Wednesday, May 18, 2016

சாம்பிராணி

*தீய சக்தி மற்றும் தீய எண்ணங்களை வீட்டிலிருந்து விரட்ட சாம்பிராணி – போடும் முறை*

எண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது, அப்படிப்பட்ட எண்ணங்களை நாம் நல்ல விதமாக எண்ணுவதே நமக்கும் மற்றவர்க்கும் நன்மை அளிக்கும், நாம் நன்றாக எண்ணம் போட்டாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படி எண்ணம் போடுவார்கள் என தெரியாது, இப்படிப்பட்ட தீய எண்ணங்கள் மற்றும் கண் திஷ்டி (அதாவது ஆழ்மனதில் பதியும் ஆழமான தீய எண்ணங்கள்). இவற்றை சரி செய்ய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பல முறைகளை கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான், மிகவும் சக்தி வாய்ந்த சாம்பிராணி புகை போடும் முறை, இந்த சாம்பிராணியை அமாவாசை அன்று மாலை 5லிருந்து 6 மணிக்குள் மாதம் ஒரு முறை மட்டுமே போட வேண்டும்.

சாம்பிராணி போடா தேவையான பொருள்கள் :

1.வேப்பிலை பொடி.
2.காயவைத்து அரைத்த எட்டி பொடி.
3.பெரிய நெல்லிக்காய் பொடி
4.கோமியம்.
5.தயிரh 6.மாவிலை

சாம்பிராணி போடும் கிண்ணத்தில் நன்கு கொட்டாங்குச்சியை நெருப்பு வைத்து எரித்து செந்நிறமாகும் வரை எரிய விட வேண்டும் , பின் வேப்பிலை பொடி , அரைத்த எட்டி பொடி இரடையும் கலந்து எரிந்து கதகதவென இருக்கும் கொட்டாங்குச்சியில் போட்டு விட வேண்டும். புகை போடுவதற்கு முன் கதவு சன்னலை மூடி வீடு அனைவரும் வெளியே சென்று விட வேண்டும். ஒருவர் மட்டும் உள்ளே இருந்து  புகை எழுப்பிவிட்டு(சாம்பிராணி போட்டுவிட்டு ) வெளியே  வந்து விட்டு கதவை மூடிவிட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து அனைத்து கதவு ஜன்னலையும் திறந்து விட்டு புகையை வெளியேற்ற வேண்டும், பின் அடுத்த நாள் காலையில் எழுந்து கோமியத்தில் தயிர், நெல்லி பொடி கலந்து மாவிலை மூலம் அந்த கோமியத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இதை ஒரு முறை செய்தாலே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

இதனை செய்வதன் மூலம் கெட்டசக்தி, கெட்ட எண்ணங்கள், கண் திஷ்டியில்இருந்து தப்பிக்கலாம்

Sunday, May 15, 2016

அர்த்த சாஸ்த்திரம்

அர்த்த சாஸ்த்திரம்

முதல் அத்தியாயம்:

1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.



பனிரெண்டாம் அத்தியாயம்

1. மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

2. பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

3. கெட்ட மனிதன் நல்ல மனிதனுடன் சேர்ந்து நல்லவனாகிறான். ஆனால் நல்ல மனிதன் கெடுவதில்லை. மரங்களின் பூக்கள் விழுந்து பூமி வாசம் வீசும். பூமியின் வாசம் மலர்களில் வீசாது.

4. நம் உடம்பு அழிந்து விடக்கூடியது. நாம் சேர்க்கும் பணம் நிலை இல்லாதது. ஆதலால் காலம் உள்ள போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

5. யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

6. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

7. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

8. முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

பதிமூன்றாம் அத்தியாயம்

1. நாம் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை பற்றி கவலைப் படக்கூடாது, எதிர் காலத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி யோசிக்க கூடாது, நிகழ் காலமே நம் கைகளில் இருக்கிறது, லட்சியத்தை அடைய விரும்புபவன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வான்.

2. பந்த பாசமே அனைத்து துன்பத்திற்கு காரணம், ஒருவன் இன்பமாக வாழவேண்டுமானால் பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்.

3. அவன் ஒருவன் எதிர்காலத்தை சந்திக்க தயாராக இருக்கிறானோ, கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தி கொள்கிறானோ அவன் எப்பொழும் மகிழ்ச்சியாக இருப்பான். வெறும் அதிஷ்டத்தை நம்புபவன் அழிந்து போவான்.

4. ஒரு மன்னன் தவறு செய்தால், அவன் கீழ் உள்ளவர்கள் தவறு செய்வார்கள். ” யதா ராஜா ததா பிரஜா”. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஆதலால் மன்னன் ஒவ்வொரு செயலையும் நன்கு ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.

5. ஆன்மிக வழியில் வாழாதவன் வாழ்தாலும் இறந்தவன் ஆவான். ஆன்மிக வழியில் வாழ்தவன் இறந்தாலும் உயிருள்ளவன் ஆவான்.

