Sunday, May 10, 2015

ஸ்ரீ வைஷ்ணவத் தூண்

ஸ்ரீ வைஷ்ணவத்  தூண் 


​ என்று  நிறைய பேர்  அறிவதில்லை. வித்யாசம் அவரவர்  எண்ணத்தில்  தான்  என்கிறது  வைஷ்ணவம்.  

ஸ்ரீ ராமானுஜர்  இரண்டு கலாசாலைகளை  நிறுவினார். ஒன்று  காஞ்சியில்,  மற்றொன்று ஸ்ரீ ரங்கத்தில். காஞ்சி  ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே  இருப்பதால் அதை வடகலாசாலை என்றும்  ஸ்ரீரங்கக் கலாசாலை  தென் கலாசாலை என்றும் அடையாளம் கொண்டது. கலாசாலை என்றால் அதில்   கற்றுக்கொடுக்க,  தகுந்த பேராசிரியர்கள் வேண்டுமே.  ஸ்ரீ ராமானுஜர்  தனது சிஷ்யர்களில் இரண்டுபேரை   காஞ்சிக்கும் இரண்டுபேரை  ஸ்ரீரங்கத்திற்கும் அனுப்பிவைத்தார். விசிஷ்டாத்வைதம்  கற்றுத்தரப்பட்டது.  

இப்போதெல்லாம்  ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மாணவியருக்கு  வெவ்வேறு  சீருடை  தருகிறார்களே  அதுபோல் வட கலாசாலையைச் சேர்ந்தவர்களின்  நாமம்  பாதமின்றியும்  தென் கலாசாலையோருக்கு நாமத்தில்  மூக்கில் மேல் பகுதியில் ஒரு பாதமும் அடையாளமாகியது.  கலாசாலை  சுருங்கி காலப்போக்கில்  வட கலை  தென்கலை ஆகியது. 

 ஒரு மாணவன்  B.A. படிக்கிறான்  என்று வைத்துக்கொள்வோம். ஒரு  கல்லூரியில்  ஒருமாதிரியும்  மற்றொரு கல்லூரியில்  வேறு  மாதிரியும் அந்தப்  படிப்பை கற்றுக்கொள்வது போல்.  

 அடிப்படையில் வித்யாசம் இரு கலைகளிலும் இல்லை.வித்தியாசங்களும்  மறைந்துவருகின்றன. வடகலையில் சிறந்த ஆசார்யன்  ஸ்ரீ  வேதாந்த தேசிகரும்  தென்கலையில் ஸ்ரீ  ராமானுஜரும் மணவாள மாமுனியும் 
போற்றப்படுபவர்கள். இதில்  மணவாள மாமுனிகளைப் பற்றி  சில  தெரிந்த விவரங்களை  மீண்டும்  ஞாபகப் படுத்தும் வேலை தான்  எனக்கு. 

சிக்கில் கிடாரம் என்று  ஒரு  குக் கிராமம். ஆழ்வார்  திருநகரி அருகே உள்ளது. இந்த ஊரில் பிள்ளை லோகாசார்யர் என்று சிறந்த ஒரு வைஷ்ணவ பக்தர்.  அவருக்கு இன்னொரு  பெயர் கொல்லி காவலதாசர்.  அவரிடம்  சிஷ்யனாக இருந்தவர்  திகழக் கிடந்தான். என்ன  அழகிய  தமிழ்ப் பெயர் அப்போதெல்லாம்  இருந்திருக்கிறது என்று  அறியும்போது அவர்களது மொழிப்பற்றும் , ஞானமும் நம்மைத்  திகைக்க வைக்கிறது.  அப்போதெல்லாம் சிஷ்யன்  என்பவன் இந்தகாலத்தில் நடப்பதுபோல் காலையில் ஆஜராகி மாலையில் வீடு திரும்புபவன் அல்ல.  குருவின் வீட்டிலேயே  அடிமையாக  அவர் வீட்டிற்கு உழைத்து  குரு, குருபத்னி ஆகியோரை திருப்திப் படுத்தி  தான்  கல்வி  ஞானம் பெறவேண்டும்.    குரு  எப்போது அழைத்து உபதேசிப்பார் போதிப்பார்  என்பது தெரியாது. 

மிகவும் பிடித்துப் போய்  இந்த  சிஷ்யன்  அவருக்கு மருமகனாகவே  ஆகிவிட்டான்.  திகழக்கிடந்தான்  மனைவி கர்ப்பமானாள் . அவள்  கர்ப்பமான நாள் முதலாக  அவள்  முகத்தில் ஒரு  தனி தேஜஸ் உண்டாகி ஒளி  வீசியது.  ஊரார் இதைக்  கவனித்து  ''இவள்  வயிற்றில்  யாரோ  ஒரு  மகாத்மா தோன்றியிருக்கிறார்.  ஊர் உலகமெல்லாம்  இனி  நலம்  பெறும். அவர்  வரவால்  லோகத்தில்  அனைவரும்  பாபங்களிலிருந்து விடுபடுவர். பிறப்பு இறப்பு இன்றி ஜன்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் பெறுவார்கள்''  என்று பேசிக்கொண்டார்கள்.  

