Thursday, February 25, 2016

ராசி நாம அர்ச்சனை

சகஸ்ர நாம அர்ச்சனைக்கான பலனும் 

பரிகார மந்திரமும்!

அவரவர் ராசிக்குரிய ஸ்லோகத்துடன் அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும்.
சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் சகல நன்மையையும் கிட்டும் என பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம். எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யவேண்டும், சகஸ்ர நாம அர்ச்சனை செய்யும்போது அவர்கள் கூறவேண்டிய ஸ்லோகம் என்ன ;

மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.
ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். 

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ


மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:


கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம

Sunday, February 21, 2016

காவி

காவி என்பதை நம் முன்னோர் துறவற நிறமாக வைத்தனர்..இல்லறத்தை துறந்து துறவறம் செல்வோர் அனியவேண்டியது...காட்டில் செல்லும்போதும்,பல இடங்களில் உறங்கும் போதும் பல புழுப்பூச்சிகள் கடிக்கும்,காவி நிறம் அதை அண்டவிடாது தடுக்கும் .வெள்ளை வேட்டியை செம்மண்னில் நனைத்து கட்டுவதே காவி ..காவி கட்டுவோர் இல்லறம் துறந்தார் என்று சிவாகமத்தில் கூறப்படுகிறது ..ஆகையால் துறவற நெறியில் உள்ளவர்கள் மட்டுமே காவி உடுத்தல் வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை
பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின்
கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில்
போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி
பருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிற
துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து
எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில்
இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால்
காவி உடையாகிவிடும் ! இந்த ஆடையையே
அணிந்தார்கள் ! இந்த காவி நிற ஆடையை
தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை
மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன்
மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய
கலையைக் கற்றார்கள் !
ஆனால் இது தெரியாமல் காவி என்றால்
துறவு என்றாகிவிட்டது !
காவி உடை எதற்கு , ஏன் என்று தெரியாமல்
போனது​