6. எவன் ஒருவன் தான் விரும்பும் அனைத்தையும் அடைந்தவன் ஆவான். அனைத்தும் இறைவன் கையில் உள்ளது. ஆதலால் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

7. பசுக்கன்று ஆயிரம் பசுக்கூட்டத்திலும் தன் தாயை அடையாளம் கண்டு அதன் பின் தொடரும் . அது போல் கெட்டவன் கெட்ட நண்பர்களுடனும், நல்லவன் நல்ல நண்பர்களுடன் செல்கிறான்.

8. இந்த உலகில் மூன்று ரத்தினங்கள் உள்ளது , உணவு, நீர், இன்சொல். வெறும் கற்களான முத்து, பவளம் போன்றவற்றை முட்டாள்களே ரத்தினம் என்று கூறுவர்.

9. மனிதன் அவன் செய்யும் காரியங்களின் பலனையே அடைகிறான். நல்லதும் கெட்டதும் நம் செயல்கள் மூலமே விளைகிறது. முன் செய்த பாவ புண்ணிய பலன்களை நாம் இன்று அனுபவிக்கிறோம்.

பதினான்காம் அத்தியாயம்

1. வறுமை, வியாதி, துக்கம், சிறைவாசம், மேலும் நமக்கு வரும் துன்பங்கள் இவை யாவும் நாம் செய்த பாவம் என்னும் மரத்தில் விளைந்த பலன்கள் ஆகும்.

2. செல்வம், நண்பன், மனைவி, அரசாட்சி ஆகியவைகளை இழந்தால் திரும்ப பெறலாம், ஆனால் ஆரோக்கியத்தை இழந்தால் திரும்ப பெறுவது இல்லை.

3. பல புற்க்கல் ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம்.

4. நீரில் சிந்தும் எண்ணை, சிறிய குணமுள்ள மனிதனுக்கு தெரிய வரும் ரகசியம், தயாள குணமுடையவனுக்கு கிடைக்கும் செல்வம், புத்திசாலியிடம் சேரும் கல்வி இவை அனைத்தும் அதன் குணத்திருக்கேர்ப்ப பரவி விடும்.

5. வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் இனிமையாக பேச வேண்டாம்.

6. நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

7. பண்டிதன் என்பவன் சூழ்நிலை அறிந்து பேசுவான், தன் சக்திக்கு தகுந்து நல்ல காரியங்கள் செய்வான், மேலும் தன் கோவத்தை அளவையும் அறிவான்.

8. குயில் தன் குரல் இனிமையாக மாறும் வரை பொறுமையாக இருந்து பின்பு பாடும். அது போல் ஒரு மனிதன் தன் காலம் கனியும் வரை பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும்.

9. நாம் செய்யும் தர்மம், புண்ணிய காரியம், கிடைக்கும் மரியாதை இவற்றை நினைத்து கர்வம் அடையக்கூடாது.

10. நம் மனதில் அருகில் இருப்பவர்கள் தூரத்தில் இருந்தாலும் அருகில் உள்ளவர்கள் ஆவார்கள், ஆனால் மனதில் தூரமாக இருப்பவர்கள் அருகில் இருந்தாலும் துரமானவர்களே

பதினைந்தாம் அத்தியாயம்

1. முட்களிடமும் இருந்தும் முட்டாள்களிடமும் இருந்து தப்பிக்க வழி, முதல் பிரச்சனைக்கு செருப்பு அணிவது, இரண்டாம் பிரச்சனைக்கு அவர்களை அவமானப் படுத்துவது தான்.

2. சுத்தமில்லாத ஆடைகளை அணிபவனிடம் , சுத்தமில்லா பற்களை உடையவனிடம் , கடுஞ்சொல் பேசுபவனிடம் , சூரிய உதயத்தின் பின் தூங்குபவனிடம் லக்ஷ்மி தங்க மாட்டாள்.

3. பணம் உள்ள வரை நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இருப்பார்கள், பணம் போனால் இவர்கள் நம்மிடம் இருந்து விலகுவார்கள். ஆதலால் பணம் தான் நிரந்தர உறவினர்.

4. பாவப்பட்டு சம்பாதிக்கும் பணம் பத்து வருடம் தான் தங்கும், அதன் பிறகு உள்ளதையும் எடுத்துக் கொண்டு சென்று விடும்.

5. பெரிய மனிதன் செய்யும் தவறுகள் அவருக்கு அணிகலன் ஆகிவிடும், சிறிய மனிதன் செய்யும் பெரிய காரியங்கள் துன்பத்தை விளைவிக்கும். சிவபெருமான் விஷம் அருந்தினார், ஆனால் அது அவருக்கு ஆபரணம் ஆகிவிட்டது, இராகு அமிர்தம் அருந்தினார், ஆனால் அது அவரை வெட்டுப்பட வைத்தது.

6. சாஸ்திரங்கள் கரை இல்லாதது, கற்க வேண்டிய விஷயம் கோடி உள்ளது, மனிதனின் ஆயுள் காலம் மிகக் குறைவானது, வாழ்க்கையில் பல தடைகள் உள்ளது , ஆதலால் நேரத்தை வீணடிக்காமல் நீரில் பாலை பிரித்து உண்ணும் அன்னப் பறவை போல், நல்ல விஷயங்களை கற்க வேண்டும்.

