Thursday, April 14, 2016

சித்திரை தமிழ்ப்புத்தாண்டா? தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு !

🔴சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டா?🔴

 தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், பாவலேறு பெருஞ்சித்தனார் கூறியது.

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா?


அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும்தமிழர்க்கும் மரியாதையாய்இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலை நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின்  பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை"நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி"நான் உங்களிடமே பெண்ணாக இருந்து ----- கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை"யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

 தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.  வைகறை,காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும்அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை,தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிகநுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதேஉண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2.    முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3.    கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4.    கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5.    முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6.    பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.  சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.  காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும்பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.  இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம்.

இதுகுறித்து  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்,  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாகத் தமிழர்கள் கொண்டாடி வந்துள்ளனர். என்பதை அரண் செய்கின்ற வகையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் நம்மால் காணமுடிகிறது. .

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. படிப்பறிவில்லா பாமரமக்கள் வழக்கிலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று இன்றும் வழங்கி புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் காண முடிகிறது. இவை எல்லாம் தைத் திங்கள் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தை பறைசாற்றுகின்றன.

மேலும் உலகத்தில் இயற்கை என ஒன்று இருக்கின்றது. அது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவம் என்னும் மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் எனவும் வழங்குவர்.

எனவே, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆகவே, இந்நாளைத் தமிழர்கள் தம் ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வது இயற்கையின் இயக்கத்திற்கு உட்பட்டு இருப்பதும் இங்கு எண்னத்தக்கது.

தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக தொன்று தொட்டு இருந்து வந்தாலும், இடைக்காலத்தில் பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை ஆரியர்களின் அரவணைப்பில் மெல்ல மெல்லத் தன்னிலையிலிருந்து வழுவியும் மாறியும் மறுவியும் திரிந்தும்போன நிலைதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகள், ஐந்திறக் குறிப்புகள், நாள், விண்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், பஞ்சாங்கம், தினம், நட்சத்திரம், திதி, மாதம். லக்னம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரிய மயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது. ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டது.
ஆரியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கு அதிமாக தமிழர் வாழ்வியல் சமய நெறிகளில் நேர்ந்துவிட்ட நிலையில், தமிழர்கள் வாழ்வும் வளமும் உயரவும், தனித்து இலங்கவும் தைத் திங்கள் முதல் நாளே தமிழ் ஆண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த 500 தமிழ் அறிஞர்கள் 1921 இல். நம் அருட்குருநாதர் அறிவுக்கடல் அருட்டிரு மறைமலையடிகள் தலைமையில் ஒன்ரு கூடி வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அக்கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லாச் சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி, தத்தம் சமய வேறுபாடு களையும் கொள்கை மாறுபாடுகளையும் விட்டு ஒதுங்கி ஆய்வுமுறைகளின் அடிப்படையில்; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு, தமிழ் ஒன்றையே முதன்மைப் படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு மிக விரிவாக ஆய்ந்து,
திருவள்ளுவர் காலம், கி.மு. 31 என்றும், அதுமுதல் தமிழுக்குரிய காலங்காட் டியைத் தொடருவது என்றும், அதற்கு திருவள்ளுவர் ஆண்டு எனப் பெயர் சூட்டுவது எனவும் தீர்மானித்தனர். அத்துடன் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர். அம்மூன்று உண்மைகள்:
1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைக் கூட்டித் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட வேண்டும்

அன்று முதல் தொடங்கி உலகெங்கணும் வாழும் தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் முற்காலத்தில் ஆண்டுப் பிறப்பு எனத் தை முதல் நாளையே பழங்காலத்தில் பெரியோர்கள் கொண்டாடினர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகக் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று பாடிச் சென்றுள்ளார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அறிவியல் அறிஞர் ஐரா வதம் மகாதேவன் போன்ற தமிழாய்ந்த தலை சிறந்த சான்றோர்கள் பலரும் தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினம் என்றே - உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.
உலகின் பழமையான இனமாகிய நம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

நாமும் இனி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள், தமிழர் திருநாள் எனக் கொண்டாடுவோம்.

அத்திருநாளில் நம் வாழ்க்கைக்கு அடிப்படையான உணவை நல்கும் உழவுத் தொழிலுக்கு உற்ற துணையாக உள்ள பரிதியையும் (சூரியன்), ஆனினத்தையும் (காளை) போற்றி மகிழ்ந்தி பொங்கலிட்டுப் படைத்து மகிழ்வோம்!
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்! வெலக தமிழன்!
பொங்கலோ பொங்கல்! 

Saturday, April 9, 2016

சுதர்ஸன மஹாமந்திரம்

ஆபத்துக்கள் விலக சுதர்ஸன மஹாமந்திரம்
 செய்யுங்கள்) 

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். 
எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.
ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். 

