Saturday, February 28, 2015

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்.
--------------------------------
ஓம் பசு பரபதி பஷராஜ
நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய
கணகண் கம்கங் ,கெங்லங்
லிங் லங் லாலீலம்,ஆவ்.பாவ் ஆம் .ஊம் .பார்கவிய
ஜோதிமய வரப்பிரசன்ன பாததெரிஷய
கோரக்க சரண்யா நமஸ்து !
1. சித்தர்களின் மூல மந்திரம்.
---------------------------------------------
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
முக்கிய சிவ மந்திரம்.
-------------------------------
மகான் ஸ்ரீ கோரக்கர்
ஓம் கிரீங்.ரீங்.கிரீங் சிம்.சிம்.சிவயநம
ஓம்.உம்.கிலி.அங்.லங்.அங் சிவயநம
ஓம்.வங்.சிங்.யங்.ரங்.ரங்.சிவயநம
ஓம்.வயநமசி.உம்.உம்.லிங்.லிங்.சிவயநம
ஓம் நங்கிலி.நௌ.மௌ.ரங்.யங்.சிவயநம
ஓம்.நசிமசி.வசி.மசி.சிவ.சிவயநம
ஓம்.அங்.அங்.கங்.கெங் ரிங் சிவயநம
ஓம் அம் உம் நம் லம் சிம் சிவயநம
ஓம் சிங் கிலி கிலி நம் நம் சிவயநம
ஓம் சிவ சிவ.நசி மசி.சிவயநம
ஓம் மங் கிலி.ஸ்ரீங் சிங் சிங் சிவயநம
ஓம் மசிமசி வயநமசி லிங் லிங் சிவயநம
ஓம் சிங்சிவ மங்மங் வசி சிவயநம
ஓம் லங்லங் ரூங் ரூங் ரீங் சிவயநம
ஓம் லா லி லூ.லம்.சிங் சிவயநம
தியான மந்திரம்.
---------------------------
ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்க தெய்வமே நம!
அம்பாள் மந்திரம்.
----------------------------
ஓம் அம் உம் நம் லம் லிங்
கங் டங் ரங் சிங் வங்
கா லீ கம் கம் ரீம் கிலீம் சுவாஹா.
108 கோரக்கர் போற்றி.
-----------------------------------
ஓம் கோரக்கர் திருவடிவடிகள் போற்றி ! ஓம்
ஓம் கோரையில் பிறந்தவனே போற்றி ! ஓம்
ஓம் மட்டையில் பிறந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திருநீரில் பிறந்த தேவனே போற்றி ! ஓம்
ஓம் சிவபுரத்தில் உதித்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சிவசமயம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி ! ஓம்
ஓம் மச்சேந்திரனின் மைந்தா போற்றி ! ஓம்
ஓம் மலையில் வாழ்ந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திக்கெல்லாம் புகழ்பெற்ற கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அற்புதங்கள் நிகழ்த்திய அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சித்துக்கள் செய்த செம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பிணிகளை அறுக்க வந்த பேரருளே போற்றி ! ஓம்
ஓம் சித்தர்களின் முதல்வனே போற்றி ! ஓம்
ஓம் சிந்தை தெளிந்தவனே போற்றி ! ஓம்
ஓம் சிவ ஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் ஞான ஒளி பெற்ற நாயகரே போற்றி ! ஓம்
ஓம் யோகநெறி கண்ட யோகியே போற்றி ! ஓம்
ஓம் தவநெறி கண்ட தமயனே போற்றி ! ஓம்
ஓம் சித்தமருத்துவம் கண்ட சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சிவநெறி கண்ட சிவபுரத்தானே போற்றி ! ஓம்
ஓம் பேரொளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரம்பொருள் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் வெட்டவெளியில் நின்றாய் போற்றி ! ஓம்
ஓம் வேண்டும் வரம் அளிப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஆணவம் அகன்றாய் போற்றி ! ஓம்
ஓம் கன்மம் கரைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் கர்மவினை தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் கொல்லிமலை சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சதுரகிரியை ஆண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கோரக்கர் குண்டம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பொதிகைமலை கண்டவனே போற்றி ! ஓம்
ஓம் திருப்பதி மலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் அண்ணாமலையாரின் அன்பரே போற்றி ! ஓம்
ஓம் பழனிமலை கண்ட பாவலரே போற்றி ! ஓம்
ஓம் போகரின் தோழா போற்றி ! ஓம்
ஓம் வெற்றியின் வேந்தரே போற்றி ! ஓம்
ஓம் யாகத்தின் தலைவனே போற்றி ! ஓம்
ஓம் குருவுக்கு கண் கொடுத்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவாரம் கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் செம்பை பொன்னாக்கிய சித்தரே போற்றி ! ஓம்
ஓம் குன்றை பொன்னாக்கி கொடுத்தவனே போற்றி ! ஓம்
ஓம் குறை தீர்க்க வந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சீன தேசத்தின் தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் வாலாம்பிகை அருள் பெற்ற வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் ஞானப்பாலுண்ட ஞானியே போற்றி ! ஓம்
ஓம் காயகல்பம் செய்த வித்தகரே போற்றி ! ஓம்
ஓம் சந்திரரேகை படைத்த சீலரே போற்றி ! ஓம்