7. விருந்தாளி இருக்கும் போது தனித்து உண்பவன் பாவி ஆவான்.

8. ஒருவன் நான்கு வேதங்கள் கற்று இருந்தாலும், தன்னை உணராவிட்டால் உணவின் சுவை உணராத பாத்திரத்தை போல் ஆவான்.

9. ஒரு மனிதனை வசியப் படுத்த பல விஷயங்கள் உள்ளது, அது மிகப் பெரிய மனிதனையும் கட்டுப்படுத்தும், மரங்களை துளைக்கும் ஆற்றல் இருந்தாலும் தேனி பூக்களின் தேனில் மயங்கி கிடைப்பது போல்.

10. சந்தனம் துண்டு துண்டு ஆனாலும் அதன் மணம் மாறாது, கரும்பை சக்கையாக பிழிந்தாலும் அதன் இனிப்பு போகாது, யானை வளர்ந்தாலும் அதன் குறும்பு மாறாது. அது போல் மேன்மக்களின் குணம் வறுமை வந்தாலும் மாறாது.

பதினாறாம் அத்தியாயம்

1. ஒரு மனிதன் தன்னுடைய செயல்களாலே பெரிய மனிதன் ஆகிறான், அவன் அமரும் பதவியில் இல்லை. காகம் பெரிய மலையில் மேல் அமர்ந்தாலும் கருடன் ஆகாது .

2. திறமையிலாத ஒருவனை பலர் புகழ்தால் அவன் பெரிய மனிதன் ஆவான், ஆனால் ஒருவன் இந்திரனே ஆனாலும் தன்னை தானே தற்புகழ்ச்சி செய்தால் அவன் புகழ் மங்கி விடும்.

3. ஒரு மனிதனின் நல்ல குணங்களே ரத்தினம் ஆகும், தங்கத்தில் மின்னும் ரத்தினம் போல, அவனிடம் பல இருந்தாலும் நல்ல குணங்களே அவனை மின்னச் செய்யும்.

4. ஒரு மனிதன் எத்தனை சிறந்த குணங்கள், திறமைகள் இருந்தாலும் அவனை தூக்கி விட பெரிய மனிதர்கள் தயவு தேவை. என்னதான் ஒளிவீசும் ரத்தினம் ஆனாலும் அதை பதிக்க ஒரு தங்கம் தேவைப் படுவதை போல்.

5. பெண், பணம், உணவு ஆகியவற்றில் திருப்தி அடையாதவர்கள் சென்று விட்டனர், ஆனாலும் வேறு எதிலோ திருப்தி அடையாதவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டும், மேல் உலகிற்கு சென்று கொண்டும் தான் இருக்கிறார்கள்.

6. பலனை எதிர்பார்த்து செய்யும் தானம் தர்மம் குறுகிய காலம் மட்டுமே பலன்களை தரும், ஆனால் தன்னலம் கருதாமல் இறை சிந்தனை உள்ள மனிதனுக்கு செய்யும் சிறிய உதவி இந்த உலகத்தை காக்கும், என்றும் அழியாது.

7. அவமானப்பட்டு வாழ்வதை விட இறப்பது மேல், இப்படி வரும் இறப்பு ஒருநாள் தான் துன்பத்தை தரும், ஆனால் அவமானத்துடன் வாழ்வது ஒவ்வொரு நாளும் துன்பத்தை தரும்.

8. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்சொல்லால் மகிழ்ச்சி அடைகிறது. ஆதலால் இன்சொல் பேசுங்கள்.

9. புத்தகத்தை படிப்பதனால் மட்டுமே வரும் அறிவு, அடுத்தவனிடத்தில் உள்ள உள்ள செல்வம், ஆகியவை தேவைப்படும் போது நமக்கு பயன் தராது.

10. மிகவும் துன்பப்பட்டு சம்பாதிக்கும் பணம், அடுத்தவனை ஏமாற்றி வரும் பணம், எதிரியிடம் இருந்து வரும் பணம் ஆகியவற்றை நான் ஒரு போதும் பணம் என்று கருதியதில்லை

பதினேழாம் அத்தியாயம்[/1u]

1.முறையற்ற வகையில் பிறக்கும் குழந்தை சமூகத்தால் நிராகரிக்கப் படுவதை போல், ஒருவன் எத்தனை புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்றாலும், குரு அருள் இல்லாமல் கற்கும் கல்வி, அறிவு முதிர்ந்தோர் சபையில் எடுபடாது.

2. நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் அன்புடன் இருக்க வேண்டும். அது போல் கெட்டது செய்தவருக்கு கெடுதல் செய்வது பாவம் இல்லை. முள்ளை முள்ளால் தான் களைய வேண்டும்.

3. ஆசையை விட துன்பம் தருவது எது? அவமானப் படுத்துவதை விட பெரிய பாவம் எது? உண்மையாய் இருப்பதை விட வேறு உறுதி எது? நல்ல குணங்களை விட வேறு செல்வம் எது? தூய மனத்தை விட புண்ணியம் தரும் இடம் எது? புகழை விட சிறந்த ஆபரணம் எது? அறிவை தவிர வேறு சொத்து எது? அவமரியாதையை விட சிறந்த மரணம் எது?

