Wednesday, December 23, 2015

தீட்சை 2

திருவடி தீட்சை

திருவடி தீட்சை
தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.
தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.
ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும். (தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்)
திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”             
திருமந்திர பாடல் – 2816
விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.
தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.
தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவ ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.
இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.
நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.
சச்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதை தான். ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்த பட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும்.
தச தீட்சை என்றால் 10விதமான தீட்சை அல்ல. நம் உடலில் 8ம்(வலது கண் ஒளி ) , 2ம் (இடது கண் ஒளி) உள் சேர்த்தல் நம் உயிர் ஸ்தானமான அக்னி கலையை அடடையலாம்.  10ம் இடமான நம் இரு கண் உள் சேரும் இடத்தில்   தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்கி தன் இரு கண்கள் மூலம் சீடனின் கண்ணை பார்த்து சீடனின் கண்களில் உள்ள ஒளியை குரு தூண்டுவதான் தீட்சை. இதை தான் தச தீட்சை என்றனர். கண்களான நாயனத்தின் மூலம் கொடுப்பதால் நயன தீட்சை என்றும் , திருவடி தீட்சை என்றும் பெயர்.
நம் கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு துவாரம் உள்ளது. நம் உயிரை பற்றி உள்ள மும்மலங்கலான (ஆணவம், கன்மம், மாயை)   வினை திரைகள் கண்ணாடி போல் அமைந்து நம் உள் ஒளியை மறைத்துள்ளது. 
நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது  கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை.  இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும்.  இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை.
இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும்.
ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி.
இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம்.  இதுவே தவம்.
இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.
நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.
“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கிய ஞானஸ்தானம் இதுவே.
தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.
மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.
தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:
தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி :
1. சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். (முட்டையும் அசைவ உணவே)
2. போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விட்டு நீங்க வேண்டும்.
3. ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.(தீய (அ) முறையற்ற  செயல்களில் ஈடுபடவே கூடாது.)
4. சிறு தெய்வ வழிபாடு செய்தல் கூடாது. 
5. பலி கொடுப்பதோ (அ) பலி கொடுக்கப்படும் ஆலயங்கள் செல்லுதல்கூடாது.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.
இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை
செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி குரு 
காணிக்கை கொடுத்து தீட்சை பெறலாம்.
முற்று பெற்ற ஒரு ஞானியால் மட்டுமே திருவடி தீட்சை வழங்க முடியும். 
எங்கள் குருநாதர் திரு. சிவ செல்வராஜ் அவர்கள் வள்ளல் பெருமான் அருளால் இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீக்ஷை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறார்.
மஹா-சமாதி ஆகும்முன் ஞான பணி தொடர ஒன்பதுசீடர்களுக்கு குரு பீடம் கொடுத்து உள்ளார்கள். கன்னியாகுமரியில் மட்டும் திருவடி உபதேசம் தீட்சை கொடுக்கப்பட்டு வந்தது,குருவின் அருளால் மேலும் ஒன்பது இடங்களில் கொடுக்கப் படுகிறது.
குருபீடத்தில் அமர்ந்துள்ள ஒன்பது குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான் தான் தீட்சை வழங்குகிறார். பாமர மக்கள் நேரடியாக வள்ளல்பெருமானை பார்க்கும் ஆன்ம பலம் இல்லாததால் ஸ்துல தேகத்தில் உள்ள குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான்  தீட்சை வழங்குகிறார். 

தீட்சை 1

தீட்சை (  தீஷை )  !!!