1370ம்  வருஷம் ஐப்பசி மாதம்  மூல நக்ஷத்ரத்தில் ஒரு  ஆண்  மகவை ஈன்றாள்  அந்தப் பெண். திகழக் கிடந்தான் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கிடந்தான். ஆகாயத்தில் பெருமையோடு பறந்தான்.  குழந்தை வெண்  தாமரை போல்  ஜொலித்தது.  நிறைய தலை முடி. கருநிற மேகம் ஒன்று  கிரீடமாக அமைந்தாற் போல் இருந்தது. அகன்ற ஒளிவீசும்  நயனங்கள்.  

இது  தெய்வீகக்  குழந்தை என்பதில் யாதொரு சந்தேகமு மில்லை  என்று  அனைவரும்  ஒப்புக்கொண்டனர்.    பெற்றோர் அவர்கள்  வழிபடும்  தெய்வமான  அழகிய மணவாளன் தான்  இவன் என்று  அந்தப்   பெயரையே குழந்தைக்கு சூட்டினார்கள். நாளொரு சாஸ்திரமும்  பொழுதொரு  ஸ்தோத்ரமுமாக மணவாளன் வளர்க்கப்பட்டான்.  தக்க காலத்தில் வயதில் உபநயனம் நடந்தது. தந்தை திகழக் கிடந்தானே ஆச்சர்யனானார். வேதம் உபநிஷதம் எல்லாம்  கற்றுத் தேர்ந்தான் மகன். 

ஆழ்வார்கள் வரலாறுகள்  கிடைத்த பாமாலைகள் அனைத்துமே  சிறுவனுக்கு அத்துபடியாயிற்று. 
அடுத்ததாக அவனுக்கு  திருமணம் முடிக்க  தந்தை  பெண் தேடலானார். மணமும்  முடிந்தது. ஞானமும்  பக்தியும் சேர்ந்து  சத்வ குண சீலனாக திகழ்ந்தார்  மணவாளன். உலக ஆசாபாசங்கள்  அணுகவில்லை அவரை.  தந்தை  ஆசார்யனின்  திருவடிகளையே பூஜித்தார். சரணாகதி அடைய  அதுவே போதும் என்று  மகிழ்ந்தார். 

அதிக  காலம்  அவரது தந்தை ஆசார்யன் பூமியில் இல்லை.  திகழக் கிடந்தான் வைகுண்டம் ஏகினார். ஆச்சார்யனின் மறைவினால் கொழுகொம்பை இழந்த   கொடியாக  வாடினார் அழகிய மணவாளன். 

அக்காலத்தில் வாழ்ந்த ஒரு  மகான்,   வித்வான்  ஸ்ரீ சைலேசர்.  பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு மந்திரியாக  இருந்தவர். பணமும் பதவியும் புகழும்  தந்த  அந்த உத்தியோகத்தைக்  காட்டிலும்   ஆழ்வார்களின் பாசுரங்கள்  இனித்தது  ஸ்ரீ  சைலேசருக்கு. எனவே  உத்தியோகத்தை உதறித் தள்ளினார்.  முழுநேரமும் அவரை  ஆட்கொண்டது ஆழ்வார்களின் அருளிச்செயல். ஆழ்வார்களின் பாசுரங்களைத் தேடி அலைந்தார்.  கிடைத்ததை பாதுகாத்தார். படித்து மகிழ்ந்தார். 

திருக்குருகூர்   என்கிற க்ஷேத்ரத்தில்  நம்மாழ்வாருக்கு  ஒரு ஆலயம்  நிர்மாணித்தது இந்த  ஸ்ரீ சைலேசர்  தான். நம்மாழ்வார் எம்மாழ்வார் என்று அவர்  ஸ்மரணையாகவே  தன்னை  அர்ப்பணித்துகொண்ட ஸ்ரீ சைலேசர் அடைந்த பெருமை வாய்ந்த  பட்டம் தான்  '''திருவாய் மொழிப் பிள்ளை''.  

இவரை விடுவாரா மணவாளன்.   ஓடினார் அவரைத் தேடி.  குருவே சரணம் என்று அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் சிஷ்யரானார். 

குருவும்,   சிஷ்யனின் அருமையை அறிந்தவராயிற்றே. இவர்  சாதாரணர்  அல்ல.  இவரால்  வைஷ்ணவ சமுதாயம் ஒரு  மாபெரும் பெருமையை அடையப்போகிறது என்று அவருள் தெய்வம்  உணர்த்தியது. ஒவ்வொரு காரியமும்  நிறைவேற அவ்வப்போது ஒரு மகான்  தோன்றுவார். உலகம் அவரால் உய்யும் என்பது நாமறிந்தது தானே.

ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம்  உலகறிய வேண்டுமானால்  அதற்கு ஒரு புண்ய புருஷன் தோன்றவேண்டுமானால்  அது இந்த  அழகியமணவாளன் தான் என்று  குரு புரிந்துகொண்டார். புளகாங்கிதம் அடைந்தார். பெருமாளே  என்று  அடி  நாபியிலிருந்து அவரது நன்றிக்குரல்  எழும்பியது. இரு கரமும் கூப்பியவாறு  சிரமேல் எழுந்தது. கண்களில் ஆனந்த   பாஷ்பம் சிலிர்த்தது.

ஒரு தாய்ப்பறவை எப்படி  தன குஞ்சின் மேல்  அக்கறை காட்டுமோ  அதைப்போல  குரு  மணவாளனை அணுகி  அவருக்கு  போதித்தார். சிஷ்யன்  ஆழ்வார்கள் பாசுரங்களைக்  கற்றார்.  ஞானிகளின் வியாக்யானங்கள்
 பாஷ்யங்களைக் கற்று  தேனாக  அனுபவித்தார். 

மற்ற சிஷ்யர்கள்   தமது, குரு,  மணவாளனிடம் மட்டும்  பிரத்யேக சலுகை காட்டியதில்  வழக்கம்போல அவரை விரோத பாவத்தோடு  பார்த்தனர். மாறும் உலகம் என்றும்  மாறுவதில்லை  சில விஷயங்களில்.   

''குருநாதா,  ஆச்சார்ய சுவாமிகளே,  ஏன் இந்த பாரபக்ஷம்  எங்களிடம்?''  என்று கேட்டனர்.

''என் அருமை சிஷ்யர்களே,  இந்த மணவாளன்  வேறு யாருமில்லை, ஆதி சேஷனின் அவதாரம், போதுமா?''  என்றார் திருவாய் மொழிப் பிள்ளை. வாயடைத்தது அவர்களுக்கு.

'' இவன் ஆதிசேஷன். ஆயிரம் சிரங்கள் கொண்டவன், ஆயிரம் நாப்படைத்தவன். ஒரே நேரத்தில் ஆயிரம்  கலைகளையும்,  ஞானத்தையும்  க்ரஹிக்கும்  சக்தி வாய்ந்தவன்.  எனவே   இந்த  அழகிய மணவாளனைப்  பொன்னே போல் போற்றி அவனது திறனை, திறமையை  வளர்த்து பயனடைய வேண்டியவர்கள் நாமும்  நமக்குப் பின்னால்  பல கோடி  வைஷ்ணவர்களும்.  வேருக்கு நீரூற்றி  விருக்ஷமாக்குவோம்.  பல பறவைகள்,  மாந்தர் பின்னர்  கனிகள்,நிழல் எல்லாம் அநேகம் பெறுவர்'' என்றார்  குரு.. அவரால் '' யதீந்திர பிரவண'' என்ற பட்டமும் பெறுகிறார். 

 படிப்படியாக நாளுக்கு நாள்  அழகிய மணவாளனின்  பக்தி ஸ்ரீ ராமானுஜர் மேல்  பல மடங்கு வளர்ந்து கொண்டே வந்தது.

அழகிய மணவாளரின்  ''யதிராஜ  விம்சதி''   என்கிற  ஸம்ஸ்க்ரித நூல்  விலை  மதிப்பற்ற  பொக்கிஷமாக தமிழக  ஆழ்வார்களில்  முதல் வடமொழி  ஸ்தோத்ரமாக வெளிவந்தது. வைஷ்ணவ தத்வ ஸாராம்ஸத்தை வெளிக்கொணர்ந்தது. 

மோக்ஷம் வேண்டினால்  அதற்கு ஒரே வழி கெட்டியாக  ஸ்ரீ  ராமனுஜரின்  திருவடிகளைப்  பிடித்துக்கொண்டு சரணாகதி அடைவதே  என்று முரசு கொட்டியது. 

அழகிய மணவாளன்   தனது ஆசார்யன்  திருவாய் மொழிப்பிள்ளையிடம் கல்வி கற்று குருகுலவாசம் முடிந்து வணங்கி  அவர்  ஆசியுடன்  சில  சிஷ்யர்கள்  தொடர ஸ்ரீ ரங்கம்  பயணமானார். முக்ய சிஷ்யர்  பொன்னடிக்கால்  ஜீயர், மற்றொரு பெயர்  ராமானுஜ ஜீயர்.  ஜீயர்கள்  மடம் என்கிற  வைஷ்ணவ  சம்ப்ரதாயம்  மணவாளன் மூலமே  தொடர்ந்தது.  வானமாமலையில்  இன்றும் தொடர்கிறது. 

