Thursday, September 24, 2015

மாவிலை

விழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் 

கட்டுவது ஏன்? 

விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின் 
போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் 
தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?

காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் 
கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது 
‘மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?

கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான 
மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை 
தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. 
காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. 
எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.
விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் 
தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, 
தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் 
கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் 
கூடுவர். ‘கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி 
நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற 
அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. 
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் 
பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் 
கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் 
மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் 
தோரணங்கள் கட்டப்படுகின்றன.

மாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன 
தொடர்பு? இருக்கிறது! இல்லாமலா தோரணம் கட்டுவார்கள்?

மாவிலைகள் ‘புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் 
பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் 
பாக்டீரியாக்களையும் ‘புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.
மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி 
நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

இப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் 
கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் 
கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் 
பாதுகாக்கலாம்.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் 
நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை 
அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், 
வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற 
வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் 
தோரணம் கட்டுகிறோம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் 
மங்களகரமாகத் தோன்றும்.

மாவிலை தோரணம், மாம்பழ ருசி, மாமர நிழல் என அழகும் சுவையும் சுகமும் நிறைந்த பல அம்சங்களை மாமரம் நமக்கு வழங்குவது, நாம் அறிந்ததே! ஆனால், மாம்பிஞ்சும், மாவிலையும், மாம்பூவும் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே உமையாள் பாட்டி கூறுவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்! வைகாசி திருவிழா ஊரெல்லாம் களைகட்டி இருக்க, உமையாள் பாட்டி வீடுமட்டும் விதிவிலக்கா என்ன?! மாவிலை தோரணங்களும் சாணி மொழுகப்பட்ட வாயிற்புறமும் என புதுப்பொலிவுகொண்டு உமையாள் பாட்டியின் வீடு காட்சியளித்தது. தோரணங்களிலிருந்த மாவிலைகள் என் சிரசை ஆசீர்வதித்து உள்ளே அனுப்ப, பாட்டி அங்கே மாவிலைகளுக்கும் மாம்பிஞ்சுகளுக்கும் நடுவே ஏதோ பக்குவம் செய்துகொண்டிருந்தாள். மாவிலை கொழுந்தை எடுத்து, காயவெச்சு பொடிசெஞ்சு, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் கட்டுப்படும். “என்ன பாட்டி… அதான் எல்லா நிலைவாசல்லயும் மாவிலை தோரணம் தொங்குதே… இன்னும் எதுக்கு மாம்பிஞ்சும் மாவிலையுமா உட்காந்துகிட்டு இருக்கீங்க?” கேள்வி கேட்டபடியே பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தேன். “ம்… வாப்பா! வந்துட்டியா?! என்ன பாத்தாலே உனக்கு கேள்வி தன்னால வந்திடுதா? இல்ல ப்ளான் பண்ணி கேள்வியெல்லாம் தயாரிச்சுட்டு வர்றயா?” எனக் கேட்டு சலித்துக்கொள்வதுபோல் பாசாங்கு செய்தாள் பாட்டி. “பாட்டி… அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க! கனிஞ்ச மரம்தானே கல்லடிபடும்?! உங்க கிட்டதான நாங்கெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க முடியும்?!” பாட்டியிடம் ஐஸ் வைப்பதைப்போல் பேசி சமாளித்தேன். ஆனாலும், உமையாள் பாட்டியிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. “பாட்டி உங்க வாசல்ல, மாவிலைத் தோரணம் கட்டியிருக்கீங்க, அழகா இருக்குது, அது ஓகே! ஆனா… இதென்ன இவ்வளவு மாம்பிஞ்சு மாம்பூவெல்லாம் பறிச்சிட்டு வந்திருக்கீங்க. எதுக்காக?” “மாமன்மார் செய்யாதத மாமரம் செய்யும்னு ஒரு பழமொழி இருக்கு கேட்டிருக்கியா?” “இல்ல பாட்டி, இப்போ நீங்க சொல்லிதான் மொத தடவ கேக்குறேன்!” “அதுசரி… இப்போ யாரு பழமொழியெல்லாம் யூஸ் பண்றாங்க, எல்லாம் ட்விட்டர் மொழிதான் யூஸ் பண்றாங்க. சரி நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! மாங்கொட்டை முற்றாத மாம்பிஞ்சுகள எடுத்து காம்பு நீக்கி காயவெச்சு, ஊசிய வெச்சு சின்ன சின்ன துளையிட்டு, உப்பு நீருல ஊறப்போடணும். அப்புறம் அத எடுத்து வெயில்ல வெச்சு உலர்ந்த பிறகு அப்பப்போ சாப்பிட்டு வந்தா பசியின்மை நீங்கி பசி உண்டாகும். வாய்குமட்டல் சரியாகும். இந்த மாங்கொட்டையில இருக்குற பருப்ப எடுத்து பொன்னிறமா வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தா வயிற்றுப்போக்கு சரியாகும். இந்த மாவிலை மட்டும் சாதாரணமா…” “ஓ மாவிலையிலயும் மருத்துவ குணம் இருக்குதா?!” பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆவல் அதிகமாக, குறுக்கிட்டேன். “ஆமா, சொல்றேன் கேளு! மாவிலை கொழுந்தை எடுத்து, காயவெச்சு பொடிசெஞ்சு, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா நீரிழிவு நோய் கட்டுப்படும். மாவிலைய தேன் விட்டு வதக்கி குடிநீரில் கலந்து குடிக்க தொண்டைக்கட்டு, குரல்கம்மல் தீரும். மாவிலையை தீயிலிட்டு அதிலிருந்து வரும்புகையை பிடிச்சா தொண்டைக்கமறல், விக்கல் சரியாகும். மாவிலைய சுட்டு சாம்பலாக்கி வெண்ணெயில குழைச்சு தீப்புண் இருக்குற இடத்துல தடவி வந்தா, புண் குணமாகும்.” பாட்டி சொல்லிக்கொண்டே மாம்பிஞ்சுகளை பக்குவம் செய்து முடித்திருந்தாள். மாங்காய்-மாம்பழம் இவற்றைத்தவிர வேறேதும் பற்றி இதுவரை கேட்டிராத எனக்கு மாமரத்தின் இதர பாகங்களின் மருத்துவ குணங்களை பாட்டி சொல்லிக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் பயனுள்ள விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சந்தோஷமும் கிடைத்தது. அதுமட்டுமில்லாம இது மாம்பழ சீசன் வேற… அதான் நான் பாட்டிகிட்ட டாட்டா சொல்லிட்டு, மாம்பழக் கடைக்கு புறப்பட்டேன். அதாவது, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! குறிப்பு: மாம்பூ – மாம்பூவை பொடியாக்கி புகையிட கொசுக்கள் ஓடிவிடும் மாம்பிசின் – பாதவெடிப்பிற்கு நல்ல மருந்து (வெளிப்புற உபயோகம்) மாம்பிசின்+எலுமிச்சை சாறு – தேமல், படை ஆகியவற்றுக்கு நல்ல மருந்து (வெளிப்புற உபயோகம்)

