Saturday, May 28, 2016

வில்வம்

வில்வத்தைபற்றி ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசனே சொல்வது கடினம்.

வில்வம் சாட்சாத் லஷ்மி சொரூபம்....

வில்வம் வளர செல்வம் பெருகும் ....
💎💷💰💸💵💴💎🔱
கட்டாயம்
வில்வம் வீட்டில் வளர்க்கப்பட வேண்டும்...
🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
தூய்மையான இடத்தில் மட்டுமே வில்வம் வளரும்...
🔯🕉🔯🕉🔯🕉🔯🕉🔯
இல்லம்
தூய்மையான இடமானால்
வளர்வது வில்வம் மட்டுமாக இருக்காது...
🌱🌾🌳🌿🍂
பக்தியும் சேர்ந்தே தழைத்து வளர ஆரம்பித்துவிடும்...

புறத்தூய்மையை அகத்தூய்மைக்கு அடிகோலும்....

நமது சம்பந்தம் எதனுடனோ அதுவாகவே ஆகிவிடுகின்றோம்...

பாகவதன் சம்பந்தம் பக்தனை பகவானாக்குவதுபோல...

ஜீவ மூலிகைகளில் முதன்மையானது வில்வம்(high sensitive)...
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
ஆயிரம் தங்கத்தாமரையில் அர்ச்சித்த பலன் தரவல்லது ஒரு இலை...
(சிதம்பர இரகசியம்)

ஆயிரம்தேவதைகளை தினமும் நித்யானுஷ்டம் செய்யமுடியாதவர்....
ஒரு வில்ல மரத்தை வளர்த்தாலே
அதிலிருந்து விடுபடும் ஒவ்வொரு  இதழும் அந்த கைங்கர்யத்தை செய்ததாகிறது..
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

விரச்சைக்கு அப்பாலிருக்கும் கங்கையைவிட புனிதமானது
வில்வமரத்தில் இருந்து வரும் தீர்த்தம்... அதாவது மழைக்காலங்களிலோ..பனிக்காலங்களிலோ அதன்மீது வழிந்தோடும
நீர்...🌧⛈🌨🌧⛈🌧🌩

வேதத்தை போற்றி வளர்ப்பவனே பிராமனோத்தமன் என வேதமே சொல்கிறது...
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
வேதமே
வில்வத்தின் கிளைகளாக உள்ளதாக காளத்திபுராரம் கூறுகிறது...

ஆக
வில்வத்தை போற்றி வளர்ப்பவனும் பிராம்மனோத்தமன்தானே....????

வில்வம் ஆத்மனுக்கு சமமானது
அவை பிறப்பதமில்லை
அழிவதுமில்லை..

இறைவனுக்கு ஒருமுறை படைக்கப்பட்ட ஒன்றை மீண்டும் படைக்க முடியாது....

ஆனால் இது வில்வ இலைக்கு மட்டும் பொருந்தாது ஏனென்றால்..?

படைக்கப்பட்டது அணைத்தும் படைக்கப்பட்டதே....

வில்வம் அட்சயம்....
🍂🌿☘🍂🌿☘☘🍂🌿
தாங்கள் வளர்த்த வில்வமரத்தின் பத்திரத்தை யார்பயன்படுத்தி பூஜித்தாலும் அவர்கள்பெற்ற பலனில் மரத்தை போற்றி வளர்த்தவர்க்கும் பங்குண்டு...