ஓம் ரவிமேகலை மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் முத்தாரம் நூல் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பாவத்தை அறுக்க வந்த பாவலரே போற்றி ! ஓம்
ஓம் பொய்கைநல்லூரில் வாழ்ந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் மருத்துவநூல் படைத்த மருத்துவரே போற்றி ! ஓம்
ஓம் யோகநிலை உணர்த்திய உத்தமரே போற்றி ! ஓம்
ஓம் ஞானநெறி கண்ட நாயகரே போற்றி ! ஓம்
ஓம் சித்தர் பூரண பொக்கிஷம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் காட்மாண்டில் குடிகொண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் பதினெண் சித்தர்களின் பாவலரே போற்றி ! ஓம்
ஓம் ககனமார்கம் கண்ட காவலரே போற்றி ! ஓம்
ஓம் மாயபிறப்பறுக்கும் மகானே போற்றி ! ஓம்
ஓம் அருஉருவம் படைத்த அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சிவயோகியான சிவபாலா போற்றி ! ஓம்
ஓம் புலிமேல் அமர்ந்த புலவரே போற்றி ! ஓம்
ஓம் சன்மார்க்கம் கண்ட சமத்துவமே போற்றி ! ஓம்
ஓம் அருள் ஞானம் படைத்த அரசே போற்றி ! ஓம்
ஓம் முதுமை நீங்க மூலிகை படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் வாசியோகம் கண்ட வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் இல்லறமே நல்லறம் என்று உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுழிமுனையின் சூட்ச்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சூட்ச்சமத்தின் பொருள் கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் மரணமில்லா வாழ்வு பெற வழிகண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கலியுகத்தை காக்க வந்த காவலரே போற்றி ! ஓம்
ஓம் காயத்ரி மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் அண்ட வெளியில் நின்றாய் போற்றி போற்றி ! ஓம்
ஓம் அருள் ஒளி தருவாய் போற்றி ! ஓம்
ஓம் பஞசாக்கரத்தினை உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் தியான நிலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் தீராத வினை எல்லாம் தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் நவகண்ட யோகம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் கையாந்திர மூலிகை கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷை கண்ட பாலகா போற்றி ! ஓம்
ஓம் குருமூலி கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அருட்பெரும் ஜோதியானாய் போற்றி ! ஓம்
ஓம் அருள்ளாலரின் அன்பராய் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் அருளாட்சிக்கு வழி சொன்ன வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் சத்தியசீலரே போற்றி ! ஓம்
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் சமதர்மம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் மும்மலத்தை வென்றவனே போற்றி ! ஓம்
ஓம் முக்திக்கு வழி கண்ட முதல்வா போற்றி ! ஓம்
ஓம் முழுமுதற் பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பரூரின் நாயகனே போற்றி ! ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஹரி சிவனுக்கு இடையே அமர்ந்தாய் போற்றி ! ஓம்
ஓம் அமர்ந்த நிலை சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சூட்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷையில் அருள்வாக்கு உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுக்கும சரீரம் கொண்டாய் போற்றி ! ஓம்
ஓம் அட்டாங்க யோகம் அடைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் பக்தி நெறி அறிவித்த பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பக்தர்களின் குறை களைவாய் போற்றி ! ஓம்
ஓம் மக்களை காப்பாய் போற்றி ! ஓம்
ஓம் மகான் அருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் எண்ணில்லா கோடி சித்த ரிஷி கணங்களின்
திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
ஓம் சித்தாய நம ஓம் மஹா சித்தா
கோரட்சநாதாய நம
ஓம் ஸ்ரீம் கலம் ஸ்ரீ கோரக்கா சித்த சாமியே போற்றி .
Om Nama Shivaya - ஓம் நம சிவாய
---------------------------------------------------
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி.
சித்தர்களின் காப்புக் கவசம்.
-------------------------------------------
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே
( ரோமரிஷி பூஜாவிதி )
நிறைவுப் பாடல்.
---------------------------
முகாசபரூரின் முதலே போற்றி
முன்வினை அறுப்பாய் போற்றி
கோப்பெரும் குருவே போற்றி
கோரக்கர் அருளே போற்றி
சீர்பெற எனையோர் வாழ்க்கை
சிவ சிவ சிவனே போற்றி
பேர் பெறும் பெரியபரூரின்
பேரின்ப சுடரே போற்றி!போற்றி
" ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர்
தெய்வமே சரணம் "