ஸ்ரீ ரங்கத்தில்  மணவாளன் ஆழ்வார்கள் பற்றியும்  அவர்களது  பொய்யாத  இனிய தமிழ்ப் பாசுர பொன் மொழிகளையும்  பரப்பினார். 

துக்கம்  தரும் செய்தி வந்தது ஸ்ரீரங்கத்துக்கு.  திரு வாய் மொழிப் பிள்ளை பரமபதம் அடைந்தார் என்று.  ஆனால் அவர் பரம சந்தோஷத்துடன் தான்  சென்றார்.  இனி  வைணவ உலகத்துக்கு அதைத் தாங்கும்  ஒரு  நிலையான  தூண்  ஒன்று கிடைத்துவிட்டது.  பல்லாயிரம் ஆண்டுகள் இனி வைணவ சம்ப்ரதாயம் ஒரு கவலையும் படத் தேவையே இல்லை  என்று  அவருக்கு  திருப்தி. 

மணவாளன்  திருக்குருகூர்  சென்றார். ஆச்சர்யனுக்கு  செலுத்தவேண்டிய  அந்திம  கிரியைகள்,  மரியாதைகள் செவ்வனே நடந்தன. திருக்குருகூர்  வாசிகள் பாக்கியசாலிகள்.  மணவாளன் சில காலம் தங்கி அவர்களுக்கு  திருவாய் மொழி உபதேசம் வியாக்யானங்கள்  அவர்  வாய் மூலம் ஆறாகப்   பெருக அவர்கள்  மகிழ்ந்தனர்.
 
ஸ்ரீரங்கம்  பிறகு திரும்பியவர்   ஓலைச்சுவடிகள் தேடி கண்டுபிடித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தைப்   பரப்பினார். 

''எங்கே என்னை மறந்துவிட்டாய், இங்கே வா''   என்று  திருவேங்கடவன்  மணவாளனை அழைத்ததும்  அங்கே சில காலம் தங்கினார். 

திருப்பதியில் அடிவாரத்தில் தனது சிஷ்யர்  வானமாமலை  பொன்னடிக்கால் ஜீயர் சுவாமிகளோடு  தங்கி கோவிந்தராஜனை வழிபட்டார். 

அன்றிரவு திருமலை ஜீயர்  ஒரு அதிசய கனவு கண்டார்.   ''பள பளக்கும்   பொன்னிற மேனி கொண்ட ஒரு  ஆசார்யன்  சாய்ந்துகொண்டிருக்க அவர்  கீழே ஒரு  திரிதண்டி சுவாமிகள் தோன்ற'' என்ன  ஆச்சர்யம்   யார் இவர்கள்''  என்று  விசாரிக்க  செய்தி கிடைத்தது.  

திருமலையில்  ஜீயரிடம்  அவரது சில  சிஷ்யர்கள்   ''ஸ்வாமின், திருப்பதியில்  கீழே ஒரு  ஆசார்யசுவாமி,  அவரோடு  அவர் சிஷ்ய சுவாமி    ஆகிய இருவர்  வந்துள்ளார்கள்.  கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தில் வழிபட்டதைக் கண்டோம்.  அவர்களைப்  பார்த்தாலே பயமும் பக்தியும்  எங்களை அறியாமல் தோன்றியது சுவாமி '' என்றனர்.

திருமலையிலிருந்து  ஜீயர்  தனது சிஷ்யர்கள் புடை  சூழ கீழே இறங்கிவந்தார். அழகிய மணவாளனை   கோவில் மரியாதைகளோடு வரவேற்றார். 

திருமலையிலிருந்து மணவாளன் காஞ்சி சென்றார். என்ன ஆச்சர்யம்.  அங்கே  கனவில்  ஸ்ரீ ராமானுஜர்  காட்சியளித்தார். 

''மணவாளா,  நீ  செய்யவேண்டியது ஒன்று உண்டு.   உடனே ஸ்ரீ பாஷ்யத்தை  கவனமாகப் படி.  தெரிந்துகொள். அதை உனக்கு  தக்கவாறு  கற்பிக்கக்  கூடியவர் கிடாம்பி  நாயனார்  என்பவரே.  அவரைத்தேடிச் செல்''   என்ற  உத்தரவு ஸ்ரீ  ராமானுஜரிடமிருந்து வந்தது.

கிடாம்பி நாயனாரை  அடைந்தார்  மணவாளன். தெண்டனிட்டு அவரை குருவாக  ஏற்றுக்கொண்டார். குரு அவரை  ஒரு ''வித்வத் சதஸில்'' கலந்துகொள்ளச்  செய்தார். 