வில்வ விருட்சத்தை தழுவிச்செல்லும் காற்றே அவிசாக சுவாகா தேவியால் உரியவர்களிடம் சேர்க்கப்படுகிறது நிர்விக்ணமாக
++++++++++++++++++++++++++++++
சிவமயம் சிவாயநம
வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக  ஒரு வில்வம் போதும் 
அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம்
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்
சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு)  அர்ச்சனைக்கு  உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே  பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும்  உள்ளன
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக)  முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து  வழிபடுவது சிறப்பு
மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்
வில்வ வழிபாடும் பயன்களும்
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்
வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்)  பாவங்களைப் போக்குவன  ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி  வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்
எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்  இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும்  அடைவார்கள்
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக  விளக்கமாகக் கூறுகின்றன
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்)  திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர்  பெற்றது
சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்
அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும்  வில்வத்தை ஏற்றுக் கொண்டான்
ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்
வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும்  வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல்  நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும்  இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது
நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும்  அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.
மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது)  செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல்  நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை)  கடாட்சத்தைப் பெறமுடியும்
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு  ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது
ஒரு வில்வ இதழைக்  கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து)  எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே
பொருள் விளக்கம்
போகமோட்சம்  உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்
இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.
வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.
கொலஸ்ட்ரால்  வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
விரிவான மருத்துவக் குணங்கள்:
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.
கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.
கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.
இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.
பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு காச்சல் போக்கும்.
தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.
வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது
வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.
இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர சகல நோய்களும் குணமாகும்
இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம் மேலும் சிவபெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்
திருச்சிற்றம்பலம்
இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்

Sunday, May 22, 2016

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஜபம்

நினைத்ததை பெருங்கள்

ஒரு பொருளை வேண்டி தாரணைஞ செய்யும்போது அது இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை வந்தடைந்தே தீரும், இதுதான் பிரபஞ்ச நியதி.

உதாரணமாக ஒரு பெண்மணி தனது தோட்டத்தில் நான்கு மூலைகளிலும் ஒருவகை ரோஜா செடியை நட வேண்டும் என ஆசைப்பட்டாள்.

ஆனால் துரதிஷ்ட வசமாக அது வேறு பிரதேசத்தில்தான் கிடைக்கும்.அவ்வளவு தூரம் போய்வர அவளுக்கு வசதியில்லை.

இருப்பினும் அது கிடைத்தே ஆக வேண்டும் என உறுதியாக வேண்டி தனது விருப்ப சக்தியை ஊட்டி வந்தாள்.

ஒருநாள் கடற்கரையில் உலாவும்போது அவள் நினைத்த அதேவகையை சேர்ந்த நான்கு செடிகள் நீரில் மிதந்து வர,

அதை எடுத்து சென்று வீட்டில் நட்டு பூரிப்படைந்தாள். எங்கே அந்த செடிகள் கிடைக்குமோ அங்கிருந்து வந்த கப்பலில் ஒருவர், அதை வாங்கி வர அது கைநழுவி கீழே விழ அதுவே அலைகளால் அடுத்து வந்து கரைகளில் ஒதுங்கியது.

உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமே அதில் விருப்ப சக்தியை ஊட்டி வாருங்கள் போதும்.

ஒருநாள் அதை நீங்கள் எந்த வழியிலாவது அடைந்தே தீருவீர்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++🏼
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் வழிபட மூலமந்திரம் தியான பூஜை முறை.

ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
3. ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.
4. விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.
6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.
7. சித்து வேலைகள் கை கூடும்.
8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.
9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.
10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ராஜராஜேஸ்வரி அம்மனை விரதம் இருந்து வணங்கும் முறையை பற்றி பார்ப்போம். 48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும் அவ்வாறு நாம் விரதம் இருக்கும் நாட்களில் நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அவைகளைப் பற்றி பார்ப்போம்:
புலால், மது, தாம்பத்யம் போன்றவை நீக்கி விரதம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் விரதம் ஆரம்பிக்கிறோமோ அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். வேறு வீடுகளிலோ வெளியிலேயோ சென்று விரதம் நிறைவு செய்யக்கூடாது. இரவில் எங்காவது வெளியில் தங்கி விட்டால் விரதம் நிறைவுற்றதாக ஆகி விடும்.
விரத நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அம்மனை வணங்க வேண்டும். ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போடாத எந்திரம் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போட்ட படம் வைத்து, எந்திரம் மற்றும் படத்திற்கு பூக்கள் அணிவித்து தீப, தூப ஆராதனைகள் செய்து வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை தினமும் உங்களால் முடிந்தவரை சொல்லி வர வேண்டும். 48 நாட்களுக்குள் லட்சம் எண்ணிக்கையை மந்திரம் தொட்டால் மிகவும் சிறப்பு.
எவ்வளவு சுத்தமாக இருந்து அம்மனை நினைத்து தியானம் செய்கிறோமோ கேட்டதை விட அதிகமாக வரங்களை அளிப்பாள் ராஜ ராஜேஸ்வரி என்று தியானிக்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.
நாம் விரதத்தின் மூலம் மிக உயர்வான சக்திகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் என்பதை விரதம் இருக்கும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம்.
அனுதினமும் வாழ்க்கையில் நமக்கு துணையாக அம்மன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
48 நாட்கள் விரதம் முடிந்த பிறகும் தினமும் அம்மன் மந்திரத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்து கொண்டு வர அதிசய சக்திகளை நாம் பெறலாம்.

மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். அம்மனை மனதார தியானிக்க வேண்டும்

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம்
48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார - உகார - மகார ,
ஸ்திரி , ஸ்ரீம், ஐம், மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி, ராஜ மோக வசி ,
சர்வ லோக , சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .
சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,
எந்தனைக் கண்டோர், உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,
மாத்தான், வஞ்சகர் வந்து வணங்கிட ,
என் புருவ மையம் மையைக் கண்டோர் ,
அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,
ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,
வசிய வசிய வசி ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா.
+++++++++++++++++++++++++++++

ஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி?

மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான்இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.

ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.

1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.

சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது

மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.

உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். 

வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை
நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.



2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு
கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்.

இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக

ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ணசதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்ல சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்குஏற்றவையே.

3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில்மந்திரஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில்தொடங்கி குறிப்பிட்ட அடுத்த
திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய
வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம்முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714
ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால்அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ளஎழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து
குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும்
மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும்மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.


12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.

ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம்
செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது
நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

கருங்கல் மீதிருந்து ஜபம்செய்தால்வியாதி; வெறும்தரையில்ஜபம்செய்தால் துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்

மந்திர சித்தி செய்த விபூதி

ஸ்ரீ ஹனுமன் உடல்கட்டு மந்திரம்

ஓம் நமோ பரமாத்மனே அஞ்சனாசுதாய |
ஹும் ஹும் ஹும் மம சரீரம் பந்தனம் |
ரக்ஷ குரு குரு ஸ்வாஹா ||

சாத்வீக மந்திரம் தவிர்த்த பிற வகையான ராஜச மற்றும் தாமச தெய்வ மந்திர உபாசனை மற்றும் பூஜையின் போது எதிர்பாராத சில ஆபத்துக்கள் அல்லது துஷ்ட சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்.அதைத் தவிர்க்க உடல் கட்டு மந்திரம் ஜெபித்த பின் மந்திர ஜபம் செய்வது பாதுகாப்பானது.

முதலில் குங்கிலிய புகை போட்டு வெற்றிலைப் பாக்கு ,வாழைப்பழம் ,கொய்யாப்பழம் படைத்து முன்னால் ஒரு டப்பியில் விபூதி வைத்துக் கொண்டு மந்திரத்தை 1008 தடவை ஜெபித்துச் சித்தி செய்து கொள்ளவும்.

பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபித்துச் சிரசிலும்,நெற்றியிலும், மார்பிலும் விபூதி அணிந்து கொள்ளக் காப்பாக விளங்கும்.குளக்கரை,நதிக்கரை,கடற்கரையில் மந்திரத்தைச் சித்தி செய்வது சிறப்பு.

உடற்கட்டுக்கு மட்டுமின்றி பயந்த குழந்தைகள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விபூதியைப் பூசி வர அவற்றின் பாதிப்புகள் நீங்கும்.

இரவில் தனியாக உறங்கப் பயப்படுபவர்கள் இதை ஜெபித்து நெற்றியில் விபூதி பூசி உறங்கப் பயமற்ற உறக்கம் உண்டாகும்.

ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜய ராம்
ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம் ||
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம் ||

Wednesday, May 18, 2016

சிவகீதை

எந்த கீதை நினைத்த உடன் முக்தி தருமோ அப்படிப்பட்ட மஹாஉன்னதமான சிவகீதையை பற்றி வியாசரிடம் தான் பெற்ற உபதேசத்தை சூதமாமுனிவர் மற்ற முனிவர்களுக்கு கூறலானார்.