Saturday, February 20, 2016

தாயே இதை ஏற்றுக்கொள்

தாயே இதை ஏற்றுக்கொள்.
அவர் நிறைய பணம் சம்பாதித்தவர் தான். கடல் கடந்து கப்பல் வியாபாரம். மனதை பணம் நிரப்பவில்லை. அடிவாரத்தில் ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது. குடும்ப பாசம் நெஞ்சை விட்டு அகல ஆரம்பித்தது. ஏதோ ஒரு தேடல் அந்த இடத்தை ஆக்ரமித்தது. தேசாந்திரியாக ஒவ்வொரு இடமாக கால்கள் இழுத்துச் சென்ற இடமெல்லாம் நடந்தார். இந்த நேரத்தில் அவர் தாய் இறந்தாள் என்ற செய்தி காதில் விழுந்தது. கால்கள் அவரை தானாகவே பழைய வாழ்ந்த இடத்துக்கு கொண்டு சென்றது.
தாயின் உடல் அவரை வரவேற்றது. மௌனமாக அந்த முகம் ''அப்பனே இப்போவாவது வந்தாயா. எனக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்வாயா?'' என்று கேட்பது போல் அவர் மனதில் பட்டது. ஒரு இயந்திரம் போல் அவர் செயல் பட்டார். தாயின் உடலுக்கு தீயிட்டார். தாயின் உடல் மட்டுமல்ல அவர் மனமும் வெந்தது. அவள் விட்டுப்போன பாசம் பழைய நினைவுகளாக உருவெடுத்து அவர் மனதை பிழிந்தது மட்டும் அல்லாமல் வார்த்தைகளாக உருவெடுத்து அவரைப் பேச, இல்லை இல்லை, பாட வைத்தது. எளிய தமிழில் புரியும் படியாக பாடிய வெண்பா. பிற்காலத்தில் அது எழுத்தில் அச்சானது. அடடா இது போல் இன்னொருவர் சொல்ல முடியுமா என்று நம்மை இன்றும் வியக்க வைக்கிறது..
''பத்து மாதம் படாத பாடு பட்டு உடல் வலிக்க என்னை வயிற்றில் சுமந்தாய். அடே பயலே என்று செல்லமாக கூப்பிடுவாய். முடிந்த போதெல்லாம் உன் இரு கையே எனக்கு இருக்கை யானது. பசித்ததா எனக்கு என்று எனக்கே தெரியாது. ஆனால் உனக்கு தெரியுமே! அன்போடு மார்பகத்தில் அனைத்து பால் கொடுத்து வளர்த்தாயே. இனி நான் உன்னை என்று எங்கே எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன்?''
'' ஐயிரண்டு திங்களா யங்க மெலா நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனக முலை தந்தாளை
யெப் பிறப்பிற் காண்பேனினி.1
நான் உன் மகனாக பிறக்கவேண்டும் என்று கனவினிலும் வேண்டியதில்லை. ஆனால் நீ நான் ஒரு மகனாக உனக்கு பிறக்கவேண்டும் என்று எத்தனை வருஷம் தவம் இருந்தாயோ. கேள்விப் பட்டிருக்கிறேன். நீ நிறைய கோவில்களுக்கு சென்று, எங்கெங்கோ சுற்றி, விரதமிருந்து யார் சொன்னபடி எல்லாமோ உன் உடலை வருத்திகொண்டு சிவனை வேண்டி, நான் பிறந்தேன். ஒன்றா இரண்டா முன்னூறு நாள் போல் என்னை இரவு பகலாக கண் விழித்து ஜாக்ரதையாக காத்து அல்லோ என்னை பெற்றாய். அதற்கெல்லாம் பிரதி உபகாரம் நான் என்ன செய்கிறேன் பார். நிறைய தீயை மூட்டி உனது உடலை எரிக்கிறேன். எப்படிப்பட்ட பிரதிஉபகாரம் !!
முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாட் சுமந்தே
யந்தி பகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரிய த்தழன் மூட்டுவேன்.2
என்னைத் தாலாட்டினாய், சீராட்டினாய், ஊஞ்சலில் வைத்து பாராட்டினாய், பாடினாய். உன் மார்பில் மேலும் தோள்மேலும் நான் எத்தனையோ காலம் சுகமாக தூங்கியிருக்கிறேன். எனக்கென்று தந்தத்திலும் தங்கத்திலும் தொட்டில் வேறு வைத்திருந்தாய். . உலகிலேயே நீ அதிக பாசம் அன்பு, காதல் வைத்த ஒரே ஜீவன் நான் ஒருவனே. . தாய்ப் பறவை சிறகுக்குள் தனது குஞ்சுகளை அணைத்து காப்பது போல் என்னை உன்னருகிலேயே வைத்து அணைத்து காப்பாற்றி வளர்த்தாய். அந்த உடலுக்கு நான் இப்போது கைம்மாறு செய்கிறேனே. இங்கே தான் நிறைய காய்ந்த விறகுகள் கொண்டு வந்திருக்கிறேனே. அவற்றின் மீது உன் தலையை வைத்து எரிக்கிறேன். தக தக வென்று தீ என் நெஞ்சைப் போல் உன் உடலும் எரியட்டும்.
வட்டிலிலுந் தொட்டிலிலு மார் மேலுந் தோண் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகி லிட்டுத் தீ மூட்டுவேன்.3
எனக்கு என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை தாயே. சொன்னதையே திருப்பி திருப்பிச சொல்கிறேன். எது நினைத்தாலும் அது உன் நினைவாகவே அல்லவோ மாறி விடுகிறது. எத்தனை நோன்புகள், எத்தனை எதிர்பார்ப்புகள், என்னை பத்துமாத காலம் வயிறு முன் தள்ளி வர, நான் உள்ளே உன்னை விண் விண் என்று உதைக்க, பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கி, பெற்று வளர்த்து பாலூட்டி வளர்ந்த உன் மெய்க்கு -- உண்மையாகவே -- மெய் என்றால் உடம்பு தானே --அதை தீயிலே இட்டு எரிக்கிறேன்.
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே - யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன்.4