`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன : பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை
++++++++++++++++++++++++
தீட்சை பற்றிய விளக்கம்
தம் சீடனுடைய ஆன்மாவைச் சார்ந்த அழுக்குகளை நீக்கி, அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், ஞானம் ஊட்டவும், வேண்டிக் குருவானவர் செய்யும் கிரியை தீட்சை எனப்படும்.தீட்சை என்னும் சொல் அழித்தல், கொடுத்தல் என்ற இரு பொருள் தருவது, ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதும், இறைமைத் தன்மையைக் கொடுத்தலும் தீட்சையின் பயன்களாகும். இத் தீட்சை பலவகை, சைவ ஆகமங்கள் ஏழுவகை தீட்சைகளைக் குறிக்கும்.
1. நயன தீட்சை
தன் பார்வையாலேயே சீடனுடைய பாவங்களைப் போக்கி அருள்பாலிப்பது நயன தீட்சை எனப்படும்.’அடிகளார் பார்வைபடுமாறு பார்த்துக்கொள்’ என்று அன்னை அடிக்கடி பக்தர்கட்குக் கூறுவதன் உள்நோக்கம் நயன தீட்சை அளிப்பதற்காகவே, மீனானது தன் சினையைப் பார்த்த அளவில், சினைகள் மீன் வடிவம் பெறுதல் போல, குருவின் பார்வை பட்ட அளவில் சீடனும் தன்போல் சிவமாவான் என்று ஆகமங்கள் கூறும்.
2. ஸ்பரிச தீட்சை
ஆசாரியன் தன் வலக்கையால் சீடன் தலை மேல் வைப்பது, நெற்றிப் பொட்டில் கை வைத்து அருள்பாலிப்பது, திருவடிகளைத் தலை மேல் வைப்பது ஸ்பரிச தீட்சை. திருவடிகளைச் சீடன் தலை மேல் வைத்து அருள்பாலிப்பது திருவடி தீக்கை என்றே கூறப்படும். கோழி, மூட்டையை அடைகாத்துக் குஞ்சு பொறிப்பது போலச் சீடனை பரிசத்தால் ஞானமயமாக்குவது இது!
3. வாசக தீட்சை
குருவானவர், தம் சீடனுக்குத் தகுந்த மந்திரங்களை உபதேசித்து அவனை ஞானமயமாக்குவது வாசக தீட்சை எனப்படும்.பஞ்சாட்சர மந்திரம், பிரணவ மந்திரம்,ஹீ வித்யை, தத்துவமசி உபதேசம் என்பன வாசக தீட்சையில் அடங்கும்.
4. மானச தீட்சை
சீடன் ஒருவன் எங்கையோ இருந்து கொண்டு தன்னைத் தியானம் செய்யும் போது, அத் தியான சக்தி குருவை ஈர்க்கச் செய்யும். அத்தகைய காலங்களில் குரு தான் இருந்த இடத்திலிருந்து அவனுக்கு மனத்தால் அருள்பாலிப்பது மானச தீட்சை எனப்படும். ஆமையானது எங்கோ இருந்துகொண்டு தான் வைத்த முட்டையைத் தன் எண்ணத்தின் உறைப்பால் சினையாக்கும். அது போன்றது இது!
5. சாஸ்திர தீட்சை
சீடனுடைய சந்தேகங்களை நீக்க வேண்டிச் சாத்திரங்களை அருளுதல் சாஸ்திர தீட்சை எனப்படும். இருபா இருபது, உண்மை விளக்கம் என்ற சைவ சாத்திரங்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள்! அருச்சுனன் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிக் கண்ணன் அருளிய பகவத் கீதை சாஸ்திர தீட்சைக்கு உதாரணம்.
6. யோக தீட்சை
தன் சீடனுக்கு யோகப் பயிற்சிகளை அளித்து பிராணாயாம நுணுக்கங்களை கற்பித்துக் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டித் தீட்சை அளித்தல், சமாதி நிலைக்கு அவன் முன்னேறி வர உதவுதல் யோக தீட்சை எனப்படும்.
7. ஒளத்திரி தீட்சை
சீடனை ஒரு வேள்விக் குண்டத்தின் முன் அமரவைத்து, சக்கரம் வரைந்து அக்கினி வளர்த்து, அவனுக்கு ஞானம் ஊட்டுவது ஒளத்திரி தீட்சை எனப்படும்.
8. ஆசார்ய அபிடேகம்
தன்னைப் போல ஒரு ஆசாரியன் ஆகிற அளவிற்குப் பக்குவம் பெற்ற சீடனுக்கு ஆசாரிய ஸ்தானம் அளிக்க வேண்டிச் செய்யப்படுவது ஆசாரிய அபிடேகம் எனப்படும். இந்த அபிடேகம் முடிந்த பிறகே ஒருவர் ஆசாரிய ஸ்தானத்தைப் பெறுகிறார்.
அடிப்படை தீட்சை சமய தீட்சை
ஒருவர் சைவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைணவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைதிக நெறியை மேற்கொண்டு ஒழுகுவதாக இருப்பினும், தகுதிவாய்ந்த குருமாரிடம் சென்று தக்க மந்திரத்தை அவரிடம் கேட்டு, அதனையே ஜெபித்துத் தம் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர வேண்டும், என்பது அடிப்படை விதி, இந்த அடிப்படை அமைய வேண்டியே சமய தீட்சை பெற்றுக் கொண்டு அதன் பிறகு ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.
தீட்சையால் உண்டாகும் மாற்றங்கள்
அருணாசல குரு என்பார் இயற்றிய நிஜானந்த போதம் என்ற நூல்’ தச தீக்கை ‘எனப் பத்துவகைத் தீக்கைகளைக் கூறுகிறது. சீடனுடைய உடம்பிலும், உள்ளத்திலும் தீட்சையால் உண்டாகும் மாற்றங்களையும் கூறுகின்றது.
1. முதல் தீட்சையைல் ரோம துவாரங்கள் வழியாகத் கெட்ட நீர்கள் வியர்வையாய்க் கசியும்.
2. இரண்டாவது தீட்சையில் வாத, பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று தோஷங்கள் நீங்கும்.
3. மூன்றாவது தீட்சையில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
4. நான்காவது தீட்சையால் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்.
5.ஜந்தாவது தீட்சையால் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும். பஞ்ச மூர்த்திகள் கோரியதைத் தருவார்கள்.
6. ஆறாவது தீட்சையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூர திருஷ்டி தெரியும்.
7. ஏழாவது தீட்சையில் சட்டை வெளுப்பாய்க் கழன்று தேகம் தூபம் போலப் பிரகாசிக்கும்.
8. எட்டாவது தீட்சையில் உடம்பை உயரத் தூக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வல்லபம் உண்டாகும்.
9. ஒன்பதாவது தீட்சையில் தேகம் சூரியப் பிரகாசம் அடையும். அட்டமா சித்தியும் கைகூடும். தேவர்கள் சீடனுக்கு ஏவல் புரிவர்.
10. பத்தாவது தீட்சையில் தேகம் தீபம் போலப் பிரகாசிக்கும். சொரூப சித்தி கூடும். அண்டத்தில் மெளனம் நரை திரை ,மூப்பு, பிணி ,மரணம் ஏற்படா.
இத் தீட்சைகளால் பக்குவம் பெற்ற சீடன் உடம்பு, மனம், ஆன்மா, மூன்றும் ஞானம் பெறத் தகுதி பெறுகின்றன.
++++++++++++++++++++++++++++++
#சிவதீட்சை #

