சக்தி ------ சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக, தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.
சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர். சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள். முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ஆட்சியானது சிறப்புற்றிருக் க வேண்டும். என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும், கலை ஞானங்களைப் பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும், வாழ்வை ஆற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர். அவதாரபுருஷர்களாக, சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி வந்தனர். இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும், கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும். ஜகதம்பா; உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான இராஜராஜேஸ்வரி [பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும், மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது. இதுவே சக்தியின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம், வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும். சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுக ின்றது. சக்தி இன்றேல் சிவன் இல்லை, புறச்சமயங்களின் தாக்குதலால் சக்திக்கு தனி உரிமை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையாலும் புராணங்களின் செல்வாக்கு நிலையாலும் சாக்தம் என்ற மதம் உருவாகியது. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதமே சாக்தம் ஆகும். சைவம் தத்துவநிலையில் சக்திக்கு இடம் கொடுத்தது. முதன்மை வேறுபாடே இருமதத்திற்கும் உள்ள வித்தியாசம். பிருங்கி முன்வர் சிவத்தையன்றிச் சக்தியை வழிபடுவதில்லை. சாக்த சமயம் அம்மன் வழிபாட்டை புதிய நிலையில் வகுத்துக்காட்டின. அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது கோடுகளாலான யந்திர வழிபாடாகும். சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை "சிறீசக்கர பூசை" என்பர். இதனை ஸ்ரீவித்யோபாசனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இது 3 வகைப்படும். அதில் பூப்பிரஸ்தார யந்திரமே இலங்கையில் காணப்படுகிறது. ஹரப்பா காலத்திற்கும் குப்தர் காலத்திற்கும் இடையில் சக்தி வழிபாடு கருத்தூன்றி இருந்ததேயன்றி சிறப்பான வழர்ச்சி பெறவில்லை. சக்தி என்ற கருத்து மக்களிடையே நிலையூன்றி இருந்தது. இக் கருத்தை ஆதரிக்குமாற்போல இருக்கு வேதம் துணைநின்றது. சக்தியை இயக்குசக்தி, இயங்குசக்தி என வகைப்படுத்தலாம். இயங்குசக்தியும் இயக்குசக்தியுமாயுள்ள தெய்வம் சூரியன். அவனுக்குரியது சாவித்திரி மந்திரம் அல்லது காயத்திரி மந்திரம் ஆகும். சவிதா என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்பது பொருள். உலகை இயக்குபவன் ஆதலால் இயக்குசக்தி சூரியனிடம் உண்டு. அவனை இயக்குகின்றவள் உஷையும் அக்கினியும் ஆகும். உஷை தாய் என்றும் அக்கினி காதலி எனவும் போற்றப்பட்டனர். வேத காலத்திலும் சக்திவழிபாடு இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ஆகமங்கள் தோற்றம் பெற்றன. ஆகமங்கள் உருவம் அமைத்து வழிபடும் நிலையை ஊக்குவித்தன. உருவங்களில் சக்திக்குரிய இடப்பாகத்தையும்வரையறுக்க தவறவில்லை. அர்த்தநாரீஸ்வரர் உருவம் சக்திக்குரிய சமபங்கம் கொடுத்த தன்மையை முன் வைக்கின்றது. சிவனுக்குரிய நிலையை உருவ அமைதியை எடுத்துகாட்டும் இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றின. இவை