4. கடலில் பல ரத்தினங்கள் உடன் இருந்தாலும், லக்ஷ்மி உடன் கடலில் பிறந்திருந்தாலும் சங்கு ஆண்டியின் கையில் அகப்பட்டு ஒவ்வொரு வீட்டு வாசலில் பிச்சை எடுக்க செல்கிறது, ஆதலால் நாம் எங்கு பிறந்தாலும், யார் உடன் இருந்தாலும் நமக்கு எது என்று எழுதி வைத்ததோ அது தான் கிடைக்கும்.

5. சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

6. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.

7. இந்திர லோக வாழ்க்கை இருந்தாலும், நல்ல பிள்ளைகள் பிறந்தாலும் தவறு செய்யும் மனைவி இருந்தால் ஒரு மகிழ்ச்சியும் இல்லை.

8. உண்ணுதல், இன விருத்தி செய்தல், உறங்குதல், அச்சம் அடைதல் ஆகிய அனைத்து குணங்களிலும் மிருகத்தை போல் தான் மனிதன் இருக்கிறான். அறிவு ஒன்று தான் அவனை மிருகத்திடம் இருந்து பிரித்து காட்டுகிறது.

9. அரசன், விலை மகள், யமதர்மன், நெருப்பு, திருடன், குழந்தைகள் , பிச்சைக்காரன் ஆகியவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தை உணர மாட்டார்கள். இவர்கள் வரிசையில் எட்டாவதாக இருப்பவர் வட்டிக்கு பணம் வசூலிப்பவர்.

10. ஓ தாழம்பூவே, உன்னிடம் முட்கள் இருக்கிறது, பாம்புகள் வசிக்கும் இடத்தில் வளர்கிறாய், வளைத்து நெளிந்து வளர்கிறாய், உன்னை எளிதில் அடையா இடத்தில் வளர்கிறாய். இருந்தாலும் உன் ஒரு வாசனைக்காக அனைவரும் உன்னை போற்றுகின்றனர். அதுபோல் மனிதனுக்கு உள்ள ஒரு சிறந்த குணம் அவனுடைய எல்லா தவறுகளையும் மறைத்து அவனை போற்றச் செய்து விடும்.

தியானம் ஓஷோ

ஓஷோவின் பேச்சு முழுவதும் வற்புறுத்துவது ஒன்றே
ஒன்றைத்தான். அது ‘பிரபஞ்சத் தன்ணுணர்வை
அடை’ என்பதுதான். பிரபஞ்சத்தன்ணுணர்வை அடையும் வரை போய் கொண்டே இரு.

எப்போதும் பிரபஞ்ச இணைப்புணர்விலிருந்தே நீ செயல்பட
வேண்டும். உனது உடல் ஏற்கனவே அப்படித்தான் செயல்படுகிறது. உனது மனமே பிளவு. உனது தன்னுணர்வு உனது உடலைப் போல பிரபஞ்சத் தன்ணுணர்வினுடன் இணைந்து செயல்படுவதே. உனது உடல் தனியாகத் தெரிகிறது பார்ப்பதற்கு. ஆனால் அது தனியல்ல, நீ சுவாசிக்கிறாய். அதுதான் உன் உயிரின் ஆதாரம். சுவாசம் காற்றுமண்டலத்தை சேர்ந்தது. காற்று மண்டலம் இல்லாவிட்டால் உன் சுவாசம் இல்லை. அப்படியானால் உன் உடல் காற்று மண்டலத்தின் ஒரு பாகம்தானே! அது போலவே உனது உடல் நீரின் பாகமாகவும் நிலத்தின்
பாகமாகவும் இருக்கிறது. இதை தனி என்று நினைப்பது அறியாமையே. அது
போலவே ஒருவரின் தன்னுணர்வும் தனியானது அல்ல. அப்படி நினைப்பது அறியாமை. அந்த அடிப்படை அறியாமையிலிருந்து பிறப்பதுதான் ‘நான்’ என்ற
மாயை. அதைச்சுற்றி அதைக் காப்பாற்ற இயங்கும் சக்தி ஓட்டமே மனம்.

ஆகவே ஓஷோ எங்கு தொட்டாலும், எதைப் பேசினாலும், அது செக்ஸ், அன்பு, நட்பு, தியானம், செயல் என்று எதுவாக இருந்தாலும், இந்த வாழ்க்கையின் உணர்வுகள் முழுவதையும்
பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை கொண்டு செல்ல சொல்கிறார். அதற்கு பாதை போட்டுக் காட்டுவதே அவரது பேச்சுக்களும், விளக்கங்களும். அதோடு அப்படி பிரபஞ்சத்தன்ணுணர்வை அடைய தடையாக இருக்கும் உணர்வுகளை தூக்கியெறிந்துவிடச் சொல்கிறார். அதுதான் அவரது கெத்தாரிஸிஸ். மேலும் அவர் தனது புது வழியென – பிரபஞ்சத்தன்ணுணர்வு அடையக் – கூறுவது ‘ தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு ‘
என்பதையே. அப்படி கொண்டாடும்போது பிரபஞ்சவுணர்வை இயல்பாக எட்டுவாய்
என்கிறார். ஆகவே 3 விஷயங்கள்:

