப்பொருள்
9 . மெய்
10 . பரம் ......
11 . பரம் பொருள்
12 . தெய்வம்
13 . கடவுள்
14 . ஈசன்
15 . இறைவன் .........
16 . இறை
17 . பகவன்
18 . சிவம்
19 . ஆதாரம்
20 . பேராதாரம் .......
21 மோனம்
22 . மௌனம்
23 . இருப்பு
24 . இருள்
25 . பூரணம் ........
26 . பரி பூரணம்
27 . அகண்டகம்
28 . அகண்டாகாரம்
29 . வெளி
30 . பெரு வெளி ........
31. பேராதார பேரு வெளி
32 . நிர்வாணம்
33 . தேவன்
34 . நித்தியம்
35 . சத் ..............
36 . சத்தியம்
37. வன்மை
38 . சூனியம்
39 . இயற்கை
40 . எல் ...........
41 . நிமலம்
42 . நிர்மலம்
43 . நின்மலம்
44 . ஆனந்தம்
45 . வீடு ............
46 . almighty
47 . providence
48 . god
49 . divine
50 . omnipresent .............
51. Omniscient
52 . Omnipotent
53 . Truth
54 . Space
55 . ஆகர்ஷணம் ...........
56 . இயற்கை
57 . Nil State
58 . Static State
59 . Absolute
60 . சிவகளம் .............
61 . சுத்த வெளி
62 . பரவெளி
63 . ஆண்டவன்
64 . பகவான்.

ஆகாசத்தின் வேறு பெயர்கள்
******************************

1 . விண்
2 . அணு
3 . பரமாணு
4 . உயிர்
5 . சக்தி ..........
6 . ஆற்றல்
7 . துகள்
8 . இயக்கம்
9 . அசைவு
10 . சுழல் ..........
11 . கண்டம்
12 . ஆன்மா
13 . ஆத்மா
14 . காந்தம்
15 . பிரதிகிருஷ்ணம் ............
16 . அணுத்துகள்
17 . Life
18 . Energy
19 . Life Energy
20 . Ether ...........
21. Etherial particle
22. Electron
23. Proton
24. Neutron
25. Divine Power ...........
26. Magnetism
27. Atomic particle
28. sith
29. soul
30. pranan.

பிரபஞ்சத்தின் பல்வேறு பெயர்கள்
***********************************

1 . அண்டம்
2 . பேரியக்க மண்டலம்
3 . பேரியக்கக் களம்
4 . உலகம்
5 . உலகு ..........

குண்டலினி யோகத்தின் பல்வேறு பெயர்கள்
***************************************

1 . மனவக்கலை
2 . கருதவம்
3 . சுக்கில தியானம்
4 . ராஜ யோகம்
5 . அகத்தவம்
6 . அகநோக்கு தவம்
7 . Inner Travel .

மனதின் 3 வேலைகள்
***********************

1 . மறதி நிலை
2 . விழிப்பு நிலை
3 . யோக நிலை.

மனதின் 4 வகைகள்
*********************

1 . புற மனம்
2 . நடு மனம்
3 . அடி மனம்
4 . நிலை பேறு

மறதி நிலை
*************

புறமனம் - மாயை - அறுகுணம்
நடு மனம் - லேசான தூக்கம் - கனவு
அடிமனம் - ஆழ்ந்த தூக்கம்
நிலைபேறு - மயக்கம் - அனச்தேசிய

எளியமுறை குண்டலினியோகப் பயிற்சிகளை
நீங்கள் கற்று அறிவில் உயர அருகிலுள்ள
மனவளக்கலை மன்றங்களுக்கு வாருங்கள். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்!!


-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி









No comments:

Post a Comment