சந்தோஷம் நிலைக்கும்.பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள்சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும் 

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும். 

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனஹராய 
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

Friday, April 8, 2016

9 / ஒன்பது

வாழ்வில் வெற்றி பெற உதவுவது :

1) நிபந்தனையற்ற அன்பு.
2) எதையும் மன்னித்துவிடும் குணம்.
3) சரியாக புரிந்துக் கொள்ளும் தன்மை.
4) அபரிமிதமான நன்றியுணர்வு.
5) குரு பக்தி.
6) சரணாகதி.
7) தொடர்ந்த பயிற்சி.
8) ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.
9) மெளனம்.

9ன் சிறப்பு
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.

9 என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது

Monday, April 4, 2016

நெருப்பு / ஹோமம்

ஹோமங்களின் வகைகள்



  ஹோமங்கள் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பரிகாரங்களுக்காக நடத்தப்படுகிறது. பல வகையான ஹோமங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். 

🌟 மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெறவும், லட்சுமி கடாட்சம் பெறவும் மகா கணபதி ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 சந்தான கணபதி ஹோமம் - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட, புத்திர பாக்கியம் கிட்ட சந்தான கணபதி ஹோமம் செய்தால் நல்லது. 

🌟 சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலக சண்டி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி, சு+ன்யம் நீங்கவும், வெற்றி பெறவும் சுதர்ஸன ஹோமம் செய்தால் நல்லது.

🌟 நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி, மகிழ்ச்சி பெற நவகிரக ஹோமம் செய்தால் நல்லது. 

🌟 ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாக ருத்ர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 குபேர ஹோமம் - செல்வ வளம் தர குபேர ஹோமம் செய்தால் நல்லது.

🌟 தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க தில ஹோமம் செய்தால் நல்லது கிட்டும்.

🌟 ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்க, ப்ரத்யங்கரா ஹோமம் செய்தால் நல்லது நடக்கும்.

🌟 ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபாரம் லாபம் பெற, ஸ்வர்ண கணபதி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 துர்க்க ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல துர்க்கா ஹோமம் செய்தால் நன்மை கிட்டும்.

🌟 வித்யா கணபதி ஹோமம் - கல்வியில் சிறக்க வித்யா கணபதி ஹோமம் செய்தால் பலன் கிட்டும்.

🌟 மோகன கணபதி ஹோமம் - திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்க மோகன கணபதி ஹோமம் செய்தால் நன்மை பயக்கும்.

🌟 தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம் காண தன்வந்திரி ஹோமம் செய்தால் நல்லது.

🌟 சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூட, சுயம்வர கலா ஹோமம் செய்தால் விரைவில் நல்ல பலன் கிட்டும்.


🌟 ஹோமங்களின் பலன் அறிந்து ஹோமங்களை செய்யவும

+++++++++++++++++++++++++
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்புஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச்சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம்.
அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும்.

அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி
இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.

அதுமட்டுமல்ல, நெருப்பு இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல
மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை
கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.

நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில்
போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும். நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம்.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் புகை! 
---------------------------------------------
நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.

 அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும்.

 யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.

கோயிலில் நடக்கும் ஹோமம், யாக குண்டங்களில் உள்ள சாம்பலை சிலர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்களே, அதை என்ன செய்வது ?
----------------------------------------------------------
இவ்வாறு எடுத்துச் செல்லும் சாம்பலை விபூதியோடு கலந்து நெற்றியில்
இட்டுக்கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் உடம்பினில் பூசிக்கொள்ளலாம். கோயிலில் மட்டுமல்ல, நம் வீட்டில் செய்யும் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் உள்பட அனைத்து மங்களகரமான ஹோமங்களில் உள்ள சாம்பலை தனியாக எடுத்து அதனை நன்றாக சலித்து அதிலிருந்து கிடைக்கும்
விபூதியை தினசரி நெற்றியில் தரித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக இரவினில் உறங்கச் செல்வதற்கு முன்பாகவும், வெளியூர்
பிரயாணத்தின்போதும், முக்கியமான பணிகளுக்காகச் செல்லும்போது இந்த ஹோம பஸ்மத்தை அணிந்துகொள்வது மிகவும் நல்லது.

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------------

முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்ற
ன. அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். 

இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

 இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.

அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதனையே வாயிற்படியில் மஞ்சள்துணியில் கட்டியும் வைக்கலாம்.