சூதமாமுனிவர் சொன்னது :

முனிவர்களே சிவகீதையை சாதாரண மனிதர்களுக்கு உபதேசம் செய்ய கூடாது. அதை மீறி உபதேசித்தால் தேவர்களுக்கு கோபம், கலக்கம் உண்டாகும். அவர்கள் சாபம் கொடுப்பார்கள். காரணம் யாதெனில், பூலோகத்தில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் இல்லறவாசிகள் தான் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தரும் காமதேனு பசுக்கள் மாதிரி.

இல்லறவாசிகள் செய்யும் ஹோமத்தில் கொடுக்கப்படும் " அவிர்பாகம் " கொண்டே தேவர்கள் பலம் பெறுகின்றனர். தேவர்களுக்கு விருப்பமான குடிக்கும் பானம், பட்சணம் மற்றும் எந்த உணவானாலும் அது இந்த பூமியில் மனிதர்கள் செய்யும் ஹோமத்தால் தான் கிடைக்கும். ஹோமத்தீயில் அளிக்கும் அவிர்பாகமே தேவர்களுக்கு உணவு.

உணவு சாப்பிடாத மனிதன் எப்படி சோர்வடைகிறானோ அது போல அவிர்பாகம் கிடைக்காத தேவர்களும் தளர்வடைகிறார்கள். இல்லறத்தான் சிவகீதை உபதேசம் பெற்றாலும், சிவபெருமானை நினைத்து வழிபட்டாலும் அது தேவர்களுக்கு பயம் ஏற்படுத்தும். காரணம் மனிதன் சிவனருளால் அவரை வணங்கி, அவர் சரிதத்தை கேட்க, படிக்க விருப்பம் உண்டாகி ஞானம் அடைந்து முக்தியும் பெறுகிறான்.

மனிதன் ஞானியானால் அவன் செய்யும் நித்திய கர்மாக்களான இல்லற தர்மங்கள், ஹோம கர்மங்கள் இல்லாமல் போய்விடும். அதனால் இழப்பு தேவர்களுக்கே அவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்காது.

ஆகவே மனிதன் ஞானியாவதை தேவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எப்படியாவது அவனை தடுத்து இல்லறத்தானாகவே வைக்க பல தடைகளை தந்து ஞானி ஆவதை தடுப்பார்கள்.சிவகீதை ஒருவனை ஞானியாக்கும். அதனால் அதை அறிய விரும்பும் மனிதனுக்கு தேவர்கள் எண்ணற்ற பல தடைகளை உண்டாக்குவார்கள்.

 இத்தகைய தேவமாயை சோதனைகளை வெல்லும் மனிதனுக்கு தான் சிவகீதையின் பூரண பலனான கைவல்ய முக்தி கிட்டும். தேவர்கள் சோதனைகளால் மனிதர்களுக்கு சிவபெருமான் மீது பக்தி ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அது தேவர்கள் தரும் சோதனைகளால் பாதியில் நின்று விடும். மனிதர்களுக்கு சிவபக்தி ஏற்படாமலும், சிவனார் மீது திடநம்பிக்கை ஏற்படாமலும் இருக்க காரண கர்த்தாக்கள் " தேவர்கள் " தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சூதமாமுனிவர் சொல்ல தேவர்கள் சோதனையிலிருந்து தப்பித்து சிவகதி அடைய என்ன தான் வழி? என்று மற்ற முனிவர்கள் கேட்டனர். அதற்கு சூதர் வழி கூறுகிறார். " கோடான கோடி பிறவிகளில் சம்பாதித்த சிவ புண்ணியங்களால் மட்டுமே சிவபெருமானிடம் பக்தி ஏற்படும்.