வித்வத் சதஸ் என்பது பல  அறிஞர்கள்  வந்து  தங்களது  கல்வி கேள்வி ஞானத்தை வெளிப்படுத்தி தர்க்கம், கலந்துரையாடல் போன்றவை நடத்துவது.  சிறந்த  வித்வான்கள், பண்டிதர்கள், வேத வித்தகர்கள்  வந்து பங்குகொண்டு  கருத்துகள், வியாக்யானங்கள் அங்கே பரிமாறப்படும். கேள்விகளுக்கு  விடை சொல்வார்கள்.   பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே சிறப்படைவார்கள். 

அழகிய மணவாளனின் பேச்சு, அவர் உரைத்த கருத்துகள்,  வினாக்களை  தொடுத்தவர்களுக்கு அவரது அருமையான விளக்கங்கள், விடைகள்,  அனைவராலும் புகழப்பட்டது. கிடாம்பி நாயனாருக்கு  தெரிந்துவிட்டது  மணவாளன்  சாமானியர் அல்லர்  என்று. 

தனியே  மணவாளனைக் கண்டு சந்தித்தார் கிடாம்பி.

''சுவாமி  தாங்கள்  யார்.  உங்கள்  உண்மை ஸ்வரூபம் எனக்கு  காட்டி அருளவேண்டும்'' என்று வேண்டினார். 

''அதற்கென்ன   அப்படியே என்று  மணவாளர்  சிரித்துக்கொண்டே சொல்ல  கிடாம்பி  நாயனார் முன்  கண  நேரத்தில்   ஆயிரம்  படங்கள் கொண்ட ஆதிசேஷன்  குடையாக நிற்க சங்கு சக்ரங்களோடு ஸ்ரீமன்  நாராயணனே காட்சி தந்தார்.

ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரத்தில்  ஸ்ரீ கிடாம்பி  நாயனார்  ஒருவரே  இப்படி  அழகிய மணவாளனின் விஸ்வரூப  தரிசனத்தைக் கண்டவர்.   வேறெவரும் இல்லை  என்பது ஆச்சரியம். 

காஞ்சியில்  தங்கிய  காலத்தில்  மணவாளன்  அநேக  கைங்கர்யங்களை புரிந்தார். ஒரு காலத்தில் இனி  இந்த வாழ்வில்  நான்  பரமனின் சேவையில் இடைவிடாது, இடரேது மின்றி உழைக்க  சன்யாச மார்க்கம் ஒன்றே சிறந்தது என முடிவெடுத்தார். 

சடகோப யதி  என்ற  ஞானி ஒருவர்  காஞ்சியில் இருந்த காலம்  அது.   அவரைச் சரண் அடைந்து  அழகிய மணவாளன்  துறவு பூண்டார். அவரால் தீக்ஷை பெற்ற  அன்றுமுதல்  அழகிய மணவாளன்  ''மணவாள மாமுனிகள்'' ஆனார். ''பெரிய ஜீயர்''.  இந்த  மணவாள மாமுனிகள் என்ற பெயர் உலகுள்ளவரை  தமிழுள்ளவரை,  கடைசிப் பாசுரம் எதிரொலிக்கும் வரை சூரிய சந்திரர்கள் உள்ளவரை  நிலைக்குமே. 

பெரிய ஜீயர்  ஸ்ரீரங்கம்  திரும்பினார்.   பல்லவராயன் மடத்தில் தங்கினார். திருமலை ஆழ்வார் மண்டபம்  அவரால் உருவானது.  அந்த  மண்டபத்தில் குடியேறினார்.  தினமும்  அவரது தேனமுதக் குரலில்  ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் அங்கே  நடைபெற்றது.  கேட்டவரெல்லாம்  பாக்யசாலிகள். 

பசி எடுத்துவிட்டது அவருக்கு.   நம்மாழ்வாரைக் காணவேண்டும் என்ற பக்திப் பசி, பாசுரப்  பசி. திருக்குருகூர் சென்றார். ஆழ்வாரைக் கண்குளிர  தரிசனம் செய்தார். பெரியஜீயர் என்கிற பேர்  எட்டு திக்கும்  பெருமையோடு சென்று சேர்ந்தது. அவர் பெருமையில் மனம் புழுங்கி சில  அற்ப ஜீவிகள்  பொறாமைப் படத்தானே செய்யும்.அவரைக் கொல்ல  திட்டம் தயாரானது.

நிசப்தமான  ஒரு  நள்ளிரவில்  ஊரே  அடங்கிய   அமைதியான நேரத்தில்  மணவாள மாமுனிகள் தங்கியிருந்த ஆஸ்ரம குடிசை தீப்பற்றி எரிந்தது.    விஷயம்  பரவியது.  தூக்கத்தை விட்டு  ஊரே  திரண்டது. எல்லோரும் காண  ஒரு  கரு நாகம்  பற்றியெரியும் குடிலிலிருந்து வெளியேறியது. ஒரு கண நேரத்தில்  அந்த பெரிய  கருநாகம்  பெரிய ஜீயராக தோன்றி மறைந்தது. 