பாவம் என் அன்புத் தாயே. எனக்கு நேரம் பார்த்து பசி வரும் முன்பே நீ உணவளித்து வளர்த்தாயே. இப்போது உனக்கு பசிக்குமே இந்தா கொஞ்சம் அரிசியாவது உன் வாயில் இடுகிறேன். ஆத்தா, எனக்கு எத்தனை எத்தனையோ சிங்காரம் பண்ணி, அழகு செய்து, முன்னும் பின்னும் என்னை பார்த்து மகிழ்ந்த தாயே, என்னை பேர் சொல்லியா கூப்பிட்டாய். தேனே, மானே, கற்கண்டே, செல்வமே, அம்ரிதமே, என்று தானே எப்போதும் வாய் நிறைய அழைப்பாய். அந்த வாய்க்கு நிறைய அரிசி போடட்டுமா?
அரிசியோ நானி டுவே னாத்தா தனக்கு
வரிசை யிட்டுப் பார்த்து மகிழாம - லுருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியமே
மானே யென அழைத்த வாய்க்கு.5
எல்லாமே முடிந்து விட்டது. என் மகனே என் செல்வமே முத்தே என்று என் முகத்தோடு உன் முகத்தை ஒட்டி, வாய் ஓயாமல் சொல்லிய உன் வாய்க்கு கடைசி கடைசியாக வாய்க்கு கை நிறைய அள்ளி அரிசி போட்டு விட்டேன். உச்சி முகந்த உன் முகத்துக்கும் உடலுக்கும் கொள்ளி போட்டு விட்டேன். இது தான் நான் செய்ய முடிந்தது. இதை நான் செய்யவேண்டும் என்று தான் உன் விருப்பமும் கூட. நிறை வேற்றிவிட்டேன் தாயே.
அள்ளி யிடுவதரிசியோ தாய் தலை மேல்
கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி யென்றன்
மகனே யென அழைத்த வாய்க்கு.6
இறைவா, சிவபெருமானே, ஒரு வேண்டுகோள். தயவு செய். நீ முற்காலத்தில் திரிபுரத்தை உன் நெற்றிக்கண்ணால் ஒரு நொடியில் எரித்தவன். பின்னர் ஒரு காலத்தில் ராமனாக வந்தாய். உன் பக்தன் ஆஞ்சநேயன் இலங்கைக்கு பறந்தான். அந்த மாநகருக்கே சடுதியில் தீ இட்டான். இந்த நெருப்பெல்லாம் உண்மையிலேயே ஒரு நெருப்பாகுமா? என் தாய் எனக்கு மீண்டும் கிடைக்காதவள், என் அடிவயிற்றில் இப்போது வைத்து விட்டு சென்றாளே அந்த தீ, நெருப்புக்கு வேறு எந்த நெருப்பாவது ஈடாகுமா? அப்படிப்பட்ட நெருப்பில் கொஞ்சம் எடுத்து இதோ என் தாய் சிதைமேல் இடுகிறேன். கப கப வென்று அது என் அடிவயிற்று தீபோல் எரியட்டும்.
முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென்னி லங்கையில்
அன்னைக யிட்ட தீ யடி வயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே.7
என் தாய் இனி இல்லை. தீயில் கலந்து வெந்து போனாள் . பொடியாகி விட்டாள் . அவள் பெயர் இனி சாம்பல். ஒரு குருவியின் நிழல் கூட என் மீது படாமல் என்னை பாதுகாத்து வளர்த்த அந்த உடல் இனி ஒரு பிடி சாம்பல் தான்.
வேகுதே தீ யதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி
பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த் தெடுத்த கை.8
சிவ பெருமானே, என் தாய் வெந்தாளோ? உன் திருவடிகளில் அடைக்கலம் என்று வந்தாளோ? என்னை மறந்தாளோ? அவள் உன்னையே அல்லவோ சுற்றி சுற்றி வந்து வரமெல்லாம் கிடந்து என்னை பெற்றவள். என் தாய்.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின் பதத்தில்
வந்தாளோ வென்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்து வரங்கிடந்தென்
றன்னை யீன்றெடுத்ததாய்.9
என்ன வாழ்க்கை பாருங்கள் மானிடர்களே. இதோ இங்கே தான் எப்போதும் உட்கார்ந்திருப்பாள். இந்த தெருவெல்லாம் என்னைத் தோளில் சுமந்து நடந்தாள். நேற்று இருந்தாளே? இன்று?? வெந்து சாம்பலானாள் ? ஒரு நாள் ஓடிவிட்டதே வாருங்கள் பால் தெளிப்போம்? இனி என் மனத்தில் இந்த இரக்கம் வேண்டாம். இது உன் செயல், நியதி. என்றும் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது. எல்லாம் சிவ மயம் தான் சிவனின் மாயம் தான் என்று ஏற்றுக்கொண்டு பழையபடி என் வழியே நடக்கிறேன்.
வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்களே தென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்து ஸ்லோகங்கள் (தாய்ப் பாசத்தை பிழிந்து வடிகட்டி அவரால் இயற்றப்பட்டவை) -- தாய் முதல் ஸ்தானத்தில் வணங்கப் பட வேண்டியவள். தியாகத்தின் சின்னம். அனைவரும் இதை உணரவேண்டும், கடமையில் தவறாமல் வாழும்போதே அவளை திருப்தியாக வைத்துக் கொள்வதில் எந்த மகனும் மகளும் தவறக்கூடாது.
ஆதி சங்கரரைப் போலவே தென்னாட்டில் தமிழகத்தில், பட்டினத்தாரும் உணர்ச்சி கொப்புளிக்க மேலே கண்ட சில தத்துவ பாடல்களை இயற்றியிருக்கிறார். படித்துவிட்டு மற்றவருக்கும் அறிவியுங்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தாயின் மேன்மை புரியட்டும்.