 மனிதன் கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், தானம் செய்தல், குளம், கிணறு வெட்டுதல், யாகம் செய்தல் போன்றவற்றில் புண்ணிய பலனை கருதாமல் சிவனாருக்கு அர்ப்பணம் எனும் எண்ணத்துடன் செய்ய வேண்டும். நாம் ஒரு சிவகருவி அவரே நம்மை இயக்குபவர் என்றும், சர்வம் சிவார்ப்பணம் எனும் சிந்தையோடும் செயல்படவேண்டும். அப்போது தான் சிவ புண்ணியம் உண்டாகும். முக்திக்கு வழி பிறக்கும்.
சீதையை இராவணன் அபகரித்து சென்றதும் ஸ்ரீ ராமன் மிகுந்த துயரம் அடைந்து இரவும், பகலும் பசி, தூக்கம் இன்றி புலம்பி கொண்டிருந்தார். பின்பு ராமன் தன் உயிரை விட்டு விட விரும்பினார்.

இதையறிந்து லோபா முத்திரையின் கணவரான " அகத்தியர் " ராமரிடம் வந்தார். அகஸ்தியர் சம்சாரம் துச்சமென்பதை ராமருக்கு போதித்தார். ராமா துக்கப்படாதே, பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய இந்த உடல் ஜடம் என்பதை நீ அறியவில்லையா ? எதிலும் ஒட்டாத, எங்கும் வியாபித்திருக்கும் சத், சித், ஆனந்த வடிவமான ஆத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை.

மலபிண்டமாகவும், ஜட உருவமாகவும் உள்ள இந்த தேகத்திலிருந்து உயிர் போய் விட்டால் இந்த உடல் கட்டைகளோடு எரிக்கபடுகிறது. அழியக்கூடியது உடல் மட்டுமே என்பதை அறியாமல் இருக்காதே. அத்தகைய உடலை பிரிவதால் என்ன துயரம் உள்ளது? ஒரு பெண் அனைத்து அழகுடன் இருந்தாலும், இனிய குரலை கொண்டிருந்தாலும், கண்களில் மன்மத பாணங்களை எய்பவளாக இருந்தாலும் அவளை கண்ட உடன் அவளுக்கு வசப்படும் மூடனுடைய அஞ்ஞானத்தை கூறுகிறேன்.

ஆத்மா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல. ஆத்மாவுக்கு உருவம் இல்லை. அது எங்கும் நிறைந்துள்ளது. அனைத்து அழகுடனும் காணப்படும் அழகி என்பவள் வெறும் மலபிண்டம், ஜட உருவம் தான் என்பதை அறிந்து கொள்.

ராமா, அவளுடைய தேகத்தை வெறும் தோல் மாத்திரம் என்று அறிந்து அவளை ஒதுக்குவாயாக. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் ஆன இந்த உடலில் ஆத்மா வெறும் சாட்சியாக இருக்கிறது.

தேகங்கள் தான் அழியும். ஆத்மா அழியாது. கொலைசெய்பவனோ கொல்வதாக நினைக்கிறான். கொல்லப்படுபவனோ இறப்பதாக நினைக்கிறான். உண்மையில் கொல்வதும், கொல்லபடுவதும் இரண்டும் இல்லை என்பதை அறிந்து உன் உண்மை சொரூபத்தைஅறிந்து துக்கத்தை விடு என்று சொன்னவுடன் ராமர் அகத்தியரிடம் முனிவரே நான் என் மனைவி பிரிவால் துயரம் எனும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன்.

 அது இல்லை என்று நீங்கள் கூறுவதை நான் எப்படி நம்புவேன்? ஜீவன் துக்கத்தை அனுபவிக்கும் போது அனுபவிப்பவன் என்று ஒருவனும் இல்லை என்று கூறினீர். பிறகு யார் தான் அதற்கு காரணம்? என்றார் ராமர்.

அதற்கு அகஸ்தியர் எந்த மாயையால் உலகம் பிரமிப்படைகிறதோ அந்த சிவனாரின் மாயையே காரணம் என்பதை அறிவது மிக கடினம். மாயைதான் அனைத்திற்கும் காரணம். மாயையை வசப்படுத்தியவரே ஸ்ரீ பரமேஸ்வரர்.

