Sunday, June 5, 2016

சிவலிங்கம்

சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் பிணைப்பு என்பது ஆரியர்கள்.. அதாவது சமசுகிரதம் தமிழில் பிணைந்த போது கொண்டு வரப்பட்டவை!
ஆதி சிவனியத்தில்.. மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்..அதன் வடிவமே சிவலிங்கம்!!
அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில்.. அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே..அது தான் சிவம்!!
இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்! இதை தான் இப்போது "Pituitary Gland" என போற்றுகின்றனர்..சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்.. மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது!

இதை தான் தமிழர்கள் போற்றினர்..சிவ வழிபாடு செய்தனர்.. காமத்தின் உச்சத்தில் ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைப்பு என்று நம் சமயத்தை இழிவு படுத்தாதீர்..சிவ வழிபாடு தமிழனுடையது..

Wednesday, June 1, 2016

பலிபீடம்

எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன

ஸ்ரீ காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி

ஸ்ரீ காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி :

1) ஓம் காலபைரவாய நமஹ
2) ஓம் பூதநாதாய நமஹ
3) ஓம் பூதாத்மனே நமஹ
4) ஓம் பூத பாவநாய நமஹ
5) ஓம் க்ஷேத்ர பாலாய நமஹ
6) ஓம் க்ஷேத்ரதாய நமஹ
7) ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நமஹ
8) ஓம் க்ஷத்ரியாய நமஹ
9) ஓம் விராஜே நமஹ
10) ஓம் ஸ்மஸான வாஸிநே நமஹ
11) ஓம் மாம்ஸாஸிநே நமஹ
12) ஓம் ஸர்ப்பராஜஸே நமஹ
13) ஓம் ஸ்மராந்தக்ருதே நமஹ
14) ஓம் ரக்தபாய நமஹ
15) ஓம் பானபாய நமஹ
16) ஓம் ஸித்தாய நமஹ
17) ஓம் ஸித்திதாய நமஹ
18) ஓம் ஸித்த ஸேவிதாய நமஹ
19) ஓம் கங்காள ரூபாய நமஹ
20) ஓம் கால ஸமனாய நமஹ
21) ஓம் காலாய நமஹ
22) ஓம் காஷ்டாய நமஹ
23) ஓம் தநவே நமஹ
24) ஓம் கவயே நமஹ
25) ஓம் த்ரிநேத்ரே நமஹ
26) ஓம் பஹூநேத்ரே நமஹ
27) ஓம் பிங்கள லோஸனாய நமஹ
28) ஓம் ஸூலபாணயே நமஹ
29) ஓம் கட்கபாணயே நமஹ
30) ஓம் கங்காளிநே நமஹ
31) ஓம் தூம்ர லோஸனாய நமஹ
32) ஓம் அபீரவே நமஹ
33) ஓம் திகம்பராய நமஹ
34) ஓம் நாதாய நமஹ
35) ஓம் பூதபாய நமஹ
36) ஓம் யோகிநீபதயே நமஹ
37) ஓம் தநதாய நமஹ
38) ஓம் தநஹாரிணே நமஹ
39) ஓம் தநவதே நமஹ
40) ஓம் ப்ரீதிபாவநாய நமஹ
41) ஓம் நாகஹாராய நமஹ
42) ஓம் நாகபாஸாய நமஹ
43) ஓம் வ்யோமகேஸாய நமஹ
44) ஓம் கபாலப்ருதே நமஹ
45) ஓம் கபாலாய நமஹ
46) ஓம் கபாலாய நமஹ
47) ஓம் கபாலமாலிநே நமஹ
48) ஓம் கமநீயாய நமஹ
49) ஓம் கலாநிதயே நமஹ