Wednesday, February 10, 2016

குண்டலினி

குண்டலினி

சக்திகுண்டலினி சக்திகுண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள்.குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது. அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாதாரம், சுவதிஸ்டானம், மணிப்பூரகம்,அனாகதம், விசுக்தி, ஆக்ஞை, வழியாக சகஸ்ராரத்தில் கொண்டு வந்து மேலே நிறுத்தி விட்டால் யோகம் முடிந்து விட்டது, பின் அபூர்வ சித்திகளும் படைக்கும் ஆற்றலையும் பெற்று விடலாம் என்பது தற்காலயோக நெறி ஆசிரியர்களின் போதனையும் யோக நூலில் முடிவாகும். ஆனால் இது கற்பனை.திருமூலர் மற்றும் பல சித்தர்கள் கூறுவதை மறுத்து கூறுவது மடத்தனம் என்று பலர் நினைக்க கூடும். அவர்கள் மூலாதாரத்தை பற்றி பரிபாசையாக புரியாத புதிராக மறைத்து கூறினார். பலபல பெயர்களில் மறைத்து கூறினார். வெளிபடையாக கூறவில்லை.மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் ஆறும் மேலே இருந்து இயக்கும் குண்டலினி சக்தியிடம் இருந்து சக்தி பெற்றுக் கொண்டு உடலை இயக்க வைக்கிறதுகுண்டலினி சக்தியல் இருந்து ஆதாரங்களுக்கு சக்தி
வரவில்லை என்றால் உடல் செயல்
நின்று விடும் என்பது உண்மை.
குண்டலினி என்பதன் உட்பொருளே
குண்டம்+ ஒளி அல்லது குண்டு + ஒளி என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். குண்டலினியில் தான் ஒளி மண்டலம் உள்ளது. இந்த குண்டலினி சகதிக்குள் மனம் இலயமாகி கரைந்துவிட்டால் மனம் செயல் படாது. அதனுடய உலக தொடர்பு துண்டிக்க பட்டு விடுகிறது.