நான்கு அந்தகரணங்களை (புத்தி, மனம், சித்தம், அகங்காரம்) பிரதிபலிப்பவர்களாக ஜீவர்கள் தத்தம் கர்ம பலனை அனுபவித்த படி ஜீவிப்பார்கள்.ஜீவர்கள் கர்மபலன் படி சுகதுக்கத்தை அனுபவிக்க இந்த சரீரத்தில் உள்ளனர்.

இந்த உடலானது இரண்டு வகைப்படும். (ஸ்தாவரம், ஜங்கமம்). இதில் ஸ்தாவரம் என்பது மரம், செடி, கொடி போன்றவை. ஜங்கமங்கல் என்பது மூட்டை, புழுக்கள், கருப்பை இந்த மூன்றிலிருந்து தோன்றுவன. நல்வினை பயன் கொண்டவர்கள் கருப்பை வழியே உடலை பெறுவார்கள். தீவினை பயன் கொண்டவர்கள் தாவரம், மற்ற சரீரத்தை அடைவர். ஜீவன் சிவனாரின் மாயையால் மயங்குகிறான்.

ஜீவன் கனவு, விழிப்பு எனும் இரு நிலைகளில் கட்டுபடுகிறான். தூக்கத்தில் ஆனந்தத்தை அடைகிறான். மாயையால் சுகதுக்கத்திற்கு ஜீவனே காரணமாகிறான். ஆகையால் விசாரித்து அறியும் அறிவால் இங்கு ஒருவனும் துக்கத்தை அடைபவன் இல்லை. ஆதலால் ராமா நீர் துக்கத்தை விட்டுவிடு என அகஸ்தியர் போதித்தார்.

 ராமர் அதற்கு முனிவரே தாங்கள் கூறியது அனைத்தும் உண்மைகளே. எப்படி அஞ்ஞானம் நீங்கிய அந்தணரையும் கள்ளானது போதை கொள்ள செய்யுமோ அது போல ப்ராப்த கர்மாவானது விவேகியை கூட விட்டு விடாது. ஆகவே " வாழ்வதற்கு எனக்கு வழி கூறுங்கள் " என்று ஸ்ரீ ராமன் அகஸ்தியரிடம் கேட்டார்.
அகஸ்தியர் ஸ்ரீ ராமனை பார்த்து ராமா, காம குரோதங்களால் பீடிக்கப் பட்டவன் இதமான பேச்சைக் கேட்பதில்லை. 

சாகும் தறுவாயில் உள்ளவனுக்கு மருந்து எப்படி ருசிக்காதோ அப்படித்தான் இதுவும். 

அது சரி ராமா, நீ எவ்வாறு மாயாவியான ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு வருவாய்? அந்த இராவணன் ஸ்ரீ மஹாதேவரிடம் வரங்கள் பெற்றவன். அந்த வரத்தால் அவன் மூவுலகங்களையும் ஆள்கிறான்.

 அவன் வாயிலில் எல்லா தேவர்களும் குரங்குகள் போல கட்டப்படு கின்றனர். அவனை தடுப்பவர், எதிர்ப்பவர் மூவுலகிலும் இல்லை. 

 இந்திரனை வென்ற இந்திரஜித் எனும் ராவணனின் மகனும் சிவனாரிடம் வரங்கள் பல பெற்றவன். தேவர்களுக்கு எமன் போல உள்ள கும்பகர்ணன் எனும் சகோதரனும், திவ்ய அஸ்திரங்கள் உடைய விபீஷ்ணன் எனும் சகோதரனும் ராவணனுக்கு உண்டு. கோடிக் கணக்கான நால்வகை படைகள் அவனுக்கு உண்டு.

 பகைவரால் உள்ளே நுழைய முடியாத லங்காபுரி நகரும் அவனுக்கு உண்டு. அத்தகைய இராவணனை ஒருவனான உம்மால் எப்படி வெல்ல முடியும் ராமா?

அதற்கு ராமர், அகஸ்திய முனிவரே நான் க்ஷத்ரியன். என் மனைவியை இராவணன் அபகரித்து கொண்டு போய் இருக்கிறான். அவனை நான் சீக்கிரம் கொல்லாவிடில் நான் உயிர் வாழ்வதில் என்ன பயன்? எனவே உங்கள் தத்துவஞான உபதேசத்தால் எனக்கு கொஞ்சம் கூட பயனில்லை.