50) ஓம் த்ரிலோஸனாய நமஹ
51) ஓம் ஜ்வாலநேத்ராய நமஹ
52) ஓம் த்ரிஸிகிநே நமஹ
53) ஓம் த்ரிலோகபாய நமஹ
54) ஓம் த்ரிநேத்ர தநயாய நமஹ
55) ஓம் டிம்பாய நமஹ
56) ஓம் ஸாந்தாய நமஹ
57) ஓம் ஸாந்தஜன ப்ரியாய நமஹ
58) ஓம் வடுகாய நமஹ
59) ஓம் வடுகநாதாய நமஹ
60) ஓம் வடுவேஷாய நமஹ
61) ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ
62) ஓம் பூதாத்யக்ஷாய நமஹ
63) ஓம் பஸுபதயே நமஹ
64) ஓம் பிக்ஷூதாய நமஹ
65) ஓம் பரிஸாரகாய நமஹ
66) ஓம் தூர்த்தாய நமஹ
67) ஓம் ஸூராய நமஹ
68) ஓம் ஹரிணாய நமஹ
69) ஓம் பாண்டு லோஸனாய நமஹ
70) ஓம் ப்ரஸாந்தாய நமஹ
71) ஓம் ஸாந்திகாய நமஹ
72) ஓம் ஸித்தாய நமஹ
73) ஓம் ஸங்கராய நமஹ
74) ஓம் ப்ரிய பாந்தவாய நமஹ
75) ஓம் அஷ்ட மூர்த்தயே நமஹ
76) ஓம் நிதீஸாய நமஹ
77) ஓம் ஜ்ஞான சக்ஷூஷே நமஹ
78) ஓம் தபோமயாய நமஹ
79) ஓம் அஷ்டாதாராய நமஹ
80) ஓம் ஷடாதாராய நமஹ
81) ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ
82) ஓம் ஸிகீஸகாய நமஹ
83) ஓம் பூதராய நமஹ
84) ஓம் பூதராதீஸாய நமஹ
85) ஓம் பூபதயே நமஹ
86) ஓம் பூதராத்மஜாய நமஹ
87) ஓம் கங்காளதாரிணே நமஹ
88) ஓம் முண்டிநே நமஹ
89) ஓம் நாக யஜ்ஞோபவீதவதே நமஹ
90) ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீமாரண க்ஷோபனாய நமஹ
91) ஓம் ஸுத்த நீலாடஜன ப்ரக்யாய நமஹ
92) ஓம் தைத்யக்னே நமஹ
93) ஓம் முண்ட பூஷிதாய நமஹ
94) ஓம் பலிபுஜே நமஹ
95) ஓம் பலிபுங்க நாதாய நமஹ
96) ஓம் பாலாய நமஹ
97) ஓம் அபால விக்ரமாய நமஹ
98) ஓம் ஸர்வாபத்தாரணாய நமஹ
99) ஓம் துஷ்ட பூத நிஷேவிதாய நமஹ
100) ஓம் ஸ்வாந வாஹனாய நமஹ
101) ஓம் அஸிதாங்க பைரவாய நமஹ
102) ஓம் உன்மத்த பைரவாய நமஹ
103) ஓம் சண்ட பைரவாய நமஹ
104) ஓம் க்ரோத பைரவாய நமஹ
105) ஓம் பீக்ஷண பைரவாய நமஹ
106) ஓம் ருரு பைரவாய நமஹ
107) ஓம் கபால பைரவாய நமஹ
108) ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ

- இதி ஸ்ரீ கால பைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம் 

Saturday, May 28, 2016

வில்வம்

வில்வத்தைபற்றி ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசனே சொல்வது கடினம்.

வில்வம் சாட்சாத் லஷ்மி சொரூபம்....

வில்வம் வளர செல்வம் பெருகும் ....
💎💷💰💸💵💴💎🔱
கட்டாயம்
வில்வம் வீட்டில் வளர்க்கப்பட வேண்டும்...
🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
தூய்மையான இடத்தில் மட்டுமே வில்வம் வளரும்...
🔯🕉🔯🕉🔯🕉🔯🕉🔯
இல்லம்
தூய்மையான இடமானால்
வளர்வது வில்வம் மட்டுமாக இருக்காது...
🌱🌾🌳🌿🍂
பக்தியும் சேர்ந்தே தழைத்து வளர ஆரம்பித்துவிடும்...

புறத்தூய்மையை அகத்தூய்மைக்கு அடிகோலும்....