சிவனால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சக்திக்குரிய ஆகமங்கள் இருபத்தேழு தோற்றம் பெற்றன. இவை சக்தியால் அருளப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவனுக்கு நவசக்திகள் உண்டு. அவை வாமா, ஜேஸ்ட்டா, ரெளத்திரி, காளி, கல்விகரணி, பலவிகரணி, சர்வபூதமணி எனப்படும். இக்காரணத்தால் 9 எண்வரக்கூடிய 27 ஆகமங்கள் தோற்றம் பெற்றது. பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள். அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன. அடுத்த நிலையில் அம்மன் வழிபாட்டில் பலியிடுதல் சிறப்பான தொன்று. கர்ப்பூராதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் செம்மறியாடு, ஒட்டகம், பூனை, எருமை முதலியவற்றை பலியிடும்படி கூறப்படுகிறது. உண்மையில் இவைகளைப் பலியிடுதல் அல்ல. இவைகளின் குணங்கள் மனிதனிடத்தில் உள்ளன. அக்கெட்ட குணங்களை மனிதன் பலியிட வேண்டும். அங்கேயே நல்லொளி தெரியும். ஒளியைத் தாங்கியுள்ள தீபம் அம்பாள் எனப் போற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடும் அம்பாளுக்கே ஆயிற்று. பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள். இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றி இருக்கலாம். குப்தர் காலத்தில் சக்திக்குரிய கோயில்கள் உண்டு. சந்திர குப்தனுடைய நாணயத்தில் சிங்கத்தின் மீது அம்மன் எழுந்தருளியிருக்கும் நிலை பொறிக்கப்பட்டுள்ளது. குப்த மன்னரே பெண் தெய்வங்கட்கு விக்கிரம் அமைக்கும் பாணியை தோற்றுவித்தனர். அதன் சாயலாக தமிழ் நாட்டில் பெண் தெய்வங்களுக்கு விக்கிரகம் அமைத்தல் முறை பின்பற்றப்படடு பின் வந்த காலங்களில் பெரிய மண்டலங்களுடன் கூடிய ஆலயங்கள் தோற்றம் பெறலாயின. காளிதாச மகாகவியும் சக்திமீது பல பாடல்களை பாடியுள்ளார். இதிகாச புராணத்தில் தாட்சாயினி, பார்வதி பற்றிய கருத்துக்கள் உண்டு. சிவ புராணத்தில் உமை தன்னை பிரமமாகவும், பேரொளியாகவும் பரந்த இவ்வுலகமாகவும் காரண காரியமாகவும் எல்லாமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றது. மார்க்கண்டேய புராணம் சக்தியின் பெருமைகள், வடிவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் புராணங்களது குறிப்பின்படி சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் 3 தெய்வங்களினதும் பேரொளியிலிருந்து சக்தி தோற்றம் பெற்றாள் எனக் குறிப்பிடுகின்றது. தென் இந்திய வரலாற்றுக்காலங்களில் சங்ககாலத்திலிருந்து சக்தி வழிபாடு சிறப்படைந்திருந்தது. பாலை நில மக்கள் கொற்றவையை வழிபட்டிருந்தனர். அக்கால நூலின் "ஓங்கு புகழ் காமர்ச்செல்வி" எனவும் திருமுருகாற்றுப்படை வெற்றிவேல் போர்க்கொற்றவை எனவும் குறிப்பிடுகின்றது. மணிமேகலை, சிவப்பதிகாரம் போன்ற நூல்களில் சக்தியானவள் காளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை என்ற பெயர்கள் உண்டு. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றி பாடும்போது சக்தியினையும் போற்றிப் பாடியிருந்தமை குறித்தற்குரியது. பல்லவர் காலப்பகுதியில் சக்திவழிபாடு சைவத்துடன் இணைந்து வளர்ந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் ஆதாரப்படுத்துகிறது. " அம்மையே அப்பா ஒப்பிலாமணியே.. மங்கயர்க்கரசி.., பிடியதனுருவுமை.., மாதர்ப்பிறைக்கண்ணியானை..," இதைவிட சங்கரரது பிரபஞ்சசாரம், சௌந்தர்யலகரி போன்ற நூல்களிலே சக்தி போற்றப்படுகின்ற ன. பல்லவர் காலத்தின் பின்பும் சக்திவழிபாடு சிறப்புற்றிருந்தது. சோழர் காலத்தில் சக்திக்குரிய தலங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் ராஜராஜேஸ்வரியையும், பாண்டியர் நாயக்கர் மீனாட்சியையும் வழிபட்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி கோயில் முழுமையாக அமைவுபெற்றிருந்தது. குமரகுருபரர் சகலகலாவல்லிமாலையையும் அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியையும் சக்திமீது பாடினர். கஜபாகு மன்னர் காலத்தில் கிராமிய வழிபாட்டின் அம்சமாக கண்ணகி வழிபாடு தோற்றபெற முத்துமாரி அம்மன் வழிபாடும் கிராமிய வழிபாட்டில் தன் இடத்தை எடுத்துக் கொண்டது. இம்முத்துமாரி காத்தவராயனின் தாயாகவும் காணப்பட்டாள். இவளுக்கு கரகமெடுத்து நேர்த்திக்கடனை கிராமிய மக்கள் நிறைவேற்றினர். இவள் முத்துமாலையை கோபத்தால் வீசியபோது அம்பாள் நோய் தோன்றியதெனவும் குளிர்த்தி, கரகம் முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதால் நோய்தீர்ந்தது எனவும் கர்ணபரம்பரைக் கதையொன்று கூறும். பிரதேசத்துக்கு பிரதேசம் கிராமத்திற்கு கிராமம் அம்மன் வழிபாடு சிறப்புப்பெற்றது. பொதுவாக மக்கள் கரகம், காவடி, குளிர்த்தி என்பவற்றால் வழிபாட்டை நிறைவேற்றுகின்ற னர். மேற்கூறிய பெண்தெய்வ ஆலயங்கள் சீரும் சிறப்பும் பெற்று ஆகம முறைப்படியாக பெரிய ஆலயங்களாக உருப்பெற்றன. இந்தியாவின் வட நாட்டிலேயே மிகுதியான செல்வாக்கை சக்தி வழிபாடு பெற்றுள்ளது. அச்செல்வாக்கு தென் நாட்டிலும் வலுப்பெற்றுள்ளது. உதாரணமாக நவராத்திரியை தென்னாடு பெற்றுக் கொண்டது. தசரா என்னும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடுவது சான்றாகிறது. வட நாட்டில் வாழ்ந்த
[24/01 06:13] +91 99528 51512: காளிதாசர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்றோர் அம்பாள் உபாசகர்களே. குமரகுருபரர், அபிராமிபட்டர் போன்றோரும் தென்நாட்டு அம்பாள் உபாசகரே. "தனம் தரும் கல்வி தரும்..." என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். இவ்வாறான சக்திக்குரிய சிறந்த விரதமாக நவராத்திரியையும், கணவனைப்பெற கார்த்தியாயினி விரதமும் கன்னிப்பெண்கள் அனுஷ்ட்டிப்பர். கேதாரகௌரி விரதம் உமை சிவனை அடைந்த வரலாற்றைக் கூறுகிறது எனலாம். 20ம் நூற்றாண்டிலே அம்பாள் வழிபாடு சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதைக் காணலாம். வீடுகள், பாடசாலைகள், வேலைத்தளம் என்பவற்றில் நவராத்திரி கொண்டாடப்படுகிற து. இவ்வாறு வரலாற்று நோக்கிலே அம்மன் வாழிபாட்டினைப் பற்றிக்கூறலாம். ஸ்ரீசக்ரம் ஸ்ரீசக்ரத்திற்கு 43 முக்கோணம். அவை முறையே சிவகோணம் - 3, சக்திகோணம் - 5, அஷ்டதளம், ஷோடச தளம், மூன்று வலயங்கள், 4 - சக்ரங்கள், பிந்துநாதம் கலை இவைகளுமாகச் சேர்ந்து அமைவதாகும். இந்த ஸ்ரீசக்ரத்திலே யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களும் அடங்கியுள்ளன. அதாவது முக்கோணம் மூலதாரமாகவும், அஷ்டாரம் சுவாதிஷ்டானமாகவும், தசாரம் மணிபூரகமாகவும், பஹிர் தசாரம் அனாஹதமாகவும், மன்வச்ரம் விசுத்தியாகவும், பிந்து ஆக்ஞையாகவும் கூறப்பட்டிருக்கின்றது. (அண்டத்திலே சுவாதிஷ்டான க்ஷேத்ரமாக திருஆனைக்கா விளங்குகின்றது.) சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் ரத்னம் நான்கு தளங்களைக் கொண்டு சுவாதிஷ்டானம் என்னும் சக்ரமானது விளங்குகிறது. ஆறு இதழ்களோடு ஆறு அக்ஷரங்களோடு செந்நிறப் பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை அறிஞர்கள் சுவாதிஷ்டானம் என அழைப்பார்கள். அவ்விடத்தில் பாலன் என்ற சித்தனும், ராகினி என்ற தேவியும் வசிக்கின்றனர். ஆறு இதழ்களிலும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம்பேஷ்டி என ஆறு தேவிகளும் வசிக்கின்றனர். இந்த ஆதாரமானது தனக்கு மேலான அக்னி தத்துவத்துடன் இணைந்து விளங்குகிறது. இவ்விடத்திலேதான் குண்டலினி தானே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருக்கும் என