பிரபஞ்சத்தன்ணுணர்வை எட்டு
அதற்கு தடையானவற்றை அகற்று
அதற்கு வழியாக தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு
சுருக்கமாக இந்த சாரத்தை புரிந்து கொண்டால் ஓஷோவை எங்கு
தொட்டாலும் அவர் சுட்டிக்காட்டுவதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதயம்!
இதுதான் நாம் வாழ வேண்டிய இடம்.
மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு மயமானது! அகங்காரமற்றது! தவறுகளை மன்னிப்பது! காயங்களை குணப்படுத்துவது! சுமையற்றது! பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை
கொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு! இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும்! திட்டமிட்டு கொலை செய்யும் யுத்தமும் அரசியலும் இங்கு
இல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான்! இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது மனிதனின் சாத்தியம்....

நாம் பிறப்பது இங்குதான்! மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே! வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை. சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக் கொள்வதிலிருந்து தியானத்தை ஆரம்பியுங்கள்

ராகு-கேது தோஷங்கள் நீங்க

ராகு-கேது தோஷங்கள் நீங்க, அனைத்து நலன்களும் பெருக பலன் தரும் ஸ்லோகம்

அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
நவகிரக ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:
பாதி (மனித) சரீரமுள்ளவரே,
மகா பலசாலியானவரே,
சந்திர-சூரியனையே மறைப்பவரே,
ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே,
ராகு பகவானே வணக்கம்.
பலாச மலர் போன்றவரே,
நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும்
தலைவரானவரே,
கோபம் மிக்க உருவம் கொண்டவரே,
அநீதிக்கு அச்சமூட்டுபவரே,
கேது பகவானே, வணக்கம்.

Wednesday, May 11, 2016

5 பஞ்ச

1.பஞ்ச கண்ணியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

21. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?

நனவு - சாக்ரம், கனவு - சொப்னம், உறக்கம் - கழுத்தி, பேருறக்கம் - துரியம், உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

Tuesday, May 10, 2016

சிவவாக்கியர் கருத்து

சிவவாக்கியர் கருத்துப்படி,

“அண்டர்கோனிருப்பிடம் அறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே”

அதாவது, ஞானியான ஒருமனிதன் கோயிலிற்சென்று கைகூப்பி வேண்டுதல் செய்து இறைவழிபாடு நடத்துவதில்லை.

எங்கும் நிறைந்த இறைவன் உமக்குள்ளேயே இருக்கும்போது அவ்விறைவனை அந்தர்முகமாக உன்னி வணங்குவீராயின், அச்சுருக்கமற்ற சோதிவடிவினனான இறைவனை அடையலாம். அவ்வாறிருக்க,

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
என்று கூறி,

நெருப்புநீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே
என்று சரியானமுறையையும் புகட்டுகின்றார்.

ஆனால், அந்தர்முகமாகச் செய்யப்படுகின்ற வெறுமையான தியானமுறைகளும் பலன்தரப் போவதில்லை. கையில் உருத்திராட்ச மாலையை வைத்து உருட்டிக்கொண்டு, கண்ணையும் சிமிட்டிக்கொண்டிருப்பினும், மனம்போவது எவ்விடம்! மனதிற்கிடக்கும் பொய், வஞ்சனை முதலானவற்றைத் துடைத்தெறியாமல் மெய்ப்பொருளை மனதின்கண் காணவும் இயலாது என்பதனை,

கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே
எனச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்லெண்ணத்துடன் செய்வதாயினும் கூட சிற்சில கிரியைகள் அதைச் செய்பவன் மனதிற்கு ‘நானே அதைச்செய்தேன்’ என்ற போலியான நிறைவு தருமேயல்லாமல் வேறெந்த பலனையும் கொடா என்பதனை,

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே

எனச் செய்த பூசையைக் கொண்ட பொருள் யாதென விளக்கித் தருமாறு கேட்கின்றார்.

சமைத்த கறியின் சுவையை அக்கறியைச் சமைத்த சட்டியும், கிளறும் சட்டுவமும் தெரிந்துகொள்ளாது.  பரம்பொருள் மனத்தின்கண்ணேயே இருக்க சிற்பியினால் உருவாக்கப்பட்ட கற்சிலை நிட்கள, நின்மல பர-வத்துவான பொருளாகாது என்பதனை உணர்த்த,
நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சார்த்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திர மேதடா?

என்று கேட்கிறார்.

பேதமை நிறைந்த மக்கள் அனைவரும்கூடி விழாமுதலான பேரில் செப்புச் சிலையை வைத்துச் செய்யும் பித்தலாட்டங்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.

ஊரிலுள்ள மனிதர்கா ளொருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலு மறியொணாத வாதிசித்த நாதரை
பேதையான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.

எனத் தேர்த்திருவிழா போன்ற வெறும் சமய சம்பிரதாயங்களை ஏளனம் செய்கின்றார்.