நமது சம்பந்தம் எதனுடனோ அதுவாகவே ஆகிவிடுகின்றோம்...

பாகவதன் சம்பந்தம் பக்தனை பகவானாக்குவதுபோல...

ஜீவ மூலிகைகளில் முதன்மையானது வில்வம்(high sensitive)...
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
ஆயிரம் தங்கத்தாமரையில் அர்ச்சித்த பலன் தரவல்லது ஒரு இலை...
(சிதம்பர இரகசியம்)

ஆயிரம்தேவதைகளை தினமும் நித்யானுஷ்டம் செய்யமுடியாதவர்....
ஒரு வில்ல மரத்தை வளர்த்தாலே
அதிலிருந்து விடுபடும் ஒவ்வொரு  இதழும் அந்த கைங்கர்யத்தை செய்ததாகிறது..
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

விரச்சைக்கு அப்பாலிருக்கும் கங்கையைவிட புனிதமானது
வில்வமரத்தில் இருந்து வரும் தீர்த்தம்... அதாவது மழைக்காலங்களிலோ..பனிக்காலங்களிலோ அதன்மீது வழிந்தோடும
நீர்...🌧🌨🌧🌧🌩

வேதத்தை போற்றி வளர்ப்பவனே பிராமனோத்தமன் என வேதமே சொல்கிறது...
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
வேதமே
வில்வத்தின் கிளைகளாக உள்ளதாக காளத்திபுராரம் கூறுகிறது...

ஆக
வில்வத்தை போற்றி வளர்ப்பவனும் பிராம்மனோத்தமன்தானே....????

வில்வம் ஆத்மனுக்கு சமமானது
அவை பிறப்பதமில்லை
அழிவதுமில்லை..

இறைவனுக்கு ஒருமுறை படைக்கப்பட்ட ஒன்றை மீண்டும் படைக்க முடியாது....

ஆனால் இது வில்வ இலைக்கு மட்டும் பொருந்தாது ஏனென்றால்..?

படைக்கப்பட்டது அணைத்தும் படைக்கப்பட்டதே....

வில்வம் அட்சயம்....
🍂🌿🍂🌿☘☘🍂🌿
தாங்கள் வளர்த்த வில்வமரத்தின் பத்திரத்தை யார்பயன்படுத்தி பூஜித்தாலும் அவர்கள்பெற்ற பலனில் மரத்தை போற்றி வளர்த்தவர்க்கும் பங்குண்டு...

வில்வ விருட்சத்தை தழுவிச்செல்லும் காற்றே அவிசாக சுவாகா தேவியால் உரியவர்களிடம் சேர்க்கப்படுகிறது நிர்விக்ணமாக
++++++++++++++++++++++++++++++
சிவமயம் சிவாயநம
வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக  ஒரு வில்வம் போதும் 
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்
சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு)  அர்ச்சனைக்கு  உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே  பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும்  உள்ளன
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக)  முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து  வழிபடுவது சிறப்பு
மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்
வில்வ வழிபாடும் பயன்களும்
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்
வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்)  பாவங்களைப் போக்குவன  ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி  வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்
எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்  இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும்  அடைவார்கள்
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக  விளக்கமாகக் கூறுகின்றன
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்)  திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர்  பெற்றது
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்
அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும்  வில்வத்தை ஏற்றுக் கொண்டான்
ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்
வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும்  வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல்  நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும்  இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது
நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும்  அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது)  செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல்  நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை)  கடாட்சத்தைப் பெறமுடியும்
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு  ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது
ஒரு வில்வ இதழைக்  கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து)  எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே
பொருள் விளக்கம்
போகமோட்சம்  உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்
இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.
வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
கொலஸ்ட்ரால்  வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
விரிவான மருத்துவக் குணங்கள்:
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.
கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.
கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.
இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.
பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு காச்சல் போக்கும்.
தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.
வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது
வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர சகல நோய்களும் குணமாகும்
இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம் மேலும் சிவபெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்
திருச்சிற்றம்பலம்
இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்