சாத்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்குச் சுவாதிஷ்டானம் எனப் பெயர். சித்தாந்த சாத்திரமானது சரஸ்வதியோடு கூடிய பிரம்மாவை, அபயம், வரதம், கமண்டலு, அக்ஷமாலை இவைகளை நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு அக்ஷரங்களோடு கற்பனை செய்யப்பெற்ற பத்மத்திலே காந்தியுடன் சிந்தனை செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. சக்தி உபாசகர்கள் மேதஸ் என்ற தாதுவைத் தனது இருப்பிடமாகக் கொண்ட காசினி என்ற தேவதையைத் தியானம் செய்கின்றார்கள். இதே போன்று மற்ற ஆதாரங்களும் கூறப்பட்டிருக்க ின்றன. ஸ்ரீசக்ரத்தைப் பூஜிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குருவினுடைய பரம்பரை வழிவந்த உபதேசம் பெற்று ஒவ்வொன்றையும் நன்கு கவனித்துச் செய்யவேண்டும். குருவினுடைய முன்னிலையில் பூஜைகள் செய்து, அவருடைய அனுமதியைப் பெற்றுத் தனிமையில் பூஜையைச் செய்யவேண்டும் என்பதும் நமது முன்னோர்களுடைய மரபாகும். நவாவரண அமைப்பு... அம்பிகையை ஸ்ரீசக்ரம் அல்லது ஸ்ரீ சக்ர மேருவில் நவாவரண பூஜை செய்வது சிறப்பு. நவ ஆவரணம் என்றால் ஒன்பது சுற்றுக்கள் என்பது பொருள். ஆவரணம் என்றால் சுற்று அல்லது அடைப்பு என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீசக்ரத்தில் முதல் சதுர வடிவாய் உள்ள மூன்று கோடுகள் த்ரைலோக்ய மோகன சக்ரம் எனப்படும். இது முதலாவது ஆவரணம். இதில் உள்ள சக்திகள் பிரகடயோகினிகள் எனப்பெறுவர். இரண்டாவது ஆவரணம் ஸர்வாசாபரிபூரக சக்ரம் ஆகும். இதில் உள்ள சக்திகள் குப்தயோகினி ஆவர். மூன்றாவது ஆவரணம் எட்டுத்தளம் உடைய ஸர்வஸம்க்ஷோபண சக்ரம். இதில் உள்ள சக்திகள் குப்ததர யோகினிகளாவர். நான்காவது ஆவரணமான பதினான்கு கோணம் உடைய ஸர்வஸௌபாக்ய சக்ரத்தில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர். ஐந்தாவது ஆவரணம் வெளிப்பத்துக்கோணம், ஸர்வரக்ஷாகரசக்ரம். இதில் உள்ள சக்திகள் குலோத்தீர்ண யோகினிகளாவர். ஆறாவது ஆவரணம் பத்துக் கோணமுடைய ஸர்வார்த்தஸாதகசக்ரம் . இதில் உள்ள தேவதைகள் நிகர்ப்பயோகினிகள். ஏழாவது ஆவரணம் எட்டுக்கோணமுடைய ஸர்வரோகஹர சக்ரமாம். இதில் உள்ள சக்திகள் ரஹஸ்யயோகினிகளாவர். எட்டாவது ஆவரணம் முக்கோண வடிவமுடைய ஸர்வஸித்திப்ரத சக்ரமாகும். தேவதைகள் அதிரஹஸ்ய யோகினிகளாவர். ஒன்பதாவது ஆவரணம் ஸர்வானந்த மய சக்ரம். இது பிந்து வடிவமானது. இதில்தான் பரமேச்வரனும் பரமேச்வரியும் இருந்து உலகை ரக்ஷிக்கின்றனர்.
ஈழவரலாற்றில் அம்மன் வழிபாடு
ஈழத்தின் நாகரிகமும் தென் இந்திய நாகரிகத்தின் பரவலே என்பதை அண்மைக்கால தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இச்சான்றுகள் சிங்கள தமிழ் மொழி பேசுபவரின் மூதாதையர் ஈழத்திற்கு கி.மு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெளத்த மதம் பரவமுன்னர் இந்துக்களாக விளங்கியதையும் எடுத்துக்காட்டியுள்ளன. இவர்கள் இந்துக்களாக விளங்கியதையும் எடுத்துக்காட்டியுள்ளன. இவர்கள் இந்துக்களாக விளங்கினாலும் தமிழ் நாட்டைப்போல் இருவித கலாச்சாரப் படைப்புக்கள் இக்கால இந்து மதத்தில் காணப்பட்டன.
இதனை அடித்தளமாக இப்பிராந்தியத்திற்கே சிறப்பாக உரிய திராவிட வழிபாட்டு முறைகள் முறைகள், இரண்டாவதாக இவ்வழிபாட்டு முறைகளுடன் வந்து சங்கமித்த வட இந்திய ஆரிய கலாச்சார அலைகள், இவை பற்றி எடுத்து இயம்பும் ஆதாரமாக பிராமிய கல்வெட்டுக்கள் பௌத்தமத வரலாற்று நூல்களாகிய மகாவம்சம் போன்றவற்றினையும் மற்றும் அங்கும் இங்கும் காணப்படும் எச்சம்களும், சுடுமண் பாவைகள், சிற்பங்கள், நாணயங்களில் காணப்படும் உருவம்கள் அமைகின்றன. அவ்வகையிலே ஈழத்தில் அம்மன் வழிபாடு பற்றி நோக்குவோம்.