மூடநம்பிக்கைகளில் உழலும் உலகத்தவர் தங்களுக்கு ஏதாவதொரு நோய் வந்தால் கொல்லா விரதத்தை எள்ளளவும் கொண்டாடாமல், ஆடு, கோழி முதலியவற்றைப் பலி கொடுக்கும் ஈனச்செயல்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார் சிவவாக்கியர். ‘அத்தகைய பாபச்செயல்களைச் செய்யத்தூண்டும் உங்களது குலதெய்வங்கள் உங்களைக் குணமாக்கப்போவதும் இல்லை. உடல்நலம் மேலும் குன்றி மூஞ்சூறு போல இளைத்துப் போவீர்களேயன்றித், தேறும் நிலை உண்டாகாது.’

தங்கள்தேகம் நோய்பெறின் தனைப்பிடாரி கோயிலிற்
பொங்கல்வைத்தும் ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.
என்று அழுத்தமாகச் சொல்கின்றார்.

ஐம்புலன்களையும் வெல்லாது அவற்றின் வழியே செல்லும் அஞ்ஞானிகளுக்கு அன்னதானம் முதலான தருமங்கள் செய்வதும் வீணே. அத்தகைய போலித் துறவிகளுக்கு ஈகைசெய்வது தீமையையே விளைவிக்கும்.

ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பதும்ம வத்தமே
என்பதே சிவவாக்கியரின் அறிவுரை.

நல்ல இடங்களைத் தேடி அவற்றைச் சுத்திசெய்து பீடமிட்டு, அதன் மீது திருநீறு பூசி அமர்ந்து அருமையாகத் தவங்கள் செய்வார்கள்.  ஆனால், ஆன்மவடிவினனான இறைவன் ஒடுங்குமிடமும் உதிக்குமிடமும் யாதென்று அறிந்து பின் தவம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகின்றார் சிவவாக்கியர்.

இடங்கள்பண்ணி சுத்திசெய்தே யிட்டபீட மீதிலே
அடங்கநீரும் பூசல்செய் தருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனா ருதிக்குஞான மெவ்விடம்
அடங்குகின்ற தெவ்விடம் அறிந்துபூசை செய்யுமே.

அதுமட்டுமல்ல,
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன்
என்றும்,
தேடிவைத்த செம்பெலாந் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசையென்ன பூசையோ
என்றும்,

மெய்ப்பொருளாகும் இறைவனை உள்நோக்கியுணர வேண்டுமேயன்றி வெளிப்புறமான மரபுவழிச் சடங்கு வழிபாடுகளாலும், ஆசாரங்களை மேற்கொள்ளுதலாலும் எந்தப் பயனும் இல்லை என்று மனதில் பதியும்படிப் பல பாடல்களில் ஆவேசமாகக் கண்டனம் செய்கின்றார் சிவவாக்கியர். தமிழ்ச்சித்தர்கள் கடைப்பிடித்த மெய்யுணர்வு நெறிமுறையில் தனிப்பட்ட தெய்வங்களுக்கு இடமில்லை. இறைவனைப்பற்றிய ஆத்திகக் கோட்பாடு தவறான இரண்டு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட தெய்வம் என்ற கருத்து ஒன்று; படைத்தவனான இறைவன் படைப்புக்களிலிருந்து நிரந்தரமாக வேறுபட்டிருப்பவன் என்பது மற்றொன்று.  சிவவாக்கியரின் பார்வையில் எனக்கென்றொரு தனிக்கடவுள், உனக்கென்றொரு தனிக்கடவுள் என்று இருக்கமுடியாது.  ஏனெனில் அதனால் இரண்டு கடவுளர் உருவாவர்.

எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றலோ
அங்குமிங்கு மாகிநின்ற வாதிமூர்த்தி யொன்றெனில்
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
என இடித்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

இரண்டற விளங்கும் இறைவனை விட்டுணு எனவும் சிவன் எனவும் பாகுபடுத்தி வணங்குவது மடமை. பொன்னாற் செய்யப்படுகின்ற நகைகள் பல வடிவம் கொண்டவையாயிருப்பினும் ஆதாரமாயிருப்பது பொன் ஒன்றே.

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே

மற்றும்,
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள்பேத மன்றியே வுண்மைரெண்டு மில்லையே
என்று, கடவுளைப் கூறுபோட்டுக்கொள்வது மனிதர்களிடமுள்ள பேதமையாலும், பேதவுணர்வாலுமே என்பதனையும் வலியுறுத்துகிறார்.

அரியுமாகி யயனுமாகி அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி யுலகுதன்னில் நின்றபாத மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு மங்குமெங்கு மொன்றதே
எனவும் கூறி, ஒன்றே இறைவன் எனும் உண்மையை வலியுறுத்துகின்றார்.சமயம் ஒரு சமூக அமைப்பாக மாறும்போது கூடவே அதையொட்டிய நெறிமுறைகளும், வழக்கங்களும் உருவாகத் தொடங்குகின்றன. ஆனால் அவை மக்களின் சமய உணர்விலுள்ள தூய்மையை நாளடைவில் குறைத்து விடவும் செய்கின்றன.   சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பது என்பது தன்னிலை உணர்வதைவிட முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகின்றது.