 `தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன : பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை #பரிச #தீட்சை : ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். #நயன #தீட்சை : ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். #பாவானா #தீட்சை : ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. #யோக #தீட்சை : ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும். #வாக்கு #தீட்சை : ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும். #நூல் #தீட்சை : சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும். உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க. எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது. தீட்சையின் வகைகள்: --------------------------------------------- ------ தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். #நயன #தீட்சை குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும். #பரிச #தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். #வாசக #தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும். #மானச #தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும். #சாத்திர #தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். #யோக #தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும். #ஒளத்திரி #தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. #சமய #தீட்ஷை: --------------------- யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார். அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ) இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும். #விசேச #தீட்க்ஷை: ------------------------------ சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும். குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான். #சாம்பவி #தீட்சை: --------------------------- சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர். "சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திரு க்கிறது என்று அர்த்தமாகிறது. நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம் ( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்து வார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம #சிவ #தீட்சை ----------- அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான் ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே." 

"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர். 

"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். "சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே." 

"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார். 

"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். "பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே." 

"யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார். 

"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே." 

"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர். 

"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

சதுரகிரி மலை

சதுரகிரி மலையில் சித்தர்களை நேரில் தரிசிக்க:-

சதுரகிரி மலையில் சித்தர்களை நேரில் தரிசிக்கும் முறை ஒன்று கோரக்கர் அருளிய ரவிமேகலை என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

அந்த தகவல் பின்வருமாறு :
பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை
பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன்
நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல்
நீரோடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல்
சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச்
சிதறாமல் நானோதும் மந்திரத்தை
முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே.

தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர்
தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து
ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி
உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார்
ஆமையெழுத் தானதோ ராதி பீடம்
ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார்
தூமையென்ற கதிகோடு அமுதர் பானத்
தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்.

சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார்.

தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம். மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள் காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார். பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.

இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம்
வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி
நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ ராஜ
நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங்
லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம்
பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன
பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.

ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப
ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங்
லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய
ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.

சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க!

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை
காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங்
ஆளடா சதுரகிரி என்கோணமாகும்
அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு
சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர்
தளடா சிறப்புடனே தவசுபண்ணி
தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

- அகத்தியர்

சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார். இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம். இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார்.

தற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய் இருந்திருக்கலாம்.அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.

சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன.

Sunday, December 20, 2015

அகத்தியர்

🙏🙏🙏சிவ தீட்சை🙏🙏🙏 ----------- அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக

குருவின் மூலமாயப்
பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்

ஸ்ரீம் அம் ஓம்

யென்று லட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு

ஆம் ஓம் ஹரீம் ரீம்

யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."

"ஸ்ரீம் அம் ஓம்"

என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

"ஆம் ஓம் ஹரீம் ரீம்"

என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். "சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன்

குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்

யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."

"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்"

என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

"ஸ்ரீங் அங் உங்"

என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். "பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே

சங் ரங் உம் ஆம்

என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."

"யங் வங் றீங்"

என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

"சங் ரங் உம் ஆம்"

என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய் ஓது

இங் ரங் அவ்வு

மென்று லட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக

மங் றீங் ரா ரா

வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."

"இங் ரங் அவ்வு"

லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

"மங் றீங் ரா ரா"

என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் 🙏🙏🙏அகத்தியர்.

++++++++++++++++++

அகத்தியர் நட்சத்திரம்

அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!

கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!

கடல் நீரைக் குடித்த கதை

அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.

அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!

அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை

இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!

‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!

அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.

வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.

குருமுனி, கும்பமுனி என அழைக்கப்படும் ஆசான் அகத்தீசரின் பெருமை மிகவும் உயர்ந்தது! அளவிடமுடியாதது.
Wow. That's wonderful information. Indian Mythology is Science