ANBUDAN
<>KSR<>

Breathe

The simple act of breathing

One of the things all of us take for granted in life is the simple act of breathing. Sure, we know that without it we would not live but it is one of those things that happen unconsciously, automatically as we go about our lives. However, just by concentrating on our breathing technique, you can reap exceptional benefits. Here are 17 things I bet you never knew about breathing..

Conscious Breathing

We are continually instructed to “breathe consciously” when we are in yoga class. Breathing consciously is the essence of yoga as it assists us in connecting with the subtle energy within. It is through the breath that we are able to navigate different levels of consciousness. Moreover, breathing consciously has a biological effect on our mental, emotional, and physical state.

It makes you comfortable with your past

Connecting with your breath is a method for being present. When you concentrate on each aspect of the breathing process, you are present; you let go of the past and future and are focused on the moment inside the breath. This is why breathing consciously is its own meditation.

Breath = Life

If I come up to you and close your nose, you will fight for breath. Our energy level depends in a big part on our breath. The better (fuller) you breathe, the more energy you will have. Taking deeper breaths will bring in more oxygen in to the body and improve your energy levels. Think oxygen cafe!

Slower Breaths mean Better Relationships

Most relationships would be better if people were less reactive. The state of your mind affects the breath the reverse is true as well. When you are angry are breath is fast and shortened. When you are relaxed, your breath is slow and complete. The next time you are arguing with someone try taking longer deeper breaths. Notice how that can quickly reduces anger and allows you to look at the situation from a new perspective!

Deep Breathing helps to improve your posture

Bad posture is often directly linked with incorrect breathing. Try it yourself and as you practise breathing deeply watch how you naturally straighten up. Filling your lungs encourages you to straighten your spine and stand or sit taller.

Deep Breathing helps to regulate weight

If you are underweight, the extra oxygen will help to feed the cells and tissues. If you are overweight it will assist with weight loss. The extra oxygen in the body will help to burn up excess fat more efficiently. When we are stressed, and most of us live day to day in a fairly stressed state, your body tends to burn glycogen instead of fat. Deep breathing triggers the relaxation response which encourages the body to burn fat instead

It helps you move

Focus on breath while making movements also helps in controlling the movements, which reduce the chances of injury. The muscles work in a systematic way with greater coordination with nervous system. Neuro - muscular coordination is better. Yoga recommends smooth, relaxed awareness of inhalation and exhalation during the practice. The mind is focused and the awareness can be concentrated on the positive thoughts.