தீய எண்ணம் கொண்ட  தீங்கிழைத்தோர்  வெட்கித்தலை குனிந்தனர்.  பெரிய ஜீயர் மகத்வம் புரிந்தது.  திருக்குருகூர் மக்கள்  சிரமேற் கரம் குவித்தனர். ''பெரிய ஜீய சுவாமிகளே''  என்று  பிரார்த்தித்தனர்.  

அந்த ஊர்  ராஜாவின்  உதவியுடன் திருக்குருகூர்  ஆலயம்  புதுப்பிக்கப்பட்டது.  பெரிய ஜீயர்  ஸ்ரீரங்கம் திரும்பினார்.

அங்கு தான்  எறும்பி  என்கிற ஊரில் வாழ்ந்த  அப்பா  என்கிற வைஷ்ணவர் அவர்  சிஷ்யரானார். 

காஞ்சியில்  ஒரு  மஹான். அவரை எல்லோரும்  அன்பாக  அண்ணா  என்றழைத்தார்கள். சிறந்த  வைஷ்ணவ  ஞானி. அவருடன் தர்க்கம் செய்வது  எளிதல்ல.  எந்த  கருத்தையும்  ஆழ்ந்து சிந்தித்து  தக்க  விடை கூறி  எதிரிகளின் வாதத்தைப்  பொடி செய்பவர்  என்பதால் அவருடன் வாதம் செய்பவர்கள் அவரை பெருமையுடன்  பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்  என்று அழைத்தனர். அவர்  திருமலையில் தங்கி  வெங்கடேச பெருமாளுக்கு  திவ்ய  கைங்கர்யம் செய்து  வந்தார்.  ஒருநாள்  அவரிடம்  ஸ்ரீரங்கத்திலிருந்து  வந்த ஒருவர்  பெரிய ஜீயர் பற்றி சொல்ல அந்த  கவனத்தில் பிரதிவாதி பயங்கரம், பெருமாளுக்கு    தீர்த்தம்  தக்க நேரத்தில்  சாதிக்கவில்லை.  மேலும் தீர்த்தத்தில்  வாசனை திரவியமும் கலக்கவில்லை. இதால் அவர் குன்றிப்போய்  மிக்க விசனம் உண்டாயிற்று. 

''பெருமாள்  கைங்கர்யத்தில்  தவறு செய்துவிட்டேனே''  என்று  கலங்கினார்  பிரதிவாதி பயங்கரம். என்ன ஆச்சர்யம்?  வாசனை திரவியங்கள் கலக்காமலேயே  புனித தீர்த்தம்  கம கமவென்று  மணத்தது. அசரீறி  அவர் காதில் ஒலித்தது. ''உன்  தீர்த்தத்தை நான் ஏற்றுக்கொண்டேன்'' .

அந்த க்ஷணமே  பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ ரங்கம் அடைந்து  பெரிய ஜீயரை வணங்கி  ஏற்றுக்கொண்டு அவர்  சிஷ்யரானார். 

பெரிய ஜீயர்  விட்டுச் சென்ற  செல்வங்கள் நமக்கு என்ன  தெரியுமா?

தேவராஜ  மங்களம்.
ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச ஸ்துதி 
யதிராஜ விம்சதி 
உபதேச ரத்னமாலை 
திருவாய் மொழி நூற்றந்தாதி.
ஆரத்தி பிரபந்தம் 
திரு ஆராதனம் க்ரமம்  

வயதேற ஏற உடல் குன்றியது பெரிய ஜீயருக்கு.  உள்ளம்  உற்சாகத்தோடு தான் இருந்தது. 

திமு திமுவென்று கூட்டம்  எப்போதும்  பெரிய ஜீயர் செல்லும் இடமெல்லாம்  சேரும். ஒருநாள் மண்டபத்தில்  வழக்கம்போல்  பெரிய ஜீயர்  ரங்கநாதன், ரங்கநாயகி முன்பு அமர்ந்து பிரவசனம் செய்துகொண்டிருக்கும்போது,  சம்பாவனை செய்கின்ற நேரம்  வந்தது. அப்போது  ஒரு  ஐந்து வயது குழந்தை கோஷ்டியிலிருந்து  ஓடி வந்தது. 
எல்லோரும்  அதிசயிக்க  ''நான்  ரங்கநாதன்  வந்திருக்கேன் என்று சொல்லி  கணீரென்ற குரலில்   
''ஸ்ரீ சைலேச  தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் 
 யதீந்திர பிரவணம் வந்தே ரம்யாஜ மாத்ரம் முனிம்''

''திருவாய் மொழிப்பிள்ளையான  ஸ்ரீ சைலேசரின்  பெட்டகமான  ஸ்ரீ  மணவாள மாமுனிகளுக்கு  என்னுடைய
  நமஸ்காரங்கள். அவர் தான் ஞானம், பக்தி மற்ற  சிறந்த  குணங்களின்  சாகரம், இருப்பிடம், எப்போதும்  ராமனுஜரின்  த்யானத்தில்  தன்னை இழந்தவரல்லவா?''. 