காலம் செல்லச்செல்ல இவையே பெரும் தளைகளாகவும் மாறி விடுகின்றன. மெய்யறிவை நாடும் மனித சமுதாயம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடவேண்டுமென்பதே சிவவாக்கியரின் ஆவல். அந்த வகையில் உருவ வழிபாட்டையும், புண்ணியத் தலங்களை நோக்கியுள்ள யாத்திரை, தீர்த்தங்களில் முழுகுதல், தவவேடச்சின்னங்கள் அணிதல் முதலான சடங்குகளையும் அவர் அறவே மறுக்கின்றார்.  இவற்றைக் கடுமையாகக் கேலி செய்கின்ற போக்கு இவருடைய பாடல்களில் மிகுந்திருப்பதைக் காணலாம்.

உருவ வழிபாட்டை தீவிரமாகக் கண்டனம் செய்கிறார் சிவவாக்கியர்.
செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்ப னென்கிறீர்

கல்லிலும், உலோகத்திலும் பொம்மைசெய்து வைத்துகொண்டு அதில் சிவனைத் தேடிப் பொழுதை வீணழிக்கிறீர்களே என்று வருந்துகிறார்.

உடைக்கப் பட்ட கல்லின் ஒருபகுதி வாயிற்படியில் மிதிகல்லாகவும், மற்றொரு பகுதி கருவறையுள் கடவுள் சிலையாகவும் மாறுவதைக் கண்டு சிவவாக்கியர் வியக்கிறார்.
ஓசையுள்ள கல்லைநீர் உடைத்திரண்டு செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவேமி திக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சார்த்துறீர்
ஈசனுக் குகந்தகல் எந்தகல்லு சொல்லுமே என வினவுகின்றார்.

தத்துவங்களைச் சடங்காக்கி இறைவனைக் கல்லாக்கிவிட்ட மூடர்கள் உயிரோடுயிராகக் கலந்து நிற்கும் இறைவனைக் காண மறுப்பதை எண்ணிச் சிரிக்கின்றார் அவர்.
சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்
தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்
மூவராலு மறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே  என்கிறார்.

மெய்யான இறையனுபூதியை நேரடியாகப் பெறவேண்டுமேயல்லாமல் மற்றொரு உபாதிமூலமாக அதைப்பெற விழைவது மூடத்தனம் என்பதே சிவவாக்கியரின் கருத்து. சிற்பிகளின் கைவேலைப்பாடான சிலையுருவங்களை உயர்ந்த தெய்வமென்றெண்ணி அவற்றிற்குப் பெயர்களையும் இட்டு அழைக்கின்றீர்கள் அனைத்தயும் படைத்த முழுமுதற்கடவுளை உம்முள்ளத்தில் சிந்தனை செய்யுங்கள் எனும் அவரது அறிவுரையை

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள தென்றுநீர்
எண்ணமுற்று மென்னபே ருரைக்கிறீர்க ளேழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும்
ஒண்ணுமாகி யுலகளித்த வொன்றைநெஞ்சி லுன்னுமே
என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.

கட்டையாற்செய் தேவருங் கல்லினாற்செய் தேவரும்
மட்டையாற்செய் தேவரும் மஞ்சளாற்செய் தேவரும்
சட்டையாற்செய் தேவரும் சாணியாற்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்ற வேறுதெய்வ மில்லையே
என்று இறைவன் உருவற்றவன் என்பதனை உறுதியாக மொழிகிறார்.

சிலைவழிபாடு ஒருக்காலும் மெய்யான இறையின்பத்தையளிக்காது என்றும் சிவவாக்கியர் முடிவாகக் கூறுகிறார்.

கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடுந் தராக்களில்
வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற் றிடப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லையில்லை யில்லையில்லை யீசனாணை யில்லையே
ஆலய வழிபாடு, புனிதநீராடல் முதலானவற்றின் வீணான தன்மை:

சிலை வழிபாட்டைக் கண்டனம் செய்வதோடு, ஆலய வழிபாடு, ஆறுகுளங்களில் புனிதநீராடல், புண்ணியத் தலயாத்திரை முதலான நடவடிக்கைகளையும் சிவவாக்கியர் மட்டுமீறிய கடுமையுடன் இகழ்கிறார்.

யாராலும் ஆக்கவும் அழிக்கவும் இயலாத கோயிலும், குளங்களும் மனிதனின் மனத்தினுள்ளே இருக்கையில்,
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லையில்லை யில்லையே
என்று கோயில் குளங்களை நாடுவதை விட்டுவிட்டுக் கடவுளை உங்களுக்குள்ளேயே கண்டுகொள்ளுங்கள் என்கிறார்.

நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி யோடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே என நல்ல புண்ணிய தீர்த்தங்கள் எங்கேயென்று நாடியோடும் மாந்தரை அறைகூவி விளிக்கிறார்.

கண்ணனின் பக்தையான மீராபாய் தனது பாடலில் தினமும் குளிப்பதனால் ஹரி கிடைப்பானாயின் நானொரு மீனாகவோ மற்றேதேனும் நீர்வாழ் உயிரினமாகவோ பிறக்க விழைகிறேன் எனக்கூறியுள்ளார்.  இதே கருத்தையே சிவவாக்கியரும்,

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
அதாவது காலையும் மாலையும் தண்ணீரிலே மூழ்கினால் இறைவனருள் கிட்டுமாயின் எப்போதுமே நீரில் கிடக்கின்ற தேரையும் இறைவனுருள் பெற்றுவிடுமா? என்ற கேள்வியை விடுக்கிறார்.