உதவாக் கல்வி முறை

~உதவாக் கல்வி முறை~
(a+b)2=a2+2ab+b2 இதை படித்து என்ன பயன்....?
சில நாட்கள் ஏன்தான்
உதிக்கிறதோ என்று தோன்றும்.
அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
எல்லாரையும் பதை பதைக்க
வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த
15 நிமிட வீடியோ காட்சி நம்
கண் முன்னேயே நிழலாடுகிறது.
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக்
கும்பிட்டுக்கொண்டிருந்த
காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
கற்றலினால் ஆன பயன் என்ன?
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..
பட்டங்கள் வாங்குகிறோம்..
கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..
அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..
விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..
டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
ஆனால்..
கற்றலினால் ஆன பயன்
தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக்
கொடுக்கவில்லையே..
ஒரு உயிர் ஒரு புலியிடம்
மாட்டிக் கொண்டு 10
நிமிடங்களாக கையெடுத்துக்
கும்பிட்டுக் கொண்டேயிருக்கும்
பொழுது அந்த உயிரை எப்படிக்
காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம்
கல்வி கற்றுக்கொடுக்க
வேயில்லையே..
ஆனால் ஆபத்து நேரத்தில்
எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய்
எழும்பி நின்றிருந்தால் அந்தப்
புலி ஒருவேளை தன்
உயரத்தை விட வளர்த்தியாய்
இருக்கிறானே..
இவனை எப்படி எதிர்
கொள்வது என்று அமைதியாகத்
திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால்
அவனைத் தாக்கவில்லை.
அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப்
போயிருக்காது.
அதுமாத்திரமல்ல.
10 நிமிடங்கள்
அவனை அப்படியே பார்த்துக்கொண்
டேயிருக்கிறது. தாக்க
முனையவேயில்லை.
ஆனால் பார்வையாளர்கள்
மேலிருந்து கல்லெறிந்த
உடன்..
அது சினம் கொள்கிறது.
மேலே பார்த்து உறுமுகிறது.
பார்வையாளர்கள் விடவில்லை.
தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
கூச்சலிடுகிறார்கள்.
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக்
கொண்டு சென்று விட
வேண்டும் என
முடிவு செய்து அவனுடைய
கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும்.
ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில்
யாராவது ஒருவர்,
தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
இந்த அறிவைக் கூட கற்றுக்
கொடுக்காமல் (a+b)2 =a2 +
2ab + b2 என்று கற்றுக்
கொண்ட வெற்றுத்
தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை..
தப்பித்து ஓடவும்
முடியவில்லை..
மிருகமோ தன்னிலும் பலத்த
உருவம்..
அது முதலையாக
இருக்கலாம்..சிங்கமாக
இருக்கலாம்.. அல்லது..
யானையாக இருக்கலாம்.
அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
அந்த விலங்குகளின்
கண்களை நம்
கை முஷ்டியினால்
பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால்
அவை நிலை குலைந்து ஓடி விடும்.
நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அல்லது சிறு மண்
துகள்களை அள்ளி அதன்
கண்களில் தூவினால் போதும் அவை அந்த
இடத்திலிருந்து தப்பித்துச்
செல்லத்தான் முயற்சிக்கும்.
இந்த அறிவைக்கூடக்
கற்றுக்கொடுக்காமல்..
பட்டங்கள் என்ன..
சட்டங்கள் என்ன..
பல்கலைக் கழகங்கள்
என்ன?
தென்னாப்பிரிக்காவிலும்,
ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள்
என்பதை கற்றுக்கொடுப்ப
தை விட..
வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
கொடுங்கள்.
மற்றவர்களை மதிப்பது எப்படி..
மற்றவர்களின் உணர்வுகளைப்
புரிந்து கொள்வது எப்படி?
சாலை விதிகள் என்ன?
ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?
அடிப்படைச்
சட்டங்கள் என்ன?
நமக்கான உரிமைகள் என்ன?
காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
விபத்து ஏற்பட்டால்
அதை எப்படி எதிர் கொள்வது?
விஷக்கடிகளில் எப்படித்
தப்பிப்பது?
மாரடைப்பு வந்தால்
என்ன செய்வது?
நோய்களை எவ்வாறு கண்டறிவது?
எந்த மருந்துக்கள் எல்லாம்
தடை செய்யப்பட்டவை..பின்
விளைவுகள் உள்ளவை?
மனைவியிடம்
எப்படி நடந்து கொள்வது?
கணவனிடம்
எப்படி நடந்து கொள்வது?
மற்றவர்களை நேசிப்பது எப்படி?
நேர்மையாய் இருப்பது எப்படி?
இவை எதையுமே கற்றுக்
கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..
இனித் தெரிந்து கொள்வதற்கும்
வாய்ப்பில்லாமல்
துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..
ஒரு ஆசிரியனாய் நான்
வெட்கப்படுகிறேன்
ஒரு வெண் புலி, உன்
வாழ்க்கையை இருளாக்கிவிட்டதே.
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
என்னை..
எங்களை மன்னித்து விடு..!

