அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?
சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கு, நமது உடலுக்கும் நன்மையைத் தரும். ஆகவே, காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள், பிரதட்சணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் (கர்ப்பப்பையில் ஏற்பட்ட) தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைத் தர, இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. கடுமையான-நாட்பட்ட, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.20 மணிக்குள், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன்- பக்தியுடன்- அரச மரத்தை 108, 54 அல்லது 12 முதற பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். அத்துடன் அரச மரத்தில் தனது உடலின் அனைத்து அங்கங்களும் படுமாறு, இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தீராத நோய் தீரும். உடல் மற்றும் உள்ளம், வைரம்போல் நல்ல வலிமை பெறும். இது ஒரு சிறந்த பரிகாரமாகும். ஆனால், சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது. நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களைத் தவிர்த்து, காலை சுமார் 10.40 மணிக்கு முன்பாக, அரச மரத்தை பூஜைகள், பிரதக்ஷிணம் போன்ற வகையில் வழிபாடு செய்வதே சிறந்தது
No comments:
Post a Comment