Thursday, March 17, 2016

பேச்சு

பேச்சு
°=°=°=°=°=°=

ராதேக்ருஷ்ணா

பேச்சு . . .

வாய் ஓயாமல் பேச்சு . . .

சம்மந்தமில்லாமல் பேச்சு . . .

சம்மந்தமில்லாதவர்களைப் பற்றி பேச்சு . . .

பைத்தியக்காரத்தனமான பேச்சு . . .

எதைப்பற்றியாவது பேச்சு . . .

ஆனால் என்ன ப்ரயோஜனம் ?

யாரையாவது பற்றி உனக்கு
என்ன பேச்சு ?

உன் வாழ்க்கைக்கு வழி என்ன
என்பதை  பேசாமல்
மற்றவரைப் பற்றி என்ன பேச்சு ?

நீ எதைப்பற்றியோ பேசி
என்ன சாதித்தாய் ?

இன்னும் நிறைய உன்
குற்றங்களை களையவேண்டும் . . .
மீண்டும் வருவேன் . . .


பேசுவது குற்றமல்ல . . .
அனாவசியமான பேச்சு குற்றமே . . .
இதில் சந்தேகமில்லை . . .


எவனோ,எவளோடு ஓடிப்போனால்,
அதைப்பற்றி பேச
உனக்கு என்ன அவசியம் ?
நீ ஒழுங்காக வாழ வழி தேடு . . .


ஒரு திரைப்படம் கேவலமாக
இருந்தாலோ,அதை மற்றவர்
ரசித்தாலோ, அதைப்பற்றி பேசி
உனக்கு என்ன கிடைத்தது ?
உன் வாழ்க்கை திரைப்படமல்ல . . .


உருப்படாதவர்கள் என்று சிலர்
சிலரைச் சொல்ல,அதை ஆமோதித்தோ,
எதிராகவோ நீ பேச யார்
உனக்கு அனுமதி தந்தது ?
நீ உருப்படும் வழியைப்பார் . . .


பேச்சை குறை . . .
செயலில் இறங்கு . . .
வாழ்க்கை கை நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது . . .
ஜாக்கிரதை . . .

யாருடைய வீட்டில் எது
நடந்தால் உனக்கென்ன ?
முடிந்தால் உதவி செய் . . .
இல்லையேல் உன் வாயை மூடிக்கொள் !


சொந்தக்காரர்கள் யாரோடும்
எப்படிப் பேசினால் என்ன ?
நீ முடிந்தவரை யாரைப்பற்றியும் குறை கூறாதே !


விளையாட்டில், யார் தோற்றாலென்ன?
யார் ஜெயித்தாலென்ன?
அதைப் பற்றிப் பேசி
உனக்கு என்ன ப்ரயோஜனம் ?
நீ வாழ்வில் தோற்றுவிடாதே . . .


யாரோ ஒருவர் ஆடம்பர
செலவு செய்ய,அதைப் பற்றி
நீ பேசி என்னவாகப்போகிறது ?
நீ ஆடம்பர செலவு செய்யாதே . . .


நல்லதே பேசு . . .
நல்லவரைப் பற்றியே பேசு . . .
நன்மையே பேசு . . .
நாகரீகமாகப் பேசு . . .
நயமாகப் பேசு . . .
நாணயத்தோடு பேசு . . .
மரியாதையாகப் பேசு . . .
புன்முறுவலோடு பேசு . . .
அர்த்தத்தோடு பேசு . . .
அமைதியாகப் பேசு . . .
அன்போடு பேசு . . .
அழகாகப் பேசு . . .
சிரத்தையோடு பேசு . . .
நம்பிக்கையோடு பேசு . . .
நம்பிக்கை வரும்படி பேசு . . .
நிதானமாகப் பேசு . . .
புரியும்படியாகப் பேசு . . .
புரிந்துகொண்டு பேசு . . .
உள்ளதைப் பேசு . . .
உண்மையைப் பேசு . . .
உறுதியோடு பேசு . . .
உயர்வானதைப் பேசு . . .
உறுப்படியாய் பேசு . . .
உணர்ந்து பேசு . . .
ஒழுங்காகப் பேசு . . .
சுருங்கப் பேசு . . .
சுறுசுறுப்பாய் பேசு . . .
சுயசிந்தனையோடு பேசு . . .
மரியாதையாய் பேசு . . .
மனதோடு பேசு . . .
மகிழ்ச்சியாய் பேசு . . .
பண்போடு பேசு . . .
பார்த்துப் பேசு . . .
பணிவோடு பேசு . . .
பாங்காய் பேசு . . .
பக்குவமாய் பேசு . . .
வரம்போடு பேசு . . .
அளந்து பேசு . . .
தைரியமாகப் பேசு . . .
தன்னம்பிக்கையோடு பேசு . . .
பொறுமையோடு பேசு . . .
பொறுப்போடு பேசு . . .
தெளிவாகப் பேசு . . .
தெரிந்ததைப் பேசு . . .
தெரிந்தவரை பேசு . . .
தன்மையோடு பேசு . . .
அறிவோடு பேசு . . . 
ஆணித்தரமாய் பேசு . . .
நயமாய் பேசு . . .