ஜீவசமாதி

ஐீவசமாதிகள் ரகசியம்.
====================
ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ?  இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
2.Raja Rajan - ஜீவ சமாதி பற்றிய தங்கள் பகிர்வு அற்புதம். நடப்பு காலங்களில் யோகிகளின் ஜீவ சமாதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனும் போது, யோகிகள் என்ன செய்வார்கள் ?
பண்டைய காலங்களில் மக்கள் எண்ணிக்கை குறைவு. பொது இடங்களில், திறந்த வெளிகளில் விலங்குகளால், மனிதர்களால், இயற்கை சீற்றங்களால் ஏதேனும் இடையூறு நேராமல் இருக்க பூமிக்கடியில் அறை அமைத்து சமாதி கூடினார்கள். அத்தகைய ஜீவ சமாதி மறுக்கப்பட்ட பிறகு, யோகிகள் அவரவர், ஆசிரமங்களில், குடில்களில், மலைக் குகைகளில், வனாந்திரங்களில் தங்கள் உடலை விட்டு பரத்தில் கூடுகிறார்கள். நாம் ஊனக் கண் கொண்டு பார்த்து விட்டு அறியாமையால் அவர்களும் நம்மைப் போல மரணம் அடைந்து விட்டார்கள் என்று எண்ணுகிறோம். தாங்கள் இன்ன நேரத்தில் உடலை விடுவோம் என்று முன்பே கூறிய பல யோகிகளை, ஞானிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களைப் போல உயர்ந்த நிலைக்குப் போகும் தைரியமும், திறனுமில்லாத நாம், அவநம்பிக்கை கொள்வதோடு, மகான்களைப் பற்றித் தவறாகவும், அவதூறாகவும் எண்ணுகிறோம், கேள்விகள் கேட்கிறோம், பேசுகிறோம். இனியொரு நண்பர் கேட்டார், எத்தனையோ சித்தர்கள், ஞானிகள் வந்தாலும், போனாலும், இருந்தாலும் துன்பப்படுபவர்கள் துன்பப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள் ? என்று.
எந்த ஞானியும் உன் துன்பத்தை நான் போக்குகிறேன் என்று சொல்லவே இல்லை. துன்பத்தை கடப்பதற்கு என்ன வழி என்று சொன்னதோடு, அதன்படி வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றார்கள் அவ்வளவுதான். நாம்தான் அவர்கள் காட்டிய பாதையை மறந்து விட்டு, அவர்கள் படங்களை வைத்து மணியாட்டிக் கொண்டு இருக்கிறோம். ஒரு வேளை நம் அழைப்பபை ஏற்று அவர்கள் சூக்குமமாக வந்தால் கூட, அவர்கள் கூறியபடி நடந்தால்தானே அவர்களால் உதவ முடியும். ஜீவசமாதி என்பது யோகியானவர் தன் உடல் வாழ்வை முடிந்துக் கொள்கிற தருணமாகும். அது தற்கொலையுமல்ல, மரணமுமல்ல. தன் ஆதியோடு தன்னை இணத்துக் கொள்ளும் செயலாகும். நதியானது கடலுக்குள் சென்று நுழைவது போல், யோகியின் ஆன்மா பரம்பொருளின் வாசலுக்குள் நுழைகிறது. எஞ்சி நிற்கும் ஜீவபோதமும் பரபோதமாக மாறி விடுகின்றது. பிரபஞ்ச வாழ்க்கை குறித்த உணர்ச்சிகளானது எல்லயற்ற பேருணர்ச்சியாக விரிவடைந்து விடுகின்றது. அவ்வேளையில் பொறிகளால் புலனாகும் எந்த உணர்ச்சியும் யோகிக்கு இல்லை. அவையனைத்தும் ஒடுங்கி விடுகின்றன. மாலையானதும் தன் கூடு நோக்கி விரைவாகப் பறக்கும் பறவை போல, யோகியின் மனமானது இதயக் கூண்டுக்குள் சென்று ஒடுங்கி விடுகின்றது.
அவ்வேளையில் உடலெங்கும் சீதளம் பரவுகிறது. பிராணனும் ஒவ்வொரு அவயமாக நீங்கி, உச்சந்தலைக்குப் போய் சேர்கிறது. இறுதி கட்டத்தில் யோகியின் உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் உச்சந்தலை மட்டும் நீண்ட நேரத்திற்கு கதகதப்பாக இருக்கும். (யோகி அல்லாதவர்களுக்கு பிராணன் வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ வெளியேறி விடும். உச்சந்தலைக்குப் போகாது.) அப்பொழுது ஓம் ஓம் என்ற நாதம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். முடிவில் ஓம் என்ற ப்ரணவத்தின் வடிவினனான பரமாத்மாவின் திவ்ய சொருபம், பேரின்பம், பேரறிவு, அருட் பெருஞ் சோதி, சித் அம்பரம் என்கிற நிலையை யோகி அடைகின்றார். சகஸ்ராரத்தில் உள்ள நுட்பமான துவாரம் வழியாக யோகியின் ஆன்மா பரவெளியில் கலக்கிறது. இனி யோகியின் உடலும் பிணம்தான். யோகி வீடுபேறு அடைந்து விடுகிறார். இது இறப்பு அல்ல இணைப்பு. மரணமில்லாத பெரு வாழ்வு என்பது இதுதான். ஜீவசமாதி என்கிற அறைக்குள்ளும் இதுதான் நடந்தது. வெளியே வாழ்ந்து மறைந்த மற்ற யோகிகளின் இறுதி கட்டத்திலும் இதுதான் நடந்தது. நீங்களும் முயற்சித்தால் உங்களுக்கும் இதுதான் நடக்கும்.