முதலில் பிராமியக் கல்வெட்டுக்களில் காணப்படும் சான்றுகளை ஆராய்வோம். துர்க்கை என்ற பெண் தெய்வம் பற்றிய செய்தி ஒரே ஒரு கல்வெட்டில்தான் உள்ளது. இக்கல்வெட்டு மாத்தளை மாவட்டத்தில் உள்ள எண்டேரகலை என்ற இடத்தில் காணப்படுகிறது. இதில் உபாசகனான "துக"{துர்க்கா] அதாவது துர்க்கையின் பக்தனுடைய குகை என்று பொருள் தரும் வாசகம் காணப்படுகிறது. இவளுக்கு நிவேதனமாக மது, மாமிசம் படைத்தல் போன்ற சடங்குகள் நிகழ்ந்ததும் பழைய தெய்வமாக இவளை ஆக்குகின்றன. மேற்கூறிய துர்க்கைதான் சங்க இலக்கியங்களில் கூறப்படும் கொற்றவையாக இருக்கலாம். கொற்றவையின் பண்புகள் பல துர்க்கையிலும் காணப்படுகிறது.
சக்தி வழிபாடு உலகத்திலேயே மிகப்பழமையானது. ஆதிகால சமுதாய வளர்ச்சியில் வேறெச்சக்தியையும் விட தாய்மை வழிபாடே முக்கிய இடத்தினை வகித்தது. விவசாயத்துறையில் ஈடுபட்ட மக்கள் பூமாதேவியை தாயாக கண்டனர். கி.மு 6ம், 4ம் நூற்றாண்டுக்குரிய கதைகளிலே யக்ஸி, நாகினி பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. விஜயன் இந்த நாட்டில் வந்து இறங்கிய போது யக்ஸீகள் அவனை எதிர்கொண்டனர். இதனால் விஜயன் அவர்களுக்கு கோயில் அமைத்தான் எனவும் கூறப்படுகிறது.
அடுத்து அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள டெமரகல என்ற இடத்தில் லட்சுமி பற்றிய கருத்து ஒன்று காணப்பட்டது. இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இவள் லசி எனக்குறிக்கப்பட்டுள்ளாள். சில இடத்தில் தேவி,ராணி என்ற பதமும் காணப்பட்டது. " பச்சிராமணி" எனப்பட்ட பெண் தெய்வம் வழிபட்டதை மகாவம்சம் குறிப்பதால்"தேவி" என்ற பதமும் "அம்பாள்" என்ற கருத்தைத்தந்து பெண் தெய்வத்துக்குரிய பெயராயே அமைந்தது.
அடுத்து யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல் சிவனின் மனைவியாகிய உமை வழிபட்டாள் எனக்கூறுகிறது. விஜயன் காலத்தில் கீரிமலைப்பகுதியில் அமைந்திருந்த திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் முருகவழிபாட்டுடன் இணைந்ததாயும் சக்தி வழிபாடு வழிபடப்பட்டது. புத்தள மாவட்டத்தில் பொம்பரிப்பு எனுமிடத்தில் கிடத்த வேல்சின்னம் இதனை எடுத்துக்காட்டுகிறது. முருக வழிபாடு இரு தாய்த்தெய்வ வழிபாட்டை எடுத்துக் கூறுவதாக உள்ளது. ஒன்று கோற்றவை வழிபாடு, இரண்டாவது முருகன் மனைவியாகிய வள்ளி பற்றிய மரபு, வள்ளி முருகனது முதல் மனைவி, வள்ளியை மணஞ்செய்வதற்காக முருகன் ஈழத்தில் வந்து பாசறை அமைத்து பற்றி நீண்டதொரு ஜதீகம் நிலவுவதால் முருகனும் அவனது சக்தியாகிய வள்ளியும் ஈழத்தில் வழிபடப்பட்டனர் எனலாம்.
அடுத்து தாய்த்தெய்வ வழிபாட்டு மரபிலே காளிபற்றி நோக்கும்போது ஈழத்திலே அநுராதபுரத்தில் பில்லாவெகல எனுமிடத்தில் "உபஸககடி" என்ற பதமும் மற்றையது மாத்தளை மாவட்டத்தில் சிகிரியாவிலுள்ள "பரும ககடியபத" என்ற வாசகமும் காளி துர்க்கை கொற்றவையுடன் தொடர்புடையவள் என்பதைக் காட்டுகின்றது.