இந்த  ஸ்லோகம்  சொல்லிய  குழந்தை  எங்கே ?  திடீரென்று தோன்றிய குழந்தை மாயமாய்  மறைந்தது.

அங்கிருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது. வந்தது ரங்கநாதனே என்று.   அன்றுமுதல் அந்த ஸ்லோகம்  ஆச்சர்யனின் தனியனாக,  ஸ்லோகமாகி விட்டது.

அன்று முதல் இன்றுவரை  எங்கெல்லாம்  பிரபந்தம்  பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் தென்கலை  வைஷ்ணவ பக்தர்களால் முதலிலும் முடிவிலும் இந்த ஸ்லோகம்  சொல்லப்படுகிறது.

பிரபந்தம் கேட்டவாறே  தனது 74 வது வயதில்  1444ம்  ஆண்டு   ருத்ரோத்காரி  என்ற  தமிழ்  வருஷத்தில், மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய  கிருஷ்ணபக்ஷ  த்வாதசி அன்று திருநாடு எய்தினார். அவரது பூத உடலை  பத்மாசன கோலத்தில் அமர்த்தி சிஷ்யகோடிகள்  காவிரிக்கரைக்கு  ஒரு  புஷ்ப பல்லக்கில் பக்தியுடன் சுமந்து ஒரு சந்யாசிக்குறிய முறையில் அந்திமக்ரியைகள் செய்தனர். 
அந்த புனித இடம்  இன்றும் அவரது  பொற்பாதுகை  கொண்ட  க்ஷேத்ரமாக   போற்றி வணங்கப்படுகிறது. மணவாள மாமுனிகளைப் பற்றி இன்னும்  நிறையவே  சொல்ல வேண்டியிருக்கிறது

Saturday, May 9, 2015

India the most tolerant country

Saudi Arabian columnist Khalaf Al-Harbi calls India the most tolerant country in the world.

Those who claim that India is becoming an intolerant nation must read this. Khalaf Al-Harbi is a liberal columnist and a thinker from Saudi Arabia . His liberal views and objective columns on various issues are a big hit and widely discussed across the world.

In his latest column in 'Saudi Gazette', he heaps praises over India describing it as the most tolerant nation on the earth. In his column titled ' India - A country that rides elephants', Khalaf Al Harbi writes: "In India , there are more than 100 religions and more than 100 languages. Yet, the people live in peace and harmony. They have all joined hands to build a strong nation that can produce everything from a sewing needle to the rocket which is preparing to go to Mars. I must say that I feel a bit jealous because I come from a part of the world which has one religion and one language and yet there is killing everywhere. No matter how the world speaks about tolerance, India remains the oldest and most important school to teach tolerance and peaceful co-existence regardless of the religious, social, political or ethnical differences."

He goes on to state that the stereotypical picture of India in the minds of many is linked to poverty and backwardness which is a totally false picture which has nothing to do with reality.

Al-Harbi adds that it is a picture which was created by our extreme judgment of things. When we were poor before the era of oil, the picture of India in our minds was linked to richness and civilization but immediately after our financial conditions improved, we converted India 's picture to one of poverty and backwardness.

 If we had any sort of wisdom, we would never have been occupied by India 's richness or poverty. Rather, we would have been impressed by India's immense ability to contain and respect the conflicting ideologies and thoughts so that people would flood the streets without any feeling of fear or anxiety.If we took all the Arabs and placed them in India as part of a grand experiment, they would not make up any recognizable majority. They would, instead, dissolve in a fearless human ocean. Their nationalistic trends and sectarian extremism would also dissolve with them and they would realize that nothing in the world can justify the killing of their brothers and sisters.

He also tries to tell the Arab world that diversity and co-existence of thoughts and beliefs are in the DNA of Indian culture. He writes, " India is one of the largest and oldest democracies in the world. It had never known huge differences in religions or races. The country does not disdain its poor people nor hate its rich citizens. It is a nation which is proud of Gandhi and the British colonialists at the same time."

"The Indian people are distinguished in many ways. They are great people. Nobody can deny this fact except the envious or the ungrateful."
"The only problem with the hypothetical trip of the Arabs to India is that they may contaminate the Indians and remind them of their religious and ethnical differences. The Arabs may be able to convince the Indians that their religious and racial disparities may be enough of reason to kill each other."