மனம் செயல் படாத போது புத்தியும் அகங்காரமும் சித்தமும், சிந்திப்பதும், செயல் படுவதும் நின்று விடுகிறது. பின்பு அவன் புலன் கடந்து ஆன்மாவை தரிசிக்கும் ஞானி ஆகி விடுகிறான். ஆன்மாவை தரிசிக்கும் ஞானி ஆகிவிடுகிறான்.

ஆன்மாவாகிய தன் பரிசுத்த தன்மை கண்டு ஆனந்திக்கிறான்.அவனது மனம்உள்ளும்ன் புறமும் செயல் படாததினால் அவனுக்கு உலகத்தில் காரியம்செய்ய வேண்டிய போக்குவரத்து தேவை இல்லாததினால் அவனது மூச்சு காற்று இயங்குவதில்லை. அது குண்டலினியில் லயமாகி குண்டலினியை சுடர் விட செய்கிறது. அந்த சுடர் தேகத்தில் பரவி தேகத்தை ஒளி விட செய்கிறது, முகத்தில் ஞான வெளிச்சமும் பொலிவையும் ஏற்படுகிறது.குண்டலினி இருப்பிடம்எண்சான் உண்டபிற்கு சிரசே பிரதானம். குண்டலினி சக்தி இடபக்க சிரசில் இருக்கிறது.

இது ஹைபோதலாமஸ், பிட்யுட்டரி பினியல் சுரப்பிகளுடன் தொடர்பு உடையது. சிவ பெருமானின் இடது பக்க முடியில் தரித்திருக்கும்இளம் பிறை குண்டலினியின் குறியீடு. மேலே உள்ள குண்டலினி சக்தியில் இருந்து கீழே உள்ள ஆதாரங்கள் வேண்டிய சக்தி பெறுகிறது. அந்த ஆதர கமலங்களில்இருந்து காரணங்களான மனம் சித்தி புத்தி அகங்காரம் சித்தம் ஆகியன செயல் படுகின்றது. ஆக உயிரை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு

உடலை செயல் படுத்தும் ஆதர கமலம் வேறு. உயிரை செயல் படுத்தும் ஆதர கமலமே மூலாதாரம், அதுவே குண்டலினி வட்டம்.குண்டலினியில் இருந்து இந்த ஆதாரங்களுக்கு தேவை படும் சக்தியை கீழே இறக்காமல் துண்டித்து விட்டு குண்டலினி யாகிய சோதியில் மனதை நிறுத்தி கொள்ள உடற் கருவிகளும் மனம் முதலிய அந்த காரணங்களும் செயல் படுவதில்லை. ஆன்ம தனித்து குண்டலினி சோதியில் தன்னை நிறுத்தி வியப்புடன் பராக்கு பார்ப்பது போலே செயல் மறந்து ஒளியில் கலந்து ஒளியாகி நிற்கிறது. இந்த காட்சியை கண்டு கண்டு ஆனந்த்திக்கிறது. இந்த காட்சியை காண்பதற்கு கண்கள் தேவை இல்லை. இது புலன் கடந்த காட்சி.ஆன்மாவானது தத்துவங்களில் இருந்து நீங்கி தான் தானாக ஆனந்தபடும்பொதுதான் ஆன்மாவின் உள்ளதாரம் எனும் உயிரை இயக்கும் ஹைபோதலாமஸ், பிட்யுட்டரி பினியல் செரிபெரம் ஆகிய பகுதிகள் கிளர்ச்சி அடைந்து அமிர்த கலைகலாக மாரி தேகத்தை வேதியல் செய்கிறது .இந்த அனுபவம் முதிர உடலில் நிற மாற்றம் ஞானவொளி சந்தம் பிறரை ஊடுருவி பார்க்கும் திறன் ஏற்படுகின்றது.இது தான் உண்மையான குண்டலினி தவமாகும்.