இவ்வூரிலில்லாத இறைவன் அவ்வூரிலிருப்பான் என்று என்ன உறுதி?
இந்தவூரி லில்லையென் றெங்குநாடி யோடுறீர்
அந்தவூரி லீசனும் அமர்ந்துவாழ்வ தெங்ஙனே என்று கேட்கின்றார்.

தீர்த்தலிங்க மூர்த்தியென்று தேடியோடும் தீதரே
தீர்த்தலிங்க முள்ளினின்ற சீவனைத் தெளியுமே,  அதாவது
தீர்த்தம், லிங்கம், மூர்த்தி என்று ஊரூராகச் சென்று தேடுவோரே! அவை அனைத்தையும் உம்முள்ளேயே கொண்டுள்ள உம் சீவனை உன்னிப்பாகக் கவனிப்பீராக என்று அறிவுரை புகட்டுகின்றார்.  காடுமேடு குன்றுபள்ளங் கானினா றகற்றியும் நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதங் காண்பரோ? இல்லை. இறைவனை மனத்துள் அல்லால் எங்குத் தேடியும் பயனில்லை

Monday, May 9, 2016

நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland

நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland

★மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் , யோகிகள் அந்த காலத்தில் அடைந்த யோகத்தை ஏன் இன்று மனிதானால் அடைய முடியவில்லை ? என்றாவது யோசித்து உள்ளீர்களா ?

★அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று நம்மால் அந்த நிலையை அடைய முடியவில்லை ?

★Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி பொட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின் நெற்றி கண்ணாகவும் , புத்தினின் ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில் மறைமுகமாக கூறி உள்ளனர் . உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு நிலை படுத்துதல் , மூச்சு பயிற்சி போன்றவற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக வேலை செய்ய துவங்கும் .. உடம்பில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed "என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின் விதை . இந்த pineal gland உறுப்பின் மூலமே நாம் நமது ஆன்மாவை அடைய முடியும் (Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால் மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற பெரிய உண்மையை மறைக்க உருவாக்கப்பட்டவையே .

★சித்தர்கள் உணவு உண்ணாமல் , பருகாமல் உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி .. இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் தூங்கும் பொழுது நம் உச்சந் தலை மூலம் இறங்கி நம் உடல் முழுவதும் பரவும் .. இது போதிய அளவில் நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும் வழி தான் தியானம் .

★நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்காக வந்துள்ளோம் . நமது உண்மையான உடல் நினைவுகள் அனைத்தும் அந்த ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand மட்டுமே நமது திட உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்கப்பட்டால் ?

★இந்த Pineal Gland மூலம் தான் நம்மால் அடுத்த பரிணாமத்தை அடையமுடியும் (உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று கூட சொல்லலாம் ) . இது தான் மனித குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .

★என்ன ஆயிற்று இன்றைய மனிதனின் Pineal Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும் இல்லுமினாட்டி ) நமது உணவு பொருள்களில் நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி FLuride என்னும் வேதி பொருள் .. உடலில் எந்த இடத்தில் நீங்க Fluride இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை ஈர்த்துகொள்ளும் ..பிறகு Pineal Gland இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக நமது பற்பசையில் (toothpaste ) இல் இது அதிக அளவுகளில் கலக்க படுகிறது .

DMT - Dimethyltryptamine
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

★இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் .. அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக போதை பொருள் .. இதை பயன்படுத்தினால் பேச்சே கிடையாது உங்களை கைது செய்து விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை பொருளா என்று எண்ணாதீர்கள் ..

★இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி பொருளே இந்த DMT .

★ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .

★அதே போல் நமது பாரம்பரிய தானியங்களையும் அழித்து மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் , காய் கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு வரவேண்டிய Dimethyltryptamine யை தடுத்து விட்டார்கள் .

★எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும் மனித இனத்துக்கு appendix சதை போல தேவை ஆற்ற பொருளாகி விடும் .

★இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால் என்ன நடக்கும் ?

★அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans (பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளனர் .

★இந்த DMT யை சிலருக்கு கொடுத்து ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள் அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை அடைந்ததாக கூறுகிறார்கள் .

★வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும் தவத்தின் முலமே கடவுள்களை உணர்ந்துள்ளனர் .கடம் தவம் இந்த வேதி பொருளை தான் மூளையில் உற்பத்தி செய்கிறது .

★இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில் அதிக அளவில் உள்ளது .

★இந்த அறிய உறுப்பை கொண்ட கடைசி தலைமுறை நாமாக கூட இருக்கலாம் .. மீடியா வில் காட்டப்படும் பல எண்ண சிதரல்களை தவிர்த்து தியானத்தை கடை பிடித்து , இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும் அந்த நிலையை அடையலாம்