அடுத்து கார்த்திகைப் பெண்களை நினைவூட்டும் இரு கல்வெட்டுக்கள் அநுராதபுரமாவட்டத்தில் காணப்பட்டது. கார்த்திகா என்பவள் "கிதக", "கத" என குறிப்பிட்டுள்ளாள். இவ்வாறு பரணவிதான கூருகிறார். மிகிந்தலையில் உள்ள கல்வெட்டொன்று மகாராஜ கமணிதிஸவின் மனைவியும் உபாசிகாவுமான கிதகவினது குகை எனக்கூறப்படுகிறது. கார்த்திகாவின் இன்னோரு வடிவமான கிருத்திகாவின் மருவுதலே "கிதக" என பரணவிதான கூறுவது ஏற்புடையதாகின்றது.
இதைவிட மீனாட்சி என்ற தாய்த்தெய்வம் பற்றிய கருத்துக்களும் உண்டு. மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புல்லவில் உள்ள இரு கல்வெட்டுககளில் "மசக" ,"மசகயலெண" என்ற பெயர்கள் காணப்பட்டது. இதில் மசக என்பது மசக என்ற பெயரை தாங்கியவாறு குகை எனப்பொருள்படும்.
அடுத்து ஈழத்திலே கண்ணகி எவ்வாறு வளர்ச்சி பெற்றது. என்பதை நோக்கும்போது சிங்கள, தமிழ்க் கலாச்சாரங்களை ஒன்று சேர்த்து நிக்கும் வழிபாடும் இதுவென்றால் மிகையாகாது. கண்ணகியை சிங்கள மக்கள் "பத்தினி" வழிபட்டனர். கண்டிப்பெரகராவில் விஸ்ணு, கந்தன், சிவன் போன்றோருடன் பத்தினிக்கும் ஒரு பிரதான இடத்தினை சிங்கள மக்கள் அளித்து இருப்பதோடு நாட்டைக்காக்கும் காவல் தெய்வங்களில் ஒன்றாயும் விளங்குகிறாள். இதுவே தாய்த்தெய்வ வழிபாட்டின் பழமைக்கும் தொடர்ச்சிக்கும் தக்க எடுத்துக்காட்டு எனலாம். அவ்வகையிலே ஈழத்திலே கண்ணகி வழிபாட்டைப் புகுத்தியவனாக கஜபாகு மன்னன் குறிப்பிடப்படுகின்றான்.
ஈழத்து கஜபாகு மன்னனும் தமிழ்நாட்டு பிற மன்னரும் அவ்வழிபாட்டை தத்தம் நாட்டிற்கு எடுத்து சென்றனர் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இக்கூற்றினையே ஈழத்துப் பிற்கால நூல்களாகிய இராஜாவலியவும் இராஜரத்னாகரவும், கஜபாகத்தாவா போன்ற நூல்களும் ஆமோதித்துள்ளன. தெய்வத்தின் சிலம்பினையும் 4 கோயில்காளின் தெய்வங்களையும் ஆயுதச்சின்னங்களையும் வலம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புனித பாத்திரத்தினையும் பெற்றுக்கொண்டு கஜபாகு ஈழம் மீண்டான் என நம்பப்படுகிறது. ஆடி மாதம் தோறும் கஜபாகு மன்னன் தனது தலைநகரான அநுராதபுரத்தில் கண்ணகிக்குப் பெருவிழா எடுத்தான். அவ்விழாவில் பத்தினியின் காற்சிலம்பு யானைமேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவது வழக்கம்.
இத்தாய்த்தெய்வ வழிபாடு ஈழத்தில் சுலபமாக பரவுவதற்கு பல காரணிகள் இருந்தன. தமிழகமும் ஈழமும் அரசியல் கலாச்சாரத் துறைகளில் பண்டைய காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்பினைக் கொண்டு இருந்தன. அதனால் தான் ஈழத்தில் கண்ணகி வழிபாடு சுலபமாக உட்புகுந்தது. கொற்றவை, பத்திரகாளி, காளி, துர்க்கை முதலிய ஆறு கன்னிமாரில் இளையவள் என்ற நிலையில் கண்ணகி கருதப்பட்டதைப் பற்றி சிலப்பதிகாரத்தில் உள்ள வழக்குரை காதை {வரி 36-40} குறிப்பிடுகின்றது.
