Saturday, February 7, 2015

இந்துமதமும்_அறிவியலும்‬

விரதம் இருப்பது ஏன் ?
நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமம்
பூசுவது ஏன் ??
அறிவியல் தத்துவங்களையே பக்தி நெறியில்
கூறும் ஒரு அறிவியல் மதம்,அற்புத மதம்,
தொலைநோக்குச் சிந்தையுள்ள
ஒரே சமயம் நம் இந்து சமயம் தான்.
நம் மதத்து விரதங்களும் அறிவியல்
தத்துவப் படியே உள்ளன. அமாவாசை,
பௌர்ணமி விரதம் இருக்கிறோமே,
எதற்காக?
இந்த நாட்களில் சூரிய,
சந்திர ஒளிகளில் ஊடுருவி வரும்
புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால்
உடல் நலனுக்குக் கெடுதல்
விளையும் என்பதால்தான்.
இக்கதிர்களின் கதிர் வீச்சால், சமைத்த
உணவுப் பண்டங்களில் விஷத்
தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே அன்று உணவைத்
தவிர்த்து விரதமிருக்கிறோம்.
ஏகாதசி விரதமும் அறிவியல்
விதிப்படிதான் அமைந்துள்ளது.
இரவும் பகலும் ஒரு நொடிப்
பொழுதும் நிற்காமல் இயங்கிக்
கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புக்
களுக்கு ஓய்வு கொடுக்க
வேண்டிதான் விரதம்
மேற்கொள்கிறோம். எப்போதும்
இயந்திரம் ஓய்வின்றி இயங்கிக்
கொண்டிருந்தால் அதிவிரைவில்
பழுதுபட வாய்ப்புள்ளது
"சூரிய கிரகணம், சந்திர
கிரகணங்களின்போது கர்ப்பிணிப்
பெண்கள் வெளியே நடமாடக்கூடாது;
வளரும் கருவுக்குப்
பாதிப்பு ஏற்படும்' என்று வானியல் விஞ்ஞானிகளும்
இன்று கூறு கிறார்கள்.
இதை இந்துமதம் பழங்காலந்
தொட்டே வலியுறுத்தி வருகிறது.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்
தவிர,ஐந்தாவது வேதமாகக்
கருதப்படுவது ஆயுர்வேதம்.
ஆயுர்வேதம் என்பது உடற்கூறு,
வியாதிகள் மற்றும் அதைக்
குணப்படுத்தும் ! முறைகளைக்
கூறுவது.
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும்
மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன.
உடலின் அநேக நரம்புகள் நெற்றிப்
பொட்டின் வழியாகச் செல்கின்றன.
ஆகவே நெற்றிப் பகுதி அதிக
உஷ்ணமாகவே இருக்கும். நம்
அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது.
ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக
உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான்.
அதனால்தான் காய்ச்சல் என்றால்
நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின்
தன்மையை அறிகிறோம். வாகனங்க
ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது 
அதிகம் சூடாகும். இந்த சூட்டைக்
குறைத்து எஞ்சினுக்கு அதிக
ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர்.
அ துபோல நமது மூளையையும்,
அதை இணைக்கும் நரம்புகளையும்
குளிரச் செய்வதே நாம் நெற்றியில்
பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய
கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை,
தலை மேல் விழும் பனித்துளிகள்
மற்றும் தண்ணீர் போன்றவற்றின்
சிறுபகுதி கெட்டிப்பட்டுத்
தலைப்பகுதியில் தங்கிவிடும்.
இதனால் தலைவலி,
தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட
கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே 
விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக
சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்
அதிலிருந்து தயாரிக்கப்படும்
குங்குமம். குங்குமம், சந்தனம்,
விபூதி ஆகிய மூன்றும் சிறந்த
கிருமிநாசினிகளாக உள்ளன

No comments:

Post a Comment