மனம், வாக்கு கடந்த தெய்வீக உள் அனுபவமே சமாதி. பல ஆண்டுகள் விடா முயற்சியுடன் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் போன்ற தவத்தின் விளைவாகும் அது. ஒரு யோகியானவர் முற்றிலும் தூய்மையானவராக மாறினாலொழிய முழுமையான ஸமாதி நிலையை எட்ட முடியாது. மேலேறுவதும், இறங்குவதுமாகவே இருக்கும். மேலேறிய மனதை, உணர்வை அங்கேயே நிறுத்த பல ஆண்டுகள் பயிற்சியும், முயற்சியும் தேவை. ஞானத்திலும், சமாதியிலும் பல படித்தரங்களைக் கடக்க வேண்டும். ஜீவசமாதி முயற்சி என்பது ஒரு நல்ல மாணவனுக்கு நடக்கும் இறுதித் தேர்வை ஒத்தது. வாழ் நாள் முழுவதும் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, தன் ஜீவனை, பரத்தோடு இணைக்கும் முயற்சியாகும். அவர்களுக்குத் தெரியும், இனி நம்மால் பூரணத்தை எட்ட முடியும் என்பது. அந்த நிலை வந்த பிறகுதான் அதற்கான முயற்சியை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இடைவிடாத முயற்சியின் பலனாக, மூன்று அவஸ்தைகளையும் கடந்த பேரானந்தப் பெருநிலையை அனுபவித்து அனுபவித்து அதில் நீடித்திருக்கும் கால அளவை அதிகரித்துப் பழகிப் பழகி முடிவில் அதிலேயே லயித்திருந்து விடுவதே ஜீவசமாதி.
இந்த முயற்சிகளுக்கிடையே ஞானத்தின் விளைவால் ஏற்படும் வினைத் தூய்மையையே நிர்வாணம் என்பார்கள். இந்த நிர்வாணிகளை ஜீவன் முக்தர்கள் என்று பகர்வார்கள். இவர்கள் வாழ்ந்திருக்கும் பொழுதே செத்தவர்கள் போல் இருப்பார்கள். இவர்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் தோன்றாது. அனைத்தும் பரம்பொருளாகவேத் தோன்றும். மின்னும் பொன்னையும், வைர வைடூரியங்களையும் வெறும் மண்ணைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். இதையெல்லாம் கடந்து ப்ரம்ம நிர்வாணத்தை அடையும் இறுதி கட்ட நிலையே ஜீவசமாதி நிலையாகும். ப்ரம்ம நிர்வாணம் என்பதே அபரோக்ஷ அநுபூதியாகும். மனம், வாக்குக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப் பெருநிலையில் இருந்து இறங்கி வந்த நாம் ஜீவர்கள். மீண்டும் தன் முயற்சியால் அதை அடைந்தவர்கள் முக்தர்கள். இந்நிலையை எட்டுவதற்கான முயற்சிக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகள் செய்து கொள்வது தேவையல்லவா ? அதுதான் பூமிக்கடியில் அறை அமைத்து, அதில் ஒடுங்கினார்கள். பின் வரும் காலங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத காரணத்தினால், அவரவர் வாழும் இடத்திலேயே அபரோக்ஷ அநுபூதியை அடைய வழி வகைகள் செய்து கொள்கிறார்கள்.
பகவத் கீதையிலும் இதைப் பற்றிய விளக்கம் இருக்கிறது.
''ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி ந்ருத்ய‌ ச |
மூர்த்ன்யாதாயாத்மன; ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ||
ஓம் இத்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் || 8 -12,13.
பொறி வாயில்களை அடக்கி, வெளி விவகாரங்களை உள்ளே வரவொட்டாமல் செய்து, மனதை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி, யோகத்தில் நிலைத்திருந்து, ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை மட்டும் மனதால் உச்சரித்துக் கொண்டு, பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டு யார் ஒருவர் உடலை விடுகிறாரோ, அவர் பரமகதியை அடைகிறார்.
இதுவே ஜீவசமாதி அறைக்குள்ளோ, அல்லது வெளியிலோ யோகியர்கள் நிகழ்த்தும் இணைதல் முறையாகும். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது மரணம் போலவே தோன்றும். அநுபூதிமான்கள் மட்டுமே அதை உணர முடியும்