 எனக்கு காம, குரோதம் முதலான எண்ணங்கள் அனைத்தும் உள்ளன. அவை என் உடலை கொளுத்துகிறது. ராவணனிடம் இருந்து என் மனைவி சீதையை மீட்கா விடில் எனக்கு அவமானம். நான் உயிரை விட்டுவிடுவேன்.

எனவே உங்கள் தத்துவ ஞானத்தில் எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே தாங்கள் எனக்கு கடலை தாண்டி சென்று இராவணனை கொன்று சீதையை மீட்கும் உபாயத்தை எனக்கு குருவாக இருந்து தாங்கள் தான் கூற வேண்டும்.

அகஸ்தியர் பதில் :

ராமா, பரம்பொருளான, பார்வதி நாதரான பராபரர் ஸ்ரீ பரமேஸ்வரரை சரணடைவாயாக. அவர் மனது வைத்தால் மட்டுமே உனக்கு வெற்றி கிட்டும். போய் ஸ்ரீ சிவபெருமானை சரணடை அது ஒன்றே சிறந்த உபாயம். நான் உனக்கு தீக்ஷை செய்து வைத்து விரத முறைகளை உபதேசிக்கிறேன்.

அது படி நடந்து மனிததன்மை நீங்கி தேஜோமயமாவாயாக. சிவனாரை முறைப்படி பூஜித்து அவரிடம் வரம் பெற்று வெற்றி கொள் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு ராமர் துன்பம் நீங்கி புத்துணர்வு பெற்று கடலை குடித்த முனிவரான அகஸ்தியரை வணங்கினார்.

அகஸ்தியர் கூறிய படி ராமர் பாசுபத விரதத்தை அனுஷ்டித்தார்.ஸ்ரீ ராமர் உடல் முழுதும் விபூதியை பூசி கொண்டார். அகஸ்தியரிடம் " சிவ சகஸ்ரநாமத்தை " உபதேசம் பெற்றார்.

 அகஸ்தியர் சிவ சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்து வைத்து ராமா வேத சாரமான இந்த சிவ சகஸ்ரநாமத்தை இரவும், பகலும் விடாமல் ஜபித்து மனமாற ஈசனை பூஜித்து வா. பின்னர் சிவனார் உன் மீது கருணை கொண்டு உமக்கு பாசுபதாஸ்திரம் தருவார்.

 அதை வைத்து உன் எதிரியை கொன்று, உன் மனைவியை மீட்டு வெல்வாய். ஆனால் பாசுபதாஸ்திரம் கிடைக்க வில்லை என்றால் உன்னால் ராவணனை வெல்வது முடியாது. ஆகவே அதை பெற சிவனாரிடம் பரிபூரண சரணாகதி அடை என்று கூறி அகஸ்தியர் ஸ்ரீ ராமரை வாழ்த்தி விட்டு தன் ஆசிரமம் திரும்பினார்.
அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்ற ஸ்ரீ ராமர் அகஸ்தியரின் உபதேசத்தின் படி ஸ்ரீ பரமேஸ்வரரை தியானிக்க துவங்கினார்.

 ராமர் புனிதமான கோதாவரி கரையில் உள்ள மலையில் விபூதியை உடல் முழுவதும் பூசிக் கொண்டு, உடலில் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டு சிவ லிங்கத்தை ஸ்தாபித்தார்.

 லிங்கத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, வனத்தில் உள்ள மலர்கள் கொண்டு அர்ச்சித்து, கனிகளை கொண்டு பூஜித்து சிவ சகஸ்ரநாமத்தை இரவும் பகலும் ஜபித்தார். 

ஒரு மாதம் பழங்கள் மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் இலைகளை மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் தண்ணீரை மட்டும் சாப்பிட்டும், ஒரு மாதம் காற்றை மட்டும் சுவாசித்தும் ஸ்ரீ சிவ பிரானை தியானித்தார்.