கண்ணகிக்கு சிலை எடுத்தது பற்றிக்கூறும் செய்தி தமிழகத்தில் வேரூன்றியிருந்த பெருங்கற்கால கலாச்சாரத்தின் ஓர் அம்சமாகிய நடுகல் வழிபாட்டு அம்சமே. ஈழத்தில் இம் மரபுவழி வந்த வழிபாடே நாச்சிமார் வழிபாடாகும். கண்ணகி வழிபாடு ஈழத்தில் புகுந்தமைபற்றி பல கதைகள் நிலவிவருகிறது. கண்ணகி தன்னை ஜந்து தலை நாகமாக மாற்றி ஊர்ந்து சென்று முதலில் நயினாதீவில் தங்கினாள் என்றும் பின் வட்டுக்கோட்டை சுருட்டுப்பனைவழியாக சீரணி, அங்கணம்மைக்கடவை, அளவெட்டி, சுருவிலில் தங்கினாள் என்றும் அப்பாம்பு நகர்ந்த பாதை வழுக்கையாற்றுப் பள்ளமாக மாறியது எனவும் கூறுவர்.
வழுக்கையாற்றுக்கு அருகிலுள்ள களையோடக் கண்ணகி அம்மன் ஆலயம் இதற்கு சான்று. சீரணி, அளவெட்டி, சுருவிலுள்ள கோயில்கள் நாகதம்பிரான் ஆலயமாக அழைக்கப்படுகின்றது.மேலும் நயினாதீவிலிருந்து புறப்பட்டு கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாக சென்று நாகர்கோவிலை அடைந்து பின் புளியம்பொக்கனையை அடைந்து பின் வற்றாப்பளையை அடைந்ததென கூறப்படுகிறது.கண்ணகி வழிபாட்டிற்கு சென்ற கஜபாகு மன்னன் ஜம்புகோளப்பட்டிணத்தில் இறங்கினானெனவும் அதற்கு சான்றாக அங்கணம்மைக் கடவையில் பத்தினிக்கு கோயில் அமைத்தான் எனவும் கூறப்படுகின்றது.
இக்கண்ணகி வழிபாடானது ஈழத்தின் கிழக்குப்பகுதியில் மட்டும் சுமார் இருபத்தைந்து கண்ணகி கோயில்கள் காணப்படுகிறது. இக்கோயில்கள் கரையோரத்திற் காணப்படுவது மற்றோர் சிறப்பம்சமாகும். இவற்றைவைத்து நோக்கும் போது கண்ணகி வழிபாடானது வடபகுதியிலிருந்து வன்னிப்பிரதேசத்தினூடாக அநுராதபுரத்திற்கு சென்றிருக்கலாம் அல்லது மட்டக்களப்பு தமிழகத்தை அடைந்து இருக்கலாம். நேரடியாக தமிழகத்திருந்து ஈழத்தின் கிழக்குக் கரைக்கு அறிமுகமாயும் இருக்கலாம்.
இவ்வாறு தோற்றம்பெற்ற அம்மன் வழிபாடானது சிறப்பும், செழுமையும் பெற்றதை சில உதாரணம் காட்டி விளக்கலாம். முதலில் வட இலங்கையில் மாரியம்மன் வழிபாடும் நன்கு பிரபல்யமாய் இருப்பதை குறிப்பிடலாம். மாரியம்மன், மகாமுத்துமாரி, மாரியம்மை, மகாமாரி, மதுரைமுத்துமாரி, சிறீமுத்துமாரியம்மன், சிவமுத்துமாரி. எனப் பல பெயர்கள் அடைமொழியுடன் வணங்கப்படுவதைக் காணலாம். இத் தெய்வங்கட்கு பேரிகை, பொங்கல், குளிர்த்தி முதலிய சேர்க்கப்பட்டும், சேராமனும் வழிபாடு இடம்பெற்றது.