செல்வம் நிலைக்க, லக்ஷ்மி கடாட்சம் பெருக 1



செல்வம் பெருக வழிமுறைகள்

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள்: குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.


மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள் ;
1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
3. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

4. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
5. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
6. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
7. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.
8. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
9. .விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
10. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். 
இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்
ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: 
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
1.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.

2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
3.இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.

தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல் :
1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.
3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.
4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.
5.சிதம்பரத்தில் இருக்கிறார்.
6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.
7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.


தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்
-----------------------------------------------------------------
செல்வம் நிலைக்க ,லக்ஷ்மி கடாட்சம் பெருக......
=============================================================
01,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
02,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில்
 
நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
03,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
04,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
05,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
06,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
07,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
08.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
09.உப்பை தரையில் சிந்தக்கூடாது.
10.அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
11.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. 
12.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
15.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
16.ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
17.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
18.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
19.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
20.பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
21.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
22.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
23.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
24.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
25.விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
26.விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
27.வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
28.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
30.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
31.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
32.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
33.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
34.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
35.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
36.குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
37.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
38.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
39.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
40.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
41.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
42.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
43.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
44.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
45.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
46.கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
47.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
48.பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
49.சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
50.பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
51.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
52.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
53.நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
54.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
55.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
56.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
57.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
58.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
59.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
60.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
61.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
62.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
63.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
64.வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
65.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
66.குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
67.எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
68.கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
69.மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
70.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்
71.தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.
72.தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
73.அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
74.அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .
75.அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.
76.செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
77.ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
78.வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..
79.நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.
80.அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு ( அன்னதானம் செய்ய ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
81.காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.
82.முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி மேல் பாசம் அதிகம் இருக்கும்.
83.நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
* * இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன் .

இயற்கை தரும் பாடம்

இயற்கை தரும் பாடம்!
--------------------------------
“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.
தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.
தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.
அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…’ என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…
“மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம்
தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது; பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.
“ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
“வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
“எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன். பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
“பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.
“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்…’ என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!