அனைத்து உயிர்களின் இருதய கமலத்தில் வீற்றிருக்கும் உமையொரு பாகனும், மின்னும் மஞ்சள் நிற ஆடை தரித்தவரும், நான்கு திருக்கரங்கள் கொண்டவரும், முக்கண்ணரும், கோடி சூரிய பிரகாச ஒளியை மிஞ்சும் ஒளி கொண்டவரும், கோடி சந்திரனின் குளிர்ச்சியை விட குளிர்ந்தவரும், நாக பாம்பை பூணுலாக கொண்டவரும், புலித்தோலை ஆடையாக அணிந்தவரும், அபய வரத முத்திரைகளை தன் திருக்கரத்தில் காட்டுபவரும்,தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவரும், ஐந்து திருமுகங்களோடு சூலமும், உடுக்கையும் ஏந்தி சிரசில் பிறை சந்திரனை அணிந்தவரும், என்றும் நிலைத்திருப்பவரும், மாற்றமற்றவரும், குறைவில்லாதவரும், அழிவற்றவரும், பகவானுமாகிய பரம்பொருள் பராபரர் ஸ்ரீ பரமேஸ்வரரை தினமும் ஸ்ரீ ராமர் பூஜித்து தியானித்தார். இவ்வாறு நான்கு மாதங்கள் கழிந்தன. ஸ்ரீ ராமனும் விடாமல் ஸ்ரீ மஹா தேவரை பூஜித்து சிவ சகஸ்ரநாமத்தை கூறி வந்தார்.

நான்கு மாதங்கள் கழித்து நதிக்கரை அருகே ஒரு பெரிய சப்தம் உண்டானது. சிவனாரின் சிரிப்பால் முப்புரங்களும் எரிந்து கீழே விழுந்து விட்டதோ என்று என்னும் அளவு மிக பயங்கரமான சப்தம் உண்டானது.

அந்த ஓசையால் நடுங்கிய ஸ்ரீ ராமர் சப்தம் வரும் திசையை நோக்கி பார்த்தார். ஸ்ரீ ராமனின் முன்னால் ஒரு பேரொளி ஏற்பட்டது. அந்த ஒளியை கண்டு ராமன் திக்கு திசை தெரியாமல் நடுங்கி போய் பிரமித்து நின்றான். ராமரால் அந்த பேரொளியில் எதையும் காண முடியாமல் இது அசுரர்களின் வேலையாக இருக்குமோ என நினைத்தார்.

உடனே ராமர் தன் வில்லை ஏந்தி கொண்டு ஆக்னேயாஸ்திரம், வருணாஸ்திரம், சந்திராஸ்திரம், சூரியாஸ்திரம், மோஹனாஸ்திரம், பர்வதாஸ்திரம், விஷ்ணுசக்கரம், மஹாசக்கரம், காலச்சக்கரம், விஷ்ணு அஸ்திரம், ருத்ர அஸ்திரம், பிரம்மாஸ்திரம், குபேராஸ்திரம், வஜ்ராஸ்திரம், வாயு அஸ்திரம், பார்கவாஸ்திரம் முதலிய திவ்ய அஸ்திரங்களை அந்த பேரொளியை நோக்கி எய்தார். அந்த பேரொளியில் ஸ்ரீ ராமன் எய்திய அனைத்து திவ்ய அஸ்திரங்களும் மஹா சமுத்திரத்தில் விழுந்த சிறிய மழைத்துளி போல ஒடுங்கின. அதை கண்ட லக்ஷ்மணன் பயத்தில் மயங்கி விட்டான். ஸ்ரீ ராமனோ பயத்தில் கீழே விழுந்து கண்களை இறுக மூடி கொண்டு ஸ்ரீ சிவபெருமானை நினைத்து வணங்கினார்.

மீண்டும் முன்பு போல அந்த ஓசை அதிகமானது. பூகம்பம் வந்தது. மலைகள் அசைந்தன. அடுத்த நொடி அங்கு ஒரு குளிர்ந்த ஜோதி உருவானதை கண்களை திறந்து ராமர் பார்த்தார். அங்கு சிவனாரின் ரிஷபத்தை கண்டார். அந்த ரிஷபத்தின் மீது அம்மையப்பரான ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை கண்டார்..