வம்பு பேசாதே . . .
வெட்டியாய் பேசாதே . . .
வெறுப்பாய் பேசாதே . . .
வெறுப்பேற பேசாதே . . .
மட்டமாய் பேசாதே . . .
தெரியாததைப் பேசாதே . . .
ஆணவமாய் பேசாதே . . .
கோபமாய் பேசாதே . . .
கேவலமாய் பேசாதே . . .
கெட்டதைப் பேசாதே . . .
கெடுதலாய் பேசாதே . . .
கேலியாய் பேசாதே . . .
அவசரமாய் பேசாதே . . .
சம்மந்தமில்லாமல் பேசாதே . . .
புரியாமல் பேசாதே . . .
முட்டாள்தனமாய் பேசாதே . . .
முந்திரிகொட்டையாய் பேசாதே . . .
முடியாததைப் பேசாதே . . .
பைத்தியக்காரத்தனமாய் பேசாதே . . .
பிடிவாதமாய் பேசாதே . . .
பண்பில்லாமல் பேசாதே . . .
அநாகரீகமாய் பேசாதே . . .
அவசரப்பட்டு பேசாதே . . .
அடாவடியாய் பேசாதே . . .
நயவஞ்சகமாய் பேசாதே . . . 
அர்த்தமில்லாமல் பேசாதே . . .
அசட்டுத்தனமாய் பேசாதே . . .
ஆதாரமில்லாமல் பேசாதே . . .
அதட்டிப் பேசாதே . . .
ஆபாசமாய் பேசாதே . . .
பொய்யாய் பேசாதே . . .
பொய் பேசாதே . . .
பொறுப்பில்லாமல் பேசாதே . . .
பொறாமையில் பேசாதே . . .
பொறாமையோடு பேசாதே . . .
அறுவறுப்பாய் பேசாதே . . .


உன் பேச்சு உன்னை ப்ரதிபலிக்கும் !
சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமான் !
சொன்ன வார்த்தை உனக்கு எஜமான் !

உன் பேச்சு உன்னைக் காப்பாற்றும் . . 
உன் பேச்சு உனக்கு நண்பரைத் தரும் . . .
உன் பேச்சு உனக்கு மரியாதையைத் தரும் . . .
உன் பேச்சு உன் வாழ்வை வளமாக்கும் . . .
உன் பேச்சு உன்னை வாழவைக்கும் . . .
உன் பேச்சு உனக்கு ஆனந்தத்தைத் தரும் . . .
உன் பேச்சு உறவை பலப்படுத்தும் . . .
உன் பேச்சு சமாதானம் செய்யும். . .


உன் பேச்சு உன்னை மாட்டிவிடும் . . ..
உன் பேச்சு உனக்கு பகையுண்டாக்கும் . . .
உன் பேச்சு உனக்கு பொல்லாப்பைத் தரும் . . .
உன் பேச்சு உன் வாழ்வை நாசமாக்கும் . . .
உன் பேச்சு உன்னை அழிக்கும் . . .
உன் பேச்சு உனக்கு துக்கத்தைத் தரும் . . .
உன் பேச்சு உறவை அறுக்கும் . . .
உன் பேச்சு சண்டையை வரவழைக்கும் . . .



புரிந்து கொள் . . .
உன் வாயிலிருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு அஸ்திரம் . . .
உன் வாயிலிருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வையே மாற்றும் !
உன் வார்த்தை,உன் பேச்சு 
உன் எண்ணங்களின் ப்ரதிபலிப்பு...


வாயைத் திறக்குமுன் யோசி . . .
வாழ்க்கை முடியும் முன்பு,
வாழ்வை மாற்றிக்கொள் . . .
இல்லையில்லை . . .
வார்த்தையை மாற்றிக்கொள் . . .


வார்த்தையே வாழ்க்கை . . .
பேச்சே வாழ்விற்கு எமன் . . .
பேச்சே வாழ்வின் பலம் . . .

தவளை போல் தன் வாயால் கெடுவதும்,
குயிலைப் போல் தன் வாயால் இனிமையாயிருப்பதும்,
சிங்கம் போல் தன் வாயால் பயமுறுத்துவதும்,
தெருநாய் போல் தன் வாயால் அடிபடுவதும்,
இனி உன் பொறுப்பு . . .

பலம்:
தூங்கும்போது பேசாதிருப்பதால்  கூடுகிறது . . .
விழித்திருக்கும்போதோ பேசிக்கொண்டேயிருப்பதால் குறைகிறது . . .


இனி பேசுவதும்,
ஒழுங்காய் பேசுவதும்,
உளறிக்கொட்டுவதும்,
உன் வாயைப் பொறுத்த விஷயம் .
°===°=°===°=°===°=°
குருஜீ கோபாலவல்லிதாசர்
http://vedhaththamizh.blogspot.in/2010/10/blog-post_20.html?m=1

No comments:

Post a Comment