பகிர்வில் ர.சடகோபால்

Friday, April 1, 2016

ஓகக் கலை / யோக ஆசனம் / Yoga Asan

தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் ,
இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.
அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள். தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர்.
ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர். இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான
பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
இயற்கை - NATURE
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்

1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE
4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS
6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS
12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE
13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE
14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE
15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES
19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE
நடப்பன - VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE
22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE
23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE
27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE
30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE
பறப்பன - AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE
34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE
39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE
நடனம் - DANCE
42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA
43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
1முத்திரை - GESTURE
46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE
47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE
48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE
கருவிகள் - TOOLS
51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE
52. அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE
53. சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE
தொழில் - ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE
62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE
85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED
86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE
தூய்மை - CLEANSING
87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் - ORDER OF BREATH
91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH
93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING
94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE
96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING
99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING
102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING
103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX
நிறைவு நிலை - PACIFICATION
104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE
105.. அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

Saturday, March 26, 2016

நவரத்தினம்

தூய நவரத்தின கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

ஏன் இந்த கற்கள் பூரண பலன் தருவதில்லை?

இந்த கற்கள் பலன் தரவைக்க சித்தர்கள் அருளிய நடைமுறைகள் என்ன?

விவரங்கள் ...

நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்கjளில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

Thursday, March 24, 2016

ராஜ ராஜேஸ்வரி

ராஜ ராஜேஸ்வரி-மந்திரம்-யந்திரம்-தந்திரம்-பதிவு -3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

விரதம் இருக்கும் நாட்களில் நடைபெறுபவை :
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரத்தை விரதம் இருந்து உச்சாடணம் செய்யும் பொழுது கிடைக்கும் பலன்கள் , பெறும் சக்திகள் , நடக்கும் நிகழ்வுகள் , வெவ்வேறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமும் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை உச்சாடணம் செய்து முடித்து விட்டு , சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்ய வேண்டும் . அவ்வாறு தியானம் செய்யும் பொழுது கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறும் .

இந்த நிகழ்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ள வரிசைப் படியோ ( அல்லது ) வரிசை மாற்றியோ நிகழ்வுகள் கிடைக்கும் :
1 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது முதலில் ஒரு கண் கொணட உருவம் தெரியும் .
2 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு இரண்டு கண்கள் கொண்ட உருவம் தெரியும் .
3 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு கழுத்து வரை கொண்ட உருவம் தெரியும் .
4 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு மார்பு அளவு வரை உருவம் தெரியும் .
5 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது பிறகு முழு உருவமும் தெரியும் .
6 கண்ணை மூடி தியானம் செய்யும் பொழுது அம்மன் நடந்து வரும் பொழுது உண்டாகும் சலங்கை சத்தம் கேட்கும் .
7 அனைவருக்கும் மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்பது இயலாத காரியம் .

ஆனால் 48 நாட்கள் விரதம் முடித்த பிறகு விரதம் இல்லாமல் பூஜை பொருட்களைப் பயன் படுத்தாமல் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை மட்டும் தொடர்ந்து சொல்லி வரும் பொழுது மேலே சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது

வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுக்கும் ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம் :
48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார - உகார - மகார ,
ஸ்திரி , ஸ்ரீம், ஐம்,  மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி,   ராஜ மோக வசி ,
சர்வ லோக ,    சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,
எந்தனைக் கண்டோர் ,    உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,
மாத்தான் ,      வஞ்சகர்  வந்து வணங்கிட ,
என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,
ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,
வசிய வசிய வசி ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா.

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்யும் பொழுது, கண்டிப்பாக ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய யந்திரத்தை வைத்துத் தான் பூஜை செய்ய வேண்டும்.

சூட்சும ரகசியம் :
எந்த தெய்வத்திடமிருந்து , எந்த சக்தியை , எந்த பலன்களை பெற விரும்புகிறோமோ , அந்த தெய்வத்தை மனதில் நிறுத்தி அந்த தெய்வத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ,
அந்த தெய்வத்திற்குரிய மந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய யந்திரம் ,
அந்த தெய்வத்திற்குரிய தந்திரம் ,
ஆகியவற்றைப் பயன்படுத்தி பூஜை செய்ய வேண்டும் அப்பொழுது தான் நாம் அதற்குரிய முழு பலன்களையும் பெற முடியும் .

அதைப்போல நாம் ராஜ ராஜேஸ்வரி அம்மனிடமிருந்து சக்தியையும் , வாழ்க்கைக்குத் தேவையான பலன்களையும் பெற ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம்,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம் ,
ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் .

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில்
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய மந்திரம் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய யந்திரம் ,
ஆகியவை மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளதாக நினைக்க வேண்டாம்.

மேலே சொல்லப்பட்ட பூஜை முறைகளில் ,
ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய தந்திரம்
சூட்சும முறைகளில் ரகசியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

ராஜ ராஜேஸ்வரி அம்மனுடைய பூஜை முறைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களையும் பெற்று  , இன்புற்று சிறப்புடன் வாழுங்கள் .

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                    போற்றினேன் ராஜராஜேஸ்வரி தான்முற்றதாமே “”

பகிர்வில் ர.சடகோபால்

நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.