காளி எனும் தெய்வம் வீரமாகாளி, காளிகா, பரமேஸ்வரி, சிறீபத்திரகாளி என்னும் பெயர்களில் ஆலயங்களில் வீற்றிருக்கிறாள். நாகேஸ்வரி நாகபூசனி என்னும் பெயரில் நயினாதீவு, சண்டிலிப்பாய், கோண்டாவில், பரந்தனில் புளியம்பொக்கணை, புதூர் பேன்ற இடத்திலும் வீற்றிருப்பதைக் காணலாம். ராஜராஜேஸ்வரி எனும் பெயரில் பலாலி, நாயன்மார்கட்டு, புங்குடுதீவு எனுமிடத்திலும் புவனேஸ்வரி எனும் பெயரில் பலாலி, நாயன்மார்கட்டு, புங்குடுதீவு எனுமிடத்திலும் புவனேஸ்வரி என்னும் பெயரில் ஏழாலை, சுதுமலை, நாவற்குழி, இடைக்காடு முதலிய இடத்திலும் வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாச்சிமார் வழிபாடும் ஓரளவு பிரபலியமானதே. நாச்சிமார் புது நாச்சிமார் எனும் பெயரில் நவாலி, கிளான், வேலணை முதலிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிபாடு வன்னிப்பகுதியிலும் நிலவுகிறது. மேலும் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் சிவனுக்கும் அம்மனுக்கும் வெவ்வேறு கோயில்கள் வெவ்வேறு பெயரில் உள்ளது. ஜந்து ஈஸ்வரத்தையும் விட வண்ணை வைத்தீஸ்வரன் நாயகி, புங்குடுதீவு மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரர் முதலியோரைக் குறிப்பிடலாம்.
இறுதியாக சக்தி வழிபாட்டின் சின்னங்களாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம், வவுனியாவிலுள்ள மாமடுவ, சிகிரியா, இலுக்வேவ போன்ற இடங்களிலும் பொலநறுவை, மாத்தறை, அம்பாறைப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பாவைகள் பற்றிக்குறிப்பிடல் அவசியமாகிறது. இவ்வுருவங்களில் கல்லில் அமைந்த யக்சி உருவங்களிலோ அல்லது நாணயத்திற் காணப்படும் யக்சி உருவங்களிலோ கலைத்திறன் இல்லை எனலாம். மாறாக கொடூரத்தன்மை உடையதாக இருப்பதோடு உடலுறுப்பும் நேர்த்தியாக சித்தரிக்கப்படவில்லை. இப்பாவைகள் முழுக்களி மண்ணால் செய்யப்பட்டன. சில தலைமட்டும் களிமண்ணால் ஆக்கப்பட்டு உடல் கோறையாக காட்சி தருகின்றன. சிலதின் சொண்டு விகாரமாயுள்ளது. இவற்றை சுதேச மக்களது கலைவண்ணம் எனலாம்.
இவ்வாறு ஈழத்தில் அம்மன் வழிபாடு ஆதியானது. இது மக்கள் மத்தியில் அடிமட்டத்தில் தழைத்திருந்ததை பாளிநூற்குறிப்பு, சுடுமண் பாவைகள், கிராமிய கல்வெட்டுக்குறிப்பு, நாணயங்கள், புடைப்பு சிற்பங்கள் என்பன காட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
பராசக்தியாகிய அம்பாள் அறக்கருணை மூலமும் மறக்கருணை மூலமும் அருள்செய்ய வல்லவள். அதாவது அன்பின் மூலமும் தண்டித்தல் மூலமும் அருள் செய்வாள். அம்பாள் வழிபாட்டை புராணங்கள் விரிவுபடுத்தின. தேவி பாகவதம் அம்பாளுக்கு முதன்மை கொடுத்து அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களையும் அவற்றுக்குரிய மந்திரங்களையும் சிறப்பித்தன. பராசக்தியின் வெவ்வேறு தோற்றங்களாக கௌரிமனோன்மணி, சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகமாரி என்பவற்றை குறிப்பிடலாம். இவற்றுள் மகமாரி மாரகாசுரனை சங்காரம் செய்ததால் அப்பெயர் பெற்றாள் என காரணாகமம் கூறுகின்றது. இவளது தலையைச் சுற்றிலும் அக்கினிச் சுவாலைகள் தோன்றும். கபாலம், சக்தி, பாசம், உடுக்கு என்னும் நான்கு ஆயுதங்களை இவள் ஏந்தி நிற்பாள். இந்த அடிப்படையை கொண்ட முத்துமாரி வழிபாடும் தோன்றியது.
அம்மையே சிவனைப் பூசித்த புராணவரலாறுகள் சிவனையும் சக்தியையும் இணைத்துள்ளதுடன் பிரிவினையை சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதத்தையும் வேரறுத்தத்து.
அர்சனையும் மலர்களும்:
* விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
* பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
* விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
* பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
* விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
* துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
* மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
* வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
* அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
* ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
* தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
* வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
* சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
* மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
* முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
* துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
* பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
* திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
* அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
* குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
* பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
* கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
* பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.
ஓம் சக்தி ஓம்