Friday, February 5, 2016

அபிராமி அந்தாதி 100 பாடல் பலன்

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள். 
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள். 
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும். 
6. மந்திர சித்தி பெறலாம். 
7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும். 
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். 
9. அனைத்தும் கிடைக்கும். 
10. மோட்ச சாதனம் பெறலாம். 

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள். 
12. தியானத்தில் நிலை பெறுவார்கள். 
13. வைராக்கிய நிலை அடைவார்கள். 
14. தலைமை பெறுவார்கள். 
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள். 
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். 
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம். 
18. மரணபயம் நீங்கும். 
19. பேரின்ப நிலையை அடையலாம். 
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். 

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும். 
22. இனிப்பிறவா நெறி அடையலாம். 
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும். 
24. நோய்கள் விலகும். 
25. நினைத்த காரியம் நிறைவேறும். 
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். 
27. மனநோய் அகலும். 
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம். 
29. எல்லா சித்திகளும் அடையலாம். 
30. விபத்து ஏற்படாமல் இருக்கும். 

31. மறுமையில் இன்பம் உண்டாகும். 
32. துர்மரணம் வராமலிருக்கும். 
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும். 
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும். 
35. திருமணம் நிறைவேறும். 
36. பழைய வினைகள் வலிமை அழியும். 
37. நவமணிகளைப் பெறுவார்கள். 
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள். 
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 
40. பூர்வ புண்ணியம் பலன்தரும். 

41. நல்லடியார் நட்புப்பெறும். 
42. உலகினை வசப்படுத்தும். 
43. தீமைகள் ஒழியும். 
44. பிரிவுணர்ச்சி அகலும். 
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46. நல்நடத்தையோடு வாழ்வார்கள். 
47. யோகநிலை அடைவார்கள். 
48. உடல்பற்று நீங்கும். 
49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும். 
50. அம்பிகையை நேரில் காண முடியும்.

51. மோகம் நீங்கும். 
52. பெருஞ் செல்வம் அடைவார்கள். 
53. பொய்யுணர்வு நீங்கும். 
54. கடன்தீரும்.  
55. மோன நிலை கிடைக்கும். 
56. அனைவரையும் வசப்படுத்தலாம். 
57. வறுமை ஒழியும். 
58. மன அமைதி பெறலாம். 
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். 
60. மெய்யுணர்வு பெறலாம். 

61. மாயையை வெல்லலாம். 
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம். 
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம். 
64. பக்தி பெருகும். 
65. ஆண்மகப்பேறு அடையலாம். 
66. கவிஞராகலாம்.
67. பகைவர்கள் அழிவார்கள். 
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும். 
69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள். 
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம். 

71. மனக்குறைகள் தீரும். 
72. பிறவிப்பிணி தீரும். 
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம். 
75. விதியை வெல்வார்கள். 
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள். 
77. பகை அச்சம் நீங்கும். 
78. சகல செல்வங்களையும் அடைவார்கள். 
79. அபிராமி அருள்பெறுவார்கள்.  
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 

81. நன்னடத்தை உண்டாகும். 
82. மன ஒருமைப்பாடு அடையலாம். 
83. ஏவலர் பலர் உண்டாகும். 
84. சங்கடங்கள் தீரும். 
85. துன்பங்கள் நீங்கும். 
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள். 
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம். 
89. யோக சித்தி பெறலாம். 
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். 

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள். 
92. மனப்பக்குவம் உண்டாகும். 
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும். 
94. மனநிலை தூய்மையாக இருக்கும். 
95. மன உறுதி பெறும். 
96. எங்கு பெருமை பெறலாம். 
97. புகழும் அறமும் வளரும். 
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம். 
99. அருள் உணர்வு வளரும். 
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.