For a healthy heart

Coherent breathing is basically breathing at a rate of five breaths per minute, which is the middle of the resonant breathing rate range. I achieve this if I count to five inhaling and count to five exhaling. The five-minute rate maximizes the heart rate variability (HRV), a measurement of how well the parasympathetic nervous system is working. The higher the HRV the better, because a higher HRV is associated with a healthier cardiovascular system and a stronger stress-response system. 

In case you are nervous

I used to get pretty nervous before many meetings in the past. One the things that really helped me to turn that around and to have more fun and success in social situations was to use conscious breathing. By doing so I was able to calm down both my body and mind and return to the healthier present moment, instead of being lost in destructive thoughts.

Your breath responds to you

Your breath is the first thing to respond in your body. Your breath will respond and adjust according to what you are thinking, feeling, observing, hearing, tasting, touching, sensing or experiencing at the time. It is intimately connected to your physical, emotional and spiritual state.

What is the depth of your inhale?

Does your normal inhale only reach the middle or upper area of your chest? Or is your normal inhale even shorter stopping around your shoulder, neck and throat area? This is a great place to start developing a greater understanding of your breath by focusing on the depth of your inhale. A full inhale should fill your lungs and expand your abdomen.

70% of waste is eliminated through your breath

70% of our body’s waste products are eliminated via our lungs and the rest through the urine, skin and feces. When the efficiency of our lungs is reduced due to poor breathing less oxygen is available to our cells, it slows down the flow of blood which carries wastes from the kidneys and lungs. Our lymphatic system which fights off viral and bacterial invaders is weakened along with a slower digestive process.

Quality breathing can release fear, anger and sadness

Your breath will become disturbed when experiencing stressful emotions. To prevent these unwanted emotions from being pushed down and trapped in your body, simply breathe into your organs. Breathe into your lungs to remove sadness and grief. Breathe into your kidneys to dissolve fear. Breathe into your liver to dissolve anger. Breathe into your heart to open yourself up to more loving experiences.

Your breath activates your nervous system

When the sympathetic nervous system is activated you are living life with the “accelerator” on full throttle all the time. You are in “fight or flight” mode and constantly releasing stress into your body. On the other hand, the parasympathetic nervous system is like putting the “brake on” to life. It helps slow your body down which in turn allows restoration and rejuvenation. The key to activating your parasympathetic nervous system is to place your full attention onto your breath. 

Your body can’t relax if your mind and breath are racing

Your thoughts are directly linked to the quality of your breathing. Busy, overactive thinking often means short, shallow and quick breathes. By focusing on calming your mind you will automatically be calming your breath and in turn relaxing your body.

Shallow breathing causes memory loss

The Taoists believe that loss of oxygen though shallow breathing ie. your inhale only goes as deep as your throat or top of your lungs, is the primary cause of memory loss in the elderly. Not sure how true this is, and I can’t even remember where I read it but, nevertheless I included it anyway as it certainly got me thinking. Worth exploring.  

Wednesday, September 23, 2015

விஷ்ணு சஹஸ்ரநாமம்

உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.
அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: || 1
பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச || 2
யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம: || 3
ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: || 4
ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 5
அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: || 6
அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || 7
ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 8
ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்|| 9
ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: || 10
அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: || 11
வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12
ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || 13
ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 14
லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15
ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: || 16
உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17
வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18
மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் || 19
மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20
மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21
அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22
குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23
அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24
ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 25
ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: || 26
அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: || 27
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: || 28
ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: || 29
ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30
அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: || 31
பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: || 32
யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்|| 33
இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: || 34
அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35
்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: || 36
அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37
பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38
அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 39
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: || 40
உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: || 41
வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: || 42
ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 43
வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: || 44
ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: || 45
விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: || 46
அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: || 47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்|| 48
ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || 49
ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: || 50
தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: || 51
கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: || 52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53
ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: || 54
ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: || 55
அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்|| 57
மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: || 58
வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 59
பகவாந் பகஹா நந்தி வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: || 60
ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || 61
த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்|| 62
ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: || 63
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: || 64
ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: || 65
ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: || 66
உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: || 67
அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: || 68
காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: || 69
காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: || 70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71
மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || 72
ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: || 73
மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: || 74
ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: || 75
பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: || 76
விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: || 77
ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: || 79
அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: || 80
தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81
சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்|| 82
ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா|| 83
ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84
உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ|| 85
ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி|| 86
குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: || 87
ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: || 88
ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: || 89
அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90
பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: || 91
தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: || 92
ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: || 93
விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: || 94
அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: || 95
ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96
அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: || 97
அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: || 98
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 99
அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: || 100
அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | | 101
ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102
ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: || 103
பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: || 104
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச || 105
ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: || 106
ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: || 107
வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| ................108

Monday, September 21, 2015

தர்ப்பணம் மஹாளய பக்ஷ்சம்

>> தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் <<

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்குஎவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம்எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.