Friday, May 8, 2015

திருஅருட்பிரகாச வள்ளலார்

திருஅருட்பிரகாச வள்ளலார்
 
ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம்
உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, 
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே 
அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்து
வெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் 
சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் 
வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச 
வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்
அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 
5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற
தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க 
உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்
பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். 
அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் 
படுகிறது.




திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். 
திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். 
இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், 
சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும்
 வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை 
எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் 
என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் 
கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத 
தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து 
அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் 
கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் 
பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த 
சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல 
கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத 
ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு 
வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த 
சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் 
பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல
 ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு 
பாடலில்,
பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே
என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் 
உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று 
வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் 
பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை
வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல 
பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் 
முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி 
இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி 
பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் 
ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல

செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை

மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர்

வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி 
நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே 
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே 
மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த 
உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் 
சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே
ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய 
வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு 
பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள்.
 ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் 
முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, 
ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் 
நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் 
பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த 
முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும்
 அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை 
கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி 
மார்க்கமாகும்.
ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா

ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை.

ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல்

பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே

சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை

எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் 
பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு 
அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் 
உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி 
உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட
 பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் 
கொண்டு வருகின்றது.

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே
ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம 
லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் 
பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் 
வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற 
வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து 
பெறுவோமாக!

Wednesday, May 6, 2015

​ஸ்படிகமணி மாலை

ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?
கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
​​


ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ? பார்க்கலாம். பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும்.

Image result for ஸ்படிகமணி மாலை photo
அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத,
உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது.
இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத
சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .
இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் ,தனியாக தெரியாது.
முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.

Image result for ஸ்படிகமணி மாலை photo
முதல் தரமாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.300 முதல் கிடைக்கிறது.
அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது. 
பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல.
துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ?
 
மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?
சராசரியாக 21,600 மூச்சாகும்.
நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால்
இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்).
இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.
அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை
நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.
ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.
அதனால் என்ன ?
தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு ,
தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும். மேலும் ..ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது ,
அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர்  கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் ,
அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும்.
(இது உபாசகர்களுக்கு பொருந்தும்.)
இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும்.
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்)
கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது.
கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள்.   
              

வாழை மரத்தின் ரகசிய முறைகள்

வாழை மரத்தின் ரகசிய முறைகள்


1. தரித்திர பிணிகள் விலகஅமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.

வாழை மரத்தின் ரகசிய முறைகள்

2. திருமணம் தடை விலகதிருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.

3. சர்வ தரித்திரங்கள் விலகஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)

4. குழந்தை பாக்கியம் பெறகுழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

5. பித்ரு தோஷம் விலக100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.6. செல்லவம் மேலும் பெருகசம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.

7. அன்ன தரித்திரம் விலகஅட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.

8. வியாபார விருத்தி பெருகஇதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.

9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குள விருத்தி அடையும்.

10. பிள்ளைவரம் பெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்

Monday, May 4, 2015

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்?

ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு- மஹா பெரியவா

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி 
தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் 
ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.


''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? 
ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத 
ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, 
யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து 
விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் 
இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக 
எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் 
அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. 
பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு 
அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு 
கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த 
உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - 
அதாவது 'இறுதியான வேள்வி' என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக 
சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது' என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது 
அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்
கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த 
உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. 
ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து 
அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, 
தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் 
ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்' என்று 
பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் 
இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா 
அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், 
கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க 
முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் 
என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக 
கானம் செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக 
இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. 
அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு 
இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, 
பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட 
அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் 
குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக 
முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி 
ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்' பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும் 
மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் 
மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்' இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட 
மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் 
இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத 
லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக 
இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், 
மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி 
எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண 
வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் 
அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது 
என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் 
காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் 
நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை 
பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், 
வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் 
சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்' என்று சரீரத்தைக் திட்டுவதுகூட 
தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- 
சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. 
'' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு 
இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் 
என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை 
ஓம்பலானேன்'' என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை 
விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்' பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்
தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் 
கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 
உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் 
ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் 
ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் 
பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் 
வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை 
வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே 
தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த 
body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் 
செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் 
ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த 
சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் 
வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எ
ந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, 
ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்'' என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை 
(தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை 
அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை 
போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி 
வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் 
கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், 
தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை 
பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் 
பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய 
கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் 
ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் 
அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் 
செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?' 
என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே 
சேர்பிப்பிக்ப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் 
முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே 
நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது